1. சரியான இணையைக் கண்டறிக:
(A) கதி - துணை
(B) பேறு - மிகுதி
(C) தரம் - செல்வம்
(D) நனி - தகுதி
(A) கதி - துணை
2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) தமிழ் (C) ஹிந்தி
(B) மலையாளம் (D) தெலுங்கு
(C) ஹிந்தி
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(A) போது (C) செம்மல்
(B) கம்மல் (D) அரும்பு
(B) கம்மல்
4. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(A) அவர்கள் இருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது
(B) அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது
(C) அவர்கள் இருவர்க்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
(D) அவர்கள் இருவர்க்கும் டிஸ்கசன் நடந்தது
(B) அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது
5. மரபுப் பிழைகள் ஒலி மரபு:
கூகை
(A) குழறும் (C) கூவும்
(B) அகவும் (D) அலறும்
(A) குழறும்
6. குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) தாவரங்களின் இளநிலை (C) விலங்குகளின் இளநிலை
(B) ஆண்களின் இளநிலை (D) பெண்களின் இளநிலை
(A) தாவரங்களின் இளநிலை
7. இலஞ்சி, கூவல், புனற்குளம், குண்டம், ஊருணி ஆகிய சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
(A) மலைகள் (C) ஊர்கள்
(B) நீர்நிலைகள் (D) விலங்குகள்
(B) நீர்நிலைகள்
8. தில்லம், அழுவம், பதுக்கை, கணையம், அடவி எனும் சொற்கள் எதனைக் குறிக்கும் வேறு பெயர்கள்?
(A) காடு (C) கடல்
(B) மலை (D) ஆறு
(A) காடு
9. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(A) மட்டைக்கூடை, தட்டுக்கூடை, பூக்கூடை, பழக்கூடை
(B) பூக்கூடை, பழக்கூடை, மட்டைக்கூடை, தட்டுக்கூடை
(C) பழக்கூடை, தட்டுக்கூடை, மட்டைக்கூடை, பூக்கூடை
(D) தட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, மட்டைக்கூடை
(D) தட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, மட்டைக்கூடை
10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தெரிவு செய்க மூன்று கோல்டு பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு.
(A) மூன்று கோல்டு பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
(B) மூன்று தங்க பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
(C) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று வெயிட் குறைவு
(D) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு
(D) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு
11. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்:
அரி - அறி
(A) திருமால் - சிவன்
(B) சிவன் - திருமால்
(C) தெரிந்து - அறிந்து
(D) திருமால் - தெரிந்து கொள்
(D) திருமால் - தெரிந்து கொள்
12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க:
'கூரை - கூறை'
(A) கூரிய முனை - வீட்டின் கூரை
(B) கூட்டுப் பண்ணை - வீட்டின் கூரை
(C) வீட்டின் கூரை - புடவை
(D) புடவை - கூர்மையான ஆயுதம்
(C) வீட்டின் கூரை - புடவை
13. சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
(A) போர்க் களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது
(B) போர்க்கலத்தில் புன்பட்ட வீறர்களுக்கு களத்தில் நீர் தறப்பட்டது
(C) போர்க்களத்தில் புண்பட்ட வீறர்களுக்கு களத்திள் நீர் தரப்பட்டது
(D) போர்க்கலத்தில் புண்பட்ட வீறற்களுக்கு களத்தில் நீர் தரப்பட்டது
(A) போர்க் களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது
14. வேர்ச்சொல்லைக் கண்டறிக:
‘விரித்த’
(A) விரித்து (C) விர்
(B) விரி (D) வீர்
(B) விரி
15. வேர்ச்சொல்லைக் கண்டறிக - ‘உரைத்தல்’
(A) உரைக்க (C) உரைத்த
(B) உரைத்து (D) உரை
(D) உரை
16. கண்டான் - வேர்ச்சொல்லைக் கண்டறிக
