இந்திய அரசமைப்பு (12th அரசியல் அறிவியல்) (01 to 131 Questions)

இந்திய அரசமைப்பு (12th அரசியல் அறிவியல்)

1) காலனி ஆட்சிக்காலத்தில் உருவான நமது தேசியத்தன்மை பின்வருவனவற்றுள் எதற்காக போராடி வந்துள்ளது?
ⅰ) பல்வேறு பகுதிகளின் ஒருங்கிணைப்பு
ⅱ) அரசமைப்பு மையமாதல்
ⅲ) மக்களாட்சிமயம்
ⅳ) கல்வி
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)

d) ⅱ), ⅲ), ⅳ)

2) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ சில குறிப்பிட்ட அடிப்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டிருப்பது அவசியமாகிறது.
ⅱ) விதிகள், ஒழுங்குமுறைகள் இல்லையென்றால் மக்களாட்சி நிலைத்திருக்காது.
ⅲ) விதிகள், ஒழுங்குமுறைகள் அற்ற நிலையில் மக்களின் நிலை பாதுகாப்பாக இருக்கும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)


3) காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியா எவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆளப்பட்டது?
ⅰ) ஆங்கிலேய அரசால் பிறப்பிக்கப்பட்ட சாசனங்கள்
ⅱ) ஆட்சிக்குழு சட்டங்கள்
ⅲ) காலனியாட்சிக்கால இந்திய அரசாங்கச் சட்டம்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)


4) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மைய (மத்திய) சட்டமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது.
ⅱ) மாநிலங்களின் (அரசுகளின்) ஒன்றியமாக, பல் பிரிவுகளுக்கும் ஒருமைப்பாட்டினையும் ஒருங்கிணைப்பையும் வழங்கும் கூட்டாட்சியை உருவாக்கும் நோக்கம் இருந்தது.
ⅲ) சமூகத்தில் நிலவும் பல் அடுக்கு பிரிவுகள், வகைமைகள் ஆகியன அனைத்தையும் ஒரே அரசாட்சியின் கொடையின்கீழ் கூட்டிணைக்கும் வகையில் புதிய அரசமைப்பை முன்மொழிய வேண்டியிருந்தது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

5) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.

ⅰ) ஒரு அரசமைப்பின் மிக முக்கியச் செயல்பாடு என்பது அந்த அரசின் குடிமக்கள் அனைவருக்குள்ளும் அதிகபட்சமான ஒருங்கிணைப்பை அனுமதிக்கக்கூடிய அடிப்படை விதிகளை வழங்குவதுதான்.
ⅱ) ஒரு அரசு அமைக்கப்பட்டு, அது ஆட்சி செய்வதற்கான தேவையான விதிகளைக் கொண்ட அமைப்புதான் நீதி மன்றம் என்பதாகும்.
ⅲ) ஒரு அரசின் பல பாகங்களுக்குத் தேவையான ஒதுக்கீடுகளை அரசமைப்பு வரையறுக்கிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

6) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய பன்மைத்துவத்துக்கு கட்சிகளின் ஒன்றியமே தேவையானதாகும்.
ⅱ) இந்திய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒரு மக்களாட்சி வடிவிலான அரசினையே விரும்பின.
ⅲ) நாடாளுமன்றமே நமது அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் முடிவு செய்கிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

7) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பின் மூன்றாவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும் வகையில் விதிகளைக் கொண்டுள்ளது.
ⅱ) ஒரு நாட்டின் மக்களின் அடிப்படை அடையாளங்களை அரசமைப்பு வெளிப்படுத்துகிறது.
ⅲ) அரசமைப்பு உருவாக்கப்படும் காலகட்டத்துக்கு முன்பு பல இன, கலாச்சார அடையாளங்களை ஒரு சமுதாயத்தின் மக்கள் கொண்டிருக்கலாம்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

8) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பை முன்மொழிந்து உருவாக்கப்படும் அரசின் அடிப்படைச் சட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அந்நாட்டின் மக்கள் ஒரே அரசியல் அடையாளத்தைக் கொண்டிருப்பர்.
ⅱ) ஒரு தனிநபரின் இலக்குகள், அவாக்கள், சுதந்திரம் ஆகியன ஒரு நாட்டின் அரசமைப்பு ஒழுங்கு முறைகளுக்கு இணக்கமானதாக அமைய வேண்டும்.
ⅲ) தனது குடிமக்களால் மீறப்படும் சில குறிப்பிட்ட அடிப்படைச் சட்டங்களை ஒரு அரசமைப்பு முன்மொழிகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

9) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு நாட்டின் மக்களின் சில குறிப்பிடத்தக்க அடிப்படை உரிமைகளை ஒரு அரசமைப்பு பாதுகாக்கிறது.
ⅱ) ஒரு நாட்டின் சில குறிப்பிடத்தக்க குடிமக்களை ஒரு அரசமைப்பு பாதுகாக்கிறது.
ⅲ) ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அந்நாட்டின் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவினையும், பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான உறவினையும் கொண்ட ஒரு சட்டகத்தினையும் அது உருவாக்குகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

10) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) உலகின் அரசமைப்புகளில் பெரும்பான்மையானவை எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன.
ⅱ) அமெரிக்க அரசில் காணப்படுவது போன்று அரசமைப்பை ஒரே ஆவணமாகக் கொண்டிராத சில அரசுகளும் உள்ளன.
ⅲ) இங்கிலாந்து அரசானது ஏராளமான வழக்கங்கள், உடன்பாடுகள் மற்றும் வரலாற்று முன்னுதாரணங்கள் ஆகியனவற்றின் தொகுப்பாக பல அங்கங்களைக் கொண்ட அரசமைப்பினைக் கொண்டுள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

11) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு மதச்சார்பு அரசு எனப்படும்.
ⅱ) மத சார்பு அரசு என்பது ஒரு மதத்தினை அரசு மதமாகக் கொண்டிருக்கும்.
ⅲ) அந்த அரசின் உயர் பதவிகள் அனைத்தும் அரசு மதத்தை பின்பற்றுவோருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

12) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஓர் அரசமைப்பு எவ்வாறு நடைமுறைக்கு வந்தது, அதை யார் உருவாக்கியது, அதன் அதிகார அமைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் ’அரசமைப்பு உருவாக்கம்’ என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
ⅱ) அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் அரசின் அரசமைப்பு அங்கு தேசிய இயக்கம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
ⅲ) மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசமைப்பு நிர்ணயசபையால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அரசமைப்பு என்ற சிறப்பு, அமெரிக்க அரசமைப்புக்கு உண்டு.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

13) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) விடுதலையின் போது நாட்டில் இருந்த மக்கள் பிரிவுகளில் பெரும்பான்மையோரின் ஒருமித்த கருத்தை இந்திய அரசமைப்பு பிரதிபலிக்கவில்லை.
ⅱ) அரசமைப்பை பொதுவாக்கெடுப்புக்கு விட்டு அங்கீகாரம் பெற்ற நிகழ்வுகள் சில நாடுகளில் நடைபெறுகின்றது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

14) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒன்று அல்லது பல கேள்விகளின் தொகுப்பின் மீது வாக்காளர்களின் ஒப்புதல்பெற நேரடி வாக்கெடுப்பு நடத்துவது பொதுவாக்கெடுப்பு ஆகும்.
ⅱ) நெறிசார் சிக்கல்கள் குறித்து முடிவெடுப்பதற்கும், தனிநபர்கள் முடிவெடுத்துக்கொள்ள விட்டுவிடுவதே சிறந்தது என நினைக்கும் உள்ளூர் சிக்கல்கள் குறித்தும் பொதுவாக்கெடுப்பு முறை பயன்படுத்தப்படுவதில்லை.
ⅲ) ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாகவும், தனிநபருக்கு பொதுமக்கள் அளிக்கும் அங்கீகாரமாகவும் முழு அதிகாரம் வழங்கப்படுவதற்கு ஒப்புதலாகவும் பொது வாக்கெடுப்பு பார்க்கப்படுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

15) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பு அல்லது பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தங்களில் ஒன்றோகூட இதுவரை பொதுவாக்கெடுப்புக்கு விடப்பட்டதில்லை.
ⅱ) இந்தியாவில் அவ்வப்போது உருவாகிய சூழ்நிலைகள் பொதுவாக்கெடுப்பை கோரக்கூடிய அளவுக்குச் செல்லவில்லை
ⅲ) சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை பொது வாக்கெடுப்புமுறை பின்பற்றப்படவில்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

16) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஓர் அரசமைப்பின் அம்சங்கள் ஒரு சிறந்த அரசமைப்பு என்பது சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடமளிப்பதாக இருக்க வேண்டும்.
ⅱ) மதம், சாதி, மொழி அடிப்படையில் பாகுபாடு கொண்ட அரசமைப்புகள் நாட்டின் அனைவராலும் ஏற்கப்படுகின்றன.
ⅲ) அரசமைப்பின் அடிப்படைச் சட்டவிதிகளேஅதன் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

17) நாட்டின் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை ‘நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு’ என்று விரிவுபடுத்திய அரசமைப்பு திருத்தச்சட்டம் எது?
a) 42 வது
b) 43 வது
c) 44 வது
d) 46 வது

18) இந்திய அரசமைப்பின் 42- வது திருத்தத்தைக் கொண்டு வந்த பிரதமர் யார்?
a) ராஜீவ் காந்தி
b) இந்திரா காந்தி
c) வி.பி.சிங்
d) மொரார்ஜி தேசாய்

19) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஒரு தனிநபர் அல்லது ஒற்றை நிறுவனத்திடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டால் தவறாகப் பயன்படுத்தப்பட வழியேற்படும் என்பதால் ஒற்றை நிறுவனத்திடம் குவிக்கப்படுவதில்லை.
ⅱ) பல அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பிரித்து வழங்கப்பட்டு மையப்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

20) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
கூற்று: இந்திய அரசமைப்பு அதிகாரங்களை சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை போன்ற நிறுவனங்கள் இடையே கிடைமட்டமாக பகிர்ந்து வழங்குகிறது.
காரணம்: எந்த ஒரு நிறுவனமும் பிறழ்வது தடுக்கப்படுவதுடன் அதன் வெற்றியையும் நிலைத்த தன்மையையும் விரிவுபடுத்துகிறது.
a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
b) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

21) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) சிறப்பாக எழுதி வடிவமைக்கப்பட்ட ஒரு அரசமைப்பு என்பது அதன் உட்கரு மதிப்பீடுகளைத் தக்கவைத்துக்கொண்டே மாறும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத்தக்கதாகும்.
ⅱ) நமது அரசமைப்பு நெருக்கடிமிக்க தருணங்களில் செயல்படுவதில்லை.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

22) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அன்றைய மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினர்களை மறைமுக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
ⅱ) அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 அன்று கூடியது.
ⅲ) பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை 18 ஆகஸ்ட் 1947 அன்று மீண்டும் கூடியது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

23) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரித்தானிய அமைச்சரவைக் குழு முன்மொழிந்த திட்ட ஆங்கிலேய அரசின் அடிப்படையில் அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் வரிசை அமைந்தது.
ⅱ) அன்றைய மாகாணங்கள், சுதேச அரசுகள், அல்லது அரசுகளின் குழுக்களில் இருந்து அதன் மக்கள்தொகைக்கு ஏற்றபடி 5 லட்சத்துக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
ⅲ) மாகாணங்களில் இருந்து 219 உறுப்பினர்களும் சுதேச அரசுகளிடம் இருந்து 93 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

24) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒவ்வொரு மாகாணத்திற்கும் மூன்று முதன்மை சமுதாயங்களான இந்து, முஸ்லிம், சீக்கியர் ஆகிய சமுதாயங்களின் மக்கள்தொகை விகிதத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
ⅱ) உறுப்பினர்கள் ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ⅲ) சுதேச அரசுகள் தங்கள் பகுதியிலிருந்து உறுப்பினர்களை மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப தாங்களே தேர்வுசெய்துகொள்ளும் முறையை உருவாக்க மறுக்கப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

25) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 254 உறுப்பினர்கள் 16.6.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்.
ⅱ) அரசமைப்பு நிர்ணயச்சபை முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது.
ⅲ) ஆச்சார்ய ஜே.பி.கிருபளானி அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

