10th தமிழ் நூல் வெளி இயல் - 3

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
பாடம் 3.2. காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர்
நூல் வெளி
• காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
• இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
• 'இல்லொழுக்கங் கூறிய' பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
• முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
• தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.
• இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
• சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
• நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

பாடம் 3.2. மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார் (பத்துப்பாட்டு நூல்களுள்)
நூல் வெளி
• பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’.
• 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது;
• மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
• நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

பாடம் 3.4. கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
நூல் வெளி
• கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.
• ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
• இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது.
• இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.
• இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
• கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
• இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
• இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
• இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன.
• எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.