1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு
சீரிய - சீறிய
(A) கோபம் கொண்ட - பெருமை பெற்ற
(B) சிறுமை கொண்ட - பெருமை பெற்ற
(C) அளவில் குறைந்த - வடிவில் குறைந்த
(D) பெருமை பெற்ற - கோபம் கொண்ட
(D) பெருமை பெற்ற - கோபம் கொண்ட
2. இரு வினைகளின் பொருள் வேறுபாடு
ஈந்தாள் - ஈன்றாள்
(A) கொடுத்தாள் - பெற்றெடுத்தாள்
(B) பெற்றெடுத்தாள் - கொடுத்தாள்
(C) கேட்டாள் - கொடுத்தாள்
(D) கண்டாள் - கேட்டாள்
(A) கொடுத்தாள் - பெற்றெடுத்தாள்
3. பொருள் வேறுபாடு அறிக.
பொழிகின்ற - பொலிகின்ற
(A) தருகின்ற - சிறந்து விளங்குகின்ற
(B) செல்கின்ற - வருகின்ற
(C) வாங்குகின்ற - விற்கின்ற
(D) தாக்குகின்ற - தாங்குகின்ற
(A) தருகின்ற - சிறந்து விளங்குகின்ற
4. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
'வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்'
(A) பரணி பகைவரை ஆகும் இலக்கியம் வென்றதைப்பாடும்
(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
(C) இலக்கியம் ஆகும் வென்றதைப் பரணி பாடும்
(D) பாடும் இலக்கியம் வென்றதைப் பரணி ஆகும்
(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்: சொற்களை ஒழுங்குபடுத்துக
(A) கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்
(B) கழுத்து உயிரெழுத்து இடம் பிறக்கும் ஆகும்
(C) உயிரெழுத்து கழுத்து ஆகும் பிறக்கும் இடம்
(D) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்
(D) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
(A) அள்ளல் அரக்காம்பல் வாயவிழ பழனத்து
(B) பழனத்து அரக்காம்பல் வாயவிழ அள்ளல்
(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ
(D) வாயவிழ பழனத்து அரக்காம்பல் அள்ளல்
(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ
7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி
(A) ஓவியர், ஓசுநர், காருகர், பாசவர், சிற்பி
(B) காருகர், பாசவர், சிற்பி, ஓசுநர், ஓவியர்
(C) ஓசுநர், ஓவியர், காருகர், பாசவர், சிற்பி
(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்
(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்
8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
(B) ஊக்கம், ஒளவை, ஏது, ஈதல்
(C) ஈதல், ஊக்கம், ஒளவை, ஏது
(D) ஏது, ஈதல், ஒளவை, ஊக்கம்
(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
9. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்:
'ஒறுத்தல்'- வினையாலணையும் பெயர் காண்க.
(A) ஒறுத்தினேன் (C) ஒன்றுதல்
(B) பொறுத்தல் (D) ஒறுத்தார்
(D) ஒறுத்தார்
10. 'மலை' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க:
(A) மலைந்து (C) மலையா
(B) மலைந்த (D) மலையும்
(A) மலைந்து
11. வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரை எழுதுக:
'கொடு'
(A) கொடுத்தான் (C) கொடுத்தல்
(B) கொடுத்த (D) கொடுத்தவன்
(C) கொடுத்தல்
12. வந்தனன் – வேர்ச்சொல்லை எழுதுக:
(A) வருக (C) வா
(B) வந்து (D) வருவாய்
(C) வா
13. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக:
'வருக'
(A) வா (C) வந்து
(B) வரு (D) வருகிறார்
(A) வா
14. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
'நிலவு'
(A) மதி, அறிவு (C) திங்கள், சந்திரன்
(B) மாதம், பிறை (D) நிலா, அறிவு
(C) திங்கள், சந்திரன்
15. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
அடி வகை'
(A) தாள், தண்டு, கோல்
(B) சுவை, கொம்பு, கொப்பு
(C) இலை, தோகை, ஓலை
(D) துளிர், முறி, குருத்து
(A) தாள், தண்டு, கோல்
16. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள்:
உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை
(A) நீர் நிலை (C) கொடி வகை
(B) ஊர் வகை (D) கடல் வகை
(A) நீர் நிலை
17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்:
அமைதியான ……………. தேவை.
