TNPSC MODEL TAMIL QUESTION PAPER - 1

TNPSC Executive Officer Grade-3 வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017

1.உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக
(A) பெயர்ச்சொல்
(B) விளைச்சொல்
(C) உரிச்சொல்
(D) இடைச்சொல்
2. ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்
(A) வினையெச்சம்
(B) தெரிநிலை வினையெச்சம்
(C) குறிப்பு வினையெச்சம்
(D) முற்றெச்சம்
3. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
(A) திருவாசகம்
(B) தேவாரம்
(C) திருக்குறள்
(D) பட்டினப்பாலை
4. 4 என்ற எனணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
(A) அ
(B) ச
(C) உ
(D) ரூ
5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? – என வினவும் வினா
(A) அறி வினா
(B) ஐய வினா
(C) கொடைவினா
(D) ஏவல் வினா
6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக
(A) குயில் கூவும்
(B) மயில் அகவும்
(C) கோழி கூவும்
(D) கிளி பேசும்
7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
(A) மலர்க்குள் புதுமை மண்ணில் மணம் வைத்தாய்
(B) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்
(C) மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
(D) மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
8. திருவாசகத்தில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
(A) அறுநூற்று ஐம்பத்தெட்டு
(B) அறுநூற்று எண்பத்தைந்து
(C) நானூற்று ஐம்பத்தெட்டு
(D) அறுநூற்றுப் பத்து
9. சொல்லிசை அளபெடை தேர்க
(A) உண்பதுஉம்
(B) பெறா அவிடின்
(C) தழீஇ
(D) அண்ணன்
10. பிரித்தெழுதுக – வெவ்விருப்பாணி
(A) வெம் + இரும்பு+ ஆணி
(B) வெம்+இருப்பு+ ஆணி
(C) வெம்மை+இரும்பு+ஆணி
(D) வெம்மை+இருப்பு+ ஆணி.
11. பொருந்தா இணையைக் கண்டறிக
(A) பையுள் – இன்பம்
(B) பனவன் – அந்தணன்
(C) விபுதர் – புலவர்
(D) அல்கு இரவு
12. பிரித்தெழுதுக – நன்கணியர்
(A) நன்கு + அணியர்
(B) நன் + அணியர்
(C) நான்கு + அணியர்
(D) நன்கு + கணியர்
13. பொருத்துக
(a) வைதருப்பம் 1. மதுரகவி
(b) கௌடம் 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி
(d) மரகதம் 4. சித்திரகவி
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 4 3 1 2
( C) 2 1 4 3
(D) 3 4 2 1
14. ”விளம்பி’ என்பது ­…………………………….பெயர்.
(A) இயற்பெயர்
(B) புனைபெயர்
(C) ஊர்ப்பெயர்
(D) இறைவனின் பெயர்
15. ‘அறிபு தப்பழ ஆவணங் காட்டி
அடியனா என்னை ஆளது கொண்’ – பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) திருமூலர்
16. சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு………………
(A) எட்டுத்தொகை
(B) பத்துப்பாட்டு
( C) பதினெண் கீழ்க்கணக்கு
(D) பதினெண் மேல்கணக்கு
17. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) சிறுபஞ்சமூலம் – காரியாசான்
(B) ஞானரதம் – பாரதியார்
(C) எழுத்து – சி.சு.செல்லப்பா
(D) குயில்பாட்டு – கண்ணதாசன்
18. “பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது ?
(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) தேவாரம்
(D) திருத்தொண்டர் புராணம்
19. ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
(A) உலா
(B) தூது
(C) பரணி
(D) பள்ளு
20. கிறித்தவக்கம்பா் எனப் புகழப்பெறுபவர்
(A) ஜான்பன்யன்
(B) எச்.ஏ.கிருட்டினனார்
(C) ஹென்றி
(D) வீரமாமுனிவர்
21. நற்றிணையைத் தொகுப்பித்தவர்.
(A) பன்னாடு தந்த மாறன் வழுதி
(B) உக்ரப் பெருவழுதி
(C) இளம் பெருவழுதி
(D) மிளை கிழான்
22. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன.
