குடியரசு தலைவர் & துணை குடியரசு தலைவர் TNPSC Polity Previous Year Questions

குடியரசு தலைவர்

1. அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்த கொள்ள வேண்டும்?

1. குடியரசு தலைவர்
2. பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதவது ஒரு பட்டியல்
4. மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு

கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்க

 1. 1, 2 மற்றும் 3
 2. 1, 2 மற்றும் 4
 3. 1, 3 மற்றும் 4
 4. 2, 3 மற்றும் 4

2. இந்தியாவின் 13-வது ஜனாதிபதி யார்?

 1. டாக்டர் A.P.J. அப்துல் கலாம்
 2. திருமதி பிரதிபா பாட்டில்
 3. K.R. நாராயணன்
 4. B.D. ஜட்டி

3. உச்சநீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியை யார் நியமனம் செய்கிறார்?

 1. தலைமை நீதிபதி
 2. பிரதமர்
 3. குடியரசுத் தலைவர்
 4. குடியரசு துணைத் தலைவர்

4. குடியரசு தலைவர், ராஜ்ய சபாவில் ___________ உறுப்பினர்களை நியமிக்கிறார். (Repeated Question)

 1. 10 உறுப்பினர்கள்
 2. 12 உறுப்பினர்கள்
 3. 11 உறுப்பினர்கள்
 4. 9 உறுப்பினர்கள்

5. தேர்தல் ஆணையம் தனது வருடாந்திர அறிக்கையை யாருக்கு சமர்பிக்க வேண்டும்? (Repeated Question)

 1. மக்கள் சபை
 2. இந்திய பாராளுமன்றம்
 3. மாநிலங்கள் சபை
 4. இந்திய குடியரசுத் தலைவர்

7. இந்திய குடியரசு தலைவரின் ‘தடுப்பாணை’ அதிகாரத்தில் உள்ளடக்கியிருப்பது. (Repeated Question)

1. பாக்கெட் தடுப்பாணை

2. இடைநீக்க தடுப்பாணை

3. முழுமையான தடுப்பாணை

4. தகுதி வாய்ந்த தடுப்பாணை

 1. 1, 2 மற்றும் 3
 2. 1, 3 மற்றும் 4
 3. 2 மற்றும் 3
 4. 2, 3 மற்றும் 4

8. ஆண்டு நிதி அறிக்கையை, பாராளுமன்றத்தில் யார் அறிமுகப்படுத்துகிறார்? (Repeated Question)

 1. பிரதம மந்திரி
 2. நிதி மந்திரி
 3. ஜனாதிபதி
 4. தலைமை செயலாளர்

9. இந்தியாவின் Attorney General யாரால் நியமிக்கப்படுகிறார்?

 1. இந்திய தலைமை நீதிபதி
 2. இந்திய ஜனாதிபதி
 3. இந்திய பிரதம மந்திரி
 4. இந்திய பாராளுமன்றம்

10. இந்தியாவில் அரசியல் தலைவர் யார்?

 1. பிரதமர்
 2. முதல்வர்
 3. உள்துறை அமைச்சர்
 4. மேற்கூறிய எதுவுமில்லை

11. எந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தி்ன் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசு தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது?

 1. Art 120
 2. Art 121
 3. Art 122
 4. Art 123

12. மாநில ஆளுநர் நியமனத்தை செய்பவர்

 1. குடியரசுத்தலைவர்
 2. பிரதமர்
 3. முதல்வர்
 4. உச்சநீதிமன்ற நீதிபதி

13. 2006 ஆம் அண்டு மனித உரிமை பாதுகாப்பு (திருத்த) சட்டத்தின் கீழ் ___________ ல் கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்.

 1. பிரிவு 5(3)
 2. பிரிவு 6(3)
 3. பிரிவு 12
 4. பிரிவு 18

14. மத்தியில் நிர்வாக அதிகாரத்தை கொண்டுள்ளார்

 1. கேபினட் அமைச்சர்கள்
 2. இந்திய குடியரசுத் தலைவர்
 3. பிரதம மந்திரி/அமைச்சர்
 4. அமைச்சரவை

15. பின்வருவனவற்றுள் சரியானதை தெரிவு செய்க

1. குடியரசுத்தலைவர் நாட்டின் தலைவர் ஆவார்

2. நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் யாவும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

 1. 1 மட்டும்
 2. 2 மட்டும்
 3. 1 மற்றும் 2
 4. 1 மற்றும் 2 தவறானவை

16. கீழ்காணும் எந்த ஷரத்தின் படி (Article) 14 வயதுக்குப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது.

