ஆட்சித்துறை (12th அரசியல் அறிவியல்)
1) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பின் முன்னுரையில் இந்தியாவை ஒரு இறையாண்மை,
சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி மற்றும்
குடியரசு பெற்ற நாடு என்று அறிவிக்கிறது.
ⅱ) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால்தான் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ⅲ) தேசிய அரசின் குறிப்பிட்ட சில அரசமைப்புத் துறைகளின் தலைவராக
இந்தியக் குடியரசுத்தலைவர் விளங்குகிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
2) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சட்டம், நிர்வாகம், நீதி மற்றும் ஆயுதப்படை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை குடியரசுத்தலைவர்
மேற்பார்வையிடுகிறார்.
ⅱ) அரசமைப்புச் சட்டங்களுக்குட்பட்டு இத்துறைகள் செயல்படுவதை இவர்
உறுதிப்படுத்துகிறார்.
ⅲ) இந்திய நாட்டின் முழு அரசமைப்பு, பிரதிநிதித்துவம்
மற்றும் மாநில செயல்பாடுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் குடியரசுத்தலைவர் நிலை நிறுத்துகிறார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
3) குடியரசுத்தலைவர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமெரிக்க குடியரசுத்தலைவரை போல் உண்மையான செயல் அதிகாரம் கொண்டுள்ளார்.
ⅱ) குடிரயரசுத்தலைவரது பெயரால், அவரது
தலைமையில் அல்லது மேற்பார்வையில் நிர்வாகம் நடைபெறுகின்றது.
ⅲ) அமைச்சரவையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
4) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்தியக் குடியரசானது அமெரிக்க குடியரசிலிருந்து வேறுபடுகிறது.
ⅱ) நடைமுறையில் உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் தலைமையிலான
அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுவிடம் உள்ளது
ⅲ) தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு,
மற்றும் நிலைத்தன்மை சின்னமாக பிரதமர் திகழ்கிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
5) பின்வருவனவற்றுள் இந்திய குடியரசுத்தலைவருக்கான தகுதிகளை தேர்ந்தெடு.
ⅰ) மக்களவை உறுப்பினராவதற்கான
அனைத்து தகுதிகளும் கொண்டிருத்தல் வேண்டும்.
ⅱ) 30 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
ⅲ) மத்திய மாநில அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ அவற்றின் கட்டுப்பாட்டில்
உள்ள எந்த ஒரு அமைப்பிலோ ஆதாயம் தரக்கூடிய எந்த பதவியில் இருந்தாலும்,
அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
6) குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் பதவிக்கான குறைந்தபட்சம் 50
தேர்வுக்குழு வாக்காளர்களால் முன்மொழிவு செய்யப்பட வேண்டும்
ⅱ) வேட்பாளர் தேர்வுக் குழுவின் 50 உறுப்பினர்கள்
மூலம் வழிமொழியப்பட வேண்டும்
ⅲ) ஒவ்வொரு வேட்பாளரும் ₹.20,000/-ஐ இந்திய
ரிசர்வ் வங்கியில் வைப்பு தொகையாக கட்ட வேண்டும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
7) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்திய அரசமைப்பின் 54-வது உறுப்பு
இந்தியாவிற்கு ஒரு குடியரசுத்தலைவர் இருக்க வேண்டுமென்கிறது.
ⅱ) 53-வது உறுப்பு இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை அவருக்கு
அளிப்பதுடன் அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படுத்த வகை செய்கிறது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
8) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஐந்தில் ஒரு
பங்கை ஒரு வேட்பாளர் பெறவில்லையெனில் இந்த தொகை அவருக்கு திருப்பித்தரப்படாது.
ⅱ) இந்தியக் குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
9) குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமம் உள்ளடக்கியவற்றை
தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
ⅱ) மாநிலங்களின் சட்டசபைகளின் கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்.
ⅲ) டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கு
நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
10) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் தேர்தல், ஒற்றை
மாற்றத்தக்க வாக்கெடுப்பு மற்றும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ
முறையில் நடைபெறுகிறது.
ⅱ) வெற்றிகரமான வேட்பாளர் முழுமையான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி
பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ⅲ) தேர்தல் வெற்றி = தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளின்
எண்ணிக்கை/ தேர்வு செய்யப்பட வேண்டிய வேட்பாளர் எண்ணிக்கை +2
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
11) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தேர்தல்போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4
வாக்குச்சீட்டுகள் மட்டுமே தரப்படுகிறது.
ⅱ) வாக்காளர், வாக்களிக்கும் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக 1,2,3,4
போன்றவற்றைக் குறிப்பிடுவதன் மூலம் தனது விருப்பங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.
ⅲ) வாக்காளர், வேட்பாளர்களை தமது விருப்பத்திற்குகேற்ப 1,2,3,4
என வரிசைப்படி முன்னுரிமைகளைக் குறிக்கிறார்கள்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
12) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு வேட்பாளர் முதல் கட்டத்தில் தேவையான ஒதுக்கீட்டைப் பெற்றால்,
அவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ⅱ) வாக்கெடுப்பில் முதல் விருப்பவாக்கில் குறைந்த வாக்குகள் பெற்ற
வேட்பாளரை நீக்கிவிட்டு அவர்களின் முதல் விருப்ப வாக்குகள் மற்றவர்களுக்கு மாற்றப்படுகிறது.
ⅲ) ஒரு வேட்பாளர் தேவைப்படும் வாக்குகள் கிடைக்கும் வரை இந்தச்
செயல்முறை தொடர்கிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
13) குடியரசுத்தவைரின் பதவிப் பிரமாணத்தின்போது ஏற்கப்படும் உறுதிமொழிகளைத்
தேர்ந்தெடு.
