TNPSC MODEL TAMIL QUESTION PAPER - 8

Tnpsc Executive Officer Grade IV Exam Previous Questions and Answer Key 2022 – General Studies in Tamil


EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE
1. மரக்கலத்திற்குத் தமிழில் வழங்கும் பெயர்களில் ஒன்று
(அ) வாரணம்
(ஆ) பரவை
(இ) புணரி
(ஈ) திமில்
2. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் எவை தமிழகத்திலிருந்து அரசன் சாலமனுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள்?
(அ) மிளகும், சந்தனமும்
(ஆ) யானைத் தந்தமும், மயில் தோகையும்
(இ) முத்தும், துகிலும்
(ஈ) கரும்பும், அரிசியும்
3. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயும் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி
(அ) ராணி மங்கம்மாள்
(ஆ) அஞ்சலை அம்மாள்
(இ) வேலு நாச்சியார்
(ஈ) மூவலூர் இராமாமிர்தம்
4. உலகம் உருண்டையானது என்ற அறிவியல் சிந்தனை கொண்ட திருக்குறள்
(அ) சுழன்றும் ஏர்பின்னது உலகம்
(ஆ) ஆதிபகவன் முதற்றே உலகு
(இ) உலகந் தழீஇயது ஒட்பம்
(ஈ) எவ்வதுறைவது உலகம்
5. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
(அ) தேசியக்கொடி
(ஆ) தேசபக்தி
(இ) கதரின் வெற்றி
(ஈ) மனோகரன்
6. பொருத்துக:
அ. ஞானக்கண்ணாடி 1. உரைநடை வடிவிலான சமயநூல்
ஆ. வேதவிளக்கம் 2. நகைச்சுவைக் கதை நூல்
இ. தொன்னூல் விளக்கம் 3. சமய நூல்
ஈ. பரமார்த்தகுரு கதை 4. குட்டித் தொல்காப்பியம்
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 3 1 4 2
இ. 1 3 2 4
ஈ. 4 2 3 1
7. மொழி ஞாயிறு என்றழைக்கப்படுபவர்
(அ) தாமோதரனார்
(ஆ) தேவநேயப் பாவாணர்
(இ) இளங்குமரனார்
(ஈ) வரதராசனார்
8. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?
(அ) குடிமக்கள் காப்பியம்
(ஆ) தமிழ்க்காதல்
(இ) தமிழர் திருமணம்
(ஈ) வீரச்சுவை
9. பொருத்துக:
அ. நட்சத்திரக் குழந்தைகள் 1. கல்கி
ஆ. கணையாழியின் கனவு 2. பி.எஸ்.ராமையா
இ. பிரபந்த கானம் 3. ந.பிச்சமூர்த்தி
ஈ. கொலு பொம்பை 4. மெளனி
சரியான விடையைத் தெரிவு செய்க:
அ ஆ இ ஈ
அ. 3 4 1 2
ஆ. 3 1 4 2
இ. 2 1 4 3
ஈ. 2 3 4 1
10. மோகனா என்னும் பாலசரஸ்வதி பரதநாட்டியத்திற்காக எந்த வயதில் காஞ்சிபுரத்தில் மேடை ஏறினார்?
(அ) 10 வயதில்
(ஆ) 7 வயதில்
(இ) 12 வயதில்
(ஈ) 16 வயதில்
11. நாடகக்கலையை மீட்டெடுப்பதே தனது குறிக்கோள் என்று கூறியவர்
(அ) கந்தசாமி
(ஆ) ந.முத்துசாமி
(இ) வேலுச்சாமி
(ஈ) அழகர்சாமி
12.காந்திமகான் கதை எனும் இசை நூலின் ஆசிரியர்
(அ) வேழ வேந்தன்
(ஆ) பெ.தூரன்
(இ) கொத்த மங்கலம் சுப்பு
(ஈ) தமிழழகன்
13. பாரதிதாசன் 'குடும்பவிளக்கு' என்னும் நூலின் எப்பகுதியில் 'விருந்தோம்பல்' எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?
(அ) ஐந்தாம் பகுதி
(ஆ) முதல் பகுதி
(இ) நான்காம் பகுதி
(ஈ) இரண்டாம் பகுதி
14. தண்டமிழ் ஆசான் என யார்? யுhரைப் பாராட்டினார்?
(அ) கம்பர் - சடகோபரை.