(A) கண் (C) கண்ட
(B) காண் (D) கண்டு
(B) காண்
17. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்:
தேடுகிறான்
(A) தேடிய (C) தேடினான்
(B) தேடு (D) தேடி
(B) தேடு
18. ‘அஞ்சி' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக
(A) அஞ்சினார் (C) பயந்தனர்
(B) அஞ்சினர் (D) அஞ்சா
(B) அஞ்சினர்
19. 'வா' எனும் வேர்ச்சொல் கொண்டமையும் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
(A) வந்தவர் (C) வந்து
(B) வந்தான் (D) வந்த
(A) வந்தவர்
20. 'வாழ்' என்பதன் தொழிற்பெயரினைக் கண்டறிக
(A) வாழ்ந்தேன்
(B) வாழ்க்கை
(C) வாழ்ந்தவர்
(D) வாழ்ந்த
(B) வாழ்க்கை
21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
'Courage'
(A) துணிவு (C) நேர்மை
(B) தியாகம் (D) சமத்துவம்
(A) துணிவு
22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் சரியான தொடரைக் காண்க:
(A) Paddy - நெற்பயிர்
(B) Cultivation - அறுவடை
(C) Harvest - களையெடுத்தல்
(D) Agronomy - வேளாண்மை
(A) Paddy - நெற்பயிர்
23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் கண்டறிக:
(A) Epic Literature - செவ்விலக்கியம்
(B) Folk Literature - வட்டார இலக்கியம்
(C) Devotional Literature - நவீன இலக்கியம்
(D) Ancient Literature - பண்டைய இலக்கியம்
(D) Ancient Literature - பண்டைய இலக்கியம்
24. பிரித்தெழுதுக:
கலனல்லால்
(A) கலன் + லல்லால் (C) கலம் + அல்லால்
(B) கலன் + அல்லால் (D) கலன் + னல்லால்
(B) கலன் + அல்லால்
25. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:
விழலுக்கு இறைத்த நீர் போல
(A) ஒற்றுமையின்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) பயனற்ற செயல் (D) எதிர்பாரா நிகழ்வு
(B) பயனற்ற செயல்
26. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல்: திருவிழாவைக்காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
(A) தடையின்றி மிகுதியாக (C) பயனற்ற செயல்
(B) வெளிப்படைத்தன்மை (D) எதிர்பாரா நிகழ்வு
(A) தடையின்றி மிகுதியாக
27. விடை வகைகள்:
"கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்
(A) நேர்விடை (C) ஏவல் விடை
(B) இனமொழி விடை (D) சுட்டு விடை
(A) நேர்விடை
28. விடை வகைகள்:
‘உனக்கு ஆடத் தெரியுமா?' என்ற வினாவிற்கு ‘எனக்குப் பாடத் தெரியும்' என உரைப்பது
(A) ஏவல் விடை (C) இனமொழி விடை
(B) உறுவது கூறல் விடை (D) மறை விடை
(C) இனமொழி விடை
29. "நீ நடனமாடவில்லையா?” என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்' என்று உறுவதை
உரைப்பது எவ்வகை விடை?
(A) உற்றது உரைத்தல் விடை (C) நேர் விடை
(B) இனமொழி விடை (D) உறுவது கூறல் விடை
(D) உறுவது கூறல் விடை
30. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க:
(A) அஃது அல்லவை (C) அஃது அல்ல
(B) அஃது அல்லன (D) அஃது அன்று
(D) அஃது அன்று
31. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க:
(A) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தது.
(B) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தான்.
(C) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
(D) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்கின்றது.
(C) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
32. ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக:
(A) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றது.
(B) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
(C) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகிறது.
(D) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வந்துகொண்டிருக்கிறது.
