8th தமிழ் நூல் வெளி இயல் - 1

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
இயல் 1 : தமிழ் இன்பம்
பாடம் 1.1. தமிழ்மொழி வாழ்த்து
நூல் வெளி
• கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்
• இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
• கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
• சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

பாடம் 1.2. தமிழ்மொழி மரபு
நூல் வெளி
• தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
• தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
• இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92,93) இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடம் 1.4. சொற்பூங்கா
நூல் வெளி
• செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
• இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
• திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
• இவரது தமிழின் தனிப்வருஞ் சிறப்புகள் என்னும் நூவிலிருந்து செய்திகள் ஏதாகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.