(ஆ) இளங்கோவடிகள் - சீத்தலைச் சாத்தனாரை.
(இ) சீத்தலைச் சாத்தனார் - இளங்கோவடிகளை.
(ஈ) பாரதியார் - கம்பரை.
15. 'இஸ்லாமிக் கம்பர்' எனப் போற்றப்படுபவர்
(அ) அப்துல் மரைக்காயர்
(ஆ) முகமதுலெப்பை
(இ) கடிகை முத்துப் புலவர்
(ஈ) உமறுப்புலவர்
16. எட்டுத் தொகை நூல்களில் 'ஓங்கு' என்னும் அடைமொழி பெற்ற நூல்
(அ) குறந்தொகை
(ஆ) கலித்தொகை
(இ) நற்றிணை
(ஈ) பரிபாடல்
17. இரட்டுற மொழிதல் என்பது
(அ) ஒரு சொல் பல பொருட்களைத் தருதல்
(ஆ) ஒரு சொல் இரண்டு பொருள்பட அமைந்து வருதல்
(இ) பல சொற்கள் ஒரு பொருள் தருதல்
(ஈ) ஒரே சொல் மீண்டும் மீண்டும் பல முறை வருதல்
18. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
(அ) கன்னியாகுமரி
(ஆ) திருநெல்வேலி
(இ) திருச்சி
(ஈ) கோவை
19. மடந்தை பருவத்தின் வயது
(அ) 8-11
(ஆ) 12-13
(இ) 14-19
(ஈ) 20-25
20. கலம்பக உறுப்புகள்
(அ) ஆறு
(ஆ) எட்டு
(இ) பதினெட்டு
(ஈ) பன்னிரெண்டு
21. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க:
(அ) பாசவர் - நெற்பவர்
(ஆ) ஓசுநர் -எண்ணெய் விற்பவர்
(இ) கண்ணுள் வினைஞர் -; ஓவியர்
(ஈ) மண்ணீட்டாளர் - சிற்பி
22. கூற்று 1: கம்பர் பிறந்த தேரழுந்தூர் சோழநாட்டில் அமைந்துள்ளது
கூற்று 2: கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தப் புலவர்
(அ) கூற்று 1 மட்டும் சரி
(ஆ) கூற்று 2 மட்டும் சரி
(இ) கூற்று இரண்டும் சரி
(ஈ) கூற்றும் இரண்டும் தவறு
23. கூலவாணிகம் செய்தவர்
(அ) பரணர்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) கம்பர்
(ஈ) சீத்தலைச்சாத்தனார்
24. அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன?
(அ) 2,8,12,18,22 … (இரண்டு. எட்டாக)
(ஆ) 6,16,26,36,46… (ஆறு, ஆறாக)
(இ) 1,3,5,7,9… (ஒற்றைப்படை எண்களாக)
(ஈ) 4,14,24,34,44… (நான்கு,நான்காக)
25. “அறுவர்க் கிளைய நங்கை” இறைவனை ஆடல் கண்டருளிய நங்கை எனப்படுபவள் யார்?
(அ) மாரியம்மன்
(ஆ) துர்க்கை
(இ) திருமகள்
(ஈ) பிடாரி
26. கீழ்க்கண்ட நூல்களுள் எட்டுத்தொகை நூல்
(அ) நான்மணிக்கடிகை
(ஆ) இன்னாநாற்பது
(இ) கலித்தொகை
(ஈ) நாலடியார்
27. பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்னும் தொடரில் நூல் என்பது எந்த நூலைக் குறிக்கிறது?
(அ) நான்மணிக்கடிகை
(ஆ) நாலடியார்
(இ) களவழி நாற்பது
(ஈ) கார் நாற்பது
28. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதியை வலியுறுத்தும் நூல்களின் எண்ணிக்கை
(அ) 11
(ஆ) 10
(இ) 6
(ஈ) 9
29. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
(அ) 70
(ஆ) 38
(இ) 25
(ஈ) 36
30.மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
மேற்கண்ட பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களைக் கண்டறிக
(அ) மனிதரெலாம், மனோபாவம்
(ஆ) வானைப்போல் விரிவடைந்து
(இ) மனிதரெலாம், அன்புநெறி
(ஈ) மனோபாவம் வானைப்போல்
31. வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான்
இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
(அ) மெய்யழுகை-உண்மையான அழுகை
(ஆ) எண்ணித் துணியாதார்-நல்லவன் வடிக்கும் கண்ணீர்
(இ) பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்
(ஈ) பொய்யில்லாத அழுகை
32. கீழ்க்கண்ட உவமைக்கு பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க:
உடலும் உயிரும் போல
(அ) ஒற்றுமையின்மை
(ஆ) மகிழ்ச்சி
(இ) வெளிப்படைத்தன்மை
(ஈ) ஒற்றுமை
33. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
(அ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார்
(ஆ) நிலவன் புத்தகத்தைப் படித்தார்
(இ) நிலவன் பாடம் நடத்தினார்
(ஈ) நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தார்
34. விடைக்கேற்ற வினா எது?
