” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
நூல் வெளி |
---|
• ம.பொ.சிவஞானத்தின் 'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
• சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 - 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; • தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். • 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். • தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது. |
பாடம் 7.2. ஏர் புதிதா? -கு.ப.ராஜகோபாலன்
நூல் வெளி |
---|
• 'ஏர் புதிதா?' எனும் கவிதை கு.ப.ரா.படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
• 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். • இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. |
பாடம் 7.3. மெய்க்கீர்த்தி
நூல் வெளி |
---|
• கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.
• இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. • இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. • அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. • இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது. • முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. • மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள். • இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை. |
பாடம் 7.4. சிலப்பதிகாரம் –இளங்கோவடிகள்
நூல் வெளி |
---|
• சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
• ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். • இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; • மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. • இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது; • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. • மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன. • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர். • மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்' என இக்காப்பியம் படைத்தார் என்பர். |