10th தமிழ் நூல் வெளி இயல் - 2

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 2.2. காற்றே வா! - பாரதியார்
நூல் வெளி
• மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்;
• எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்;
• குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்;
• இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
• இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

பாடம் 2.3. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
நூல் வெளி
• முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
• இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1 - 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
• முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது;
• முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
• இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

பாடம் 2.4. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
நூல் வெளி
• புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.
• இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 - 1997).
• இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
• அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம்.
• அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
• ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.
• வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.
• மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.
• இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.