” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
நூல் வெளி |
---|
• ஜெயகாந்தன் பேசி, 'எதற்காக எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் 'யுகசந்தி' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'தர்க்கத்திற்கு அப்பால்' என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
• தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. • அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. • இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. • இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; • தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; • தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; • சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |
பாடம் 9.2. சித்தாளு – நாகூர்குமி
நூல் வெளி |
---|
• முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்;
• இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார். |
பாடம் 9.3. தேம்பாவணி - வீரமாமுனிவர்
நூல் வெளி |
---|
• தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
• கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது. • 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. • இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். • இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார். |
பாடம் 9.4. ஒருவன் இருக்கிறான் - கு. அழகிரிசாமி
நூல் வெளி |
---|
• ஒருவன் இருக்கிறான் கதை 'கு.அழகிரிசாமி சிறுகதைகள்' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• கு.அழகிரிசாமி, அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம். • கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. • படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். • இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். • தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர். |