” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
நூல் வெளி |
---|
• பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: "இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு" என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.
• இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன. |
பாடம் 7.2 சீவக சிந்தாமணி - திருத்தக்கத் தேவர்
நூல் வெளி |
---|
• சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
• இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். • 'இலம்பகம்' என்ற உட்பிரிவுகளைக் கொண்டது. • 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல், 'மணநூல்' எனவும் அழைக்கப்படுகிறது. • நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது. • இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர். • சமண சமயத்தைச் சார்ந்த இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார். • இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. • சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக 'நரிவிருத்தம்' என்னும் நூலை இயற்றினார் என்பர். |
பாடம் 7.3 முத்தொள்ளாயிரம்
நூல் வெளி |
---|
• வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.
• மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. • நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. • அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. • ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. • இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். • சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது. |
பாடம் 7.4 மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
நூல் வெளி |
---|
• பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
• காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. • அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. • இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர். • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். |