பாரதியார் TNPSC Group 4

பாரதியார் (6th New Tamil Book காணி-நிலம்)

1. "காணி நிலம் வேண்டும் - பராசக்தி" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதியார்

2. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்? பாரதியார்

3. பாரதியாரின் இயற்பெயர் என்ன? சுப்பிரமணியன்

4. சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்? பாரதி

5. தம் கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்? பாரதியார்

6. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்? பாரதியார்

7. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்? பாரதியார்

8. இளமையிலே சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்? பாரதியார்

9. பாரதியாரின் படைப்புகள் எவை? பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

 

பாரதியார் (8th New Tamil Book தமிழ்மொழி வாழ்த்து)

1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்? பாரதியார்

2. "எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்? பாரதியார்

3. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் யார்? சி. சுப்பிரமணிய பாரதியார்

4. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்? பாரதியார்

5. சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் யார்? பாரதியார்

6. வசனக்கவிதையும் சீட்டுக்கவிகளையும் எழுதிவர் யார்? பாரதியார்

7. சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்பட்டவர் யார்? பாரதியார்

8. தமிழ்த்தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று பாரதியாரைப் புகழ்பவர்? பாரதிதாசன்

10. ஷெல்லிதாசன் - பாரதியார்

 

பாரதியார் (10th New Tamil Book காற்றே வா!)

1. காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்? பாரதியார்

2. "காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு" என்று கவிதை எழுதியவர் யார்? பாரதியார்

3. திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்? பாரதியார்

4. பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்? நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை

5. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்? பாரதியார்

6. சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்? பாரதியார்

7. குயில்பாட்டு. பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர் யார்? பாரதியார்

8. பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் யாவை? கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி

9. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்? பாரதியார்

10. பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்? இந்தியா, சுதேசமித்திரன்

11. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்? வசனகவிதை

12. ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? பாரதியார்

13. புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது? வசனகவிதை

14. உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் ----- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்? யாப்பு

 

பாரதியார் (11th New Tamil Book இதழாளர்-பாரதி)

1. எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர்? பாரதியார்

2. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது? மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி

3. பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்? சுதேசமித்திரன்

4. பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை? சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி

5. பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள் எவை? சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்

6. மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்? பாரதியார்

7. பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்? இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்

8. தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்? பாரதியார்

9. பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டார்? விஜயா, இந்தியா

10. பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள் யார்? பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்

11. பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்? சித்திராவளி

12. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்? பாரதியார்

13. பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில் குரல் வெண்பா எழுதியுள்ளார்? சக்கரவர்த்தினி

14. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்? இந்தியா

15. சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்? புரட்சி, விடுதலை

16. "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர்? பாரதியார்

17. இறந்து போவதற்கு முன் "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்" என்று கூறியவர்? பாரதியார்

18. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை எப்புனைப்பெயரில் அழைப்பார்? வள்ளி, கண்ணம்மா

19. தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? பாரதியார்

20. தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்? மகுடமிடல்

 

பாரதியார் (12th New Tamil Book தம்பி-நெல்லையப்பருக்கு)

1. தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக கொள்க! எனக் கூறியவர்? பாரதியார்

2. தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம் எழுதியவர்? பாரதியார்

3. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்று கடிதம் எழுதியவர்? பாரதியார்

4. ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது என்று பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்? பரலி. சு. நெல்லையப்பர்

5. எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் எது? வம்சமணி தீபிகை

6. 1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்? கவிகேசரி சாமி தீட்சிதர்

7. பாரதி எந்த நூலை வெளியிட ஆசைப்பட்டார்? வம்சமணி தீபிகை

8. வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு? 06. 08. 1919

10. கண்ணன் பாட்டு, கட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்? பாரதியார்

11. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு நூல்களை பதிப்பித்தவர்? பரலி சு. நெல்லையப்பர்

12. பாரதி நடத்திய இதழ்கள்? சூரியோதயம், கர்மயோகி

13. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்? பரலி சு. நெல்லையப்பர்

14. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்? பரலி சு. நெல்லையப்பர்

15. நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல் எழுதியவர்? பரலி சு. நெல்லையப்பர்

16. பாரதியின் கடிதங்கள் என்னும் நூலைப் பதிப்பித்தவர்? ரா.அ. பத்மநாபன்

17. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுர அரசுக்கு கடிதம் எழுதினார்? 15 வயதில்

18. பாரதி மறைவுக்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்? குத்திகேசவருக்கு

19. பரலி சு. நெல்லையப்பர் பாரதியாரை விட எத்தனை வயது இளையவர்? 7ஆண்டுகள்

20. பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே யாரைக் கருதினார்? பரலி சு. நெல்லையப்பர்


----------------------------

Subject Wise and Topic Wise Study Notes for TNPSC Group 4 Exam 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.