26)   பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு நிர்ணயசபையின் இறுதி நிகழ்வான அரசமைப்பிற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24.01.1949 அன்று கூடியது.
ⅱ) டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார்.
ⅲ) 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

27)   அரசமைப்பு நிர்ணயச்சபையில் நிகழ்ந்த விவாதங்களில் தொகுதி 6 எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
a) 9 டிசம்பர் முதல் 23 டிசம்பர் 1946 வரை
b) 20 ஜனவரி முதல் 25 ஜனவரி 1947 வரை
c) 28 ஏப்ரல் முதல் 2 மே 1947 வரை
d) 27 ஜனவரி 1948

28) அரசமைப்பு நிர்ணயச்சபையில் நிகழ்ந்த விவாதங்களில் தொகுதி 12 எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
a) 4 நவம்பர் 1948 முதல் 8 ஜனவரி 1949 வரை
b) 16 மே முதல் 16 ஜூன் 1949 வரை
c) 14 நவம்பர் முதல் 26 நவம்பர் 1949 வரை
d) 24 ஜனவரி 1950

29) பின்வருவனவற்றுள் இந்திய அரசாங்கச் சட்ட த்தை (1935) மூலாதாரமாக கொண்டவற்றைத் தேர்ந்தெடு.
ⅰ) கூட்டாட்சி விதிகள்
ⅱ) ஆளுநர் பதவி
ⅲ) நெருக்கடிகால விதிகள்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

30) பின்வருவனவற்றுள் பிரிட்டனிடமிருந்து பெறப்பட்ட அரசமைப்பு முறைகள் எவை?
ⅰ) இடைக்கால தடையாணைகள்
ⅱ) சட்டத்தின் ஆட்சி
ⅲ) குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம்
ⅳ) நீதி சீராய்வு
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)

31) பின்வருவனவற்றுள் கனடாவிடமிருந்து பெறப்பட்ட அரசமைப்பு முறைகள் எவை?
ⅰ) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
ⅱ) ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி
ⅲ) மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள்
ⅳ) பொதுப் பட்டியல்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)

32) பின்வருவனவற்றுள் சோவியத் யூனியனிடமிருந்து பெறப்பட்ட அரசமைப்பு முறைகள் எவை?
ⅰ) பொதுப் பட்டியல்
ⅱ) முகப்புரையில் நீதியின் மாண்புகள்
ⅲ) நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு
ⅳ) அடிப்படைக் கடமைகள்
a) ⅰ), ⅱ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)

33) பின்வருவனவற்றுள் தென் ஆப்பிரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அரசமைப்பு கருத்துக்கள் எவை?
ⅰ) முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ⅱ) அரசமைப்புத் திருத்தச்சட்டம் செயல்முறை
ⅲ) மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு
ⅳ) வர்த்தக சுதந்திரம்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)

34) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இறுதிபடுத்தப்பட்ட, திருத்தப்பட்ட வரைவு 1950 ஜனவரி 26 அன்று ஏற்கப்பட்டது.
ⅱ) இந்திய அரசமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
ⅲ) ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்குமானது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

35) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமற்ற எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது.
ⅱ) மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது.
ⅲ) நமது அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து நம் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

36) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) தனிநபர் உரிமைகளை அடிப்படைக் கடமைகளாகவும், அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளாகவும், நிர்வாகச் செயல்முறை விவரங்கள் என விரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
ⅱ) அமலாக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இறுக்கமும் நெகிழ்வும் கொண்டதாக இந்திய அரசமைப்பு அழைக்கப்படலாம்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

37) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களே இந்தியாவை ஆள்கிறார்கள்.
ⅱ) இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட அரசு என்றால் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களை எந்தவிதமான வெளி அம்சங்களின் தலையீடு இன்றி நிர்வகிக்கும் என்பது பொருளாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

38) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 44-வது திருத்தச்சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
ⅱ) இந்தியாவைப் பொருத்தப்பாட்டில் சமதர்மம் என்பது மக்களாட்சி வழியில் பரிமாணத்துவம், அஹிம்சை ஆகிய முறைகளைக் கையாண்டு சமதர்மம் சமூக இலக்குகளை எட்டுவதாகும்.
ⅲ) இந்தியாவில், சமதர்மம், முதலாளித்துவம் ஆகிய பொருளாதாரங்கள் இணைந்த கலப்புப் பொருளாதார முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

39) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியாவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் அரசு மதம் என ஒன்றில்லை.
ⅱ) அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.
ⅲ) இந்தியக் குடியரசு என்பது இந்தியாவில் முடியரசு மூலமாக அல்லாமல் தேர்தல் மூலமாக அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

40) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதால் நாடாளுமன்ற ஆட்சிமுறை என அழைக்கப்படுகிறது.
ⅱ) நாடாளுமன்ற முறை அரசில் நாடாளுமன்றம் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டது.
ⅲ) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்வரை அந்த அரசு நீடிக்கும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

41) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரதமரே நிர்வாகத் தலைவராகவும் அரசமைப்புத் தலைவராகவும் செயல்படுவார்.
ⅱ) குடியரசுத்தலைவரே உண்மையான நிர்வாகத் தலைவர் ஆவார்.
ⅲ) அமைச்சரவைக்கு மக்களவை பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

42) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ’ஒரு நபர், ஒரு வாக்குரிமை’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் வயதுவந்தோர் அனைவருக்கும் ஒரே சீரான வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ⅱ) 18 வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள்.
ⅲ) தேர்தலில் வாக்களிப்பதில் இந்திய குடிமக்கள் இடையே சாதி, மதம், பால், இனம் அல்லது தகுதி அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

43) கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
ⅰ) இந்தியாவில் இயங்கும் நீதி அமைப்பு அதன் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
ⅱ) ஒருங்கிணைந்த இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றம் தலைமை அமைப்பாகவும் அதன் கீழே உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் எனவும் இயங்குகின்றன.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் இல்லை

44) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள சட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் அடிப்படை உரிமைகள் ஆகும்.
ⅱ) நெருக்கடி நிலை காலங்களில் சிலகுறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை (20- வது, 21-வது தவிர) விலக்கி வைக்கலாம்.
ⅲ) அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றினை செயல்படுத்துகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

