10th தமிழ் நூல் வெளி இயல் - 5

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 5.2. நீதிவெண்பா - கா.ப. செய்குதம்பிப் பாவலர்
நூல் வெளி
• ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;
• பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்;
• சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்;
• 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார்.
• இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன.
• இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பாடம் 5.3. திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி முனிவர்
நூல் வெளி
• திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
• இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது;
• பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்;
• பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்;
• சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

பாடம் 5.4. புதிய நம்பிக்கை – கமலாலயன்
நூல் வெளி
• புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது.
• ‘'உனக்குப் படிக்கத் தெரியாது“ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது.
• உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்.
• இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்.
• இவரின் இயற்பெயர் வே. குணசேகரன்.
• வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.