ⅰ) பதவியில் உண்மையுடன் பணியாற்றுவது
ⅱ) அரசமைப்பு மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பது
ⅲ) இந்தியாவின் மக்கள் சேவை மற்றும் நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணிப்பது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
14) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) இந்தியாவின் மூத்த நீதிபதி குடியரசுத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்
பட்டவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ⅱ) மூத்த நீதிபதி இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
அப்பதவி பிரமாணத்தை செய்து வைக்கிறார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
15) குடியரத்தலைவருக்கான வசதிகள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தினை (ராஷ்டிரபதி பவன்) வாடகை செலுத்தி
பயன்படுத்த அவருக்கு உரிமையுண்டு.
ⅱ) நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊதியம்,
படிகள், தனிஉரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு உரிமையுண்டு.
ⅲ) குடியரசுத்தலைவர் மேலும் சில சலுகைகளும் விதி விலக்குகளும் தரப்பட்டுள்ளன.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
16) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அவர் தனது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளினின்று
தனிப்பட்ட விலக்கு பெறுகிறார்.
ⅱ) அவரது பதவி காலத்தின் போது, அவருக்கு
சில குற்றவியல் மற்றும் சில உரிமையியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
17) குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து
வருட காலத்திற்கு குடியரசுத்தலைவராக பதவி வகிப்பார் என்று இந்திய அரசமைப்பு உறுப்பு
52 கூறுகிறது.
ⅱ) குடியரசுத் துணைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன்
மூலம் எந்த நேரத்திலும் தனது பொறுப்பிலிருந்து விலக முடியும்.
ⅲ) நாடாளுமன்றத்தால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும்,
இதைத்தவிர குற்றம் சாட்டப்படுவதன் மூலமும் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
18) குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவராக இருப்பவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட
தகுதியற்றவராவார்.
ⅱ) தமது பதவியை குடியரசுத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு அல்லது
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் பதவி ஏற்கும் வரை பொறுப்பில் தொடரலாம்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
19) குடியரசுத்தலைவரின் பதவி நீக்கம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள்
சரியான கூற்று எது?
ⅰ) அரசமைப்பின் 60-வது உறுப்பு,
குடியரசுத்தலைவர் மீது குற்றம் சாட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு
விரிவான நடைமுறைகளை தந்துள்ளது.
ⅱ) குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின்
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம்
ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
20) குடியரசுத்தலைவரின் பதவி நீக்கம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள்
தவறான கூற்று எவை?
ⅰ) குறைந்தபட்சம் 7 நாட்கள் முன்கூட்டியே
அறிவிப்பு வழங்க வேண்டும்.
ⅱ) அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்படும் போது,
அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத
பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.
ⅲ) தீர்மானம் நிறைவேற்றும் நாளிலிருந்து 7
நாட்களுக்குப் பின் அந்த குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுவார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
21) குடியரசுத்தலைவரின் பதவி கீழ்க்கண்ட எந்த வழிகளில் காலியாகலாம்?
ⅰ) ஐந்து ஆண்டுகளில் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில்
ⅱ) நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதன் மூலம்
ⅲ) அவரது உடல்நலக்குறைவு காரணமாக
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
22) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் அல்லது இறப்பு ஆகியவற்றில் குடியரசுத்தலைவர்
பதவி காலியாகும்போது, ஒரு மாதத்துக்குள் புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல்
நடத்தப்படவேண்டும்.
ⅱ) இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் துணைத்தலைவர் குடியரசுத்தலைவராக
செயல்படுவார்.
ⅲ) குடியரசுத்தலைவர் திரும்பவும் தன் பொறுப்பினை செயல்படுத்த முன்வரும்
வரை குடியரசுத் துணைத்தலைவர் அவரது பணிகளை மேற்கொள்வார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
23) குடியரசுத் தலைவரின் பணிகள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், உரையாற்றுவதும்,
ஒத்திவைப்பதும் அவரே.
ⅱ) வெவ்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள 2
உறுப்பினர்களை மாநிலங்களவைக்கும் 12 ஆங்கிலோ-இந்தியப்
பிரதிநிதிகளை மக்களவைக்கும் அவரே நியமனம் செய்கிறார்.
ⅲ) நாடாளுமன்றத்திலிருந்து வரும் நிதி சாராத முன்வரைவுகளை மீண்டும்
மறுபரிசீலனை செய்வதற்காக திருப்பி அனுப்பவும் மறுதலிக்கவும் அவருக்கு அதிகாரமுள்ளது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
24) குடியரசுத் தலைவரின் பணிகள் தொடர்பான பின்வருவனவற்றுள் தவறான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தின் முன்வரைவுக்கு ஒப்புதல் பெறும்பொருட்டு ஈரவைகளின்
கூட்டுக் கூட்டத்தை அழைக்கவும் அவருக்குள் உரிமை உண்டு.
ⅱ) அவரால் ஆறு வார காலத்துக்கு மிகாத அவசரச் சட்டத்தை அறிவிக்கவும்
முடியும்.
ⅲ) மாநிலச் சட்டங்களை மறுதலிக்கவும் அவருக்கு அதிகாரமில்லை.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
25) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் மட்டுமே அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து
வைக்கிறார்.
ⅱ) மக்களவையின் ஆதரவை இழந்து விடுகின்றபோது அந்த அமைச்சரவையை கலைத்து
விடவும் முடியும்.
ⅲ) அரசமைப்பின்படியான பல்வேறு உறுப்புகளுக்கு,
குறிப்பாக நீதித்துறை, ஆயுதப்படைகள், தூதரகக் குழுக்களுக்கு
உறுப்பினர்களை நியமிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
26) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நெருக்கடி (அவசர நிலை) நிலைக் காலத்தில் குடியரசுத்தலைவர் எல்லையற்ற
அதிகாரம் பெற்றுள்ளார்.
ⅱ) எந்தச் சட்டத்தையும் தற்காலிகமாக நீக்க முடியும். குறிப்பிட்ட
காலத்திற்கு அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்.
ⅲ) இவருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திடவும் அதிகாரமுள்ளது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
27) குடியரசுத் துணைத்தலைவர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் இல்லாதபோது அவரது பதவியை தற்காலிகமாக குடியரசுத்
துணைத்தலைவர் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத்தின் மூத்த
நீதிபதி வகிப்பர்.