45) 86வது அரசியலமைப்பு திருத்தம் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ‘கல்வி உரிமை’ இந்திய அரசமைப்பின் (86வது திருத்தம்) 2002, இந்திய அரசமைப்பு உறுப்பு 20 அ-வில், 6 முதல் 14 வயதுவரையான அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது.
ⅱ) இதை அமலாக்கும் வகையில் மாநிலங்கள் விதிகளை வகுத்துக்கொள்ளலாம்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

46) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2010, அரசமைப்பு உறுப்பு 20-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் இயற்றப்பட்டது.
ⅱ) ஒவ்வொரு குழந்தையும் நிறைவுதரும் வண்ணம் அடிப்படைக் கல்வியை முழு நேரம் பெற உரிமைகொண்டுள்ளது
ⅲ) அடிப்படைக் கல்விக்குரிய அடிப்படை விதிகள் மற்றும் தரங்களின்படி அடிப்படை பள்ளிக் கல்வி சமத்துவமாக வழங்கப்பட வேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)


47) அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிகள் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன?
a) நான்காவது
b) மூன்றாவது
c) ஐந்தாவது
d) இரண்டாவது

48) அடிப்படைக் கடமைகள் எத்தனையாவது திருத்தத்தின் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன?
a) 42 வது
b) 44 வது
c) 46 வது
d) 51 வது

49) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியமும் (மத்திய அரசும்) சிதைக்கத்தக்க மாநிலங்களும் கொண்ட ஆட்சி முறையாகும்.
ⅱ) ஒன்றியம் முழுமையான கூட்டாட்சி என்று கூறமுடியாது.
ⅲ) வடிவத்தில் கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிருந்தாலும் இந்திய அரசமைப்பு பிற கூட்டாட்சி முறைகள் போன்றது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

50) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் கண்காணிப்பதிலும் நாடாளுமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் தேவைப்பட்டால் தலையிடுவதிலும் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ⅱ) நீதி அமைப்பும், நாடாளுமன்றமும் ஒன்றுக் கொன்று சமமாக மேலாதிக்க தன்மை கொண்டவை.
ⅲ) உச்ச நீதிமன்ற உத்தரவையே அல்லது தீர்ப்பையே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமே மறுபரிசீலனை செய்யலாம்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

51) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது குடியுரிமை ஆகும்.
ⅱ) இந்திய அரசமைப்பு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியுரிமைச் சட்டம், 1952, குடியுரிமை பெறுதல் மற்றும் உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது.
ⅲ) பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கைவயப்படுத்தல் மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல் ஆகிய வழிகளில் குடியுரிமை பெற இந்திய அரசமைப்பு வழிவகை வழங்குகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

52) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 2018, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவு துறை துணை அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைகள் சட்டவரைவு, 2018, குடியுரிமைச் சட்டம், 1955இல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.
ⅱ) பதிவு அல்லது இயல்புரிமை முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ⅲ) இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள் இருந்தாலோ ஒரு நபர் இந்தியக் குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

53) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை அடிப்படைக் கொள்கையாக அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ⅱ) இந்திய அரசமைப்பு, பகுதி III இல், அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ⅲ) அடிப்படை உரிமைகள் 7 தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

54) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தொடக்கத்தில், சொத்து உரிமை உறுப்பு 32(அ)வின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.
ⅱ) 44-வது திருத்தச்சட்டம், 1978 சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கிவிட்டு, உறுப்பு 300 (அ) ஆகச் சேர்த்தது.
ⅲ) சொத்து உரிமை சட்ட உரிமையாகக் கருதப்படுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

55) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால்நிலைநாட்டப்படுபவை ஆகும்.
ⅱ) ஒரு நபர் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி நிவாரணம் அடைய முடியும்.
ⅲ) நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை நாடும் உரிமை உறுப்பு 31-இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

56) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும்.
ⅱ) இந்தியாவில் சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டும் வண்ணம் அரசு அவற்றை அமலாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் எனலாம்.
ⅲ) ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

57) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) முதுமை, வேலையின்மை, நோய்வாய்ப்படுதல், உடல் வலிமை கொண்டோர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள் அடிப்படை உரிமைகளில் வழங்கப்பட்டுள்ளன.
ⅱ) பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ளபாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.
ⅲ) அரசு கொள்கை வழிகாட்டு நெறிகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக நிலைநாட்டப்பட முடியாது என்றாலும் நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

58) “கிராமம் என்பது வகுப்பு வாதம், சாதியமைப்பு போன்ற கொடுமையான யதார்த்தத்தைக் கொண்டுள்ளன” என்பது யாருடைய கருத்தாகும்?
a) காந்தியடிகள்
b) அம்பேத்கார்
c) காமராசர்
d) பெரியார்

59) “இந்தியாவில் வாழும் கடைகோடி ஏழைகூட இது தனது நாடு என்று உணரும் நிலையை உருவாக்கி, அதில் அவரது குரல் வலுவாக உயரும் வகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்” என்று கூறியவர் யார்?
a) காந்தியடிகள்
b) அம்பேத்கார்
c) காமராசர்
d) பெரியார்

60) “மக்களிடம் எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இது மக்களுக்குச் சிறந்த பயன் அளிக்கும்” என்று பஞ்சாயத்துராஜ் குறித்து கூறியவர் யார்?
a) காந்தியடிகள்
b) அம்பேத்கார்
c) காமராசர்
d) பெரியார்

61) “கிராம சுயராஜ்ஜியம் என்ற எனது கருத்து, அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கான சுதந்திரம், மற்ற இதர சார்பு தேவைப்படுவதால் சார்புத் தன்மையும் கொண்ட முழுமையான குடியரசு கொண்டதாகும்.” – என்று கூறியவர் யார்?
a) காந்தியடிகள்
b) அம்பேத்கார்
c) காமராசர்
d) பெரியார்

62) “கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம்” என்று கூறியவர் யார்?
a) காந்தியடிகள்
b) அம்பேத்கார்
c) காமராசர்
d) பெரியார்

63) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்பில் பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் கூட குறிப்பிடப்படவில்லை.
ⅱ) கிராம பஞ்சாயத்துகளை உருவாக்குவதற்கான பொறுப்பினை மாநிலச் சட்டமன்றங்களுக்கு அளிக்கும் வகையில், ஒரு விதிகொண்டிருக்கப்பட வேண்டும் என்று காந்தியவாதிகள் வலியுறுத்தினர்.
ⅲ) இதன்படி அரசமைப்பு உறுப்பு 44 சேர்க்கப்பட்டது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

64) பஞ்சாயத்து அமைப்புகள் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு உறுப்பு 44 கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
ⅱ) அவற்றுக்கான அதிகாரங்களை மாநில அரசு தன் பொறுப்பிலிருத்து அளிக்க பொறுப்பளிக்க வேண்டும்
ⅲ) கிராம நிர்வாக அலகுகள் தன்னாட்சியாக செயல்படுவதற்குத் தேவையான அதிகார அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

65) பின்வருவனவற்றுள் அடிப்படை கடமைகளை த்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து போற்ற வேண்டும்.
ⅱ) அரசமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன் மாண்புகள், நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை அளிக்க வேண்டும்.
ⅲ) நமது நாட்டு விடுதலைக்கான போராட்டத்தின் போது பின்பற்றப்பட்ட உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்ற வேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

66) அடிப்படிக்கடமைகள் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தேவையான காலங்களில் அழைப்பு விடுக்கப்படும்போது நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும் முன்வர வேண்டும்.
ⅱ) மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்.
ⅲ) கட்சி தலைவர்களின் மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

67) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி அனைத்து உயிரினங்களும் வாழத் தகுந்ததாக பராமரிக்க வேண்டும்.
ⅱ) அறிவியல் ஆர்வம், மனிதநேயம், தேடல் நெறி, சீர்த்திருத்தம் ஆகியனவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ⅲ) பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாமல் மற்றும் பாதுகாக்கவும் வேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

68) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) நாட்டினை மென்மேலும் தொடர்ந்து உயர்த்தும் வண்ணம் தனிநபர் மற்றும் கூட்டு செயல்பாடுகளில் சிறப்புத்திறன் பெற்று முன்னேற வேண்டும்.
ⅱ) எட்டு வயது முதல் பதினாறு வயதுக்குட்பட்ட சிறார்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அச்சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் வழங்க வேண்டும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

69) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி உறுப்பு 80இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் ஈரவைகளும் மட்டும் கொண்டது ஆகும்.
ⅱ) மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கீழவை என்று அழைக்கப்படும் மக்களவை மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்டவையாகும்.
ⅲ) ஈரவைகளும் தன் இயல்பில் செயல்பட்டு மாநிலங்களின் ஒற்றுமை, ஒன்றிய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கின்றன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

70) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டதாகும்.
ⅱ) மாநிலங்களவையின் 2 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.
ⅲ) மீதமுள்ள 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்டபகுதிகளின் சட்டமன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

71) பின்வருவனவற்றுள் மக்களவை குறித்த சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மக்களவை 543 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
ⅱ) இவர்கள் தொகுதிவாரியாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ⅲ) பன்னிரண்டு உறுப்பினர்கள் ஆங்கிலோ- இந்திய சமுதாயத்திலிருந்து குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

72) குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்த பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஈரவைகளின் உறுப்பினர்களை மட்டும் வாக்காளர்களாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ⅱ) வாக்காளர் பட்டியல்படி தேர்தல் நடத்தப்பட்டு குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

73) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதி சட்டமன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ⅱ) மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கும் வகையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.
ⅲ) நிரந்தரமான அமைப்பு கலைக்கப்பட முடியாது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

74) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இரண்டு உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ- இந்திய சமுதாயத்தினர்.
ⅱ) குடியரசுத்தலைவர் மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
ⅲ) மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)


75) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநிலங்களவை மேலவை என்றும் அழைக்கப்படுகின்றது.
ⅱ) மாநிலங்களவையின் சிறப்பம்சத்தை வலியுறுத்தும் வகையில் இப்பெயர் 1955 ஆகஸ்ட் 25 அன்று மாநிலங்களவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது.
ⅲ) மாநிலங்களவையின் உருவாக்கம் மிண்டோ மார்லி திட்டம் காலம் வரை பின்நோக்கிச் செல்கிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

76) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ‘மாநிலங்கள் குழு’ அவை இந்திய அரசாங்கச் சட்டம், 1919இன் கீழ் உருவாக்கப்பட்டது.
ⅱ) 1925 முதல் மாநிலங்கள் குழு அவை செயல்பட்டு வருகிறது.
ⅲ) அன்றைய மாநிலங்கள் குழு அவையில் தலைவராக கவர்னர் – ஜெனரல் செயல்பட்டார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

77) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாட்டில் நிலவும் பன்மைத்துவத்தைக் கருத்திற் கொண்டு ஈரவைகள் கொண்ட நாடாளுமன்றத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ⅱ) மாநில மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை ஒரு ஒற்றையாட்சி அமைப்பாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

78) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களையும் சேர்த்து மாநிலங்களவை மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
ⅱ) குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைத் தலைவராக செயல்படுவார்.
ⅲ) அவர் இல்லாத நேரங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் துணைத்தலைவர் அவையை நடத்துவார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

79) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1953 மே 13 அன்று தொடங்கியது.
ⅱ) மக்களவை மேற்கொள்ளும் பணிகள், செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை விதிகள் ஆகியவை தனி பிரசுரமாக அச்சிடப்பட்டுள்ளன.
ⅲ) மாநிலங்களவையில் அரை மணி நேரம் விவாதம், குறுகிய கால விவாதம் மற்றும் பொது நலன் அடிப்படையிலான தீர்மானங்கள் மீதான விவாதங்கள் போன்றவை நடைபெறுகின்றன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)


80) ஒன்றிய அரசில் அலுவல் மொழி 1963க்குப் பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறும் இந்திய அரசமைப்பு உறுப்பு எது?
a) 343
b) 342
c) 346
d) 243


81) மாநிலங்களவை ஆண்டுக்கு எத்தனை கூட்டத்தொடர்களாகக் கூடுகிறது?
a) மூன்று
b) நான்கு
c) இரண்டு
d) ஐந்து