(A) உரக்கம் (C) உறக்கம்
(B) துரக்கம் (D) துறக்கம்
(C) உறக்கம்
18. லை, இளை, இழை - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
(A) செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை
(B) மெலிந்து போதல், செடியின் காம்பு, செடியின் இலை
(C) நூல் இழை, செடியின் இலை, மெலிந்து போதல்
(D) மெலிந்து போதல், நூல் இழை, செடியின் இலை
(A) செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை
19. பரவை, பறவை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக:
(A) வானில் பரப்பது, எருது (C) கடல், புள்
(B) சிங்கம், கடல் (D) ஆண்மயில், கடல்
(C) கடல், புள்
20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:
'டிமாண்ட் டிராப்ட்'
(A) காசோலை (C) வரைவோலை
(B) பணவோலை (D) கடன் அட்டை
(C) வரைவோலை
21. 'வீடு எங்குள்ளது' என்ற வினாவிற்கு 'இப்பக்கத்தில் உள்ளது' என்று கூறுவது.
(A) சுட்டு விடை (C) நேர் விடை
(B) மறை விடை (D) ஏவல் விடை
(A) சுட்டு விடை
22. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
சோறு …………………….
(A) உண் (C) பருகு
(B) தின் (D) சாப்பிடு
(A) உண்
23. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
(1) குதிரைத் தாண்டியது
(2) குதிரை தாண்டியது
(3) வரும்படி சொன்னான்
(4) வரும்படிச் சொன்னான்
(A) (1) மற்றும் (3) (C) (2) மற்றும் (3)
(B) (2) மற்றும் (4) (D) (1) மற்றும் (4)
(C) (2) மற்றும் (3)
24. மரபுப்பிழைகள் ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க:
‘ஆடு’
(A) முழங்கும் (C) கதறும்
(B) பிளிறும் (D) கத்தும்
(D) கத்தும்
25. குலைவகை: பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்:
(A) கொத்து (C) தாறு
(B) அளியல் (D) அலகு
(B) அளியல்
26. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
நீர்நிலைப் பெயர் அல்லாதது.
(A) இலஞ்சி (C) கூவல்
(B) கேணி (D) கோட்டி
(D) கோட்டி
27. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(A) பால் – பசு (C) காளை - வண்டி
(B) எருது – உழவு (D) ஆடு - வண்டி
(D) ஆடு - வண்டி
28. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
'இடும்பை' - எதிர்ச்சொல் தருக.
(A) வறுமை (C) துன்பம்
(B) இன்பம் (D) சோம்பல்
(B) இன்பம்
29. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
‘அணுகு'
(A) பழகு (C) விலகு
(B) தெளிவு (D) துணிவு
(C) விலகு
30. பிரித்தெழுதுதல்:
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) நீரு + உலையில் (C) ரீ நீர் + உலையில்
(B) நீர் + இலையில் (D) நீரு + இலையில்
(C) ரீ நீர் + உலையில்
31. செயல் + இழக்க என்பதனை சேர்த்து - எழுதக் கிடைக்கும் சொல்.
(A) செயலிழக்க (C) செயஇழக்க
(B) செயல்இழக்க (D) செயலிலக்க
(A) செயலிழக்க
32.. சரியான விடையைத் தேர்க.
(A) விண் + உண்டு – விண்ணூண்டு (C) நூல் + அகம் - நூற்பகம்
(B) பண் + அழகு பண்ணழகு (D) விண் + அழகு - விற்பழகு
(B) பண் + அழகு பண்ணழகு
33. பிரித்து எழுதுதல்:
"பெருங்கடல்" - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) பெரு + கடல் (C) பெரிய + கடல்
(B) பெருமை + கடல் (D) பெருங் + கடல்
(B) பெருமை + கடல்
34. முத்தமிழ் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
(A) இயற்றமிழ் (C) நாடகத்தமிழ்
(B) இசைத்தமிழ் (D) வளர்தமிழ்
(D) வளர்தமிழ்
35. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
நெல்லையப்பர் கோவில் ………. உள்ளது?