ⅱ) குடியரசுத்தலைவருக்கான சலுகைகள், ஊதியம்
போன்ற அனைத்தையும் குடியரசுத்தலைவரைபோலவே அனுபவிப்பதற்கு அதிகாரம் இல்லை.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
28) இந்திய அரசமைப்பின் எத்தனையாவது பாகத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரின்
நெருக்கடிகால அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
a) 18
b) 19
c) 17
d) 16
29) குடியரசுத்தலைவரின் ஆட்சித்துறை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத் தலைவரது தலைமையின் கீழ் நிர்வாகத்தை நடத்துவது.
ⅱ) அரசுப் பொறுப்புகளை நடைமுறைப் படுத்துவதற்கான விதிகளை உருவாக்குவது
அமைச்சர்களுக்கு பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது
ⅲ) அமைச்சரவைக்குழு முக்கிய முடிவுகளைப்பற்றி அறிந்திருப்பதும்,
அமைச்சர்கள் குழுவின் கவனத்திற்கும் பரிசீலனைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கொண்டு
வருவது
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
30) குடியரசுத்தலைவரின் ஆட்சித்துறை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அயல்நாடுகளுடனான வர்த்தகத்தை கையாள்வது.
ⅱ) தனியார் அமைப்புகளுக்கான நடைமுறை விதிகளையும் வரையறைகளையும்
அங்கீகரிப்பது
ⅲ) ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பகுதி மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினப்பகுதிகளை
நிர்வாகம் செய்வது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
31) குடியரசுத்தலைவரின் சட்டத்துறை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றத்தின் அவைகளின் கூட்டங்களைக் கூட்டுவது,
மக்களவையை ஒத்திவைப்பது மற்றும் மக்களவையை கலைத்தல்
ⅱ) மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களையும்
மக்களவைக்கு இரு உறுப்பினர்களையும் நியமனம் செய்வது
ⅲ) நாடாளுமன்றக் கூட்டங்களின் துவக்க உரையை நிகழ்த்துவது. நாடாளுமன்றத்திற்கு
தகவல்கள் அனுப்புவது
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
32) சட்டத்துறை தொடர்பான பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நிதிசார்ந்த முன்வரைவுகள் மீது முழுமையான அல்லது தற்காலிக மறுதலிப்பு
அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
ⅱ) சில வகையான முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான
அனுமதியை வழங்குவது.
ⅲ) நாடாளுமன்றம் நடப்பில் இல்லாதபோது சட்டங்களைப் பிறப்பிப்பது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
33) குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வெவ்வேறு குழுக்களுடைய அறிக்கைகளையும்,
பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்வது.
ⅱ) மக்களவையின் இடைக்கால அவைத்தலைவரை நியமிப்பது.
ⅲ) சில குறிப்பிட்ட மாநிலச் சட்டங்கள் மீது முழுமையான மறுதலிப்பு
அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
34) குடியரசுத்தலைவரின் நிதித்துறை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவரது முன் அனுமதியுடன் மக்களவையில் நிதி முன்வரைவை
அறிமுகப்படுத்துவது.
ⅱ) இந்தியாவின் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியத்தின் மீது கட்டுப்பாட்டினை
வைத்திருத்தல்
ⅲ) நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கச்செய்தல்
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
35) குடியரசுத்தலைவரின் நீதித்துறை அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) தமது கருணைக்காட்டும் உரிமையைப் பயன்படுத்தி தண்டணைகளை மாற்றி
அமைப்பது.
ⅱ) உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகளையும்,
ஏனைய நீதிபதிகளையும் நியமிப்பது
ⅲ) நீதி மன்றத்தின் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
36) கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத்தேர்ந்தெடு.
a) அவசர சட்டம் – உறுப்பு 213
b) தேசிய நெருக்கடி – உறுப்பு 352
c) குடியரசுத்தலைவரின் ஆட்சி – உறுப்பு 356
d) நிதி நெருக்கடி – உறுப்பு 365
37) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு மாநிலத்தில் அரசமைப்பு நிர்வாகம் செயலிழந்து போகும்போது
அரசமைப்பு உறுப்பு 352- கீழ் குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறார்
ⅱ) எப்போது ஒரு மாநிலம் தேசிய அரசின் கட்டளைகள் அல்லாத அரசமைப்பு
விதிகளுக்கு இணங்க மறுக்கிறதோ அப்போது குடியரசுத்தலைவரின் ஆட்சியை அம்மாநிலத்தில் புகுத்துவற்கு
உறுப்பு 355 வழிவகை செய்கிறது.
ⅲ) இந்தியாவின் நிதியில் நிலையற்ற தன்மையும் வருவாயும் அச்சுறுத்தலில்
உள்ளதாக குடியரசுத்தலைவருக்குத் தோன்றினால் நிதி நெருக்கடி நிலைமையைப் பிரகடனம் செய்ய
உறுப்பு 360 வகை செய்கிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
38) குடியரசுத்தலைவரின் இதர அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு விவகாரத்தைப்
பற்றியும் சட்டம் அல்லது உண்மைகளைப் பற்றி உச்ச நீதி மன்றத்தின் கருத்தினைக் கோருதல்.
ⅱ) உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் எண்ணிக்கையை முடிவு செய்வது.
ⅲ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய அமைப்பு மற்றும் விதிகளை உருவாக்குதல்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
39) குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆட்சி நடத்துவதில் படிப்படியாக ஆங்கில மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கச்
செய்யும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது.
ⅱ) ஜம்மு- காஷ்மீர் நிர்வாகத்திற்கான சிறப்பு ஒழுங்காற்று விதிகளை
உருவாக்குவது.
ⅲ) பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகளை நிர்வாகம் செய்வதற்கான
சிறப்பு சட்டங்களையும் விதிகளையும் உருவாக்குதல்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
40) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அமெரிக்க அரசமைப்பினைப் போன்று இந்திய அரசமைப்பும் துணைக் குடியரசுத்தலைவர்
பதவியை (இந்திய அரசமைப்பு உறுப்பு-63) வழங்குகிறது.