82) பின்வரும் எந்த காலங்களில் மாநிலங்களவையின் கூட்டத்தொடர்கள் கூட்டப்படுகிறது?
ⅰ) பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கும்.
ⅱ) ஜுன் தொடங்கி ஆகஸ்ட் இறுதியில் நிறைவுறுகிறது.
ⅲ) நவம்பர் இறுதி தொடங்கி டிசம்பர் இறுதி வரை நீடிக்கும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

83) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) 2015 செப்டம்பர்1 முதல் தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் பயன்படுத்தப்படுகிறது.
ⅱ) இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும் என்று உறுப்பு 1(1) கூறுகிறது.
ⅲ) சென்னை மாகாண தலைவர் சி.இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கையை 1937இல் மதராஸ் சட்டமன்றம், செனட் அவை, மதராஸ் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் தாக்கல் செய்தார்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

84) அடிப்படைக் கல்வி திட்டம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் உருவான மதராஸ் மாகாண முதல் சட்டமன்றத்தில் இராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படைக் கல்வி திட்டம் விமர்சிக்கப்பட்டது.
ⅱ) எதிர்க்கட்சிகளுடன் ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் உட்பட இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.
ⅲ) இத்திட்டம் சாதி அடிப்படையிலான படிநிலை மேலாதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும் என்று விமர்சித்தனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

85) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) முதல்அமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர் அமைச்சரவையில் அரசின் கல்வி அமைச்சர் வெங்கட்ராமன் அடிப்படைக் கல்வி திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
ⅱ) இராஜாஜி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டங்கள் தொடரப்பட்டன.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

86) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) 1968 இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது.
ⅱ) சி.என்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார்
ⅲ) இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு ‘சுயமரியாதை திருமணங்கள்’ அங்கீகரிக்கப்பட்டன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

87) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
ⅰ) காமராசருக்கு அடுத்து பதவி ஏற்று, நான்கு தடவைகள் முதல் அமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி பல சட்டங்களையும் எண்ணற்ற தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார்.
ⅱ) மு.கருணாநிதி கொண்டு வந்த கடைசி சட்டமுன்வரைவு கடைசி சட்டமுன்வரைவு பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கியது.
ⅲ) பட்டியல் இனங்களுக்கும் மற்றும் பழங்குடியினருக்குமான ஒதுக்கீட்டின் கீழ் அருந்தியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

88) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான எட்டு ஆண்டுக்கால ஆட்சியில் வருவாய் நிர்வாக துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
ⅱ) வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான “கர்ணம்” பதவிக்கு முடிவு கட்டினார்.
ⅲ) மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

89) மண்டல் ஆணையம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 1992 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
ⅱ) கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
ⅲ) இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும்வகையில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் கூட்டப்பட்டு 60 சதவீதம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

90) தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது.
ⅱ) 185 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 49 உறுப்பினர்கள் த னித்த தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ⅲ) சட்டமன்றத்தில் முதல் கூட்டத் தொடர் முதல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து (1952). 3.5.1952 அன்று தொடங்கியது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

91) ஆங்கிலோ – இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுவதற்கான அரசமைப்பு உறுப்பு எது?
a) 343
b) 333
c) 347
d) 233

92) பொதுக் கணக்கு குழு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநிலங்களவை உறுப்பினர்களிலிருந்து ஒருவர் பொது கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
ⅱ) 1967-1968ஆம் ஆண்டில் முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே பொதுக் கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ⅲ) 1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை இக்குழு 1596 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

93) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்புச் திருத்தச்சட்டங்கள் மாறி வரும் சமுதாயத் தேவைகளுக்கேற்ப அரசமைப்ல் திருத்தங்கள் கொண்டுவருவதற்கான விதிகளையும் நமது அரசமைப்பிற்கு மேதைகள் வழங்கியுள்ளனர்.
ⅱ) நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்புகள் மற்றும் அதன் அடித்தளத்திற்கு பங்கம் நேராமல் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ⅲ) அரசமைப்பைப் பாதுகாப்பதிலும் அரசமைப்பிற்கு விளக்கமளிப்பதிலும் நமது நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

94) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இதர அரசமைப்புகள் போலவே நமது அரசமைப்பு மாறி வரும் சூழல்கள் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு ஏற்ப தன்னை தகவமைக்கும் ஆவணமாக திகழ்கிறது.
ⅱ) இந்திய அரசமைப்பு முதன்மை சட்டமாக தனக்குள் செயல்பட்டு கொண்டு இந்திய அரசையும் இயக்குகிறது.
ⅲ) நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய மேதைகள் தொலை நோக்கு பார்வையுடன் எதிர்கால பிரச்சனைகளை முன்உணர்ந்து அவற்றிற்கு தீர்வுகளை வழங்கியுள்ளனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

95) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாறி வரும் சமுதாய சூழல்களுக்கு ஏற்ப தேவையானதிருத்தங்களுக்கு இந்திய அரசமைப்பு இடம் அளித்து ஏற்கிறது.
ⅱ) அமலாக்கத்தில் போதுமான நெகிழ்வுத் தன்மை கொண்டுள்ளதால் ஒரு இறுக்கமான சட்டப்புத்தகமாக நமது அரசமைப்பு மாறாமல் உயிரோட்டமான ஆவணமாகத் திகழ்கிறது.
ⅲ) என்றும் நிலையான மாற்றமுடியாத ஆவணம் அல்ல என்பதையும் நமது அரசமைப்பு சட்டங்கள் உறுதிப்படுத் தவில்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

96) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ‘நெகிழ்வுத் தன்மை’ கொண்டதாக அரசமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ⅱ) தேவையின்றி அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுத்துவதைதடுக்கும் வகையில் ‘இறுகியத் தன்மை’ கொண்டதாக அரசமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ⅲ) உறுப்பு 328இன் கீழ் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு சட்டத்திலும் சேர்த்தல், நீக்கம், மாறுதல் கொண்டுவர அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

97) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகாரங்களில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மாற்றம் கொண்டு வர முடியாது.
ⅱ) நமது அரசு சட்ட மேதைகள் சில விதிகளை அரசமைப்பில் மையக் கருத்துகளை மாற்றங்களிலிருந்தும் சமரசங்களிலிருந்தும் பாதுகாக்க விரும்பினர்.
ⅲ) அரசமைப்புச்சட்ட மேதைகளின் இக் கருத்துகள் பல்வேறு வழிகளிலான அரசமைப்புச் திருத்தச்சட்டங்களுக்கு வழிவகுத்தது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

