TNPSC Group 4 Tamil Questions 2022

1. மரபு பிழைகள் அற்ற தொடரைக் காண்க ?

A) கூகை கூவும்

B) கூகை குனுகும்

C) கூகை குழறும்

D) கூகை அலறும்


2. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக ?

A) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது.

B) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது.

C) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது.

D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது.


3. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக ?

A) சார்பு

B) மருந்து

C) கஃசு

D) பசு


4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ?

A) மோனை

B) எதுகை

C) இசைவு

D) இயைவு


5. கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ?
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கப்பர்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி

D) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு


6. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?

A) வாணிதாசன்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) பாரதியார்


7. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ?

A) ஆத்திச்சூடி

B) கொன்றை வேந்தன்

C) நல்வழி

D) மூதுரை


8. பொருத்துக
a. மதியாதார் முற்றம் – 1. கூடுவது கோடிபெறும்
b. உபசரிக்காதார் மனையில் – 2. மிதியாமை கோடிபெறும்
c. குடிபிறந்தார் தம்மோடு – 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
d. கோடானு கோடி கொடுப்பினும் – 4. உண்ணாமை கோடிபெறும்

A 3 4 2 1

B 2 4 1 3

C 2 3 1 4

D 1 2 3 4


9. சரியான இணைகளைத் தேர்ந்தெடு
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி

A)1ம் மற்றும் 2ம் சரி

B) 2ம் மற்றும் 3ம் சரி

C) 1ம் மற்றும் 3ம் சரி

D) 2ம் மற்றும் 4ம் சரி


10. முடியரசன் இயற்றாத நூல் எது ?

A) பூங்கொடி

B) நீலமேகம்

C) வீரகாவியம்

D) காவியப்பாவை


11. பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது – என்று பாடியவர் ?

A) பாரதியார்

B) பசுவய்யா

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்


12. கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் ?

A) நாமக்கல் கவிஞர்

B) சுரதா

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்


13. பொருத்துக
a) வெண்பா – 1. துள்ளல் ஓசை தூங்கல் ஓலை
b) ஆசிரியப்பா – 2. தூங்கல் ஓலை
c) கலிப்பா – 3. செப்பல் ஓசை
d) வஞ்சிப்பா – 4. அகவல் ஓசை

A 3 1 2 4

B 4 3 2 1

C 2 4 1 3

D 3 4 1 2


14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக – ‘கோல்டு பிஸ்கட்’

A) வைரக்கட்டி

B) அலுமினியக்கட்டி

C) தங்கக்கட்டி

D) தாமிரக்கட்டி


15. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக


a) Vowel – 1. மெய்யெழுத்து
b) Consonant – 2. ஒரு மொழி
c) Homograph – 3. உயிரெழுத்து
d) Monolingual – 4. ஒப்பெழுத்து

A 1 3 2 4

B 3 4 1 2

C 2 4 3 1

D 3 1 4 2


16. “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு ” – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது ?

A) கரிசலாங்கண்ணி

B) தூதுவளை

C) குப்பைமேனி

D) சோற்றுக்கற்றாழை


17. புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் ?

A) உ.வே.சா

B) ஜி.யு.போப்

C) சீகன்பால்கு ஐயர்

D) வீரமாமுனிவர்


18. மூன்றடி சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?

A) குறுந்தொகை

B) ஐங்குறுநூறு

C) அகநானூறு

D) நற்றிணை


19. சரியான இணையைத் தேர்வு செய்க
a) துவரை – தாமரை மலர்
b) மரை – பவளம்
c) விசும்பு – வானம்
d) மதியம் – நிலவு

A) (a) மற்றும் (b) சரி

B) (b) மற்றும் (c) சரி

C) (c) மற்றும் (d) சரி

D) (d) மற்றும் (a) சரி


20. ஈ.வெ. ராவுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது ?

A) 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்

B) 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசிய செனட் சபை

C) 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்

D) 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்


21. நடனக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை ?

A) பாலசரஸ்வதி

B) வைஜெயந்திமாலா

C) தஞ்சை கிட்டப்பா

D) நர்த்தகி நடராஜ்


22. பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார் ?

A) தினத்தந்தி

B) காஞ்சி

C) முரசொலி

D) தினமணி


23. கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது ?

A) கண்ணீர்ப் பூக்கள்

B) ஊர்வலம்

C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

D) சோழ நிலா


24. ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடு ?

A) கேட்டு

B) கேட்ட

C) கேட்டல்

D) கேட்டான்


25. ‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக ?

A) தணி

B) தணிந்த

C) தணிந்து

D) தனி


26. ‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிந்து எழுதுக ?