(A) 33
(B) 133
(C) 13
(D) 1330
23. பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்
(A) புரட்சிக் கவிஞர்
(B) தேசியக் கவிஞர்
(C) உவமைக்கவிஞர்
(D) கவிக்குயில்
24. ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவகசிந்தாமணி
(D) வளையாபதி
25. பொருந்துக
(a) மேதி 1. சிவன்
(b) சந்தம் 2. எருமை
(c) கோதில் 3. அழகு
(d) அங்கணர் 4. குற்றமில்லாத
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 2 3 1 4
( C) 3 1 4 2
(D) 3 2 1 4
26. பொருத்துக
தொடர் பொருள்
(a) ஆகாயத்தாமரை 1. மிகுதியாகப் பேசுதல்
(b) ஆயிரங்காலத்துப் பயிர் 2. பொய்யழுகை
(c) முதலைக் கண்ணீர் 3. நீண்ட காலத்திற்குரியது
(d) கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
( C) 3 4 1 2
(D) 3 4 2 1
27. சைவத்திருமுறைகளில் …………………….. திருமுறை திருமந்திரம்,
(A) ஏழாவது
(B) பத்தாவது
(C) எட்டாவது
(D) மூன்றாவது
28. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
29. தவறானவற்றைத் தேர்வு செய்க: குமரகுருபரரின் நூல்கள்
(A) கந்தர் கலிவெண்பா
(B) வேதியர் ஒழுக்கம்
(C) நீதிநெறி விளக்கம்
(D) சகலகலாவல்லி
30. கண்டங்கத்தரி, சிறுவழுதுனை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன
(A) இலை
(B) வேர்
(C) பட்டை
(D) காய்
31. முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்
(A) உழவுத்தொழில்
(B) மீன் வகைகள்
(C) விதைகளின் பெயர்கள்
(D) அனைத்தும்
32 ‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ இடம்பெற்றுள்ள காப்பியம்
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவகசிந்தாமணி
(D) குண்டலகேசி
33. பொருள் தருக – ‘மயரி’
(A) உறக்கம்
(B) தயக்கம்
(C) மயக்கம்
(D) கலக்கம்
34. திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்
(A) மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
(B) மூவாயிர்த்து இருநூற்று அறுபத்து மூன்று
(C) மூவாயிரத்து மூன்று
(D) மூவாயிரத்து எழுபத்து மூன்று
35. மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
(A) எட்டு
(B) ஏழு
(C) பத்து
(D) ஒன்பது
36. “உடம்பார் அழிவின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?
(A) திருமூலர்
(B) திருநாவுக்கரசர்
(C) இராமலிங்க அடிகள்
(D) திருஞானசம்பந்தர்
37. ‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்
(A) திலகர்
(B) காந்தியடிகள்
(C) வ.உ.சிதம்பரனார்
(D) திருப்பூர் குமரன்
38. இந்திய நாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்
(A) அகத்தியலிங்கம்
(B) குற்றாலலிங்கம்
(C) வைத்தியலிங்கம்
(D) நாகலிங்கம்
39 “இந்தியாவின் தேசியப் பங்குவீதம் — இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்
(A) 1926 – டிசம்பர் – 6
(B) 1936 – டிசம்பர் – 6
(C) 1946 – டிசம்பர் 6
(D) 1956 டிசம்பர்–6
40. ‘கோட்டோவியங்கள்’ என்பது
(A) நேர்கோடு வரைவது
(B) கோணக்கோடு வரைவது
(C) வளைகோடு வரைவது
(D) மூன்று கோடும் வரைவது
41. தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
(A) பேச்சுக்கலை
(B) ஓவியக்கலை
(C) சிற்பக்கலை
(D) கட்டடக்கலை
42. நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன்” – என்றவர்
(A) பாரதியார்
(B) ஷெல்லி
(C) பாரதிதாசன்
(D) இரசூல் கம்சதேவ்
43. ‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்
(A) பாடகர்
(B) ஒவியர்
(C) நாட்டியர்
(D) வனைபவர்
44. மோகனரங்களின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
(A) வானொலி
(B) பாவரங்கமேடை
(C) தொலைக்காட்சி
(D) அனைத்தும்
45. “இரட்டைக் கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?
(A) முடியரசன்
(B) சுரதா
(C) வானிதாசன்
(D) கண்ணதாசன்
46. “போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை
(A) சிற்பக் கலை
(B) பேச்சுக் கலை
(C) நாடகக்கலை
(D)ஓவியக் கலை
47. ‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் கூறிய நூல்
(A) பரிபாடல்
(B) புறநானூறு
(C) திருவாசகம்
(D) தேவாரம்
48. முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
(A) அன்னிபெசண்ட் அம்மையார்
(B) தில்லையாடி வள்ளியம்மை
(C) முத்துலட்சுமி ரெட்டி
(D) இராணிமங்கம்மாய்
49. ‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்
(A) கம்பர்
(B) பாவாணர்
(C) திருவிக
(D) உவேசா
50 ‘அந்தமான்’- எவ்வகை மொழி
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொது மொழி
(D) ஓரெழுத்து ஒருமொழி
51. தொகைச் சொல்லை விரித்தெழுதுக – நானிலம்
(A) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
(B) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை
(C) குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை
(D) முல்லை, மருதம், நெய்தல், பாலை
52. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க.