ⅱ) இந்தியாவின் துணைத் குடியரசுத்தலைவர் பதவி நாட்டின் மூன்றாவது
மிக உயர்ந்த பதவியாகும்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
41) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்தியத் குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்றத்தின் ஈரவைகளின்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ⅱ) இரகசிய வாக்கெடுப்பு மூலம் விகிதாச்சார முறையில் மாற்றத்தக்க
ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும்
ⅱ)
d) இரண்டும் தவறு
42) இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தகுதிகள் தொடர்பான
பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) 30 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
ⅱ) மக்களவை உறுப்பினராவதற்கு தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டும்.
ⅲ) ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
43) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத் துணைத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
ⅱ) குடியரசுத்தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம்
தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் தனது பதவியிலிருந்து தாமாகவே பதவி விலகலாம்.
ⅲ) மக்களவையின் உறுப்பினர்களின் அறுதிப் பெருபான்மை ஆதரவோடு,
மாநிலங்களவை ஒப்புதலோடு அவருக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதின் மூலம் அப்பதவியிலிருந்து
அவரை நீக்க முடியும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
44) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத் துணைத்தலைவர் பதவியினால் மாநிலங்களவையின் அலுவல்வழி
தலைவராகிறார்.
ⅱ) மக்களவையில் சபாநாயகர் போன்றே, இவருக்கு
மாநிலங்களவையில் அதிகாரம் உள்ளது.
ⅲ) குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு என எந்த ஊதியமும் இல்லை.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
45) குடியரசுத்தலைவராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணைக்குடியரசுத்தலைவர்
தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) காலம் 3 மாதங்களுக்கு மட்டுமானது ஆகும்.
ⅱ) இந்தியக் குடியரசுத்தலைவராக செயல்படும் போது குடியரசுத் துணைத்தலைவரின்
ஊதியம், இதர படிகள், நாடாளுமன்ற முடிவுகள்படி
பெறுகிறார்.
ⅲ) அதே நேரத்தில் அவர் மாநிலங்களவையின் தலைவராக செயல்பட முடியாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
46) “பிரதமர் பதவியும் பொறுப்பும், அப்பதவி
இருக்கும் வரையிலும் ஒப்பிடமுடியாத ஒன்றாகவும், தனிச்சிறப்புமிக்க
அதிகார மையமாகவும் விளங்குகிறது.” என்று கூறியவர் யார்?
a) மிண்டோ பிரபு
b) மார்லே பிரபு
c) டப்ரின் பிரபு
d) ரிப்பன் பிரபு
47) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அரசமைப்பு பிரதமரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம் நிர்வாக
பொறுப்பைத் தந்துள்ளது.
ⅱ) நாட்டில் கொள்கைகளை உருவாக்கவும், முக்கிய
முடிவுகளை எடுக்கவும், அவற்றை அமல்படுத்தவும் அரசமைப்பு மற்றும் சட்டங்களின் மூலம்
ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும்
ⅱ)
d) இரண்டும் தவறு
48) ஒன்றிய ஆட்சித்துறையைப் பற்றிக்கூறும் அரசமைப்பு உறுப்புகள்
எவை?
a) 52 முதல் 78 வரையிலான
உறுப்புகள்
b) 51 முதல் 74 வரையிலான உறுப்புகள்
c) 50 முதல் 72 வரையிலான உறுப்புகள்
d) 52 முதல் 70 வரையிலான உறுப்புகள்
49) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) பிரிட்டீஷ் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, அதாவது
குடியரசுத்தலைவரை அரசின் தலைவராகக் கொண்டுள்ள முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
ⅱ) பிரதமர் அமைச்சரவையில் சமமானவர்களில் முதன்மையானவராக திகழ்கிறார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
50) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரதமரின் தேர்வு மற்றும் நியமனம் பற்றிய குறிப்புகள் அரசமைப்பில்
உள்ளன.
ⅱ) பிரதமர் பதவிக்கு நேரடித் தேர்தல் எதுவும் இல்லை.
ⅲ) அரசமைப்பின் 75-வது உறுப்பு பிரதமரை
குடியரசுத்தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
51) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மக்களவையில் பெரும்பான்மையுள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியின்
தலைவரையே பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.
ⅱ) எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,
பெரும்பான்மை ஆதரவைத் திரட்டக்கூடியவர் எனக் குடியரசுத்தலைவரால் கருதப்படுகின்ற
ஒருவரை பிரதமராக நியமனம் செய்வார்.
ⅲ) பிரதமருக்கென குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவும் இல்லை. பெரும்பான்மை
கொண்ட கட்சி அல்லது கட்சிகளின் தலைவராக இருக்கும் வரையில் அவரே பிரதமராகத் தொடர்வார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
52) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) பிரதமரின் முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு அவரது அமைச்சரவையின்
உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பதே.
ⅱ) அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியலுடன் குடியரசுத்தலைவரை சந்தித்து,
ஒப்புதல் பெற்றவுடன் அமைச்சரவை அமைக்கப்படுகிறது.
ⅲ) மிக முக்கியமான அமைச்சர்கள் மாநில அமைச்சர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
ⅳ) மற்றவர்கள் துணை அமைச்சர்கள் என்றும் அறியப்படுவர்.
a) ⅰ), ⅱ)
b) ⅰ), ⅱ),
ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ),
ⅳ)
53) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடியரசுத்தலைவர் விரும்பினால் ஓர் அமைச்சரை துணைப்பிரதமர் என
அறிவிக்க முடியும்.
ⅱ) பிரதமரின் ஆலோசனையின்படி குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்குரிய
துறைகளை ஒதுக்குவார்.
ⅲ) பிரதமர் எந்த துறை அல்லது துறைகளையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்ள முடியும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
54) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மக்களவையின் பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவராக பிரதமர் உள்ளார்.
ⅱ) மற்ற அமைச்சர்களை தேர்வு செய்யக் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை
செய்யவும், எந்த ஒரு அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கவும்
பிரதமருக்கே அதிகாரமுள்ளது.
