10th தமிழ் நூல் வெளி இயல் - 4

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 4.2. பெருமாள் திருமொழி – குலசேகராழ்வார்
நூல் வெளி
• நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
• பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
• இதில் 105 பாடல்கள் உள்ளன.
• இதனைப் பாடியவர் குலசேகராழ்வார்.
• இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

பாடம் 4.3. பரிபாடல் - கீரந்தையார் (எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று)
நூல் வெளி
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
• பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
• இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.
• இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
• உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
• இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.