பாரதிதாசன் (6th New Tamil Book இன்பத்தமிழ்)
1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு
நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? பாரதிதாசன்
2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? சுப்புரத்தினம்
3. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை
எவ்வாறு மாற்றிக் கொண்டார்? பாரதிதாசன்
4. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான
கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்? பாரதிதாசன்
5. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
6. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்? பாரதிதாசன்
7. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்? பாரதிதாசன்
8. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன? அமுது, நிலவு, மணம்
9. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? அமுதம் போன்ற தமிழ்
10. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர்
சூட்டி மகிழ்ந்தவர் யார்? பாரதிதாசன்
பாரதிதாசன் (7th New Tamil Book இன்பத்தமிழ்க்-கல்வி)
1. "எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்"
எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? பாரதிதாசன்
2. எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்?
இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
3. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு,
கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்? பாரதிதாசன்
4. பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது?
பிசிராந்தையார்
5. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது? மயில்
பாரதிதாசன் (9th New Tamil Book குடும்ப-விளக்கு)
1. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர் யார்? பாரதிதாசன்
2. "உணவினை ஆக்கல் மக்கடடு உயிர்ஆக்கல் அன்றோ வாழ்வு என்ற பாடல் வரியை
பாடியவர்? பாரதிதாசன்
3. பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார்? கல்வி
4. கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை காட்டும் நூல்?
குடும்ப விளக்கு
5. பாரதிதாசன் இயற்பெயர்? கனக சுப்புரத்தினம்
6. கனக. சுப்புரத்தினம் என்ற பெயரை யார் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன்
என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்? பாரதியார்
7. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
போன்ற நூல்கள் எழுதியவர் யார்? பாரதிதாசன்
8. பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டன? பாவேந்தர்
பாரதிதாசன் கவிதைகள்
9. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
பிசிராந்தையார்
10. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாரதியார்
11. "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடல்
வரியை இயற்றியவர் யார்? கவிமணி
12. "பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பாடல்
என்பது சரிப்படாது என்ற பாடல் வரியை இயற்றியவற்ற யார்? பாவேந்தர்
பாரதிதாசன் (11th New Tamil Book புரட்சிக்-கவி)
1. 1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால்
இயற்றப்பட்ட நூல் எது? புரட்சிக்கவி
2. பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர்
யார்? கனக சுப்புரத்தினம்
3. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்?
பாரதிதாசன்
4. பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்? பாரதிதாசன்
5. குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை
எழுதியவர்? பாரதிதாசன்
6. குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்? பாரதிதாசன்
7. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்? பிசிராந்தையார்
8. 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய்
வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு? புதுச்சேரி
9. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? திருச்சி