ⅲ) பிரதமருக்குப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வது குடியரசுத்தலைவரின்
பொறுப்பாகும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
55) பின்வருவனவற்றுள் பிரதமர் தொடர்பான சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவையின் கூட்டங்களைக் கூட்டவும்,
தலைமையேற்று நடத்துவதும், பல குழுக்களின் தலைவரும் பிரதமரே ஆவார்.
ⅱ) அரசின் கொள்கை முடிவுகளை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும்
மேற்பார்வையிடுகிறார்.
ⅲ) ஒரு பிரதமர் பதவி விலகினாலோ, அல்லது
இறந்து விட்டாலோ அவரது அமைச்சரவையே இல்லாமல் போய்விடுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
56) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையில் தொடர்புப்
பாலமாக இருப்பவர் பிரதமரே.
ⅱ) நாடாளுமன்றத்துக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவரும்
அவரே.
ⅲ) அரசின் வெளிநாட்டு விவகாரங்களை வெளியிடும் முக்கிய நபராக குடியரசுத்தலைவர்
உள்ளார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
57) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நடைமுறையில் அரசின் தலைவராகவும், உண்மையான
நிர்வாகத் தலைவராகவும் இருக்கின்றபடியால், குடியரசுத்தலைவர்
நாட்டின் அரசியல் – நிர்வாக அரங்கில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறார்.
ⅱ) பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு பிரதமருக்கு உதவியாக பிரதமர்
அலுவலகம் உள்ளது.
ⅲ) பிரதமர் அலுவலகம், செயலக உதவிகளையும்
ஆலோசனைகளையும் பிரதமருக்கு வழங்குகிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
58) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசின் உச்சகட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள
பிரதமர் அலுவலகம் அரசமைப்பால் குறிப்பிடப்படாத ஓர் அதிகார மையமாகத் திகழ்கிறது.
ⅱ) பிரதமர் அலுவலகத்திற்கு இந்திய அரசின் துறைகளில் ஒன்று என்ற
தகுதி உள்ளது.
ⅲ) இந்த அலுவலகம் 1952-இல் உருவாக்கப்பட்டது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
59) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு 78 உறுப்பின்படி
குடியரசுத்தலைவருக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் பிரதம அமைச்சரை தலைவராக கொண்ட ஓர் அமைச்சரவை
குழு இருக்கும்.
ⅱ) குடியரசுத்தலைவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இந்த அமைச்சர்கள்
குழுவின் ஆலோசனையை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொள்கிறார்.
ⅲ) அமைச்சர்கள் குழுவில் மூன்று வகையான அமைச்சர்கள் இருப்பர்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
60) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநில அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஈடுபடுபவர்கள்.
ⅱ) மற்ற இரு பிரிவு அமைச்சர்களும் நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்பவர்கள்.
ⅲ) அனைவருக்கும் உச்சமாக பிரதமர் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரம்
கொண்டவராக இருக்கிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
61) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசமைப்பு 70 ஆவது உறுப்பின்படி
குடியரசுத்தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார்.
ⅱ) குடியரசுத்தலைவரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவியில்
இருப்பர்.
ⅲ) குடியரசுத்தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே அமைச்சர்கள் நியமனம்
என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவர்கள் உள்துறை அமைச்சராலேயே தேர்வு செய்யப்படுகின்றனர்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
62) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமெரிக்க நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு துறையிலும்
உள்ள விவகாரங்களை பற்றி ஆராய தமது உறுப்பினர்களைக்கொண்ட குழுவை அமைக்கிறது.
ⅱ) எதிர்க்கட்சிகள் அரசு தொடர்பான பிரச்சனைகளை தெளிவாக அறிந்துகொள்ளவும்
அரசினை விழிப்பாக இருக்கச்செய்யவும் முடிகிறது.
ⅲ) இது நிழல் அமைச்சரவை என்று அழைக்கப்படுகிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
63) பிரதமர் அலுவலகத்தின் பணிகள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அரசாங்கத்தின் தலைவர் என்ற நிலையில் உள்ள பிரதமருக்குத் தேவையான
உதவிகளைச் செய்வது, மத்திய அமைச்சகங்களுடன் / துறைகளுடன் மற்றும் மாநில அரசுகளுடன்
தொடர்புகளைப் பராமரிப்பது.
ⅱ) நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சி குழு போன்றவற்றிற்கு தேவையான
உதவிகளைச் செய்வது.
ⅲ) ஊடகங்களுடனும், பொதுமக்களுடனுமான
பிரதமரின் தொடர்புகளைப் பராமரிப்பது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
64) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) பிரதமரின் அலுவல்களுக்கு விதிகளின் படி நடவடிக்கைகளை மேற்கொள்வது.
ⅱ) குறிப்பிட்ட விதிகளின்படி பிரதமருக்கு அனுப்படும் விவகாரங்களைப்
பற்றி ஆராய்ந்தறிவதற்கு பிரதமருக்கு உதவுவது.
ⅲ) குடியரசுத்தலைவர், ஆளுநர்கள்,
அயல்நாட்டுத்தூதர்கள் போன்றவர்களுடன் இணக்கமான உறவுகளுக்காக பிரதமருக்கு உதவுவது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
65) பிரதமர் அலுவலகத்தின் பணிகள் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவை தொடர்பான விவகாரங்களில் பிரதமர் அலுவலகம் பிரதமருக்கு
உதவுகிறது.
ⅱ) அமைச்சரவை தொடர்பான விவரங்களை அமைச்சரவை செயலகம் நேரடியாக கையாள்கிறது.
ⅲ) அமைச்சரவை செயலகம் பிரதமரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
66) கூட்டுப்பொறுப்பு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கூட்டுப்பொறுப்பு என்பது, அரசின்
நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் கூட்டாக மக்களவைக்குப் பொறுப்பானவர்கள்
ஆகின்றனர் என்று பொருள்.
ⅱ) அனைத்து அமைச்சர்களும் பொதுவெளியில் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை
வெளிக்காட்டக் கூடாது என்பதும் இதன் பொருள் எனலாம்.
