9th தமிழ் நூல் வெளி இயல் - 8

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 8.2 ஒளியின் அழைப்பு - ந. பிச்சமூர்த்தி
நூல் வெளி
• புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
• பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.
• புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
• ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
• ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
• இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
• இவரின் முதல் சிறுகதை - ஸயன்ஸுக்கு பலி என்பதாகும்.
• 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.
• பிக்ஷ, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

பாடம் 8.3 தாவோ தே ஜிங் - லா வோட்சு
நூல் வெளி
• லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
• சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்.
• அக்காலம், சீனச் சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
• லாவோட்சு "தாவோவியம்" என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்.
• ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
• லாவோட்சுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.
• தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.
• பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி. மணி.

பாடம் 8.4 யசோதர காவியம்
நூல் வெளி
• ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
• இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
• இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
• இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
• யசோதர காவியம், யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
• இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
• பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.