 1. ஷரத்து 25
 2. ஷரத்து 14
 3. ஷரத்து 40
 4. ஷரத்து 45

17. சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக செப்டம்பர் 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் _________

 1. ஹலிமா யாகப்
 2. ஜீன் யிப்
 3. அயர்ன் அன்க்
 4. ஒலிவியா லும்

18. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் வேளையில் ________ பேர் கொண்ட குழு அவர்களை பரிந்துரை செய்யும்?

 1. ஐந்து பேர்
 2. ஆறு பேர்
 3. பத்து பேர்
 4. பதினெட்டு பேர்

19. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்?

 1. திருமதி. பாத்திமா பீவி
 2. திருமதி. பிரதிபா தேவி சிங் பாட்டில்
 3. திருமதி. அன்னிபெசன்ட்
 4. திருமதி. சரோஜினி நாயுடு

20. கீழ்க்கண்டவற்றுள் எது தவறான விடை?

I. குடியரசுத்தலைவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

II. குடியரசுத்தலைவர் 30 வயது முடிந்தவராக இருத்தல் வேண்டும்.

III. குடியரசுத்தலைவர் மக்களவை உறுப்பினருக்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IV. குடியரசுத்தலைவர் அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தலாகாது.

 1. I
 2. II
 3. III
 4. IV

21. இந்தியக் குடியரசுத் தலைவர் கீழ்கண்ட எந்த வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 1. ஒரு நபருக்கு ஒரு வாக்கு
 2. பன்மை வாக்கு
 3. வெளிப்படையான வாக்கு
 4. ஒற்றை மாற்று வாக்கு

22. பின்வரும் குடியரசு தலைவர்களில் எவர் ஒருவர், 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், உள்நாட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தவர்?

 1. வி.வி.கிரி
 2. பக்ருதின் அலி அகமது
 3. பி.டி. ஜாட்டி
 4. டாக்டர் ஜாஹீர் உசேன்

23. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்த விதி (Article) மூலமாக பிரயோகிக்கப்படுகிறது.

1. விதி – 356

2. விதி – 360

1. விதி – 352

1. விதி – 365

 1. 1 மட்டும்
 2. 1 மற்றும் 3 மட்டும்
 3. 1 மற்றும் 4 மட்டும்
 4. 1 மற்றும் 2 மட்டும்

24. அரசியலமைப்பு சட்டப்படி போர் மற்றும் அமைதிப் பிரகடனத்தைத் பிரயோகிக்கும் அதிகாரம் படைத்தவர்

 1. பிரதம மந்திரி
 2. பாதுகாப்புத் துறை அமைச்சர்
 3. பாராளுமன்றம்
 4. குடியரசுத் தலைவர்

25. எத்தனை உறுப்பினர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கின்றார்?

 1. 14
 2. 12
 3. 11
 4. 10

26. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்

 1. குடியரசுத் தலைவர்
 2. பிரதம மந்திரி
 3. துணை குடியரசுத் தலைவர்
 4. உச்ச நீதிமன்ற நீதிபதி

27. மைய ஊழல் தடுப்பு ஆணையாளரை நியமனம் செய்பவர்

 1. துணை குடியரசுத் தலைவர்
 2. குடியரசுத் தலைவர்
 3. பாராளுமன்றம்
 4. தலைமை நீதிபதி

28. அரசியலமைப்பு, குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள மன்னிப்பளிக்கும் அதிகாரமானது

 1. சட்டமியற்றும் அதிகாரம்
 2. செயல்துறை அதிகாரம்
 3. நீதித்துறை அதிகாரம்
 4. அவசரகால அதிகாரம்

29. இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை வரிசைப்படுத்துக

I. டாக்டர் ராதாகிருஷ்ணன்

II. டாக்டர் ஜாகீர் உசேன்

III. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

IV. வி.வி.கிரி

 1. I, II, III, IV
 2. III, IV, I, II
 3. III, I, II, IV
 4. III, II, I, IV

30. நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்பவர்

 1. குடியரசுத் தலைவர்
 2. பிரதம அமைச்சர்
 3. மக்களவை சபாநாயகர்
 4. நிதி அமைச்சர்

31. உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உடையவர் யார்?

 1. இந்திய குடியரசுத் தலைவர்
 2. இந்திய தலைமை நீதிபதி
 3. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
 4. மாநில ஆளுநர்

32. பொருத்துக

a) குடியரசுத் தலைவர்

1) மாநிலத்தின் உண்மையான தலைவர்

b) பிரதம அமைச்சர்

2) இந்தியாவின் முதல் குடிமகன்

c) முதலமைச்சர்

3) மாநிலத்தின் பெயரளவுத் தலைவர்

d) ஆளுநர்

4) இந்திய அரசாங்கத்தின் தலைவர்

      (a) (b) (c) (d)
(A) (1) (2) (3) (4)
(B) 
(2) (4) (1) (3)
(C) (1) (2) (3) (4)
(D) (4) (2) (3) (1)

33. கீழ்கண்டவற்றுள் எது சரி?