ⅲ) எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், பொது
நிகழ்விலும் அனைத்து அமைச்சர்களும் அவர்களது தனிப்பட்ட கருத்தினை வலியுறுத்தலாம்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
67) ஒன்றிய அமைச்சர்கள் குழு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவையின் ஓர் உட்குழுவாக இது இருக்கிறது.
ⅱ) அமைச்சரவையிலிருந்து அமைக்கப்படும் இந்த உட்குழு அரசமைப்பில்
குறிப்பிடப்படாத ஒன்றாகும்.
ⅲ) அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக அமர்ந்து கொள்கை
முடிவுகளை எடுப்பர்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
68) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சர்குழுவின் உட்குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பிரதமர் தலைமையில்
ஒன்றாகக்கூடி அம்முடிவுகளை எடுக்கிறார்கள்
ⅱ) அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைகளாக குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை
வழங்குகிறார்கள்.
ⅲ) இந்திய அரசின் நிர்வாக விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளும் உச்சமான
ஆட்சிக் குழுவாக அமைச்சரவைக் குழு விளங்குகிறது அமைச்சர்கள் குழுவின் கருவாக அது செயல்படுகிறது.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
69) அமைச்சர்கள் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பின்வருவனவற்றுள்
சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவைக் குழுதான் உயர்ந்தபட்ச முடிவுகளை எடுப்பதற்கான மற்றும்
கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
ⅱ) இது அனைத்து முக்கியமான சட்ட, நிதி
மற்றும் வெளியுறவு விவகாரங்களையும் கையாளுகிறது.
ⅲ) அரசமைப்பு ரீதியான அனைத்து நியமனங்களையும் மூத்த செயலக நிர்வாகிகளையும்
இது கட்டுப்படுத்துவதில்லை.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
70) அமைச்சர்கள் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பின்வருவனவற்றுள்
தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றம் நடைபெறாதபோது அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க குடியரசுத்தலைவருக்கு
பரிந்துரை செய்கிறது.
ⅱ) இது நாடாளுமன்ற குழுக்களை நியமிக்கிறது மற்றும் துறைகளுக்கு
இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது.
ⅲ) ஆளுநர்கள் நியமனம் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
71) அமைச்சரவைக் குழுச் செயலர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் உதவி செய்ய
ஒரு செயலர் இருப்பர்.
ⅱ) அமைச்சரவைக் குழு செயலர்களின் முதன்மை இடம் முதன்மைச் செயலருக்குத்
தரப்பட்டுள்ளது.
ⅲ) உயர்த் தேர்வுக் குழுவின் (Board) தலைவராக
அவர் இருப்பர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
72) ஆண்டு தோறும் நடைபெறும் மாநில தலைமைச்செயலர்களின் மாநாடுகளுக்கு
தலைமை வகிப்பவர் யார்?
a) பிரதமர்
b) உள்துறை அமைச்சர்
c) குடியரசுத்தலைவர்
d) முதன்மைச் செயலர்
73) குடும்ப அமைச்சரவை தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) குடும்ப அமைச்சரவை என்பது அமைச்சரவைக்குள்ளேயே ஒரு சிறு குழுவாகச்
செயல்படும் அமைச்சர்களின் குழு.
ⅱ) இது முறை சார்ந்த குழு ஆகும்.
ⅲ) இந்தியாவின் ஒவ்வொரு பிரதமருக்கும் இப்படி ஒரு அமைச்சரவைக் குழு
இருந்துள்ளது.
ⅳ) முக்கியமான அரசியல் பிரச்சனைகளில் முடிவுகள் எடுப்பதில் ரகசியத்தைப்
பாதுகாக்கப் பிரதமருக்கு இந்த அமைச்சரவைக் குழு முறை உதவியாய் உள்ளது.
a) ⅰ), ⅲ), ⅳ)
b) ⅰ), ⅱ),
ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ),
ⅳ)
74) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பின் 4வது பகுதியிலுள்ள
143 முதல் 157 வரையிலான உறுப்புகள் மாநில நிர்வாகத்தை குறிப்பிடுகின்றன.
ⅱ) மத்திய அரசில் காணப்படும் நாடாளுமன்ற நிர்வாக முறையே மாநிலத்திலும்
உள்ளது.
ⅲ) மாநில நிர்வாகமும் ஆளுநர் மற்றும் முதலமைச்சரை தலைவராக கொண்ட
அமைச்சர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
75) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மத்தியில் குடியரசுத்தலைவரைப்போன்று மாநிலத்தில் ஆளுநரே நிர்வாகத்தின்
தலைவராக உள்ளார்.
ⅱ) சில மாநிலங்களில் ஒற்றை அவைகளைக்கொண்ட சட்ட மன்றமும் மற்ற சில
மாநிலங்களில் இரண்டு அவையைக்கொண்ட சட்டமன்றமும் உள்ளன.
ⅲ) 5வது பகுதியில் காணப்படும் இப்பிரிவுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு
பொருந்தாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
76) எந்த ஆண்டின் அரசமைப்பு திருத்தப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
மாநிலங்களுக்கு ஒருவரே ஆளுநராக இருக்க முடியும்?
a) 1954
b) 1956
c) 1958
d) 1960
77) பின்வருவனவற்றுள் ஆளுநராக நியமிக்கப்பட தேவையான தகுதிகளை தேர்ந்தெடு.
ⅰ) 30 வயதை நிறைவு செய்தவர்.
ⅱ) ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்க கூடாது.
ⅲ) நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
78) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்(உறுப்பு 156).
ⅱ) அவர் எந்த நேரத்திலும் குடியரசுத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
ⅲ) மாநில சட்ட மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை ஆளுநர் பெறுகிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
79) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) இந்திய அரசமைப்பின்படி மாநில அரசமைப்பு மற்றும் நிர்வாகத்தின்
தலைவராக ஆளுநர் இருக்கிறார்.