(A) எவை? (C) யாது?
(B) எது? (D) எங்கு?
(D) எங்கு?
36. பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக:
மாடுகள் இப்பொழுது புல்
(A) மேய்ந்தன (C) மேய்கின்றன
(B) மேய்கிறது (D) மேய்கின்றோம்
(C) மேய்கின்றன
37. பொருத்தமான காலம் கண்டறிக.
(A) கண்மணி நேற்று பாடம் படித்தாள் (நிகழ்காலம்)
(B) கண்மணி பாடம் படிக்கிறாள் (நிகழ்காலம்)
(C) கண்மணி நாளை பாடம் படிப்பாள் (இறந்த காலம்)
(D) கண்மணி இன்று படிக்கிறாள் (எதிர்காலம்)
(B) கண்மணி பாடம் படிக்கிறாள் (நிகழ்காலம்)
38. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:
சரியான ணையைக் கண்டறிக.
(A) விண் + மீன் – விண்மான் (C) நீதி + நூல் - நீதிநூல்
(B) தமிழ் + மொழி –தாய்மொழி (D) மணி + மாலை - மணிமேகலை
(C) நீதி + நூல் - நீதிநூல்
39. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:
'பரம்' ………………..
(A) பரை (C) குறை
(B) பறை (D) முறை
(A) பரை
40. பேச்சுவழக்கு - எழுத்துவழக்கு கண்டறிதல்:
என்னுடைய பல் உழுந்திடுச்சு.
(A) விளந்து விட்டது (C) விழுந்து விட்டது
(B) வில்ந்து விட்டது (D) விலைந்து விட்டது
(C) விழுந்து விட்டது
41. பேச்சுவழக்கு - எழுத்து வழக்கு: ஒடம்பு
(A) ஒடம்பு – உடும்பு (C) ஒடம்பு -ஊடம்பு
(B) ஒடம்பு – உடம்பு (D) ஒடம்பு - உயிர்
(B) ஒடம்பு – உடம்பு
42. பேச்சுவழக்கு - எழுத்துவழக்கு மாம்பழம் சாப்ட்டியா?
(A) மாம்பழம் சாப்பிட்டாயா? (C) மாம்பழம் சாப்பிடாயா?
(B) மாம்பழம் சாப்பிடு (D) மாம்பழம் தின்கிறேன்
(A) மாம்பழம் சாப்பிட்டாயா?
43. பொருள்களை எண்ணும் இடங்களில் ……………… வரும்.
(A) காற்புள்ளி (,) (C) முக்காற் புள்ளி (:)
(B) அரைப்புள்ளி (;) (D) முற்றுப்புள்ளி (.)
(A) காற்புள்ளி (,)
44. நிறுத்தற்குறிகளை அறிதல்:
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) முத்தமிழ் இயல் இசை நாடகம்.
(B) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
(C) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.
(D) முத்தமிழ், இயல் இசை நாடகம்
(B) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
45. சரியான நிறுத்தற்குறியிடப்பட்ட தொடரைக் கண்டறிக.
(A) "நூல் பல கல்", என்பர் பெரியோர்.
(B) திருக்குறள் அறம்; பொருள்; இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
(C) திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
(D) நூலகத்தின் பயன் அறிவோம்: அறிவு வளம் பெறுவோம்.
(A) "நூல் பல கல்", என்பர் பெரியோர்.
46. "பைம்பொழில்" என்ற ஊர்ப் பெயரின் மரூஉவைக் கண்டறிக.