(B) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
33. சரியான தொடரைத் தேர்ந்தெடு:
(A) துன்பத்தின் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(B) துன்பத்தை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(C) துன்பத்தினால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(D) துன்பமே பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(B) துன்பத்தை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
34. சொல் - பொருள் பொருத்துக:
(a) கெடிகலங்கி 1. கூட்டம்
(b) சேகரம் 2. மிகவருந்தி
(c) வாகு 3. மிகவும்
(d) மெத்த 4. சரியாக
(a) (b) (c) (d)
(A) 3 1 2 1
(B) 2 1 4 3
(C) 4 1 3 2
(D) 2 4 1 3
(B) 2 1 4 3
35. பொருள் பொருத்துக:
சொல்
(a) பொலம் 1. காடு
(b) கடறு 2. குட்டி
(c) கோடு 3. அழகு
(d) குருளை 4. கொம்பு
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 3 1 4 2
(C) 2 3 1 4
(D) 4 2 3 1
(B) 3 1 4 2
36. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
'மூன்றினம்'
(A) துறை, தாழிசை, விருத்தம் (C) மா, பலா, வாழை
(B) அறம், பொருள், இன்பம் (D) ஆணவம், கன்மம், மாயை
(A) துறை, தாழிசை, விருத்தம்
37. ‘பாசவர்' என்பதன் பொருள் என்ன?
(A) ஓவியர் (C) வெற்றிலை விற்போர்
(B) எண்ணெய் விற்போர் (D) நெய்பவர்
(C) வெற்றிலை விற்போர்
38. குறில் நெடில் மாற்றம். பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்':
மடு, மாடு
(A) சுனை, குழி
(B) விலங்கு, பொய்கை
(C) பொய்கை, செல்வம்
(D) அணை, விலங்கு
(C) பொய்கை, செல்வம்
39. கொடு, கோடு என்னும் சொற்களின் அடிப்படையில் தவறான பொருள்தரும்
வாக்கியத்தினைக் கண்டறிக
(A) தரையில் கோடு (C) தாமரைக்கு புத்தகம் கோடு
(B) சஞ்சனாவுக்கு பழம் கொடு (D) பென்சிலைக் கொண்டு கோடிடு
(C) தாமரைக்கு புத்தகம் கோடு
40. 'மடி' எனும் சொல்லிற்கு இருபொருள் தரும் இணைகளில் சரியான இணையைக்
கண்டறிக
(A) கூம்பல் - பசும்பல்
(B) சோம்பல் - மடித்தல்
(C) ஆம்பல் - புலம்பல்
(D) ஏசல் - வீசல்
(B) சோம்பல் - மடித்தல்
41. 'இசை' என்பதன் இரு பொருள்களைக் கண்டறிக
(A) பாடல், புகழ்
(B) பாடல், பழி
(C) பழி, புகழ்
(D) தாளம், வசை
(A) பாடல், புகழ்
42. கீழ்க்காணும் சொல்லுக்கு இருபொருள் தருக
செப்புதல்
(A) பேசுதல், விளம்புதல் (C) மொழி, உரைத்தல்
(B) இயம்பல், நடித்தல் (D) கூறல், சிரித்தல்
(A) பேசுதல், விளம்புதல்
43. ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா? சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) ஒருவன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?
(B) ஒருத்தன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?
(C) ஒருவன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்வலமா?
(D) ஒருத்தன் தனியாகப் போனால் அது ஊர்கோலமா?
(A) ஒருவன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?
44. ஒசரமா வளந்துட்டான் - என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) உயரமாக வளர்ந்துவிட்டான் (C) நெட்டையாக வளர்ந்துவிட்டான்
(B) உயரமாகி விட்டான் (D) உசரமாகி விட்டான்
(A) உயரமாக வளர்ந்துவிட்டான்
45. கீழ்க்கண்ட தொடர்களில் சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு, நீயும் புரிஞ்சிக்கோ.
(B) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்து கொள்.
(C) இப்பொழுது எனக்குப் புரிந்தாயிற்று. நீயும் புரிஞ்சுக்கோ.
(D) இப்போது எனக்குப் புரிந்து விட்டது. நீயும் புரிந்து கொள்.
(B) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்து கொள்.
46. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்
(A) எது? (C) யாவை?
(B) யாது? (D) என்ன?
(C) யாவை?
47. பொருத்தமான வினாச் சொல்லை தேர்ந்தெடு.
பாரதியார் படைத்த முப்பெருங்காப்பியங்கள் ………..?
