10th தமிழ் நூல் வெளி இயல் - 8

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 8.2. ஞானம் - தி.சொ.வேணுகோபாலன்
நூல் வெளி
• நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• இவர் திருவையாற்றில் பிறந்தவர்;
• மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
• 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
• இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பாடம் 8.3. காலக்கணிதம் – கண்ணதாசன்
நூல் வெளி
• 'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• ‘முத்தையா’ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
• இவரது பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி ஆவர்.
• 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
• இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
• தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
• சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
• இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.