(A) பொழிச்சலூர் (C) பையனூர்
(B) பம்புளி (D) பொழிலூர்
(B) பம்புளி
47. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
'பூவிருந்தவல்லி'
(A) பூந்தர் தோட்டம் (C) பூந்தமல்லி
(B) பூவிருந்தம் (D) பூ வல்லி
(C) பூந்தமல்லி
48. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
(a) செக் (1) பற்று அட்டை
(b) டிமாண்ட் டிராஃப்ட் (2) காசோலை
(c) டிஜிட்டல் (3) மின்னணு மயம்
(d) டெபிட் கார்டு (4) வரைவோலை
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 1 2 3 4
(C) 2 4 3 1
(D) 4 3 2 1
(C) 2 4 3 1
49. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது:
'எஸ்கலேட்டர்'
(A) மின்தூக்கி (C) மின்படி கட்டு
(B) மின் ஏணி (D) இயங்கு படிகட்டு
(C) மின்படி கட்டு
50. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்:
வான்வெளியில் ஏற்பட்ட நிகழ்வை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
(A) பூரிப்பு (C) வியப்பு
(B) எக்களிப்பு (D) மகிழ்ச்சி
(C) வியப்பு
51. விடை வகைகள்:
"நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று கூறுவதை
உரைப்பது?
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) உறுவது கூறல் விடை
(D) ஏவல் விடை
(C) உறுவது கூறல் விடை
52. கீழ்க்கண்ட பேச்சு வழக்குச் சொல்லை எழுத்து வழக்கு சொல்லாக மாற்றுக.
'நான் நேத்து வந்த
(A) நான் நேற்று வந்த
(B) நான் நேற்று போனேன்
(C) நான் நேற்று வந்தேன்
(D) நான் நேத்து வந்து
(C) நான் நேற்று வந்தேன்
53. 'நீ பாடவில்லையா? ' என்ற வினாவிற்கு 'வாய் வலிக்கிறது' என்று உரைப்பது
(A) இனமொழி விடை
(B) உறுவது கூறல் விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
(C) உற்றது உரைத்தல் விடை
54. கலைச்சொல் அறிக:
WRITS
(A) சட்டம் (C) சட்ட முறைகள்
(B) சட்ட ஆவணங்கள் (D) சட்ட திருத்தங்கள்
(B) சட்ட ஆவணங்கள்
55. கலைச்சொல் அறிக:
'AGRO INDUSTRY'
(A) வேளாண்மைத் தொழில் (C) வேளாண் புள்ளி விவரங்கள்
(B) வேளாண் கைக் கருவிகள் (D) வேளாண் தொழிற்கூடங்கள்
(A) வேளாண்மைத் தொழில்
56. "விழலுக்கு இறைத்த நீர் போல" என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?
(A) ஒற்றுமையின்மை (C) எதிர்பாரா நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு (D) பயனற்ற செயல்
(D) பயனற்ற செயல்
57. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
(A) ஒற்றுமையின்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) பயனற்ற செயல் (D) எதிர்பாரா நிகழ்வு
(A) ஒற்றுமையின்மை
58. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
'வேலியே பயிரை மேய்ந்தது போல' -
உவமை கூறும் பொருள் தெளிக.
(A) கடமை தவறுதல் (C) பொறுப்புணர்வு
(B) கடமை (D) வெறுப்பு
(A) கடமை தவறுதல்
59. சத்யா வீணை வாசித்தாள் - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
(A) பிறவினைத் தொடர் (C) செயப்பாட்டு வினைத் தொடர்
(B) செய்வினைத் தொடர் (D) உணர்ச்சித் தொடர்
(B) செய்வினைத் தொடர்
60. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது:
பந்தை என்னிடம் உருட்டினான்.
(A) தன்வினை வாக்கியம் (C) பிறவினை வாக்கியம்
(B) செய்வினை வாக்கியம் (D) செயப்பாட்டு வினை வாக்கியம்
(C) பிறவினை வாக்கியம்
61. பொருத்தமான செயப்பாட்டு வினைத் தொடரைத் தேர்க.
(A) பணம் காணாமல் போனது (C) பணத்தை யார் எடுத்தார்கள்?
(B) பணத்தைக் காணவில்லை (D) பணத்தை எங்கே தேடுவது?
