6th New Tamil Unit -1 Book Back

நூல்வெளி

பாடம் 1.1 இன்பத்தமிழ்

1. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

2. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

3. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.

4. எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.

5. இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

6. இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.

 பாடம் 1.2 தமிழ்க்கும்மி

1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.

2. இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

3. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

4. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.

5. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

6. கனிச்சாறு இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

7. கனிச்சாறு இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.


கோடிட்ட இடங்களை நிரப்புக

பாடம் 1.1 இன்பத்தமிழ்

1. __________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன விடை: தாய்மொழியைத்

2. ______ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார் விடை: பாரதிதாசன்

3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் ____________  விடை : தமிழ்

 

பாடம் 1.2 தமிழ்க்கும்மி

4. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் __________ விடை : பெருஞ்சித்திரனார்

5. எட்டுதிசையிலும் ___________________ புகழ்  எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக விடை : செந்தமிழின்

7. ___________ பல நூறு ஆண்டுகளைக் கணடது விடை : தமிழ்மொழி

8. பொய்யாமை அகற்றும் மொழி __________ விடை : தமிழ்மொழி

9. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி __________ விடை : தமிழ்மொழி

 

பாடம் 1.3 வளர் தமிழ்

10. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது _________ விடை : மொழி

11. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ___________

விடை : தொல்காப்பியம்

12. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது _______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். விடை : எண்களின்

13. உலகில் ___________ மேற்பட்ட மொழிகள் உள்ளன. விடை : ஆயிரத்திற்கும்

14. இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய _________ தோன்றியிருக்க வேண்டும்.

விடை : இலக்கண விதிகள்

15. __________ மிகவும் தொன்மையான மொழி விடை : தமிழ் மொழி

16. தமிழ் மொழி பெரும்பாலும் _________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன. விடை : வலஞ்சுழி

17. உயர்திணை எதிர்ச்சொல் ________ என அமைய வேண்டும். விடை : தாழ்திணை

18. தமிழுக்கு ___________  என்ற சிறப்பு பெயரும் உண்டு விடை : முத்தமிழ்

19. தமிழில் வலஞ்சுழி எழுத்துக்கள் _________ விடை : அ, எ, ஒள, ண, ஞ

20. தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் ___________  விடை : ட, ய, ழ

21. __________ , ___________  தமிழ் வடிவங்களாகும் விடை : அறிவியல் தமிழும். கண்ணித்தமிழும்

22. _______ , ________ ஆகிய இரண்டும் சங்க நூல்கள் எனப்படும்

விடை : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

 

பாடம் 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

23. ஒலி வடிவாக எழுதப்டுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எனப் டுகிறது. விடை : எழுத்து

24. குறுகி ஒலிக்கும் ________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள். விடை : அ, இ, உ, எ, ஒ

25. நீண்டு ஒலிக்கும் ____ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள். விடை : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

26. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ___________ விடை : அரை மாத்திரை


பாடம் 1.1 இன்பத்தமிழ்

1. பொருத்துக

1. விளைவுக்கு -  அ. பால்

2. அறிவுக்கு - ஆ. வேல்

3. இளமைக்கு- இ. நீர்

4. புலவர்க்கு -  ஈ. தோள்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.

 

2. பொருத்துக

1. வாழ்வுக்கு -  அ. வாள்

2. உயர்வுக்கு - ஆ. ஊர்

3. கவிதைக்கு - இ. வான்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

 

பாடம் 1.2 தமிழ்க்கும்மி

3. பொருத்துக

1. ஆழி -  அ. உலகம்

2. மேதினி  -  ஆ. கடல்

3. மேன்மை -  இ. நீண்டதொருகாலப்பகுதி

4. ஊழி -   ஈ. உயர்வு

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 –இ

 

பாடம் 1.3 வளர் தமிழ்

5. பொருத்துக

1. அருகு, கோரை -  அ. தோகை

2. நெல், வரகு - ஆ. ஓலை

3. கரும்பு, நாணல் - இ. புல்

4. பனை, தென்னை -   ஈ. தாள்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

 

6. பொருத்துக

1. முதலை -  அ. பதிற்றுப்பத்து

2. மருந்து -  ஆ. பெரும்பாணாற்றுப்படை

3. பார் - இ. குறுந்தொகை

4. வெள்ளம் -   ஈ. அகநானூறு

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகWelcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong


:

 • tnpsc
 • tnpsc group 4
 • tnpsc group 2
 • tnpsc group 4 syllabus
 • tnpsc login
 • tnpsc photo compressor
 • tnpsc exam date
 • tnpsc exam
 • tnpsc exam details
 • tnpsc exam apply
 • tnpsc portal
 • tnpsc maths book pdf
 • tnpsc tamil book pdf
 • Tamil Nadu Public Service Commission
 • tnpsc News
 • tnpsc recruitment
 • tnpsc apply oline
 • tnpsc notification
 • www.tnpsc.gov.in latest news
 • tnpsc new syllabus
 • tnpsc notes
 • TNPSC Illakkanam
 • இலக்கணம்
 • TNPSC New Syllabus
 • குரூப்-4 தமிழ் இலக்கணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.