(A) யாவை (C) எது
(B) ஏன் (D) என்ன
(A) யாவை
48. சரியான வினாச் சொல்லை தேர்ந்தெடு.
நால்வகைப் படைகள் ……………?
(A) யாவை? (C) ஏன்?
(B) என்ன? (D) எப்படி?
(A) யாவை?
49. சரியான நிறுத்தற்குறியிடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) ‘சொல் கேட்கிறேன்' என்றான் கணியன்.
(B) 'சொல், கேட்கிறேன்' என்றான் கணியன்.
(C) "சொல் கேட்கிறேன்” என்றான் கணியன்.
(D) "சொல், கேட்கிறேன்” என்றான் கணியன்.
(D) "சொல், கேட்கிறேன்” என்றான் கணியன்.
50. 'முத்தமிழ் இயல் இசை நாடகம்' என்பதற்கு பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டத் தொடரைக் கண்டறிக.
(A) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
(B) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.
(C) முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
(D) முத்தமிழ்: இயல் - இசை - நாடகம்.
(A) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
51. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
பழக்கலவை நிறைந்த ஜாடியில்
தண்ணீரை நிறைத்தனர்
(A) நிறைத்த, நிறைந்த (C) நிறைந்த, நிறைத்த
(B) நிரைத்த, நிரைந்த (D) நிரைந்த, நிரைத்த
(C) நிறைந்த, நிறைத்த
52. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
(A) நாளை வருவார் தலைவர் குடியரசுத்.
(B) குடியரசுத் தலைவர் நாளை வருவார்.
(C) குடியரசுத் நாளை வருவார் தலைவர்.
(D) தலைவர் குடியரசு வருவார் நாளை.
(B) குடியரசுத் தலைவர் நாளை வருவார்.
53. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
(A) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்
(B) இல்லாமை ஆக்குவோம் கல்லாமையை
(C) கல்லாமையை ஆக்குவோம் இல்லாமை
(D) ஆக்குவோம் கல்லாமையை இல்லாமை
(A) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்
54. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
'கோவலன் கொலையுண்டான்'
(A) தன்வினை வாக்கியம் (C) செயப்பாட்டுவினை வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம் (D) செய்வினை வாக்கியம்
(C) செயப்பாட்டுவினை வாக்கியம்
55. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
(I) அவன் திருந்தினான் - பிறவினைத் தொடர்
(II) பாட்டுப் பாடப்பட்டது - செய்வினைத் தொடர்
(III) பணம் காணாமல் போனது - செயப்பாட்டு வினைத் தொடர்
(IV) அப்துல் நேற்று வருவித்தான் - தன்வினைத் தொடர்
(A) (III) (C) (I)
(B) (IV) (D) (II)
(A) (III)
56. அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கத்வைத் திறந்தார்
(A) கலவைத் தொடர் (C) தொடர் சொற்றொடர்
(B) தனித்தொடர் (D) செயப்பாட்டுவினைத் தொடர்
(A) கலவைத் தொடர்
57. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
(A) பந்து உருண்டது (C) பந்து உருட்டினார்
(B) பந்து உருட்டப்பட்டது (D) பந்தால் உருட்டினார்
(A) பந்து உருண்டது
58. 'சிங்கம்' என்பதன் இளமைப் பெயர் எதுவெனக் கண்டறிக.
(A) குட்டி (C) கன்று
(B) குருளை (D) பறழ்
(B) குருளை
59. 'பால்' என்னும் சொல்லுக்கு பொருந்தி வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.
(A) குடித்தான் (C) விழுங்கினான்
(B) பருகினான் (D) சாப்பிட்டான்
(B) பருகினான்
60. பொருத்தமான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை…………….. அவனுக்கு உடல் நலமில்லை
(A) அதனால் (C) ஆகவே
(B) இதனால் (D) ஏனெனில்
(D) ஏனெனில்
61. சரியான இணைப்புச்சொல் எழுதுக.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது ……………….. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
(A) அதனால் (C) மேலும்
(B) ஏனெனில் (D) அதுபோல
(A) அதனால்
62. கலைச்சொல் அறிக:
Tropical zone
(A) குமிழிக்கல் (C) பாசனத்தொழில் நுட்பம்
(B) வெப்பமண்டலம் (D) நீர்மண்டலம்
(B) வெப்பமண்டலம்
63. சரியான கலைச்சொல்லால் பொருத்துக.