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும்
குடக்கூத்து என்றும் கூறுவர்
(அ) கரகாட்டம் என்றால் என்ன?
(ஆ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
(இ) கரகாட்டம் எப்போது நடைபெறும்
(ஈ) கரகாட்டத்தினைப் போன்ற வேறு கலைகள் யாவை?
35. ஐம்பெருங்குழு, எண்பேராயம்-சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
(அ) திசைச் சொற்கள்
(ஆ) வட சொற்கள்
(இ) உரிச்சொற்கள்
(ஈ) தொகைச் சொற்கள்
36. கீழ்க்கண்டவற்றுள் வினையெச்சம் அல்லாத ஒன்றைக் கண்டறிக:
(அ) வெந்து
(ஆ) மூடுபனி
(இ) வெம்பி
(ஈ) எய்தி
37. நாற்காலி என்பது எவ்வகைப் பெயர் என கண்டறிக:
(அ) பொருட்பெயர்
(ஆ) சினைப்பெயர்
(இ) காலப்பெயர்
(ஈ) பண்புப்பெயர்
38. “வா” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
(அ) வந்தவர்
(ஆ) வந்து
(இ) வந்த
(ஈ) வந்தான்
39. “ஓடு” என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை கண்டறிந்து எழுதுக:
(அ) ஓடுக
(ஆ) ஓடுதல்
(இ) ஓடிய
(ஈ) ஒடிந்து
40. “நொந்தான்” சொல்லின் வேர்ச்சொல் யாது?
(அ) நொ
(ஆ) நொந்த
(இ) நொந்து
(ஈ) நோதல்
41. சரியான வேர்ச்சொல்லைக் காண்க:
கொண்டிலன்
(அ) கொண்ட
(ஆ) கொள்

(இ) கொண்டனன்
(ஈ) கொண்டு
42. தே-ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) கடவுள்
(ஆ) தலைவன்
(இ) அரசன்
(ஈ) கள்வன்
43. இளமைப்பெயர் மரபுபிழை நீக்கியது.
யானை
(அ) குஞ்சு
(ஆ) பிள்ளை
(இ) குட்டி
(ஈ) கன்று
44.மரபுப்பிழை நீக்கி எழுதுக:
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
(அ) கூரைமூடினர்
(ஆ) கூரை வேய்ந்தனர்
(இ) கூரை அமைத்தனர்
(ஈ) கூரை இட்டனர்
45. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) அமுதமொழி
(ஆ) அடி மலர்
(இ) பூ விரல்
(ஈ) முத்துப்பல்
46. பொருந்த மரபுச் சொல்லைக் கண்டறிக:
(அ) வாழைக்கச்சல்
(ஆ) முருங்கைச்சரடு
(இ) மாவடு
(ஈ) பாலமூசு
47.அழுக்காறுடையான் - எதிர்ச்சொல் தருக:
(அ) பொறமை உடையவன்
(ஆ) தூய்மை உடையவன்
(இ) பொறாமையற்றவன்
(ஈ) தூய்மை அற்றவன்
48. உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
-இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல்
(அ) நன்னூல்
(ஆ) அகத்தியம்
(இ) தொல்காப்பியம்
(ஈ) இலக்கண விளக்கம்
49. பொருத்துக:
திணை தெய்வம்
அ. குறிஞ்சி 1. வருணன்
ஆ. முல்லை 2. இந்திரன்
இ. மருதம் 3. திருமால்
ஈ. நெய்தல் 4. முருகன்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 1 2 3 4
இ. 2 1 4 3
ஈ. 2 3 4 1
50. தம் வீரர்களுடன் பேர்க்களத்தில் போரிடும் போது சூடும் பூ எதுவென அறிக:
(அ) உழிஞை பூ
(ஆ) வஞ்சிப்பூ
(இ) தும்பைப் பூ
(ஈ) நொச்சிப்பூ
51. இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்
(அ) டாக்டர்.அம்பேத்கர்
(ஆ) தேவ நேய பாவாணர்
(இ) முனைவர்.இரா.அரங்கநாதன்
(ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை
52. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எங்கு பாதுகாக்கப்படுகிறது?