A) தந்த

B) தரு

C) தா

D) தந்து


27. ‘சோ’ – ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக

A) அரசன்

B) வறுமை

C) மதில்

D) நோய்


28. மா – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக

A) பெரிய

B) சிறிய

C) குறைய

D) நிரம்ப


29. பரவை – இச்சொல்லிற்குரிய பொருளை கண்டறிந்து எழுதுக ?

A) மலை

B) கடல்

C) ஆறு

D) உயிர்வகை


30. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்தான் பெரிய புராணம்” என்று கூறியவர் யார் ?

A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்

B) உ.வே.சாமிநாதனார்

C) திரு.வி. கலியாண சுந்தரனார்

D) ஆறுமுக நாவலர்


31. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க – “இளங்கோவடிகள்”
a) சேரமரபைச் சார்ந்தவர்
b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
d) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று குறிப்பிட்டவர்

A) அனைத்தும் சரி

B) (a), (b) சரி

C) (a), (c), (d) சரி

D) அனைத்தும் தவறு


32. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

A) கூற்று 1 மட்டும் சரி

B)கூற்று 2 மட்டும் சரி

C) கூற்று இரண்டும் சரி 

D)கூற்று இரண்டும் தவறு


33. வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் – திருக்குறள் உணர்த்தும் கருத்து

A) ஏற்றுமதி

B) ஏமாற்றுதல்

C) நேர்மை

D) முயற்சியின்மை


34. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் ?

A) பல்லவர்கள்

B) பாண்டியவர்கள்

C) சோழர்கள்

D) நாயக்கர்கள்


35. புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை ?

A) ஓவிய எழினி

B) சிற்பக்கலை

C) மெய்க்கீர்த்தி

D) பைஞ்சுதை


6. பொருத்துக
a) தத்துவ தரிசனம் – 1. அண்ணா
b) பிடி சாம்பல் – 2. வல்லிக்கண்ணன்
c) தாலாட்டு – 3. கி.வா.ஜகந்நாதன்
d) மிட்டாய்காரன் – 4. ஜெயகாந்தன்

A) 3 1 4 2

B) 4 3 2 1

C) 4 2 1 3

D) 2 1 4 3


37. சரியான தொடரைக் கண்டறிக.

A) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்

B) தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்

C) தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்

D) உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்


38. சரியான தொடரைக் கண்டறிக.

A) தம்பி படி சங்கத்தமிழ் நுலை என்று கூறினார் கவிஞர்

B) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி

C) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்

D) “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்


39. சரியான அகரவரிசையைத் தேர்க

A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்


40. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்

B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்.


41. ‘தேடு’ – வினைமுற்று சொல்

A) தேடிய

B) தேடினார்

C) தேடி

D) தேடுதல்


42. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

A) தூது

B) பள்ளு

C) கலம்பகம்

D) குறவஞ்சி


43. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை

A) பத்து

B) ஆறு

C) ஏழு

D) ஐந்து


44. உழவர் உழத்தியரது வாழைக்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது ?

A) கலம்பகம்

B) பள்ளு

C) குறவஞ்சி

D) உலா


45. அம்புஜத்தாம்மாள் எழுதிய நூல் ?

A) இராமலிங்க சுவாமிகள் சரிதம்

B) மதி பெற்ற மைனர்

C) முப்பெண்மணிகள் வரலாறு

D) நான் கண்ட பாரதம்


46. பெரிய புராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது ?

A) சேரநாடு

B) சோழநாடு

C) பாண்டியநாடு

D) கலிங்கநாடு


47. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு வெளியிட்டவர் ?

A) மெய்யப்பர்

B) உ.வே.சாமிநாதர்

C) இலக்குவனார்

D) மீனாட்சி சுந்தரனார்


48. டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் ?

A) உரைநடைக் கோவை

B) தமிழிலக்கிய வரலாறு

C) கதையும் கற்பனையும்

D) ஊரும் பேரும்


49. தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்கு தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர் ?

A) மறைமலையடிகள்

B) சங்கரதாசு சுவாமிகள்

C) பரிதிமாற் கலைஞர்

D) பம்மல் சம்பந்தனார்


50. தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது

A) மதுரை

B) கரூர்

C) தூத்துக்குடி

D) கன்னியாக்குமரி


SCO Keywords :

 • tnpsc
 • tnpsc group 4
 • tnpsc group 2
 • tnpsc group 4 syllabus
 • tnpsc login
 • tnpsc photo compressor
 • tnpsc exam date
 • tnpsc exam
 • tnpsc exam details
 • tnpsc exam apply
 • tnpsc portal
 • tnpsc maths book pdf
 • tnpsc tamil book pdf
 • Tamil Nadu Public Service Commission
 • tnpsc News
 • tnpsc recruitment
 • tnpsc apply oline
 • tnpsc notification
 • www.tnpsc.gov.in latest news
 • tnpsc new syllabus
 • tnpsc notes

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.