(a) Earthworm 1. உலகமயமாக்கல்
(b) Materialism 2. கடவுச்சீட்டு
(c) Passport 3. பொருள் முதல் வாதம்
(d) Globalisation 4. நாங் கூழ்ப்புழு
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 4 3 2 1
(C) 2 4 3 1
(D) 1 3 2 4
(B) 4 3 2 1
64. கலைச்சொல் தேர்க:
Lexicon
(A) உருபன் (C) ஒப்பிலக்கணம்
(B) ஒலியன் (D) பேரகராதி
(D) பேரகராதி
65. சரியான கலைச்சொல்லைத் தேர்க:
Literacy
(A) பட்டம் (C) கல்வியறிவு
(B) நீதி (D) ஒழுக்கம்
(C) கல்வியறிவு
66. பிழைத் திருத்துக.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:
(A) ஒரு அழகிய சிற்றூர் (C) ஓர் அழகிய சிற்றூர்
(B) ஒன்று அழகிய சிற்றூர் (D) ஒருமை அழகிய சிற்றூர்
(C) ஓர் அழகிய சிற்றூர்
67. பிழை திருத்துதல்.
சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு
(A) ஒரு ஏரி (C) ஒன்னு ஏரி
(B) ஒன்று ஏரி (D) ஓர் ஏரி
(D) ஓர் ஏரி
68. கீழ்காணும் தொடர்களில் [ஒரு - ஓர்] சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஓர் மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
(B) ஒரு அழகிய மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருந்தன.
(C) ஓர் பசுமையான மண்தொட்டியில் பூக்கள் வாடியுள்ளன.
(D) ஒரு மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
(D) ஒரு மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
69. தென் தமிழ் நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது?
(A) திருக்கைலாயம் (C) திருத்தணி
(B) திருக்குற்றாலம் (D) திருநின்றவூர்
(B) திருக்குற்றாலம்
70. பத்தியில் இடம் பெற்றுள்ள மரங்களின் பெயர்களைக் கூறுக
(A) கோங்கு, வேங்கை (C) வேம்பு, சந்தனம்
(B) மா, பலா (D) தேக்கு, வாகை
(A) கோங்கு, வேங்கை
71. தமிழ்ப் பாட்டிசைக்கும் உயிரினம் எது?
(A) குயில் (C) வண்டு
(B) மயில் (D) கிளி
(C) வண்டு
72. அருவியினின்று சிதறும் நீர்த்திவலைகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
(A) நீராவி (C) வெள்ளாவி
(B) பாலாவி (D) மஞ்சாவி
(B) பாலாவி
73. பத்தியில் இடம்பெற்றுள்ள மலர்களின் பெயர்களைக் கூறுக
(A) சண்பகமும் ஜவ்வாதும் (C) மல்லிகையும் ரோஜாவும்
(B) கமலமும் அல்லியும் (D) குரவமும் முல்லையும்
(D) குரவமும் முல்லையும்
74. சேர்த்தெழுதுக:
தமிழ் + எங்கள்
(A) தமிழங்கள் (C) தமிழுங்கள்
(B) தமிழெங்கள் (D) தமிழ் எங்கள்
(B) தமிழெங்கள்
75. பிரித்து எழுதுக:
விளங்காய்
(A) விளம் + காய் (C) விளங் + காய்
(B) விள + காய் (D) விளங்ங் + காய்
(B) விள + காய்
76. சேர்த்து எழுதுக:
பனி + காற்று
(A) பனிகாற்று (C) பனிக்காற்று
(B) பனிக்காற்று (D) பனிங்காற்று
(B) பனிக்காற்று
77. சொற்களின் கூட்டுப் பெயர்கள் - சரியானதைத் தேர்ந்தெடு - கரும்பு
(A) கரும்புக் கொல்லை (C) கரும்புத் தோப்பு
(B) கரும்புத் தோட்டம் (D) கரும்புக் கூட்டம்
(B) கரும்புத் தோட்டம்
78. கூற்று - சரியா? தவறா?
