1.'உலகம்' என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது?
(A) உலகு
(B) உலவு
(C) உலக
(D) உல
2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக.
(A) தொழிற்பெயர்
(B) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
(C) பண்புத்தொகை
(D) விளைத்தொகை
3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்
(A) நம் இளைஞர்களிடையே எந்த எண்ணம் வளரக் கூடாது?
(B) நம் இளைஞர்களிடையே எந்த எண்னம் வளர வேண்டும்?
(C) பெரியோர்களிடம் எந்த எண்ணம், வளர வேண்டும்?
(D) பெரியோர்களிடம் எந்த எண்ணம் வளரக் கூடாது?
4. ஒரே பொருள் தரும் படிச்சொற்கள் வருவது
(A) சொல் பின்வரு நிலையணி
(B) பொருள் பின்வரு நிலையணி
(C) சொற்பொருள் பின்வருநிலையணி
(D) பிறிது மொழிதலணி
5. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது?
(A) தனிநிலைத் தொடர்
(B) கலவைத் தொடர்
(C) உணர்ச்சித் தொடர்
(D) செய்தித் தொடர்
6. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) ஈண்டு - இவ்விடம்
(B) காண்டகு - காணத்தக்க
(C) இருப்பாணி - இரும்பு ஆணி
(D) கீண்டு - அடித்து
7. பிழையற்ற தொடரை எழுதுக
(A) புத்தகப் படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்து கொள்ளல் வேண்டும்
(B) புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்
(C) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவை சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
(D) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
8. பொருந்தாத வினை மரபினை எழுதுக
(A) சுவர் கட்டினான்
(B) அம்பு எய்தான்
(C) பால் பருகினான்
(D) ஆடை நெய்தான்
9. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
(A) அங்கை, அஞ்சு, அந்தி, அல்லல், அள்ளள்
(B) அஞ்சு, அல்லல், அந்தி, அங்கை, அள்ளள்
(C) அந்தி, அஞ்சு, அங்கை, அள்ளள், அல்லல்
(D) அல்லல், அள்ளள், அந்தி, அங்கை, அஞ்சு
10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : சுவைப் பண்பு
(A)காரம்
(B) சதுரம்
(C) புளிப்பு
(D) இனிப்பு
11. உரிய பொருளைக் கண்டறிக.
“ஆ” உணர்த்தும் பொருள் யாது?
(A)அருள்
(B) பசு
(C) நெருப்பு
(D) வனப்பு
12.பிறமொழிக் கலப்பற்றத் தொடரை எழுதுக.
(A) நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை வாழ்த்தினேன்
(B) நமஸ்காரம் என்று சர்ஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்
(C) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்.
(D) வணக்கம் என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்.
13. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(A) நுனித்து → நுனி+த் +உ
(B) நுனித்து → நுனி+த்+த்+உ
(C) நுனித்து → நுனித்து + உ
(D) நுனித்து → நுனித்+த்+உ
14. கீழ்க்காணும் தொடர்களில் பிழையான தொடரைக் கண்டறிக.