உருவகம்
(A) பாதமலர்
(B) அடிமலர்
(C) தேன் தமிழ்
(D) மொழியமுது
53. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி…………………….. உள்ளன.
(A) நாற்பத்திரண்டு
(B) ஐம்பத்திரண்டு
(C) அறுபத்திரண்டு
(D) எழுபத்திரண்டு
54 பொருத்துக
(a) பெயர்ச்சொல் 1. வந்தான்
(b) வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
(c) இடைச்சொல் 3.மாவீரன்
(d) உரிச்சொல் 4. வேலன்
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 4 1 2 3
( C) 3 4 1 2
(D) 4 1 3 2
55. ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது? – “Indian Succession Act”
(A) இந்தியச் சான்றுச் சட்டம்
(B) இந்திய உரிமைச் சட்டம்
( C) இந்திய வாரிசுரிமைச் சட்டம்
(D) இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
56. என்னே, தமிழின் இனிமை! – என்பது
(A) செய்தித் தொடர்
(B) விழைவுத் தொடர்
( C) உணர்ச்சித் தொடர்
(D) உடன்பாட்டுத் தொடா
57. ” திருத்தப்படாத அச்சுப்படி” – இதற்கு சரியான ஆங்கில சொல்லை காண்க?
(A) Fake news
(B) Layout
( C) Green proof
(D) Bulletin
58. “முற்றியலுகரச் சொல்” யாது?
(A) கோங்கு
(B) பாலாறு
( C) மார்பு
(D) கதவு
59. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின பின் – இக்குறளில் முதலிரு வந்துள்ள எதுகை என்ன வகை?
(A) பொழிப்பு எதுகை.
(B) இணை எதுகை
( C) ஒருஉ எதுகை
(D) கூழை எதுகை
60. பொருத்துக
(a) முருகன் உழைப்பால் உயர்ந்தவன் 1. எழுவாய் வேற்றுமை
(b) பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் 2 இரண்டாம் வேற்றுமை
(c) அமுதா பாடத்தை எழுதினாள் 3.மூன்றாம் வேற்றுமை
(d) கண்ணன் வந்தான் 4. நான்காம் வேற்றுமை
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 1 2 4 3
( C) 3 2 1 4
(D) 4 2 3 1
61. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்ந்துப் பாடியவர்
(A) தேவ குலத்தார்.
(B) விளம்பி நாகனார்
(C) பூரிக்கோ
(D) பெருந்தேவனார்
62. தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
(A) குறள் வெண்பா
(B) நேரிசை வெண்பா
(C) இன்னிசை வெண்பா
(D) பஃறொடைவெண்பா
63. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக
மாலதி திருக்குறள் கற்றாள்
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டு விளை
64.ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
(A) தற்குறிப்பேற்ற அணி
(B) இயல்பு நவிற்சி அணி
(C) உயர்பு நவிற்சி அணி
(D) உவமை அணி
65. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
(A) 401
(B) 501
(C) 601
(D) 301
66. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக
வாலை – வாளை
(A) இளம்பெண் – மீன்வகை
(B) மீன்வகை – இளம்பெண்
(C) மரவகை- மீன்வகை
(D) இளம்பெண் – மரவகை
67. வையை நாடவன் யார்?
(A) சேரன்
(B) சோழன்
(C) பாண்டியன்
(D) பல்லவன்
68. தவறான விடையைத் தேர்வு செய்க
(A) சிலப்பதிகாரம் – கையிலாயமலை
(B) கம்பராமாயணம் – சிருங்கிபேரம்
(C) தேம்பாவணி – வளன்
(D) சீறாப்புராணம் – மந்தராசலம்
69. வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) கடுவெளிச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
(D) அழுகுணிச் சித்தர்
70. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
(A) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
(B) பன்னாடு தந்த மாறன் வழுதி
(C) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(D) யானைக் கூட்சேய் மாந்தாஞ் சேரலிரும்பொறை
71. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனரால் பாராட்டப்பட்டவர்
(A) சேக்கிழார்
(B) கம்பர்
(C) மாணிக்கவாசனர்
(D) எவருமில்லை
72. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) திருமூலர்
(C) சம்பந்தர்
(D) சுந்தரர்
73. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால், அது கலிங்கத்துப்பரணியே” – யார்கூற்று?