I. இந்திய ஜனாதிபதி மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

II. அமெரிக்காவில் இது போன்ற நியமன உறுப்பினர்களை செனட்டில் நியமிக்கப்படுவதில்லை.

 1. I சரி
 2. II சரி
 3. I சரி, ஆனால் II தவறு
 4. I மற்றும் II சரி

34. ஜூன் 2015-ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி

 1. மைத்ரிபாலா சிரிசேனா
 2. ரவி கருணாநாயகே
 3. மஹிந்தா சமரசிங்கே
 4. மஹிந்தா அமரவீரா

34. மாநில ஆளுநரை நியமனம் செய்பவர்

 1. பிரதமர்
 2. குடியரசுத் தலைவர்
 3. முதலமைச்சர்
 4. உயர்நீதிமன்றம்

35. இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புப் படைகளின் மீதான உயர்தனி ஆணைதிகாரம் யாரிடம் உற்றமைந்திருக்கிறது?

 1. குடியரசுத் தலைவரிடம்
 2. பாராளுமன்றத்திடம்
 3. குடியசுத் தலைவரிடம்; ஆனால் பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டு
 4. முப்படைத் தலைமைத் தளபதியிடம்

35. குடியரசு தலைவர் அவசரகால பிரகடனம் செய்யும் முன்பு அதனை _____________ முன்பாக வைக்க வேண்டும்.

 1. பிரதம மந்திரி
 2. அமைச்சரவை
 3. கேபினட்
 4. பாராளுமன்றம்

36. குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்குமு் அதிகாரம் பற்றி கண்ட கூற்றுகளை கருதவும்

i. அவர் இந்த விவகாரத்தினை மேல் முறையீட்டு நீதிமன்றமாக செயல்படுத்துகிறார்.

ii. அவரின் அதிகாரம் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது இல்லை.

iii. குடியரசுத் தலைவர் கருணை மனு கோருவோருக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.

iv. மன்னிப்பளிக்கும் அதிகாரம் என்பது அடிப்படையில் அவருடைய சிறப்பத்திகாரம் ஆகும்.

 1. i மட்டும் சரி
 2. i மற்றும் ii மட்டும் சரி
 3. iii மட்டும் சரி
 4. iii மற்றும் iv மட்டும் சரி

37. குடியரசுத் தலைவரின் தடுப்புமுறை ஆணை (அதிகாரம்) பற்றிய வாக்கியங்களை கவனிக்கவும்.

1. சாதாரண மசோதாக்களை உறுதி செய்தல் நிராகரித்தல் கூடும் ஆனால் திருப்புதல் கூடும்

2. பண மசோதாவை உறுதி செய்தல் மற்றும் நிராகரித்தம் கூடும் ஆனால் திருப்புதல் கூடாது

3. அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை உறுதி செய்தல், நிராகரித்தல் அல்லது திருப்புதல் கூடும்.

மேல் காணப்படுபவையில் எது/எவை சரியானது

 1. 1, 2 மற்றும் 3
 2. 1 மற்றும் 2
 3. 2 மற்றும் 3
 4. 1 மற்றும் 3

38. உச்சநீதிமன்ற தலைமை, நீதிபதி மற்றும்‌ அதன்‌ பிற நீதிபதிகளை நியமனம்‌ செய்கின்றவர்‌.

 1. இந்தியக்குடியரசுதலைவர்‌
 2. இந்திய அரசின்‌ தலைமை வழக்கறிஞர்‌
 3. ஆளநர்‌
 4. இந்தியப்‌ பிரதமர்‌

39. பண மசோதா

1. மாநிலங்களவையில்‌ இதை அறிமுகப்படுத்த முடியாது

2. சபாநாயகரால்‌ *சான்றளிக்கப்பட வேண்டும்‌

3. மாநிலங்களவையால்‌ திருத்தப்படலாம்‌

4. குடியரசுத்‌ தலைவர்‌ தாமதமின்றி ஒப்புதல்‌ அளிக்க வேண்டும்‌

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை கொண்டு மேலுள்ள கூற்றுகளில்‌ எவை சரியானவை எனத்‌ தேர்ந்தெடுக்கவும்‌ :

 1. 1, 2, 3 மற்றும்‌ 4
 2. 1, 2 மற்றும்‌ 4 மட்டும்‌
 3. 2, 3 மற்றும்‌ 4 மட்டும்‌
 4. 1 மற்றும்‌ 4 மட்டும்‌

40. உச்சநீதிமன்றம்‌ இந்திய குடியரசுத்‌ | தலைவருக்கு “ஆலோசனை வழங்க கடமைப்பட்டுள்ளது” இந்திய அரசியலமைப்பின்‌ எந்த ஷரத்து இதனைக்‌ குறிப்பிடுகிறது?