(A) பேருந்து நிறுத்துமிடத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது (A)
(B) இன்றும் நம் நாட்டில் பெருவாரியான மக்கள் உள்ளார்களே
(C) ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது
(D) ஏரிகளில் மழைநீர் சேமித்தால் கிணறுகளில் நீர் வற்றாது
15. பொருந்தாததை கண்டறிக
(A) தான் + இன் = தன்னின்
(B) நீ + இன் = உன்னின்
(C) யான் + இன் = என்னின்
(D) நாம் + இன் = எங்களின்
16. ஓடு – என்பதன் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக
(A) ஓடி
(B) ஓடிய
(C) ஓடினான்
(D) ஓடுதல்
17. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்
(A) ஆசுகவி
(B) வித்தாரக் கவி
(C) மதுர கவி
(D) சித்திர கவி
18. கம்பரது காலம்
(A) கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு
(B) கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
(C) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
(D) கி.பி. எட்டாம் நூற்றாண்டு
19. சொல்லிற்கு ஏற்ற பொருளை பொருத்தி எழுதுக
(a) ஆய காலை 1. திரட்சி
(b) திரள் 2. வேடர்
(c) எயினர் 3. படகு
(d) நாவாய் 4.அந்த நேரத்தில்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 4 1 2 3
( C) 2 4 1 3
(D) 3 2 1 4
20.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்படும் நூல்
(A) கம்பராமாயணம்
(B) சிலப்பதிகாரம்
(C) பெரியபுராணம்
(D) மணிமேகலை
21. தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்
சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்
இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்
(A) கலிங்கத்துப் பரணி
(B) தமிழ்விடு தூது
(C) குற்றாலக் குறவஞ்சி
(D) முக்கூடற்பள்ளு
22. முற் பிறப்பினை உணர்ந்தவளாகக்குறிப்பிடப்படுபவள்.
(A) கண்ணகி
(B) மணிமேகலை
(C) மாதவி
(D) மாதரி
23. உலகம், உயிர், கடவுள்- ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்
(A) சீறாப்புராணம்
(B) பெரிய புராணம்
(C) கம்பராமாயணம்
(D) சிவ புராணம்
24. 'நந்திக் கலம்பக' நூலின் ஆசிரியர் யார்?
(A) கணிமேதாவியார்
(B) ஜெயங்கொண்டார்.
(C) மூன்றாம் நந்திவர்மன்
(D) அறியப்படவில்லை
25. பொருள் விளங்குமாறு பிரித்து எழுதுக
(A) நீயடாவேதிர் நிற்பதோ
(B) நீய டாவெதிர் நிற்பதோ
(C) நீயடா வெதிர் நிற்பதோ
(D) நீ யடா வெதிர் நிற்பதோ
26 அழகர் கிள்ளை விடு தூதுஎன்னும் சிற்றிலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(A) 251 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(B) 245 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(C) 250 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(D) 252 ஆண்டுகளுக்கு முந்திய நூல
27. செரு அடுதோள் என்ற அடை மொழி பெற்றவர்.
(A) விளம்பிநாகனார்
(B) கபிலர்
(C) நல்லாதனார்
(D) பூதஞ்சேந்தனார்
28. கற்றவர்க்கு எல்லா நாடுகளும் நம்முடைய நாடுகளே என்ற கருத்தமைந்த பாடலைப் பாடிய சங்கப்புலவர்
(A) கணியன் பூங்குறையைர்
(B) முன்றுறை அரையனார்
(C) கணிமேதாவியார்.
(D) திருவள்ளுவர்
29. நெடிய மொழிதலும் கடிய ஊார்தலும்
செல்லம் அன்றுதன் செய்வினைப் பயனே
இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) புறநானூற்று
(B) நற்றிணை
(C) ஏலாதி
(D) கலித்தொகை
30. கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கள் வென்ற
சீர்முகத் திளவல் பின்னர்த் திறத்ததன் னாம வேலாற்
என்ற வரிகளை எழுதியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) வீரமாமுனிவர்
(D) ஒட்டக்கூத்தர்
31. தவறான தொடரை தேர்ந்தெடு
(A) சூலை நோயால் ஆட் கொள்ள பெற்றவர் -அப்பர்
(B) மணக்கோலத்தில் ஆட் கொள்ள பெற்றவர்-சுந்தரர்
(C) திருவெண்ணைய் நல்லூரில் ஆட் கொள்ளப் பெற்றவர் சம்பந்தர்
(D) திருப்பெருந்துறையில் ஆட் கொள்ளப் பெற்றவர் மாணிக்கவாசகர்
32.இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே என்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்
இப்பாடல் வரிகள் இயற்றிய ஆசிரியர்
(A) பாரதியார்
(B) பரஞ்சோதி முனிவர்
(C) பெருஞ்சித்திரனார்
(D) காரியாசான
33. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி எந்த ஆயிரத்தில் உள்ளது
(A) முதலாம்
(B) இரண்டாம்
(C) மூன்றாம்
(D) ஐந்தாம்
34. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலின் ஆசிரியர்
(A) கம்பர்
(B) குமரகுருபரர்
(C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(D) ஓட்டக்கூத்தர்
35. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியத்தின் பெயர்
(A) மணிமேகலை
(B) வளையாபதி
(C) சிலப்பதிகாரம்
(D) குண்டலகேசி
36. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டாளாம்என்ற காந்தி குறிப்பிட்ட பழமொழி எம்மொழியைச் சார்ந்தது?
