TNPSC Group 4 Tamil Questions 2022 [51 to 100]

1➤ 51. இலக்கணக் குறிப்பறிதல் சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக

ⓐ A) இடைச்சொல் தொடர்
ⓑ B) விளித் தொடர்
ⓒ C) எழுவாய்த் தொடர்
ⓓ D) உரிச்சொல் தொடர்

2➤ 52. பெயர்ச்சொற்களைப் பொருத்துக
a) மல்லிகை – 1. சினைப்பெயர்
b) பள்ளி – 2. பண்புப்பெயர்
c) கிளை – 3. இடப்பெயர்
d) இனிமை – 4. பொருள்பெயர்

ⓐ A) 4 3 1 2
ⓑ B) 3 4 2 1
ⓒ C) 4 3 2 1
ⓓ D) 2 3 1 4

3➤ 53. பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக
a) காலப்பெயர் – செம்மை
b) சினைப்பெயர் – கண்
c) பண்புப்பெயர் – ஆண்டு
d) தொழிற்பெயர் – ஆடுதல்


4➤ 54. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

ⓐ A) ஆழ்வார்கள்
ⓑ B) சித்தர்கள்
ⓒ C) நாயன்மார்கள்
ⓓ D) புலவர்கள்

5➤ 55. உழவர் பாட்டு என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

ⓐ A) தாலாட்டுப்பாட்டு
ⓑ B) கும்மிப்பாட்டு
ⓒ C) பள்ளுப்பாட்டு
ⓓ D) வில்லுப்பாட்டு

6➤ 56. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்

ⓐ A) நல்லாதனார்
ⓑ B) ஒட்டக்கூத்தர்
ⓒ C) காளமேகப் புலவர்
ⓓ D) புதுமைப்பித்தன்

7➤ 57. ‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர்

ⓐ A. பாரதிதாசன்
ⓑ B. அழகிய சொக்கநாதப் புலவர்
ⓒ C. காளமேகப் புலவர்.
ⓓ D. புதுமைப்பித்தன்

8➤ 58. நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள் – இக்கூற்று யாருடையது ?

ⓐ A) அர்ச்சுணன்
ⓑ B) தருமன்
ⓒ C) சகாதேவன்
ⓓ D) நகுலன்

9➤ 59. ஆற்றூர் பேச்சு வழக்கில் —————– என மருவியுள்ளது

ⓐ A) ஆம்பூர்
ⓑ B) அரூர்
ⓒ C) அரசூர்
ⓓ D) ஆத்தூர்

10➤ 60. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

ⓐ A) எம்.ஜி.இராமச்சந்திரன்
ⓑ B) மூதறிஞர் இராஜாஜி
ⓒ C) பெருந்தலைவர் காமராசர்
ⓓ D) கலைஞர் கருணாநிதி

11➤ 61. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்

ⓐ A) வீரமாமுனிவர்
ⓑ B) கால்டுவெல்
ⓒ C) ஜி.யு.போப்
ⓓ D) தேவநேயப்பாவாணர்

12➤ 62. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் ?

ⓐ A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ⓑ B) தேவநேயப் பாவாணர்
ⓒ C) பரிதிமாற்கலைஞர்
ⓓ D) இளங்கோவடிகள்

13➤ 63. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார் ?

ⓐ A) ரா.பி.சேதுப்பிள்ளை
ⓑ B) சோமசுந்தர பாரதியார்
ⓒ C) குன்றக்குடி அடிகளார்
ⓓ D) வீரமாமுனிவர்

14➤ 64. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’

ⓐ A) உடன்பாட்டு வாக்கியம்
ⓑ B) எதிர்மறை வாக்கியம்
ⓒ C) பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
ⓓ D) கலவை வாக்கியம்

15➤ 65. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக

ⓐ A) அண்ணனோடு போ
ⓑ B) கூடு கட்டு
ⓒ C) தமிழ்ப்படி
ⓓ D) அரசு ஆணை பிறப்பித்தது

16➤ 66. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
ஐந்து மாடுகள் மேய்ந்தன

ⓐ A) எத்தனை மாடுகள் மேய்ந்தன ?
ⓑ B) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன ?
ⓒ C) மாடுகள் மேய்ந்தனவா ?
ⓓ D) ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன ?