ⅱ) மாநில நிர்வாகத்தின் ஆட்சி பொறுப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ⅲ) மாநிலத்தின்சட்டசபைக்கு ஒட்டு மொத்தமாக கூட்டு பொறுப்புள்ள அமைச்சர்களின்
ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுகிறார்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
80) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆளுநர் மாநில அரசின் நிர்வாக தலைவராக உள்ளார்.
ⅱ) ஆளுநர் நிர்வாக அதிகாரங்களை நேரடியாகவோ அல்லது அவருக்கு கீழுள்ளவர்களாலோ(154
வது உறுப்பின்படி அமைச்சர்கள் ) செயல்படுத்துவார்.
ⅲ) மாநிலப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் ஆளுநருக்கு
அதிகாரம் இல்லை.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
81) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) முதலமைச்சரின் ஆலோசனையின்படி பிற அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
ⅱ) ஆளுநர் விரும்பும் வரையில் மட்டுமே அமைச்சர்கள் அப்பதவியில்
இருப்பர்.
ⅲ) முதலமைச்சரின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்படுகிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
82) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநில அரசின் தலைமை வழக்குரைஞர், மாநிலப்பொதுப்பணி
ஆணையத்தின் தலைவர், மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
ⅱ) துணை சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நியமனங்கள்,
பதவிகள், பதவி உயர்வு, போன்றவற்றை ஆளுநர்
தீர்மானிக்கிறார்.
ⅲ) மாநில நிர்வாகத்தை சீராக இயக்கும் பொறுப்பு ஆளுநருடையதாகும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
83) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநில அரசமைப்பு இயந்திரம் நிலைகுலைந்துவிட்டால் அரசமைப்பு 352
ஆவது உறுப்பின்படி பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
ⅱ) குடியரசுத்தலைவரது நேரடி ஆட்சி என்றால் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி
என்று பொருள்.
ⅲ) அமைச்சரவை இல்லாத மாநில ஆட்சி என்றும் பொருள்படும்
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
84) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு பகுதி (உறுப்பு-168)
ஆவார்.
ⅱ) ஆளுநர் சட்ட அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார்.
ⅲ) ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டவும், முடித்து
வைக்கவும், ஒத்தி வைக்கவும், கலைத்து விடவும்
அதிகாரம் படைத்தவர்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
85) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஆளுநர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகிறார்.
ⅱ) ஆளுநரின் முன் அனுமதியின்றி, எந்த
முன்வரைவும் சட்டமாக்க முடியாது.
ⅲ) மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் அவரது ஒப்புதலின்றிச்
சட்டமாகாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
86) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒப்புதலைத் தரவோ அல்லது அந்த முன்வரைவை நிறுத்தி வைக்கவோ அல்லது
குடியரசுத்தலைவரின் கருத்திற்காக முன்வரைவை ஒதுக்கி வைக்கவோ முடியும்.
ⅱ) மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரால் இந்த முன்வரைவுகள் அவை நடுவருக்கு
திருப்பி அனுப்ப முடியும்.
ⅲ) முன்வரைவு மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால் (திருத்தங்கள்
இல்லாமலும்), ஆளுநர் தனது ஒப்புதலை அளித்தே ஆகவேண்டும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
87) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) சட்டம் 312 -ன் கீழ், சட்டமன்றம் அமர்வில் இல்லாத காலங்களில் ஆளுநர் அவசர சட்டங்களையும்
பிறப்பிக்கலாம்.
ⅱ) மாநிலச் சட்டமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருந்தால்,
அதன் மேலவைக்கு ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை இலக்கியம்,
அறிவியல்,கலை,கூட்டுறவு இயக்கம்,சமூகப்பணி
போன்றவற்றில் சிறப்பு அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நியமிக்கலாம்.
ⅲ) கீழவைக்கு ஆங்கிலோ – இந்திய பிரதிநிதியையும் நியமிக்கலாம்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
88) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாநிலத்தின் ஒதுக்கு நிதியின் பாதுகாவலர் ஆளுநர் ஆவார்.
ⅱ) எந்த முன்வரைவும் ஆளுநரின் முன் ஒப்புதலின்றி சட்டமன்றத்தில்
கொண்டுவரமுடியாது.
ⅲ) ஆளுநரின் பரிந்துரையின்றி மானியங்களுக்கான கோரிக்கை எதுவும்
கோரப்பட முடியாது.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
89) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கிளை நீதிமன்றங்கள் உள்ளிட்ட
சார்பு நீதிமன்றங்களின் பதவிகள், நியமனங்கள், பதவி உயர்வுகள்
போன்றவற்றை தீர்மானித்தல்.
ⅱ) உயர் நீதிமன்றத்தின் பதவிகள், நியமனங்கள்,
பதவி உயர்வுகள் போன்றவற்றை தீர்மானித்தல்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
90) ஆளுநரின் நீதித்துறை அதிகாரம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான
விடையைத் தேர்ந்தேடு.
ⅰ) தண்டனையைக் குறைத்தல்
ⅱ) மன்னிப்பு வழங்குதல்
ⅲ) தண்டனையை நிறுத்தி வைத்தல்
ⅳ) தண்டனையை மாற்றுதல்
a) ⅰ), ⅱ), ⅲ),
ⅳ)
b) ⅰ), ⅱ),
ⅲ)
c) ⅱ), ⅲ)
d) ⅱ), ⅲ),
ⅳ)
91) ஆளுநர் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) எந்தவொரு கட்சி அல்லது தலைவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை
பெறாத சூழ்நிலையில் ஒரு புதிய முதலமைச்சரை நியமித்தல்.
ⅱ) அவையின் பெரும்பான்மை ஆதரவை இழந்தபோதும் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில்
தோற்கடிக்கப்பட்ட பின்னரும், பதவி விலக மறுக்கும் நிலையில் அமைச்சரவையை பதவி நீக்கம் செய்வது.
ⅲ) பெரும்பான்மை இழந்த ஒரு முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் சட்டசபையை
கலைத்துவிடுதல்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
92) ஆளுநர் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) அரசமைப்பு இயந்திர சீர்குலைவு பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிக்கை
அனுப்புதல்.