(அ) நடுவண நூலகம்
(ஆ) கன்னிமாரா நூலகம்
(இ) தேசிய நூலகம்
(ஈ) ஆவணக் காப்பகம்
53. தெயவமணிமாலை திருவருட்பாவில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
(அ) மூன்றாம் திருமுறை
(ஆ) ஐந்தாம் திருமுறை
(இ) ஆறாம் திருமுறை
(ஈ) நான்காம் திருமுறை
54. “ஏழைகளின் கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படும் மரம்
(அ) மாமரம்
(ஆ) பலாமரம்
(இ) தென்னை மரம்
(ஈ) பனைமரம்
55. உலகளாவிய தமிழர்கள் தம் வருவாயை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தமிழை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது எதை காட்டுகிறது?
(அ) மொழிப்பற்றை
(ஆ) தேசப்பற்றை
(இ) மதப்பற்றை
(ஈ) சமயப்பற்றை
56. உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் ——– காரணமாகும்
(அ) சமநிலை
(ஆ) வேறுபாடு
(இ) ஓட்டம்
(ஈ) இயக்கம்
57. கால்நடைகளுக்கு ஊறு நேரா வண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்த இடங்களில் அமைந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பெற்றன?
(அ) பாக்கம்
(ஆ) பட்டி
(இ) குறிச்சி
(ஈ) கரடு
58. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும் என்று கூறியவர்
(அ) அறிஞர் அண்ணா
(ஆ) அண்ணல் அம்பேத்கர்
(இ) தந்தை பெரியார்
(ஈ) மகாத்மா காந்தி
59. “தமிழ் தாத்தா” என அழைக்கப்படுபவர் யார்?
(அ) உ.வே.சாமிநாதர்
(ஆ) பாரதியார்
(இ) கவிமணி தேசிய விநாயகம்
(ஈ) நாமக்கல் கவிஞர்
60. இந்தியாவில் முதன் முதலாகத் தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் துவக்கியவர்
(அ) மறைமலை அடிகள்
(ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(இ) வையாபுரி
(ஈ) ந.மு.வேங்கடசாமி
61. இதழ்களைக் குவிப்பதனால் பிறக்கும் எழுத்துக்கள்
(அ) (அ,ஆ,இ,ஈ)
(ஆ) (உ,ஊ,ஒ,ஓ,ஓள)
(இ) (எ,ஏ,ஐ,அ)
(ஈ) (அ,எ,ஏ,ஈ)
62. “தட்சிணசித்திரம்” என்ற நூலுக்கு உரை எழுதியவர்
(அ) கருணாகரத் தொண்டைமான்
(ஆ) மகேந்திரவர்மன்
(இ) இராசராசன்
(ஈ) குலேசேகர பாண்டியன்
63. தமிழ் “நாடகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்
(அ) தி.க.சண்முகனார்
(ஆ) பம்மல் சம்பந்தனார்
(இ) சங்கரதாசு சுவாமிகள்
(ஈ) டி.எஸ்.இராசமாணிக்கம்
64. “மரபுக் கவிகையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படும் கவிஞர்
(அ) சுரதா
(ஆ) வாணிதாசன்
(இ) முடியரசன்
(ஈ) அப்துல் ரகுமான்
65. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
(அ) பாரதிதாசன் கவிதைகள்
(ஆ) சுரதாவின் கவிதைகள்
(இ) ந.பிச்சமூர்த்தி கவிதைகள்
(ஈ) கண்ணதாசன் கவிதைகள்
66. “சேரமான் காதலி” எனும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருதுபெற்ற திரைப்படக் கவிஞர் யார்?
(அ) கண்ணதாசன்
(ஆ) மு.மேத்தா
(ஈ) நா.காமராசன்
(ஈ) நா.முத்துக்குமார்
67. பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குக் கொடுக்கப்பட்ட விருது
(அ) சாகித்திய அகாடமி விருது
(ஆ) குடியரசுத்தலைவர் விருது
(இ) சோவியத் நாட்டு விருது
(ஈ) தாமரைத் திரு விருது
68. “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று”
-எனப்பாடியவர் யார்?