(A) பணம் காணாமல் போனது
62. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' எனப் பாராட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.
விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்ந்தெடுக்க.
(A) 'கல்விக் கண் திறந்தவர்' என்று பாராட்டப்பட்டவர் யார்?
(B) தந்தை பெரியார் யாரைப் பாராட்டினார்?
(C) தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?
(D) காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்” எனப் பாராட்டியவர் யார்?
(D) காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்” எனப் பாராட்டியவர் யார்?
63. விடைக் கேற்ற வினாவைத் தெரிவு செய்க:
'தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்'.
(A) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எங்குள்ளது?
(B) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எத்தனை?
(C) உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
(D) புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா?
(C) உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?
64. இசைக் கருவிகள் எத்தனை வகைப்படும்?
(A) நான்கு (C) மூன்று
(B) இரண்டு (D) ஒன்று
(A) நான்கு
65. நரம்புக் கருவிகள் எவை?
(A) தோலால் மூடப்பட்ட கருவி
(B) தந்திகளை உடையவை
(C) காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
(D) ஒன்றோடு ஒன்று மோதி கொள்பவை
(B) தந்திகளை உடையவை
66. ஒன்றோடு ஒன்றி மோதி இசைக்கப்படுபவை
(A) நரம்புக் கருவிகள் (C) கஞ்சக் கருவிகள்
(B) தோல் கருவிகள் (D) காற்றுக் கருவிகள்
(C) கஞ்சக் கருவிகள்
67. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
(A) தோல் கருவிகள் (C) கஞ்சக் கருவிகள்
(B) காற்றுக் கருவிகள் (D) நரம்புக் கருவிகள்
(B) காற்றுக் கருவிகள்
68. விலங்குகளின் ………………. ஆல் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோற்கருவிகள்.
(A) தோல் (C) நகம்
(B) முடி (D) எலும்பு
(A) தோல்
69. ஒருமை - பன்மை பிழை நீக்குக:
அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ………… உழைப்பை நல்கினார்.
(A) தனது
(B) தமது
(C) தங்கள்
(D) தாங்கள்
(B) தமது
70. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
(A) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது
(B) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தன
(C) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தான்
(D) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள்
(A) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது
71. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது
(B) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
(C) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பாள்
(D) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பார்கள்
(A) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது
72. சொல்-பொருள் பொருத்துக:
(a) சாந்தம் (1) சிறப்பு
(b) மகத்துவம் (2) உலகம்
(c) தாரணி (3) கருணை
(d) இரக்கம் (4) அமைதி
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 3 2 1 4
(C) 4 1 2 3
(D) 1 4 3 2
(C) 4 1 2 3
73. சொல் - பொருள் பொருத்துக:
(a) தமர் (1) தலை
(b) முனிவு (2) உறவினர்
(c) தார் (3) சினம்
(d) முடி (4) மாலை
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 1 2 3 4
(A) 2 3 4 1
74. பிழை திருத்தம் (ஒரு-ஓர்)
பிழை திருத்தம் (அது-அஃது; ஒரு-ஓர்)
அது ஒரு இனிய பாடல்.
(A) அது ஓர் இனிய பாடல் (C) அஃது ஒரு இனிய பாடல்
(B) அஃது ஓர் இனிய பாடல் (D) அது ஒரு இனிய பாடல்
(B) அஃது ஓர் இனிய பாடல்
75. பிழை திருத்துக:
ஓர் அணில் மரத்தில் ஏறின.
(A) ஓர் அணில் மரத்தில் ஏறியது (C) ஓர் அணில் மரத்தில் ஏறா
(B) ஓர் அணில் மரத்தில் ஏறின (D) ஓர் அணில் மரத்தில் ஓடா
(A) ஓர் அணில் மரத்தில் ஏறியது
76. சரியான தொடரைத் தேர்ந்தெடு: ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
(A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
(B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
(C) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
77. 'அப்துல் நேற்று வந்தான்' - இது எவ்வகைத் தொடர்?
