10th தமிழ் நூல் வெளி இயல் - 1

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 1.1. அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நூல் வெளி
• பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன.
• தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்
• துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
• இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.
• இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
• இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பாடம் 1.2. தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர்
நூல் வெளி
• மொழி ஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.
• பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
• செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்;
• உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
• அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின், தமிழின் புகழ்மணப் பதிவுகளை நுகர்வோமா!

பாடம் 1.3. இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார்
நூல் வெளி
• புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
• இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.
• சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
• இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

பாடம் 1.4. உரைநடையின் அணிநலன்கள் - எழில்முதல்வன்
நூல் வெளி
• எழில்முதல்வன் எழுதிய 'புதிய உரைநடை' என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.
• மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
• குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர்.
• மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.
• இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
• 'புதிய உரைநடை' என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.