(A) தமிழ்மொழி
(B) பிரெஞ்ச் மொழி
(C) ஆங்கில மொழி
(D) குஜராத்திய மொழி
37. “திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்யார்?
(A) வீரமாமுனிவர்
(B) குணங்குடி மஸ்தான்
(C) பாரதியார்
(D) ஜி.யு.போப்
38. பொருத்தமான தொடரை தேர்வு செய்க வேலுநாச்சியார் என்பவர்
(A) சொக்கநாத நாயக்கரின் மனைவி
(B) ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழகப் பெண்
(C) தென்னாட்டின் ஜான்சி இராணி
(D) தமது பதினாறாம் வயதில் மரணமடைந்தார்.
39. புளிய மரங்கள் அடர்ந்த பகுதிஎன்ற அடிப்படையில் பெயரிடப்படாத ஊர் எது?
(A) புளியங்குடி
(B) புளியஞ்சோலை
(C) புளிப்பேரி
(D) புளியம்பட்டி
40. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்.
உறவு கலவாமை வேண்டும்என்று கூறியவர்
(A) திருமூலர்
(B) இராமலிங்கர்
(C) திருவிக
(D) திருவள்ளுவர்
41. கல்வெட்டுக்களில் காணப்படும் மதிரை இன்று…………………… ஆக மாறியுள்ளது.
(A) கோவை
(B) புதுவை
(C) மதுரை
(D) தில்லை
42. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி’ என்று கூறியவர்
(A) சேக்கிழார்
(B) திருவள்ளுவர்
(C)கம்பர்
(D) ஒளவை
43. அரை நிருவாணப் பக்கிரி என காந்தியடிகளை ஏளனம் செய்தவர்
(A) தால்சுதாய்
(B) ஸ்மட்ஸ்
(C) சர்ச்சில்
(D) அபுல்காசிம்
44. ‘ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஓட்டைச் சாண நினைப்புடையர் அல்லர் யார்?
(A) கவிமணி
(B) கண்ணதாசன்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
45. தமிழர்கள்………………….. நாட்டுடன் கடல் வணிகத் தொடம்பு கொண்டிருந்தனர்.
(A) ஆஸ்திரியா
(B) கனடா
(C) போர்ச்சுக்கள்
(D) சாவக நாடு
46.கீழார் வெளி கடல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள்………………. நூற்றாண்டை சார்ந்தவை
(A) கி மு. முதல் நூற்றாண்டு
(B) கி.மு இரண்டாம் நூற்றாண்டு
(C) கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
(D) கி.மு. நான்காம் நூற்றாண்டு
47. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்டவர் யார்?
(A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(B) ஆலந்தூர் மோகனரங்கன்
(C) ஈரோடு தமிழன்பன்
(D) அப்துல் ரகுமான்
48. பொருத்துக
(a) தேங்காயத் துண்டுகள் 1.நீல பத்மநாபன்
(b) மண்னின் மகன் 2. சுந்தர ராமசாமி
(c) செங்கமலமும் ஒரு சோப்பும் 3.சிவசங்கரி
(d) விழிப்பு 4.டாக்டர் மு.வ
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 2 4 3 1
( C) 3 1 4 2
(D) 1 3 2 4
49. ஓவியருக்கு நோக்கினார் கண்ணிடத்தே
தம் தொழில் நிறுத்துவோர் என இலக்கணம் வருந்தவர்
(A) நச்சினார்க்கினியர்
(B) இளம்பூரணார்
(C) சேனாவரையர்
(D) பரிமேவழகா
50. சி.வை தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு வழங்கிய சிறப்புப்பட்டம் யாது?