98) எத்தனை வகையான அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் உள்ளன?
a) மூன்று
b) நான்கு
c) ஐந்து
d) இரண்டு

99) அரசமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அனைத்து அரசமைப்பு திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்.
ⅱ) அரசமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி எந்தவொரு அரசமைப்பு திருத்தச்சட்டத்திற்கும் பொது வாக்கெடுப்பு தேவைப்படவில்லை.
ⅲ) சட்டத்திருத்த முன்வரைவு அனைத்தும் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய அவசியம் இல்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

100) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவுகள் அரசமைப்புத் திருத்தச்சட்டம் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது.
ⅱ) உறுப்பு 368 (2) ன் கீழ் வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும்.
ⅲ) சட்ட முன்வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

101) தனிநபர் சட்ட முன்வரைவு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் சட்ட முன்வரைவு தனிநபர் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது.
ⅱ) நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகளைச் சேர்ந்த எவரும் தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டு வர முடியாது.
ⅲ) தனிநபர் சட்ட முன்வரைவு என்பது அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படுவது ஆகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

102) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சட்ட முன்வரைவு கொண்டு வர ஒரு வாரத்திற்கு முன்பாகவே முன்அறிவிப்பு தரவேண்டும்.
ⅱ) தனிநபர் முன்வரைவுகள் நிராகரிக்கப்பட்டாலும் அது ஆட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ⅲ) நாடாளுமன்றத்தில் 14 தனிநபர் சட்ட முன்வரைவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

103) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கடைசியாக, தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1970.
ⅱ) தனிநபர் முன்வரைவுகளில் பெரும்பாலானவை வாசிக்கப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ கூட கிடையாது.
ⅲ) அரசமைப்பு திருத்தம் கோரும் முன்வரைவுகள் தனிநபர் சட்ட முன்வரைவாக கொண்டு வர முடியாது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

104) மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு திருச்சி சிவா அவர்களால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு ஆகும்.
ⅱ) இந்தியாவில் மூன்றாம் பாலின மக்கள் சந்தித்து வரும் புறக்கணிப்புகளுக்கு முடிவுகட்ட இம்முன்வரைவு கோருகிறது.
ⅲ) 25 ஆண்டுகளுக்குப் பின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் பெறுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

105) உறுப்பு 370 தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது ஆகும்.
ⅱ) இராணுவம், வெளியுறவு, தொலைத் தொடர்பு, நிதி ஆகிய துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டங்கள் இயற்றுவதற்கு மாநில அரசின் ஒப்புதல் அவசியமாகிறது.
ⅲ) இந்த மாநிலம் மற்றும் இதில் குடியிருக்கும் மக்கள் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமை ஆகிய உரிமைகளுக்கு இந்தியாவில் பிறகுடிமக்களிலிருந்து வேறுபட்ட சிறப்பு சட்டத் தொகுப்புகளைக் கொண்டுள்ளனர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

106) ஜம்மு – காஷ்மீர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு உறுப்பு 370 இன் கீழ் ஒரு மாநிலத்தின் மீது நிதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யும் மத்திய அரசின் அதிகாரம் இதற்கு செல்லாது.
ⅱ) போர் மற்றும் வெளி ஆக்கிரமிப்பு ஆகிய சூழ்நிலைகளின் போது மட்டும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுகிறது.
ⅲ) மத்திய அரசை மாநில அரசு கோரினால் அன்றி உள்நாட்டு குழப்பம் அல்லது பிற அபாயங்கள் போன்ற காரணங்களுக்காக இதன் மீது மத்திய அரசு நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய முடியாது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

107) அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இச்சட்டத்தின்படி இராணுவம், வெளியுறவு, தொலைத் தொடர்பு, நிதி ஆகிய துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டங்கள் இயற்றுவதற்கு மாநில அரசின் ஒப்புதல் அவசியமாகிறது.
ⅱ) பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இணைப்பு தொடர்பாக மன்னர் ஹரிஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ⅲ) ஜம்மு காஷ்மீர்க்கு சிறப்பு உரிமைகளும் தகுதிகளும் வழங்கப்படும் என்று உடன்படிக்கை ஏற்பட்டதன் அடிப்படையில் இந்த உறுப்பு உருவாக்கப்பட்டது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

108) இந்திய தேசியக் கொடியுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென தனி கொடி அமைத்துக்கொள்ள வழிவகை செய்த உடன்படிக்கை எது?
a) பூனா உடன்படிக்கை
b) ஸ்ரீநகர் உடன்படிக்கை
c) டெல்லி உடன்படிக்கை
d) லக்னோ உடன்படிக்கை

109) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஜம்மு – காஷ்மீர் மாநிலம் மட்டும் அந்த மாநிலத்துக்கே ஆன அரசமைப்பு மூலம் ஆளப்படுகிறது.
ⅱ) ஜம்மு – காஷ்மீர் அரசமைப்பின் முதல் உறுப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறுகிறது.
ⅲ) உறுப்பு 1ன்படியும் உறுப்பு 5ன் படியும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களுக்கான சட்டம் இயற்றும் அதிகாரவரம்பு கட்டுப்படுத்தப்படுகிறது;
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

110) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.
ⅱ) மூவர்ண தேசியக் கொடி மற்றும் இதர தேசிய சின்னங்கள் அவமதிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குற்றமாகக் கருதப்படாது.
ⅲ) மாநிலத்தின் மீது உறுப்பு 352 பிரகடனம் செய்யப்படுவதை ஸ்ரீ நகர் உடன்படிக்கை அனுமதிக்கிறது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

111) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஜம்மு – காஷ்மீர் மாநில மக்கள் இரட்டைக் குடியுரிமை அனுபவிக்கிறார்கள்.
ⅱ) அம்மாநில மக்கள் இதர மாநில மக்களுடன் மண உறவு கொள்ளும் போது அவர்களது ஜம்மு -காஷ்மீர் குடியுரிமை இரத்தாகிறது.
ⅲ) கட்டாயக் கல்விச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், கணக்கு தனிக்கை உள்ளிட்ட பெரும்பாலான இந்திய சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லுபடியாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

