1. சந்திப் பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. தகவல்களைத் திரட்டு
2. தகவல்களை திரட்டு
3. முதியவருக்குக் கொடு
4. முதியவருக்கு கொடு
(A) 1 மற்றும் 3 (C) 3 மற்றும் 4
(B) 2 மற்றும் 3 (D) 1 மற்றும் 4
(A) 1 மற்றும் 3
2. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
விருந்தினர் ஒருவர் வந்தால் அவரை வியந்து உரைத்தல் நன்று
(A) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், விருந்தினர், வியந்து
(B) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்
(C) அவரை, உரைத்தல், ஒருவர், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
(D) அவரை, ஒருவர், உரைத்தல், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
(B) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்
3. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: “நட”
(A) நடந்து (C) நடத்தல்
(B) நடப்பான் (D) நடந்தவன்
(C) நடத்தல்
4. வேர்ச்சொல்லின் வினையெச்சம் கண்டறிக: "தா"
(A) தந்தான் (C) தந்த
(B) தந்து (D) தரல்
(B) தந்து
5. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்கல்
கொடு
(A) கொடுத்தான் (C) கொடுத்து
(B) கொடுக்கிறான் (D) கொடுத்த
(C) கொடுத்து
6. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: "காண்"
(A) கண்டான் (C) கண்ட
(B) கண்டு (D) காணல்
(D) காணல்
7. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
வென்றார்
(A) வென் (C) வெல்
(B) வென்று (D) வெள்
(C) வெல்
8. வந்தவர் - என்பதன் வேர்ச்சொல் எழுதுக.
(A) வரு (C) வா
(B) வருதல் (D) வந்த
(C) வா
9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
வருகிறான்
(A) வரு (C) வருதல்
(B) வா (D) வருகி
(B) வா
10. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
போது, அலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) பூவின் நிலைகள் (C) பிஞ்சு வகைகள்
(B) இளம் பயிர் வகைகள் (D) இலை வகைகள்
(A) பூவின் நிலைகள்
11. பொருள் வேறுபாடறிந்து பொருளைத் தேர்வு செய்க.
பனி பணி
(A) குளிர்ச்சி, வேலை (C) பாறை, பாம்பு
(B) வேலை, குளிர்ச்சி (D) குளிர்ச்சி, வெப்பம்
(A) குளிர்ச்சி, வேலை
12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.
அலை - அழை
(A) கடலலை – அழகு (B) கடலலை — வரவழைத்தல்
(C) வரவழைத்தல் – கடலலை (D) சேறு - வரவழைத்தல்
(B) கடலலை — வரவழைத்தல்
13. மனம், மணம் ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தேர்க
(A) மனசாட்சி, எண்ணம் (B) எண்ணம், உள்ளம்
(C) உள்ளம், வாசனை (D) மாற்றம், செயல்
(C) உள்ளம், வாசனை
14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Objective
(A) குறிக்கோள் (C) நம்பிக்கை
(B) ஒப்பந்தம் (D) பொருள்கோள்
(A) குறிக்கோள்
15. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்.
Artifacts
(A) அழகியல் (C) தொன்மம்
(B) கலைப் படைப்புகள் (D) கலையியல்
(B) கலைப் படைப்புகள்
16. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
(a) Consumer 1. பண்டம்
(b) Merchant 2. நுகர்வோர்
(c) Commodity 3. பாரம்பரியம்
(d) Heritage 4. வணிகர்
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 4 1 2 3
(C) 2 3 1 4
(D) 2 4 1 3
(D) 2 4 1 3
17. சரியான வினைமரபைத் தேர்க.
வளவன் பழம் சாப்பிட்டான்
(A) உண்டான் (C) பருகினான்
(C) தின்றான் (D) அருந்தினான்
(C) தின்றான்
18. பிழை நீக்கி எழுதுக.
சிங்கக் குட்டியையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
(A) சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.
(B) சிங்கக் குருளையையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
(C) சிங்கக் குருளையையும், யானைக்குருளையையும் பார்த்தேன்.