(A) திருவிக
(B) ரா.பி சேதுப்பிள்ளை
(C) பேரறிஞர் அண்ணா
(D) ஜியு போப்
74. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
(A) இளம்பூரணர்
(B) நச்சர்
(C) பரிமேலழகர்
(D) ந. மு வேங்கடசாமி
75. ஏலாதி – நூல்களுள் ஒன்று
(A) பதினெண் மேற்கணக்கு
(B) பதினெண் கீழ்க்கணக்கு
(C) காப்பியம்
(D) பாயிரம்
76 “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
(A) இளங்கோவடிகள்
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) கவிமணி
77. சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) திருஞானசம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
78. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
(A) திரிகடுகம், ஏலாதி
(B) இன்னாநாற்பது, இனியவை நாற்பது
(C) திருக்குறள், நன்னூல்
(D)நற்றிணை, அகநானூறு
79. சரியானவற்றை பொருத்துக
(a) கான் 1. கரடி
(b) உழுவை 2. சிங்கம்
(c) மடங்கல் 3. புலி
(d) எண்கு 4.காடு
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
( C) 3 4 1 2
(D) 3 4 2 1
80. பகைவளிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
(A) பகவத்கீதை
(B) பைபிள்
( C) நன்னூல்
(D) சீறாப்புராணம்
81. பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
(A) பெண்களைப் பழித்துப் பேசாதே
(B) பாம்போடு விளையாடாதே!
(C) போலி வேடத்தினைப் போடாதே!
(D) தீயொழுக்கம் செய்யாதே!
82. பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’
(A) ஞாயிறைக் கைமறைப்பார் இல்
(B) முள்ளினால் முள்களையும் ஆறு
(C) ஆற்றுன வேண்டுவது இல்
(D) பாம்பு அறியும் பாம்பிள் கால்
83. அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
(A) நித்திலக்கோவை
(B) மணிமிடைப்பவளம்
(C) களிற்று யாரைதிரை
(D) வெண்பாமாலை
84. வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
(A) பெரியபுராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) பாஞ்சாலி சபதம்
(D) ஞானரதம்
85. ‘மூன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
(A) ஊர்
(B) அரசன்
(C) ஆறு
(D) நாடு
86. ‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) பாயிரம்.
(D) நன்னூல்
87. திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
(A) அடியார்க்கு நல்லார்
(B) அரும்பதவுரைக்காரர்
(C) ந.மு. வேங்கடசாமி
(D) நச்சினார்க்கினியார்
88. பொருத்துக
(a) விபுதர் 1. அந்தணன்
(b) பலவன் 2. இரவு
(c) வேணி 3. புலவர்
(d) அல்கு 4. செஞ்சடை
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 1 4 3
(C) 2 3 4 1
(D) 3 4 1 2
89. பிரித்தெழு- ‘வாயினீர்’
(A) வாய் + நீர்
(B) வாய்ன் நீர்
(C) வாயின் + நீர்
(D) வா+நீர்
90. நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
(A) 2004
(B) 2002
( C) 2005
(D) 2001
91. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
(A) பேச்சுக் கலை
(B) ஓவியக் கலை
(C) இசைக்கலை
(D) சிற்பக்கலை
92. ‘என்னுடைய நாடு’ — என்னும் பாடல் இடம்பெற்றுள்ள தலைப்பு
(A) சமுதாயமலர்
(B) காந்திமலர்
(C) தேசியமலா்
(D) இசைமலர்
93. ‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்.
(A) பாரதி
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) கவிமணி
94 அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
(A) சென்னை
(B) மதுரை
(C) சிதம்பரம்
(D) தஞ்சை
95. “திராவிட“ என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்.
(A) ஈராஸ் பாதிரியார்
(B) கால்டுவெல்
(C) ஜியு போப்
(D) வீரமாமுனிவர்
96. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
(A) பூநாரை
(B) அன்னம்
(C) கொக்கு
(D) குருகு
97. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்- என அழைக்கப்படுபவர்
(A) கம்பதாசன்
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்
98. ‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து – யார் கூற்று?
(A) பம்மல் சம்பந்தனார்
(B) சங்கரதாக சுவாமிகள்
(C) கவிமணி
(D) பரிதிமாற்கவைஞர்
99. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
(A) 1830
(B) 1840
(C) 1810
(D) 1820
100. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
(A) “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவா”
(B) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
(C) “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
(D) “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலா்ச்சோலை”

SCO Keywords :

  • tnpsc
  • tnpsc group 4
  • tnpsc group 2
  • tnpsc group 4 syllabus
  • tnpsc login
  • tnpsc photo compressor
  • tnpsc exam date
  • tnpsc exam
  • tnpsc exam details
  • tnpsc exam apply
  • tnpsc portal
  • tnpsc maths book pdf
  • tnpsc tamil book pdf
  • Tamil Nadu Public Service Commission
  • tnpsc News
  • tnpsc recruitment
  • tnpsc apply oline
  • tnpsc notification
  • www.tnpsc.gov.in latest news
  • tnpsc new syllabus
  • tnpsc notes

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.