(அ) ஒளவையார்
(ஆ) திருமூலர்
(இ) சுந்தரர்
(ஈ) பாரதியார்
69. கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எனப் புகழப்படும் நூல் எது?
(அ) போற்றித் திருவகவல்
(ஆ) இரட்சணியயாத்திரிகம்
(இ) இரட்சணிய மனோகரம்
(ஈ) இரட்சணியக்குறள்
70. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது
(அ) குத்துப்பாடல்
(ஆ) தொழில் பாடல்
(இ) வரிப்பாடல்
(ஈ) தனிப்பாடல்
71.எவரே
புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்
பாடலடிகள் இடம்பெறும் நூல்
(அ) பாஞ்சாலிசபதம்
(ஆ) மனோன்மணீயம்
(இ) கலிங்கத்துப்பரணி
(ஈ) புறநானூறு
72. கலம்பகம் - வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
(அ) பதினெட்டு
(ஆ) தொண்ணூற்றாறு
(இ) பத்து
(ஈ) எட்டு
73. திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்கள்
(அ) 5
(ஆ) 3
(இ) 7
(ஈ) 6
74. சீறாப்புரணத்தில் உள்ள மொத்த விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
(அ) 5027
(ஆ) 5029
(இ) 5023
(ஈ) 5025
75. “இஸ்மத் சன்னியாசி” என்னும் பாரசீகச் சொல்லுக்குரிய பொருள்
(அ) வன்துறவி
(ஆ) சமணத்துறவி
(இ) தவத்துறவி
(ஈ) தூயதுறவி
76. “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை”
-இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(அ) பரிபாடல்
(ஆ) கலித்தொகை
(இ) நற்றிணை
(ஈ) குறுந்தொகை
77. மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத்தலைவன்
(அ) பெருங்கௌசிகனார்
(ஆ) நன்னன்
(இ) பாரி
(ஈ) பாணர்
78. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்படும் கவிஞர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) கண்ணதாசன்
(ஈ) கம்பதாசன்
79. “கம்பராமயணத்தில் துன்புள தெனின் அன்றோ சுகமுளது” – எனக்கூறுபவர் யார்?
(அ) குகன்
(ஆ) இராமன்
(இ) அனுமன்
(ஈ) சீதை
80. கீழ்காணும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “உத்திரவேதம்” என அழைக்கப்படும் நூல்
(அ) திரிகடுகம்
(ஆ) இனியவை நாற்பது
(இ) திருக்குறள்
(ஈ) முதுமொழிக்காஞ்சி
81. அரியவற்றுள் எல்லாம் அரிதே,
பேணித் தமராக் கொளல்
(அ) சிறியவரைப்
(ஆ) பெரியாரைப்
(இ) உறவினரை
(ஈ) நண்பனை
82. தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம - இப்பழமொழியின் பொருள்
(அ) ஆள் பற்றாக்குறை
(ஆ) உண்பவர்கள் பலர்
(இ) நேரமின்றி உழைப்பது
(ஈ) ரொட்டி பற்றாக்குறை
83. பழமொழிகள்:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(அ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்
(ஆ) நோயற்ற வாழ்வு வாழ்வோம் குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து
(இ) குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்
(ஈ) நோயற்ற வாழ்வே குறைந்த செல்வம் என்பதை உணர்ந்த நோயுற்ற வாழ்வு வாழ்வோம்
84.தன்வினை வாக்கியம் எது?
(அ) செங்குட்டுவன் தங்கம் வாங்கினான்
(ஆ) நான் பொய் பேசேன்
(இ) நீ நன்றாகப் படி
(ஈ) பொன்னி இன்னிசை பாட்டுவித்தாள்
85. தமிழ்ப் பாடத்தை முறையாகப் படி
- இத்தொடர் எவ்வகை வாக்கியம் என கண்டறிக:
(அ) கட்டளை வாக்கியம்
(ஆ) செய்தி வாக்கியம்
(இ) தனி வாக்கியம்
(ஈ) உணர்ச்சி வாக்கியம்
86. போட்டியில் நான் முதற்பரிசு பெற்றிருப்பதாக ஆசிரியர் கூறினார்
- எவ்வகை வாக்கியம் கூறு?