(A) தன்வினைத் தொடர் (C) செய்தித் தொடர்
(B) பிறவினைத் தொடர் (D) உடன்பாட்டு வினைத் தொடர்
(A) தன்வினைத் தொடர்
78. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்
(B) உணர்ந்தவர்கள் நம் முக்காலமும் முன்னோர்கள்
(C) முன்னோர்கள் நம் உணர்ந்தவர்கள் முக்காலமும்
(D) முக்காலமும் முன்னோர்கள் நம் உணர்ந்தவர்கள்
(A) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்
79. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக.
'வெற்றிலை'
(A) வயல் (C) தோப்பு
(B) கொல்லை (D) தோட்டம்
(D) தோட்டம்
80. பொருத்துக:
(a) முள் (1) சோலை
(b) பூ (2) காடு
(c) பனம் (3) புதர்
(d) தேயிலை (4) தோட்டம்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 1 2 3 4
(C) 3 2 1 4
(D) 2 1 3 4
(A) 3 1 2 4
81. சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண்.
'பசு'
(A) பசுக்கள் (C) பசுகள்
(C) ஆநிரை (D) கூட்டம்
(C) ஆநிரை
82. கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்று பாடியவர் யார்?
(A) வாணிதாசன் (C) பாரதியார்
(B) வியாசபாரதி (D) பாரதிதாசன்
(C) பாரதியார்
83. நேர் பொருளை தேர்வு செய்க.
(A) காருகர் - ஓவியர்
(B) மண்ணீட்டாளர் - சாலியர்
(C) ஓசுநர் - எண்ணெய் விற்போர்
(D) பாசவர் - சிற்பி
(C) ஓசுநர் - எண்ணெய் விற்போர்
84. கலைச் சொற்களை அறிதல்:
கலைச் சொற்களைப் பொருத்துக.
(a) Religion (1) FF6055
(b) Charity (2) வாய்மை
(c) Simplicity (3) சமயம்
(d) Sincerity (4) எளிமை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 1 4 2
(C) 4 2 1 3
(D) 2 3 4 1
(B) 3 1 4 2
85. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
'Revivalism'
(A) மீட்டுருவாக்கம் (C) மறுமலர்ச்சி
(B) நம்பிக்கை (D) மெய்யியலாளர்
(A) மீட்டுருவாக்கம்
86. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
'Antibiotic'
(A) ஒவ்வாமை
(B) மரபணு
(C) நுண்ணுயிர் முறி
(D) சிறு தானியங்கள்
(C) நுண்ணுயிர் முறி
87. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று 1: ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
காரணம் 1: ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
காரணம் 2: நான்கு வேதங்களுள் ஒன்று.
(A) கூற்று தவறு காரணம் 1, 2 சரி
(B) கூற்று தவறு காரணம் 1, 2 தவறு
(C) கூற்று சரி காரணம் 1 சரி 2 தவறு
(D) கூற்று சரி காரணம் 1 சரி 2 சரி
(C) கூற்று சரி காரணம் 1 சரி 2 தவறு
88. கூற்று (i) கா - என்பதற்கு பாரந்தாங்கும் கோல் என்று பொருள்.
கூற்று (ii) தோளில் சுமந்து ஆடுவது
காரணம் : சேர்வையாட்டம் - வழிபாட்டுக் கலையாக நிகழ்த்துகின்றனர்.
(A) அனைத்தும் சரி
(B) அனைத்தும் தவறு
(C) கூற்று (i), (ii) - சரி காரணம் தவறு
(D) கூற்று (i), (ii) - தவறு காரணம் சரி
(C) கூற்று (i), (ii) - சரி காரணம் தவறு
89. கூற்று: நேவிக் என்ற செயலியை விமான பயணத்திற்காக உருவாக்கி இருக்கிறோம்.
காரணம்: வானில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும்.
