7th New Book ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
1.ஆ- பசு
2.ஈ- கொடு
3. ஊ- இறைச்சி
4. ஏ- அம்பு
5. ஐ- தலைவன்
6. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை
7. கா- சோலை
8. கூ- பூமி
9. கை- ஒழுக்கம்
10.கோ-அரசன்
11. சா- இறந்துபோ
12. சீ- அடக்கம்
13. சே- உயர்வு
14. சோ- அரண்
15. தா- அழிவு, கொடு
16. தீ- தீமை, நெருப்பு
17. தூ- தூய்மை, சுத்தம்
18. தே- கடவுள்
19. தை- தைத்தல்
20. நா- நாவு
21. நீ- முன்னிலை ஒருமை
22. நே- அன்பு
23. நை- இழிவு
24. நோ- வறுமை
25. பா- அழகு, பாடல்
26. பூ- பூமி
27. பே – மேகம்
28. பை- அழகு, இளமை
29. போ- செல்
30. மா- மாமரம்
31. மீ- வான்
32. மூ-மூப்பு
33. மே- அன்பு
34. மை- அஞ்சனம்
35. மோ- முகத்தல்
36. யா- ஐயம்
37. வா- அழைத்தல்
38. வீ- சாவு
39. வை- புல்
40. வெள- கவர்
41. நொ- நோய்
42. து- உண்
அ | எட்டு,அழகு,சிவன் |
ஆ | பசு, ஆன்மா, எருது |
இ | 'அரை'யின் தமிழ் வடிவம் |
ஈ | ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி |
உ | சிவன், ஆச்சர்யம், இரண்டு(தமிழ்) |
ஊ | ஊண், இறைச்சி, உணவு |
எ | வினா எழுத்து, ஏழு(தமிழ்) |
ஏ | அம்பு, வினாப் பெருக்கம், இறுமாப்பு |
ஐ | தலைவன், அரசன், வியப்பு, ஆசான் |
ஓ | மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை |
ஔ | உலகம், ஆனந்தம் |
க | கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று |
கா | சோலை, காத்தல், காவல், காடு |
கி | இறைச்சல் ஒலி |
கு | பூமி, உலகம், குற்றம் |
கூ | பூமி, உலகம், கூகை |
கை | உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை |
கோ | அரசன், தலைவன், பசு, இறைவன் |
கௌ | கொள்ளு, தீங்கு, பற்று |
சா | சாதல், இறத்தல், சோர்தல் |
சி/சீ | இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்பு |
சு | விரட்டுதல், சுகம், மங்களம் |
சே | எருது, சிகப்பு, மரம் |
சை | கைப்பொருள், அருவெருப்பு, ஒலி |
தா | தருதல், கொடுத்தல், கேடு |
தீ | நெருப்பு, சினம், தீமை, நரகம் |
து | உண், அசைதல், உணவு |
தூ | வெண்மை, தூய்மை, பகைமை |
தே | தெய்வம், கடவுள், அருள் |
தை | மாதம், தைத்தல், அலங்காரம் |
நா | நாக்கு, சொ, நடு, அயலர் |
நீ | முன்னிலை |
நே | அன்பு, அருள், நேயம் |
நை | நைதல், வருந்துதல் |
நொ/நோ | துன்பம், நோய் |
ப | நூறு |
பா | பாட்டு, அழகு, பாதுகாப்பு |
பி | அழகு, பிறவினை விகுதி |
பீ | பெருமரம், மலம் |
பூ | மலர், பூமி, பிறப்பு |
பே | நுரை, மேகம், அச்சம் |
ம | சந்திரன், சிவன் |
மா | பெரிய, விலங்கு, மேன்மை, மாமரம் |
மீ | மேலே, உச்சி, ஆகாயம் |
மூ | மூப்பு, முதுமை, மூன்று |
மே | அன்பு, மேன்மை, மாதம், மேலே |
மை | அஞ்சனம், கண்மை, இருள், மலடு |
மோ | மோத்தல், முகர்தல் |
ய | தமிழ் எழுத்து என்பதன் வடிவம் |
யா | யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம் |
வ | கால் பாகம் |
வா | வருதல், தாவுதல், உண்டாக்குதல் |
வி | அறிவு, நிச்சயம், ஆகாயம் |
வீ | மலர், விரும்புதல், பறவை |
வை | கூர்மை, வைத்தல், வைக்கோல் |
வௌ | கைப்பற்று, ஒலிக்குறிப்பு, திருகு |
9th பெரியபுராணம்
மா – வண்டு
கா – சோலை
9th குறுந்தொகை
யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
11th திருமலை முருகன் பள்ளு
கா – சோலை
1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ___? 42
2. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன? ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும். எ.கா. (தீ, நீ, வா, போ).
3. _______ புல்லை மேயும்? ஆ
4. _______ சுடும்? தீ
5. ______ பேசும்? கை
6. ______ பறக்கும்? ஈ
7. ______ மணம் வீசும்? பூ
8. தீ – நெருப்பு
9. பா – பாடல்
10. தை – தை மாதம்
11. வை – புல், வைக்கோல்
12. மை – அஞ்சனம்
13. தா – கொடு
14. தே என்பதன் பொருள் _______ எனப்படும்? கடவுள்
15. மா – வண்டு
16. கா – சோலை
17. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
18. மா - ஒரு நில அளவு (1/3 ஏக்கர்)
19. கா – காடு
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் _____? பவணந்தி முனிவர்