(A) சித்திரக்கவி
(B) ஞானபோதினி
(C) திராவிட சாஸ்திரி
(D) ரூபாவதி
51. சரியான பகுதியை கண்டறிக 'கேட்டான்'
(A) கேட்டு
(B) கேள்
(C) கேடு
(D) கே
52. அடவி மலையாறு இச்சொல்லில் உள்ள இலக்கணக் குறிப்பு யாது?
(A) பண்புத் தொகை
(B) உவமைத் தொகை
(C) உம்மைத் தொகை
(D) வினைத் தொகை
53. சரியான பொருளைக் கண்டறிக 'பருவரல்'
(A) குகை
(B) துன்பம்
(C) தூக்கம்
(D) இன்பம்
54. வழுவற்ற தொடரைத் தேர்வு செய்க
(A) வெற்றிலைத் தோப்புக்குச் சென்று வெற்றிலை பறித்துவா
(B) ஆந்தை கத்தியது
(C) வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது
(D) பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தது
55. ‘தன்னொற்று இரட்டல் எனும் விதிப்படி புணர்ந்த சொல் எது?
(A) கற்றாழை
(B) சிற்றோடை
(C) சேதாம்பல்
(D) பொற்றாளம்
56. ஆகு பெயர்களைப் பொருத்துக
(a) கருவியாகு பெயர் 1. கம்பரைப் படித்தேன்
(b) காரியவாகு பெயர் 2. காளை வந்தான்
(c) கருத்தாவாகு பெயர் 3. திருக்குறள் கற்கிறேன்
(d) உவமையாகு பெயர் 4. வானொலி கேட்டு மகிழ்ந்தேன்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 4 2 3 1
( C) 3 1 2 4
(D) 4 3 2 1
57. பொருத்துக:
(a) நெடு மதில் 1. ஆறாம் வேற்றுமைத்தொகை
(b) வாங்குவில் 2. வினைத் தொகை
(c) இலைவேல் 3. பண்புத் தொகை
(d) மாறன் களிறு 4. உவமைத் தொகை
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 3 1 2 4
( C) 2 3 4 1
(D) 3 4 2 1
58. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
(A) ஆற்றுவார் பணிதல் அது சான்றோர் ஆற்றல்
(B) ஆற்றுவார் அது சான்றோர் பணிதல் ஆற்றல்
(C) ஆற்றுவார் ஆற்றல் அது சான்றோர் பணிதல்
(D) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
59 பொன்னும் துகிரும் முத்தும் இலக்கணக் குறிப்பு யாது?
(A) எண்ணும்மை
(B) உம்மைத் தொகை
(C) வினைத் தொகை
(D) உவமைத் தோகை
60. அந்தமான் என்ற பொல் அந்த + மான் எனப் பிரிந்து நின்று எப்பொருளைத் தருகிறது
(A) விலங்கு
(B) நாடு
(C) அழகு
(D) உலகு
61. பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் என்பதில் 'பொறை' என்ற சொல் குறிப்பிடும் பண்பு
(A)கோபம்
(B) அன்பு
(C) மகிழ்ச்சி
(D) பொறுமை
62. நீண்ட வால்நிலம் புடைத்திடக்கிடத்துடல் நிமிர்ந்து— இதில் நிமிர்ந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
(A)உயர்ந்து
(B) குனிந்து
(C) வளர்ந்து
(D)பறந்து
63. பொருத்துக
(a) பொங்கு கடல் 1. உருவகம்
(b) அடைந்து 2 இடவாகுபெயர்
(c) கரகமலம் 3. வினைத் தொகை
(d) தேசம் 4. வினையெச்சம்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 4 2
( C) 2 1 4 3
(D) 4 2 1 3
64. தேன் போன்ற மொழிஇத்தொடரில் வரும் உவமை வகை
(A) விரியுவமை
(B) வகையுவமை
( C) தொகையுவமை
(D) அழகுவமை
65. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) சுரதா
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்
66. 'கதம்' என்ற சொல்லின் பொருள்
(A) சினம்
(B) சீதனம்
(C) இசை
(D) அளவு
67."வதுவை" என்ற சொல்லின் பொருள்
(A) திருமணம்
(B) மறுமணம்
(C) நறுமணம்
(D) மணம்
68. ;கவரி வீசிய சேர மன்னன்
(A) சேரன் கணைக்கால் இரும்பொறை
(B) பெருஞ்சேரலாதன்
(C) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
(D) ஆடுகோட்பாட்டு சேரலாதன்
69. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்
(A) இறைவனின் பயணம்
(B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
(C) அடியார்களின் பயணம்
(D) கிறிஸ்துவத்தை நோக்கிய பயணம்
70. பொருந்தாதது எது?