 1. ஷரத்து143
 2. ஷரத்து 144
 3. ஷரத்து 145
 4. ஷரத்து 146

41. இந்திய்ப்‌ பிரதமரை நியமனம்‌ செய்பவர்‌

 1. ஆளுநர்‌
 2. சபாநாயகர்‌
 3. குடியரசுத்‌ தலைவர்‌
 4. தேர்தல்‌ ஆணையர்‌

42. யூனியன்‌ பிரதேசங்களை குடியரசு தலைவர்‌ கீழ்வரும்‌ எந்த அமைச்சகத்தின்‌ மூலம்‌ நிர்வகிக்கிறார்‌?

 1. உள்துறை அமைச்சகம்‌
 2. வெளிவிவகார அமைச்சகம்‌
 3. பாதுகாப்பு அமைச்சகம்‌
 4. ‘நிதி அமைச்சகம்‌

 

துணை குடியரசு தலைவர்

1. துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?

 1. கீழவையில் தீர்மானம் இயற்றுவதன் மூலம்
 2. இந்திய தலைமை நீதிபதியின் அனுமதி கிடைத்தவுடன்
 3. இந்திய தலைமை வழக்குரைஞரின் அனுமதி கிடைத்தவுடன்
 4. குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட அதே முறை

2. துணை ஜனாதிபதிகளின் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும் (Repeated Question)

 1. கே.ஆர்.நாராயணன், பி.டி. ஜெட்டி, ஜாகிர் ஹூசேன், பி.எஸ். ஷெகாவட்
 2. ஜாகிர் ஹூசேன், பி.எஸ். ஷெகாவட், பி.டி. ஜெட்டி, கே.ஆர்.நாராயணன்
 3. ஜாகிர் ஹூசேன், பி.டி. ஜெட்டி, கே.ஆர்.நாராயணன், பி.எஸ். ஷெகாவட்
 4. பி.எஸ். ஷெகாவட், ஜாகிர் ஹூசேன், பி.டி. ஜெட்டி, கே.ஆர்.நாராயணன்

3. மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்

 1. சபாநாயகர்
 2. துணை குடியரசுத் தலைவர்
 3. குடியரசுத் தலைவர்
 4. பிரதமர்

4. பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாது எது?

 1. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
 2. அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
 3. அவர் 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
 4. அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

5. கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்

 1. இந்திய திட்டமிடலின் தந்தை – காந்திஜி
 2. தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் – P.C. அலெக்சாண்டர்
 3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திராகாந்தி
 4. இந்தியாவின் முதல் ஜனாபதி – நேரு

6. பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?

 1. 89
 2. 90
 3. 87
 4. 88

7. இந்தியக் குடியரசுத் தலைவர் தன் ராஜினாமா கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

 1. மக்களைவை சபாநாயகர்
 2. இந்திய தலைமை நீதிபதி
 3. இந்திய தலைமை தேர்தல் அதிகாரி
 4. இந்திய குடியரசு துணைத்தலைவர்

8. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?

 1. குடியரசுத் தலைவர் – 35
 2. துணை குடியரசுத் தலைவர் – 30
 3. உச்சநீதிமன்ற நீதிபதி – 65
 4. உயர்நீதிமன்ற நீதிபதி – 62

9. ராஜ் சபையின் தலைவராக இருப்பவர் யார்

 1. ஜனாதிபதி
 2. பிரதம மந்திரி
 3. உப ஜனாதிபதி
 4. துணை பிரதம மந்திரி

10. துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கு பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?

 1. கீழவையில் தீர்மானம் இயற்றுவதன் மூலம்
 2. இந்திய தலைமை நீதிபதியின் அனுமதி கிடைத்தவுடன்
 3. இந்திய தலைமை வழக்குரைஞரின் அனுமதி கிடைத்தவுடன்
 4. குடியரசு துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட அதே முறை

11. இராஜய சபையின் (மேலவையின்) தலைவர்

 1. குடியரசுத் தலைவர்
 2. துணைக் குடியரசுத் தலைவர்
 3. பிரதமர்
 4. மேற்கூறிய எதுவுமில்லை

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.