(A) கூற்று தவறு காரணம் சரி
(B) கூற்று, காரணம் இரண்டும் சரி
(C) கூற்று சரி காரணம் தவறு
(D) கூற்று தவறு காரணம் தவறு
(D) கூற்று தவறு காரணம் தவறு
90. குறில், நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்வு
செய்க:
கொள், கோள்
(A) எடுத்துக் கொள், ஒன்பது கோள்கள்
(B) நவக்கிரகம், அசுப கிரகம்
(C) கிரகப்பிரவேசம், சுபம்
(D) படுத்துக்கொள், உறங்கு
(A) எடுத்துக் கொள், ஒன்பது கோள்கள்
91. குறில், நெடில் மாற்றம் - பொருள் வேறுபாடு அறிக:
வலி வாலி
(A) துன்பம் - இந்திரன் மகன்
(B) காற்று - இந்திரன் மகன்
(C) அடி - இந்திரன் மகன்
(D) பாதை - இந்திரன் மகன்
(A) துன்பம் - இந்திரன் மகன்
92. குறில் நெடில் மாற்றம் - வேறுபாடு
வலை - வாலை
(A) மீன்வலை - பறவை
(B) மீன்வலை - ஆமை
(C) மீன்வலை - இளம்பெண்
(D) மீன்வலை - தெய்வம்
(C) மீன்வலை - இளம்பெண்
93. இருபொருள் தருக:
'உரம்'
(A) வலிமை, வரி (C) வலிமை, எரு
(B) வலிமை, மூங்கில் (D) வலிமை, வணங்கு
(C) வலிமை, எரு
94. இருபொருள் தருக:
இடி - இருபொருள் தருக.
(A) வானம் - சேர்த்தல்
(B) நீர்நிலை - சேர்த்தல்
(C) மலை - சேர்த்தல்
(D) பேரொலி - தகர்த்தல்
(D) பேரொலி - தகர்த்தல்
95. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பொருள்)
(A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் …………….. மாறிவிடும்.
(B) தமிழ் மொழிச் சொற்களில் வார்த்தை மாறினால் …………….. மாறிவிடும்.
(C) தமிழ் மொழிச் சொற்களில் எழுத்து மாறினால் …………….. மாறிவிடும்.
(D) தமிழ் மொழிச் சொற்களில் வடிவம் மாறினால் …………….. மாறிவிடும்.
(A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
96. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இணுக்கு)
(A) கீரை, வாழை முதலியவற்றின் அடி ……… என்பர்.
(B) குச்சியின் பிரிவு ……… என்பர்.
(C) காய்ந்த இலை ……… என்பர்.
(D) நெல், புல் முதலியவற்றின் கொழுந்து ……… என்பர்.
(B) குச்சியின் பிரிவு இணுக்கு என்பர்.
97. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கரைவிளக்கு)
(A) தொலைவில் கலங் ………… த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.
(B) தொலைவில் கலங் ………… த்தின் ஒளி உயர்மதில் சுவரை இடிக்கின்றது.
(C) தொலைவில் கலங் …………….. த்தின் ஒளி உயர்மதில் சுவரை வளர்க்கின்றது.
(D) தொலைவில் கலங் ………….. த்தின் ஒளி உயர்மதில் சுவரை இழுக்கின்றது.
(A) தொலைவில் கலங் கரைவிளக்கு த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.
98. சரியான இணைப்புச் சொல் தேர்க:
அனுமாரின் ஆட்டம் தாளகரிக்கு இணங்கி வருவது மகிழ்ச்சியளித்தது ……………….
நேரம் ஆக ஆக அடி தப்பியது.
(A) ஏனெனில் (C) ஆனால்
(B) எனவே (D) ஆகையால்
(C) ஆனால்
99. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு:
சண்முகம் இன்று வீட்டிற்கு வரமாட்டான் ………….. சென்னைக்குச் செல்கிறான்.
(A) ஏனென்றால் (C) ஆனால்
(B) எனவே (D) அதனால்
(A) ஏனென்றால்
100. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
நெல்லையப்பர் கோவில் ……………… உள்ளது?
(A) எதனால் (C) யாரால்
(C) எங்கு (D) எவை
(C) எங்கு