(A) அயோத்தியா காண்டம்
(B) ஹிஜ்ரத்துக் காண்டம்
(C) பாலகாண்டம்
(D) கிட்கிந்தா காண்டம்
71. வருகைப் பருவம்என்பது பிள்ளைத் தமிழின் எத்தனையாவது பருவம்?
(A) முதல் பருவம்
(B) ஐந்தாம் பருவம்
(C) ஆறாவது பருவம்
(D) மூன்றாம் பருவம்
72. குமரகுருபரர் எழுதாத நூல் எது?
(A) கந்தர்கலி வெண்பா
(B) குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ்
(C) மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்
(D) முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
73. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவஎனச் சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்தவர்.
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
(D) திரு.வி.க
74. "நற்றிணையைத்” தொகுப்பித்தவர்
(A) உக்கிரப் பெருவழுதி
(B) இளம் பெருவழுதி
(C) பன்னாடு தந்த மாறன் வழுதி
(D) மிளைகிழான் நல்வேட்டனார்
75.தமிழுக்குக் கதி என்று பெரியோரால் போற்றப்படும் இரு நூல்கள்.
(A) திருக்குறள், நாலடியார்.
(B) திருக்குறள், கம்பராமாயணம்.
(C) திருக்குறள், நான்மணிக்கடிகை
(D) திருக்குறள், சிலப்பதிகாரம்
76 தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு நிலத்தைவிடப் பெரியது என்று கூறும் நூல்
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) கலித்தொகை
(D) அகநானூறு
77. கம்பரால் பண்ணவன்எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(A) இராமன்
(B) இலக்குவன்
(C) குகன்
(D) பரதன்
78. பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை எத்தனை?
(A) 205
(B) 305
(C) 105
(D) 405
79. மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
(A) நற்றிணை
(B) அகநானூறு
(C)புறநானூறு
(D) நந்திக் கலம்பகம்
80. கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்திலுள்ள படலங்கள்
(A) 14
(B) 10
(C) 11
(D) 13
81. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்
(A) அகத்தியர்
(B) நக்கீரர்
(C) தொல்காப்பியர்
(D) பூதஞ்சேந்தனார்
82. செம்புலப் பெயல் நீர் போலஇவ்வரி இடம்பெறும் நூல்
(A) பரிபாடல்
(B) கலித்தொகை
(C) குறுந்தொகை
(D) அகநானூறு
83. சொல்லையும் பொருளையும் பொருத்துக:
(a) வன்மை 1. கொடை
(b) வண்மை 2. வலிமை
(c) தண்மை 3. இடப்பெயர்
(d) தன்மை 4. குளிர்ச்சி
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 1 3 4
( C) 2 3 1 4
(D) 3 2 1 4
84. பழியில்லா மன்னன் யார் – எது போற்றும்படி வாழ்வான்?