கூற்று 1: கலிப்பா தூங்கல் ஓசை உடையது.
கூற்று 2: கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
(A) கூற்று 1 தவறு, 2 - மட்டும் சரி (C) கூற்று இரண்டும் சரி
(B) கூற்று இரண்டும் தவறு (D) கூற்று 1 மட்டும் சரி, 2 - தவறு
(A) கூற்று 1 தவறு, 2 - மட்டும் சரி
79. கூற்று - சரியா? தவறா?
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி
2. காஞ்சி என்றால் நிலைத்திருத்தல் என்பது பொருள்
3. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர்
(A) கூற்று 1,2 தவறு 3 மட்டும் சரி (C) கூற்று 1,2,3 சரி
(B) கூற்று 1,3 சரி 2 மட்டும் தவறு (D) கூற்று 1,2 சரி 3 மட்டும் தவறு
(A) கூற்று 1,2 தவறு 3 மட்டும் சரி
80. கூற்று [A]: கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும், என்பது அண்ணாவின் பொன்மொழி.
காரணம் [R]: 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
(A) கூற்று தவறு காரணம் தவறு (C) கூற்று தவறு காரணம் சரி
(B) கூற்று சரி காரணம் சரி (D) கூற்று சரி காரணம் தவறு
(B) கூற்று சரி காரணம் சரி
81. அடைப்புக்குள் உள்ள சொல்லை, ஔவையார் கூற்றுப்படி தகுந்த இடத்தில் சேர்க்க:
(இடம்)
(A) கற்றோர்க்கு சென்ற ………………….. எல்லாம் சிறப்பு
(B) உற்றோர்க்கு சென்ற ……………………எல்லாம் சிறப்பு
(C) மற்றோர்க்கு சென்ற …………………..எல்லாம் சிறப்பு
(D) ஏற்றோர்க்கு சென்ற ………………………எல்லாம் சிறப்பு
(A) கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு
82. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(ஓரெழுத்து)
(A) தமிழில் நாற்பது …………………………. ஒரு மொழிகள் உள்ளன
(B) தமிழில் நாற்பத்து இரண்டு ………………………ஒரு மொழிகள் உள்ளன
(C) தமிழில் நாற்பத்து மூன்று ……………….. ஒரு மொழிகள் உள்ளன
(D) தமிழில் நாற்பத்து ஒன்று …………………….. ஒரு மொழிகள் உள்ளன
(B) தமிழில் நாற்பத்து இரண்டு ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன
83. பொருத்தமான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:
உலகில் மூவாயிரம் மொழிகள்
(A) பேசப்படும் (C) பேசினர்
(B) பேசப்படுகின்றன (D) பேசுவர்
(B) பேசப்படுகின்றன
84. பின்வருவனவற்றுள் நிகழ்கால இடைநிலைகள்
(A) த், ட், ற், இன் (C) கிறு, கின்று, ஆநின்று
(B) ப், வ் (D) ஆ, அல், இல்
(C) கிறு, கின்று, ஆநின்று
85. இறந்த காலத்தைக் காட்டும் வாக்கியத்தைச் சுட்டுக
(A) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்யும்
(B) நாளை எங்கள் ஊரில் மழை பெய்தது
(C) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
(D) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்கின்றது
(C) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
86. ஏற்றம் - என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக
(A) உயர்வு (C) மாற்றம்
(B) ஏற்றுதல் (D) இறக்க்ம்
(D) இறக்க்ம்
87. பரிதி – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக
(A) சந்திரன் (C) சூரியன்
(B) கதிரவன் (D) வெய்யோன்
(A) சந்திரன்
88. எதிர்ச்சொல் தருக:
இம்மை என்பதன் எதிர்ச்சொல்