17➤ 67. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
இங்கு நகரப் பேருந்து நிற்கும்

ⓐ A) நகரப் பேருந்து ஏன் நிற்கும் ?
ⓑ B) நகரப்பேருந்து எப்போது நிற்கும் ?
ⓒ C) இங்கு நகரப்பேருந்து நிற்குமா ?
ⓓ D) இங்கு நகரப்பேருந்து வருமா ?

18➤ 68. சரியான பதிலைத் தேர்வு செய்க
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுனு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது

ⓐ A) I, III, IV மட்டும் சரி
ⓑ B) I , II மட்டும் சரி
ⓒ C) I, II, III மட்டும் சரி
ⓓ D) அனைத்தும் சரி

19➤ 69. பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார் ?

ⓐ A) கம்பர்
ⓑ B) குலசேகரர்
ⓒ C) ஆண்டாள்
ⓓ D) பெரியாழ்வார்

20➤ 0. தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர்

ⓐ A) சுந்தரர்
ⓑ B) திருஞான சம்பந்தர்
ⓒ C) அப்பர்
ⓓ D) மாணிக்கவாசகர்

21➤ 71. தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார் ?

ⓐ A) தேவர்கள்
ⓑ B) அரசர்கள்
ⓒ C) சித்தர்கள்
ⓓ D) புலவர்கள்

22➤ 72. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

ⓐ A) சாரதா அம்மாள்
ⓑ B) மூவலூர் இராமாமிர்தம்
ⓒ C) முத்துலெட்சுமி
ⓓ D) பண்டித ரமாபாய்

23➤ 73. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது ?

ⓐ A) கி.பி.1730
ⓑ B) கி.பி.1880
ⓒ C) கி.பி.1865
ⓓ D) கி.பி.1800

24➤ 74. தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக

ⓐ A) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
ⓑ B) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
ⓒ C) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
ⓓ D) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்

25➤ 75. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்

ⓐ A) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
ⓑ B) மொரிசியசு, இலங்கை, கனடா
ⓒ C) பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
ⓓ D) கனடா, அந்தமான், மலேசியா

26➤ 76. நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ⓐ A) ஆழ்வார் திருநகர்
ⓑ B) ஆழ்வார் திருநகரி
ⓒ C) ஆழ்வார்பேட்டை
ⓓ D) திருநகரம்

27➤ 77. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக – உள்ளங்கை நெல்லிக்கனி போல

ⓐ A) வெளிப்படைத் தன்மை
ⓑ B) வெளிப்படையற்ற தன்மை
ⓒ C) மறைத்து வைத்தல்
ⓓ D) தன்னலமின்மை

28➤ 78. சிலை மேல் எழுத்து போல – இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க

ⓐ A) தெளிவாகத் தெரியாது
ⓑ B) தெளிவாகத் தெரியும்
ⓒ C) நிலைத்து நிற்கும்
ⓓ D) நிலைத்து நிற்காது

29➤ 79. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் – இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது ?

ⓐ A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ⓑ B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
ⓒ C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.
ⓓ D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

30➤ 80. மாலதி மாலையைத் தொடுத்தாள் – இது எவ்வகை வாக்கியம் ?

ⓐ A) செய் வினை
ⓑ B) செயப்பாட்டு வினை
ⓒ C) தன் வினை
ⓓ D) பிற வினை

31➤ 81. பொருத்துக
a) சோறு – 1. குடித்தான்
b) பால் – 2. உண்டான்
c) பழம் – 3. பருகினான்
d) நீர் – 4. தின்றான்

ⓐ A) 1 3 4 2
ⓑ B) 3 4 1 2
ⓒ C) 2 3 4 1
ⓓ D) 4 1 2 3

32➤ 82. பெயர்ச்சொற்களைப் பொருத்துக
a) 8 7 6 – 1. ங சு க்ஷ
b) 5 4 3 – 2. ங உ க
c) 3 2 1 – 3. ரு ச ங
d) 3 6 9 – 4. அ எ சு

ⓐ A) 2 4 1 3
ⓑ B) 4 1 3 2
ⓒ C) 4 3 2 1
ⓓ D) 3 2 1 4

33➤ 83. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க

ⓐ A) ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
ⓑ B) ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
ⓒ C) ஆகஸ்டு ஒன்றாம் நாள்
ⓓ D) டிசம்பர் பதினைந்தாம் நாள்

34➤ 84. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ——– நூலாகும்

ⓐ A) இரட்டை மணிமலை
ⓑ B) மும்மணிக்கோவை
ⓒ C) தெய்வமணிமாலை
ⓓ D) மனுமுறைகண்டவாசகம்

35➤ 85. ஞானப்பச்சிலை என்று வள்ளலார் கூறும் மூலிகை எது

ⓐ A) சிங்கவல்லி
ⓑ B) கீழாநெல்லி
ⓒ C) குப்பைமேனி
ⓓ D) வல்லாரை

36➤ 86. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்று கூறும் நூல் எது ?