112) ஆலோசிக்கும்படி காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவை கேட்டுக்கொண்டவர்?
a) நேரு
b) பட்டேல்
c) வெங்கடராமன்
d) இந்திரா காந்தி

113) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அரசமைப்பு பகுதி XXI ன் கீழ் தற்காலிக மற்றும் இடை மாற்றம் வழங்குதல் என்னும் தலைப்பின் கீழ் அரசமைப்பு திருத்தப்பட்டு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் உறுப்பு 370 சேர்க்கப்பட்டது.
ⅱ) அரசமைப்பு உறுப்பு 370இன் கீழ் ஜம்மு – காஷ்மீர் அரசின் எல்லைகளை குறைக்கவோ விரிவாக்கம் செய்யவோ இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

114) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்திய அரசமைப்பின் வரைவாளர் கோபால சுவாமி உறுப்பு 370இன் வரைவை எழுத மறுத்தார்.
ⅱ) டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இந்த பிரிவை எழுதினார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

115) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சங்கரலிங்கனார் பொதுவுடைமை வாதியும் இந்திய விடுதலைக்காக போராடிய தமிழ்வீரரும் ஆவார்.
ⅱ) 1895இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக பிறந்தார்.
ⅲ) 1917இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

116) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 1955இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
ⅱ) இதைத் தொடர்ந்து பெயர் மாற்றும் பிரச்சனை எழுந்தது.
ⅲ) 1956இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

117) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சங்கரலிங்கனார் பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜுலை 27 அன்று விருதுநகரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ⅱ) சங்கரலிங்கனார் உடல் நலிவுற்றதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் படி சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்க வில்லை.
ⅲ) 1957 அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் 76ஆம் நாள் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

118) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 1969 மூலம் மதராஸ்மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ⅱ) காந்திய வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

119) தேர்வுக்குழு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தேர்வுக்குழுவில் குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை குறிப்பிட்ட காரணத்திற்காக நியமிக்கப்பட்டிருப்பர்.
ⅱ) தேர்வுக்குழு முறை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மக்களாட்சி முறையிலிருந்து பிறந்தது ஆகும்.
ⅲ) மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 127இன் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

120) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தீர்மானம் கொண்டு வருவதற்கு தேர்வுக் குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தபட்ச உறுப்பினர்களாக அவையில் இருப்பது அவசியம்.
ⅱ) முன்மொழியப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி – தோல்வி இன்றி முடிந்தால் அவைக்குத் தலைமை ஏற்பவரின் முடிவே இறுதி முடிவாகும்.
ⅲ) சட்ட முன்வரைவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அம்சம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் எனில் அதற்கென ஒரு துணைக் குழுவை தேர்வுக்குழு அமைத்துக்கொள்ளலாம்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

121) குடியரசுத்தலைவர் ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டித் தீர்வு காண்பதற்கான நிலைகளை தேர்ந்தெடு.
ⅰ) ஒரு சட்ட முன்வரைவு ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு மற்றொரு அவையால் நிராகரிக்கப்படும் போது
ⅱ) ஏதேனும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்படும் போது
ⅲ) ஏழு வாரத்திற்கும் அதிகமாக இழுபறி நிலை நீடிக்கும் போது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

122) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அமர்ந்துள்ள ஈரவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றால் அந்த முன்வரைவு நிறைவேற்றப்படும்.
ⅱ) பண முன்வரை வின் போது மட்டும் இது போன்று கூட்டு கூட்டத்தினை கூட்டி சட்டமாக்க இந்திய அரசமைப்பு அனுமதிக்கவில்லை.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

123) “நமது அரசமைப்பின் வெற்றிகரமான பணி, அதன் நெருக்கமான மக்களாட்சி அமைப்பான நாடாளுமன்றத்தின் ஈரவைகளுக்கிடையே நெருக்கமான கூட்டுறவைக் கோருகிறது.” என்று கூறியவர் யார்?
a) அம்பேத்கார்
b) பட்டேல்
c) அல்லாடி கிருஷ்ணசாமி
d) ஜவஹர்லால் நேரு

124) பின்வருவனவற்றுள் முக்கிய கூட்டு கூட்டங்கள் எதற்காக நடைபெற்றன?
ⅰ) வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
ⅱ) பயங்கரவாத தடுப்புச் சட்டம்
ⅲ) மூன்றாம் பாலினத்தவர் உரிமை சட்டம்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

125) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறும் போது சட்டம் எனப்படுகிறது.
ⅱ) நாடாளுமன்றத்தில் ஈரவைகளின் ஏற்பு கோரி முன்மொழியப்படும் சட்ட வரைவு சட்ட முன்வரைவு எனப்படும்.
ⅲ) ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி உட்பிரிவு எனப்படும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

126) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தின் தீர்வு, நடவடிக்கை, கருத்து கோரி நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது தீர்மானம் எனப்படும்
ⅱ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தமது உறுதிப்பாட்டினைத் தெரிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

128) ஒவ்வொரு நாளும் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் எதற்காக ஒதுக்கப்படுகிறது?
a) சிற்றுண்டி நேரம்
b) கேள்வி நேரம்
c) விவாதம்
d) அரசியலமைப்பை வாசித்தல்

129) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) நாடாளுமன்ற அவை அல்லது பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்படும் குழுக்களின் கூட்டத்தொடர் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் எனப்படுகிறது.
ⅱ) அவையின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் என வகுக்கப்பட்டுள்ளது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு

130) கீழ்க்கண்டவற்றுள் அரசு எவற்றை உள்ளடக்கியது?
ⅰ) மத்திய அரசாங்கம்
ⅱ) இந்திய நாடாளுமன்றம்
ⅲ) இந்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள்
ⅳ) இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள்
a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ), ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ), ⅳ)

131) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரால் கூட்டப்படுகிறது.
ⅱ) நாடாளுமன்றம் செயல்புரியும் குறிப்பிட்ட கூட்டத்தின் கால அளவு கூட்டத்தொடர் எனப்படும்.
ⅲ) பொதுவாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் அல்லது அவ்வப்போது அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் குழு நிலைக்குழு எனப்படும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.