(A) இருமை (C) வறுமை
(B) மறுமை (D) இல்லாமை
(B) மறுமை
89. சரியான இணையை தேர்ந்தெடுக்க:
(A) சைதாப்பேட்டை - சைதா
(B) நாகப்பட்டினம் - நாகை
(C) மன்னார்குடி - மயிலை
(D) திருநெல்வேலி - திருநை
(B) நாகப்பட்டினம் - நாகை
90 ‘நாகப்பட்டினம்' என்னும் ஊரின் மரூஉ எதுவெனக் கண்டறிக
(A) நாகப்பட்டி (C) பட்டினம்
(B) நாகை (D) நாவை
(B) நாகை
91. “புரோட்டோகால்” – கலைச்சொல் அறிக
(A) செயல்திட்டம் (C) செயல்பாடுகள்
(B) நிகழ்ச்சிநிரல் (D) மரபுத்தகவு
(D) மரபுத்தகவு
92. Subsidy – நேரான தமிழ்ச்சொல் தருக
(A) நிழுவைத் தொகை (C) கூட்டுத் தொகை
(B) நல்கை (D) நல்ல தொகை
(B) நல்கை
93. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
“பயவாக் களரனையர் கல்லாதவர்"
(A) கல்லாதவர் யார்? (C) களர்நிலம் என்றால் என்ன?
(B) கல்லாதவர் எதைப் போன்றவர்? (D) கல்லாதவரின் நிலை யாது?
(B) கல்லாதவர் எதைப் போன்றவர்?
94. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"பெருஞ்சித்திரனார் 'பாவலரேறு' என அழைக்கப்படுகிறார்"
(A) பெருஞ்சித்திரனார் ஏன் பாவலரேறு என அழைக்கப்படுகிறார்?
(B) பாவலரேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(C) பெருஞ்சித்திரனார் பாவலரேறு என அழைக்கப்படுகிறாரா?
(D) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(D) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
95. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது
(A) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?
(B) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை என்ன?
(C) தூங்கல் ஓசை எப்படி வஞ்சிப்பாவுக்கு உரியது?
(D) ஏன் வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை தூங்கல் ஓசை?
(A) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?
96. தவறான இணையைத் தேர்க:
I. உத்தியோகம் - அலுவல்
II. காரியதரிசி - தலைவர்
III. நிபுணர் - வல்லுநர்
IV. அங்கத்தினர் - உறுப்பினர்
(A) III (C) IV
(B) II (D) I
(B) II
97. பொருத்துக:
(a) கரன்சி நோட் 1. மின்னணு வணிகம்
(b) செக் 2. வரைவோலை
(c) ஈ காமர்ஸ் 3. பணத்தாள்
(d) டிமாண்ட் டிராஃப்ட் 4. காசோலை
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 3 4 2 1
(C) 3 4 1 2
(D) 2 4 3 1
(C) 3 4 1 2
98. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) டென்ஷன் - மனவருத்தம்
(B) டென்ஷன் - மனமாற்றம்
(C) டென்ஷன் - மனமகிழ்ச்சி
(D) டென்ஷன் - மன அழுத்தம்
(D) டென்ஷன் - மன அழுத்தம்
99. பிழையான வாக்கியத்தைக் கண்டறிக:
I. வெள்ளம் அடித்துவந்த மணல் குவிந்தது
II. கையில் காசு சேர்ந்தது
III. ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்தனர்
IV. பூவின் இதழ்கள் விரித்தன
(A) I (C) III
(B) IV (D) II
(B) IV
100. சேர்ந்து - சேர்த்து - பொருள் வேறுபாடறிந்து, தவறான வாக்கியத்தைச் சுட்டுக
(A) ஊருக்கு போய்ச் சேர்ந்தேன்
(B) அவன் பணம் சேர்த்தான்
(C) சங்கவை கல்லூரியில் சேர்ந்தாள்
(D) இராமுவைப் பள்ளியில் சேர்ந்தனர்
(D) இராமுவைப் பள்ளியில் சேர்ந்தனர்