(A) மக்கள்
(B) அமைச்சர்
(C) பிற நாட்டரசர்
(D) நூல்கள்
85. மாணிக்கவாசகர் அருளியவை
(A) தேவாரமும் திருவாசகமும்
(B) தேவாரமும் திருமந்திரமும்
(C) திருவாசகமும் திருக்கோவையாரும்
(D) திருவாசகமும் திருமந்திரமும்
86 பொருத்தமில்லாத தொடரை கண்டறிக.
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்கள்
(A) பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர்
(B) அறத்தின் வழியே வாணிகம் செய்தனர்.
(C) கொள்வது மிகை கொள்ளாதவர்கள்
(D) கொடுப்பதும் குறைபடாது கொடுத்தவர்கள்
87. கண்ணதாசனின் படைப்புகளில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற புதினம் எது?
(A) வேலங்குடித் திருவிழா
(B) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
(C) சேரமான் காதலி
(D) இராச தண்டனை
88. சாதி களையப்பட வேண்டிய களை – எனக் கருதியவர்
(A) பெரியார்
(B) அம்பேத்கார்
(C) திருவள்ளுவர்
(D) காமராசர்
89. தேர்வு செய்க :
(a) நா பழம் 1.மேத்தா
(b) நந்தவன நாட்கள் 2 நா.காமராசன்
(c) நிலவுப்பூ 3. ஈரோடு தமிழன்பன்
(d) ஊமை வெயில் 4 சிற்பி
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 3 4 1
( C) 1 3 2 4
(D) 1 2 3 4
90 ”தமிழ் மொழியின் உபநிடதம் என சிறப்பிக்கப் பெறும் நூல்
(A) திருக்குறள்
(B) தாயுமானவர் பாடங்கள் திரட்டு
(C) கவிமணி பாடல்கள்
(D) திருமந்திரம்
91. பின்வருவனவற்றுள் கடலை குறிக்காத சொல்
(A) ஆர்கலி
(B) முந்நீர்
(C) பெளவம்
(D) திமில்
92. மு.மேத்தா எழுதாத நூல் எது?
(A) கண்ணீர் பூக்கள்
(B) ஊர்வலம்
(C) நடந்த நாடகம்
(D) தண்ணீர் தேசம்
93. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் …………………. எனுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏரானமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
(A) திருவண்ணர்மலை
(B) தர்மபுரி
(C) ஆதிச்ச நல்லூர்
(D) கீழார் வெளி
94. கிழிசல்- சிறுகதை ஆசிரியர்
(A) ஜெயகாந்தன்
(B) ராஜம் கிருஷ்ணன்
(C) நாஞ்சில் நாடன்
(D) வண்ணதாசன்
95. நோய்க்கு மருந்து இலக்கியம் எனக் கூறியவர்
(A) உவே சாமிநாதர்
(B) திரு.வி கல்யாணசுந்தரனார்
(C) மீனாட்சி சுந்தரனார்.
(D) பரிதிமாற சுலைஞர்
96. பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் சொற்கள் எப்பகுதியைச் சார்ந்தது.
(A) குட்ட நாடு
(B) பன்றி நாடு
(C) நாஞ்சில் நாடு
(D) அருவா நாடு
97. 'திரைக்கவித் திலகம்' என்றழைக்கப்படுபவர் யார் ?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) மருதகாசி
(C) உடுமலை நாராயணகவி
(D) சுரதா
98. 'வேங்கடமகாலிங்கம்' என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?
(A) ஞானக்கூத்தன்
(B) கல்யாண்ஜி
(C) பசுவய்யா
(D) பிச்சமூர்த்தி
99. மகாவித்துவான நவநீதக்கிருட்டிண பாரதியாரின் மாணவர்
(A) பாரதிதாசன்
(B) சச்சிதானந்தன்
(C) தமிழன்பன்
(D) காமராசன்
100. அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தைத் தோற்றுவிந்த ஆண்டு
(A) 1948
(B) 1945
(C) 1946
(D) 1940