ⅱ) சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும்
ⅱ)
d) இரண்டும் தவறு
93) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து
எழும் நெருக்கடி நிலைகளை சமாளிப்பதற்கான அவசரநிலையை பிரகடனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு
உள்ளது.
ⅱ) அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க மாநில அரசை நடத்த இயலாத சூழல்
ஏற்பட்டால் அது பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிவுறுத்தி அறிக்கை தரும் அதிகாரம் உள்ளது(உறுப்பு
356).
ⅲ) குடியரசுத்தலைவர் தாமே மாநில அரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்று
நடத்தி செல்வதற்கு வகை செய்கிறார்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
94) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ⅰ) ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு
இணையாக ஒரு அரசின் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படுகிறார்.
ⅱ) உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞராகும் தகுதி உடையவர்களையே ஆளுநர்
தலைமை வழக்குரைஞராக நியமனம் செய்கிறார்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
95) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) முன்மொழிதல்: அரசமைப்பு பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில்
கொண்டு வரப்படும் தீர்மானம்.
ⅱ) உறுதிமொழி: ஒருவரின் எதிர்கால நடத்தையை உறுதி செய்யும் விதத்தில்,
பெரும்பாலும் கடவுளின் பெயரால் கூறப்படும் வாக்குறுதி
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
96) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கூடுவதற்காக குடியரசுத்தலைவர்
அல்லது ஆளுநரால் விடுக்கப்படும் அழைப்பு கூடுவதற்கான அழைப்பு எனப்படும்.
ⅱ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் கூட்டத் தொடரினிடையே சில
அமர்வுகள் தள்ளி வைக்கப்படுதல் ஒத்தி வைப்பு எனப்படும்.
ⅲ) குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநருக்கு உள்ள ரத்து செய்யும் அதிகாரம்
மறுதலித்தல் எனப்படும்.
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
97) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறாதபோது,
முதலமைச்சரால் பிறப்பிக்கப்படும் சட்டம் அவசரச்சட்டம் ஆகும்.
ⅱ) நீக்குதல் என்பது ஒரு சட்டம், உரிமை
அல்லது ஒப்பந்தத்தை சட்டப்படி நீக்குதல்
ⅲ) ஒருவர் சட்டப்பூர்வமாக வகிக்கும் பதவியின் காரணமாக,
வேறு ஒரு பதவிக்கும் பொறுப்பாக இருத்தல் அலுவல் வழி தலைமை ஆகும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
98) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு அமைச்சர் தலைமை நிர்வாக பொறுப்பேற்றிருக்கும் துறை அமைச்சரின்
துறை ஆகும்.
ⅱ) ஒரு கட்சி அல்லது அரசாங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்டிருக்கும்
பேச்சாளர் அதிகாரப்பூர்வ பேச்சாளர்
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும்
ⅱ)
d) இரண்டும் தவறு
99) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு சட்டமன்றத்தை முறைப்படி முடித்து வைத்தல் சபை ஒத்திவைப்பு
எனப்படும்.
ⅱ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு ஒத்தி வைத்தல் சட்டமன்ற கலைப்பு எனப்படும்.
ⅲ) சட்ட மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்வரைவிற்கு குடியரசுத்தலைவர்
அல்லது ஆளுநர் அளிக்கும் ஒப்புதல் முன்வரைவிற்கான ஒப்புதல் எனப்படும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
100) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) அமெரிக்காவின் வெஸ்ட்மினிஸ்ட்டர் பகுதியில் அமெரிக்க நாடாளுமன்றம்
அமைந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்றமுறை வெஸ்ட்மினிஸ்டர் முறை எனப்படுகிறது.
ⅱ) நாடு அல்லது ஒரு குழுவிற்குள் ஒவ்வொருவருக்கும் இடையேயான ஒத்துழைப்பு
மற்றும் ஒற்றுமை ஒருமைப்பாடு எனப்படுகிறது.
ⅲ) ஒரு வாக்கெடுப்பைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு காகிதம்
வாக்கு சீட்டு எனப்படும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
101) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு சட்டமன்றம் அல்லது மற்ற முறையான கூட்டத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட
கருத்து அல்லது விருப்பத்தின் ஒரு முறையான வெளிப்பாடு தீர்மானம் ஆகும்.
ⅱ) சட்ட உரிமை கட்டளை: செல்லுபடியாகாத அல்லது சட்டபூர்வமாக பிணைப்பு
இல்லை.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ)
d) இரண்டும் தவறு
102) பின்வருவனவற்றுள் சரியான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) கூட்டணி: கூட்டு நடவடிக்கைக்கான ஒரு தற்காலிக கூட்டு,
குறிப்பாக அரசியல் கட்சிகள் இதன் மூலம் ஒரு அரசாங்கத்தை உருவாக்குகின்றன.
ⅱ) சுயவிருப்புரிமை: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்
என்பதை முடிவு செய்ய சட்டம் அளித்திருக்கும் சுதந்திரம்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும்
ⅱ)
d) இரண்டும் தவறு
103) பின்வருவனவற்றுள் தவறான விடையைத்தேர்ந்தெடு.
ⅰ) ஒரு அரசின் அதிகாரபூர்வ எல்லை ஆட்சி எல்லை எனப்படும்.
ⅱ) தூண்டுதல் இல்லாமல் தாக்கும் நடவடிக்கை கலகம் ஆகும்.
ⅲ) ஒரு நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தலைமைக்கெதிராகவோ ஆயுதமேந்திய
எதிர்ப்பு ஆக்கிரமிப்பு ஆகும்.
a) ⅰ), ⅱ),
ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)
104) தேசிய அளவில் நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான சூழல்கள் எவை?
ⅰ) போர்
ⅱ) வெளியிலிருந்து ஆக்ரமிப்பு
ⅲ) உள்நாட்டுக் கலகங்கள்
a) ⅰ), ⅱ), ⅲ)
b) ⅰ), ⅱ)
c) ⅱ), ⅲ)
d) ⅰ), ⅲ)