(அ) தனி வாக்கியம் (ஆ) தொடர் வாக்கியம்
(இ) நேர்க்கூற்று வாக்கியம் (ஈ) அயற்கூற்று வாக்கியம்
87. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்:
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்
(அ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு எது?
(ஆ) தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதலா?
(இ) ஏறுதழுவுதல் எம்மக்களின் வீர விளையாட்டு?
(ஈ) தொன்மையான தமிழர்களின் வீரவிளையாட்டு எது?
88. சரியான சொற்றொடரினைக் கண்டறிக:
(அ) பொதுமக்கள் எரித்தனர் தீயிட்டு அந்நியத்துணிகளை
(ஆ) எரித்தனர் அந்நியத்துணிகளை தீயிட்டு பொதுமக்கள்
(இ) தீயிட்டு எரித்தனர் பொதுமக்கள் அந்நியத்துணிகளை
(ஈ) பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்
89. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக:
(அ) உயிரெழுத்துகள் பிறக்கின்றன பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு
(ஆ) பிறக்கின்றன பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு உயிரெழுத்துகள்
(இ) கழுத்தை இடமாகக் கொண்டு பன்னிரண்டும் உயிரெழுத்துகள் பிறக்கின்றன
(ஈ) உயிரெழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
90. பல்லாண்டு, முத்து, ஆமணக்கு, கொம்பு அரசன்
-அகர வரிசைப்படுத்தி எழுதுக:
(அ) அரசன், ஆமணக்கு, கொம்பு, பல்லாண்டு, முத்து
(ஆ) முத்து, பல்லாண்டு, ஆமணக்கு, கொம்பு, அரசன்
(இ) ஆமணக்கு, அரசன், கொம்பு, பல்லாண்டு, முத்து
(ஈ) கொம்பு, முத்து, ஆமணக்கு, அரசன், பல்லாண்டு
91. அகர வரிசைப்படுத்தி எழுதுக:
(அ) சுற்றம், சிந்தனை, செய்யுள், சேரலாதன், சோம்பல்
(ஆ) சிந்தனை, சேரலாதன், சோம்பல், செய்யுள், சுற்றம்
(இ) சிந்தனை, சுற்றம், செய்யுள், சேரலாதன், சோம்பல்
(ஈ) செய்யுள், சுற்றம், சிந்தனை, சேரலாதன், சோம்பல்
92.'ஏ' என்னும் ஓரெழுத்து ஒருமொழி
(அ) ஏடு
(ஆ) ஏறுதல்
(இ) அம்பு
(ஈ) அடுப்பு
93. ஒலிப்பு முறைமை அறிந்து சரியான பொருள் எழுதுக:
'ஊண்' என்றால் - ஊன் என்றால் -
(அ) உணவு, இறைச்சி
(ஆ) இறைச்சி, உணவு
(இ) ஊனம், ஊஞ்சல்
(ஈ) உள்ளம், உணவு
94. உளை என்பதன் பொருள்
(அ) பக்கம்
(ஆ) பிடரி மயிர்
(இ) அடுப்பு
(ஈ) உதவு
95.ஆஸ்பிடல் என்ற சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல்
(அ) மருந்தகம்
(ஆ) மருத்துவமனை
(இ) மருத்துவ நிலையம்
(ஈ) சுகாதார நிலையம்
96. Rational: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
(அ) பகுத்தறிவு
(ஆ) எழுத்தறிவு
(இ) பட்டறிவு
(ஈ) மெய்யறிவு
97.இடர் உற மறையோரும் எரியுறு மெழுகானார்”
எனவரும் பாடலில் இடர்- என்பதின் எதிர்ச்சொல்
(அ) துன்பம்
(ஆ) இன்பம்
(இ) மேன்மை
(ஈ) மாதவர்
98. பிரித்து எழுதுக:
பாசிலை
(அ) பசுமை + இலை
(ஆ) பாசு + இலை
(இ) பாசி + இலை
(ஈ) பைசு +இலை
99. பைங்கூழ்
பிரித்தெழுதுக:
(அ) பசிய + கூழ்
(ஆ) பைம் + கூழ்
(இ) பை + கூழ்
(ஈ) பசுமை + கூழ்
100. புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுபவர்
(அ) த.பிச்சமூர்த்தி
(ஆ) பாரதிதாசன்
(இ) கண்ணதாசன்
(ஈ) வைரமுத்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.