ⓐ A) தொல்காப்பியம்
ⓑ B) மதுரைக் காஞ்சி
ⓒ C) பட்டினப்பாலை
ⓓ D) பதிற்றுப்பத்து

37➤ 87. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றுக் கூறும் நூல்

ⓐ A) பட்டினப்பாலை
ⓑ B) தொல்காப்பியம்
ⓒ C) குறிஞ்சிப்பாட்டு
ⓓ D) திருக்குறள்

38➤ 88. கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக

ⓐ A) தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க
ⓑ B) நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்
ⓒ C) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
ⓓ D) தெய்வம் நினைக்கும் ஒன்று, நாம் ஒன்று நினைக்க

39➤ 89. மோனைத் தொடை —— வகைப்படும்

ⓐ A) ஆறு
ⓑ B) எட்டு
ⓒ C) ஐந்து
ⓓ D) மூன்று

40➤ 90. புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக

ⓐ A) வாழ்வு, வேண்டில்
ⓑ B) புனிதமுற்று, புத்தகசாலை
ⓒ C) நாட்டில், யாண்டும்
ⓓ D) மக்கள், புதுவாழ்வு

41➤ 91. நனந்தலை உலகம் வளை, நெமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை – என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ள நனந்தலை உலகம் என்பதற்கு எதிர்ச்சொல் ?

ⓐ A) அகன்ற உலகம்
ⓑ B) மேலான உலகம்
ⓒ C) சிறிய உலகம்
ⓓ D) கீழான உலகம்

42➤ 92. எடுப்பு – எதிர்ச்சொல் தருக ?

ⓐ A) தொடங்குதல்
ⓑ B) முடித்தல்
ⓒ C) நிற்றல்
ⓓ D) ஏற்றல்

43➤ 93. தண்டளிர்ப்பதம் – இச்சொல்லை சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க

ⓐ A) தண் + அளிர் + பதம்
ⓑ B) தன்மை + தளிர் + பதம்
ⓒ C) தண்மை + தளிர் + பதம்
ⓓ D) தண்டளிர் + பதம்

44➤ 94. கலம்பகம் – இச்சொல்லை பிரித்து எழுதுக

ⓐ A) கலம் + அகம்
ⓑ B) கலம் + பகம்
ⓒ C) கலம்பு + அகம்
ⓓ D) கல் + அம்பகம்

45➤ 95. பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் என்று குறிப்பிடும் நூல் ?

ⓐ A) கலித்தொகை
ⓑ B) பரிபாடல்
ⓒ C) அகநானூறு
ⓓ D) புறநானூறு

46➤ 96. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது ?

ⓐ A) நெடுந்தொகை
ⓑ B) திருக்குறள்
ⓒ C) முத்தொள்ளாயிரம்
ⓓ D) கம்பராமாயணம்

47➤ 97. பொருத்தமான விடையைத் தருக
a) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
b) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
c) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
d) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்

ⓐ A) 3 4 1 2
ⓑ B) 3 1 4 2
ⓒ C) 2 3 1 4
ⓓ D) 4 1 2 3

48➤ 98. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்

ⓐ A) பாரதியார்
ⓑ B) சுரதா
ⓒ C) பாரதிதாசன்
ⓓ D) வாணிதாசன்

49➤ 99. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ?

ⓐ A) 1832
ⓑ B) 1812
ⓒ C) 1842
ⓓ D) 1852

50➤ 100. திருமணம் செல்வக்கேசவராயரால் “தமிழுக்கு கதியாவார் இருவர்” குறிப்பிடப்படுபவர்கள்

ⓐ A) கம்பர், இளங்கோ
ⓑ B) கம்பர், திருவள்ளுவர்
ⓒ C) திருவள்ளுவர், இளங்கோ
ⓓ D) இளங்கோ, பாரதியார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.