9th தமிழ் நூல் வெளி இயல் - 9

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 9.1 விரிவாகும் ஆளுமை
நூல் வெளி
• தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
• அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
• இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது.
• தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்.
• அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார்
• இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

பாடம் 9.2 அக்கறை - கல்யாண்ஜி
நூல் வெளி
• கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்;
• சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
• வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார்.
• புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில. இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.
• பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 'சில இறகுகள் சில பறவைகள்' என்ற பெயரில் வெளியானது.
• கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள்.
• ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

பாடம் 9.3 குறுந்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
நூல் வெளி
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
• இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது;
• கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
• இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை.
• 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
• நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும்.
• இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
• இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்;
• கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார்.

பாடம் 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை! - சு. சமுத்திரம்
நூல் வெளி
• சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்.
• தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்;
• முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்;
• வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
• 'வேரில் பழுத்த பலா புதினம் சாகித்திய அகாதெமி விருதையும் குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.