(D) சிங்கக் கன்றையும், யானைக் கன்றையும் பார்த்தேன்.
(A) சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.
19. எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.
-பிழையை நீக்குக.
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
(B) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.
(C) எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) ஊசல் (C) சிறுபறை
(B) சிற்றில் (D) சிறுதேர்
(A) ஊசல்
21. பொருந்தாத இணை எது?
(A) ஏறுகோள் - எருதுகட்டி
(B) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
(C) திருவாரூர் - கரிக்கையூர்
(D) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
(C) திருவாரூர் - கரிக்கையூர்
22. பால் ………….
சரியான மரபுச் சொல்லை எழுதுக.
(A) பால் குடி (C) பால் பருகு
(B) பால் உண் (D) பால் தின்னவும்
(C) பால் பருகு
23. எதிர்ச்சொல் தருக.
தொன்மை
(A) புதுமை (C) பெருமை
(B) பழமை (D) சீர்மை
(A) புதுமை
24. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) கடும்பு சுற்றம் (C) அல்கி - தங்கி
(B) ஆரி-அருமை (D) இறடி- சோறு
(D) இறடி- சோறு
25. 'ஐயம்' என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A) தெளிவு (C) அச்சம்
(B) சந்தேகம் (D) பயம்
(A) தெளிவு
26. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) செ + திறந்த (C) செத்து + திறந்த
(C) செத்து + இறந்த (D) சே + இறந்த
(C) செத்து + திறந்த
27. சேர்த்தெழுதல்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) காட்டாறு (C) காட்டு ஆறு
(B) காடாறு (D) காடு ஆறு
(A) காட்டாறு
28. சரியான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) குழந்தை நிலவைப்பார்த்து, நிலா நிலா ஓடிவா! என்று பாடியது
(B) குழந்தை நிலவைப்பார்த்து, 'நிலா நிலா ஓடி வா!' என்று பாடியது
(C) குழந்தை, நிலவைப்பார்த்து நிலா நிலா ஓடிவா! என்று பாடியது.
(D) குழந்தை நிலவைப்பார்த்து, "நிலா நிலா ஓடி வா" என்று பாடியது.
(C) குழந்தை, நிலவைப்பார்த்து நிலா நிலா ஓடிவா! என்று பாடியது.
29. பொருத்தமான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்
(B) ஏவல், வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்.
(C) ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(D) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்
விழைவுத் தொடர் ஆகும்.
(C) ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
30. சரியான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தேர்க.
(A) சிகாமணிதான், எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து
(B) "சிகாமணிதான் எடுத்திருப்பான்!" என்பது பெரும்பாலோரின் கருத்து.
(C) சிகாமணிதான் எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து.
(D) சிகாமணிதான்! எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து.
(B) "சிகாமணிதான் எடுத்திருப்பான்!" என்பது பெரும்பாலோரின் கருத்து.
31. ஊர்ப்பெயரின் மரூஉவை கண்டறிக
உதகமண்டலம்
(A) உதகைமண்டலம் (C) உதகமண்டல்
(C) உதகை (D) ஊட்டியூர்
(C) உதகை
32. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
நாகப்பட்டினம்
(A) நாகைப்பட்டி (C) நாகையூர்
(B) நாகை (D) நாகைநகர்
(B) நாகை
33. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
கீழ்க்கண்டவற்றுள் புதுச்சேரியின் மரூஉவைத் தேர்ந்தெடுக்க.
(A) புதுகை (C) புதுமை
(B) புதுவை (D) புதுச்சை
(B) புதுவை
34. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சந்தோஷம்
(A) துன்பம் (C) மகிழ்ச்சி
(B) வருத்தம் (D) அமைதி
(C) மகிழ்ச்சி
35. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக
எக்ஸ்பெரிமெண்ட்
(A) சோதனை (C) ஆய்தல்
(B) பரிசோதனை (D) ஆய்வகம்
(A) சோதனை
36. பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லினை எழுதுக.
தொங்கான்
(A) பேருந்து (C) ஏவுகணை
(B) விமானம் (D) கப்பல்
(D) கப்பல்
37. 'எழுது' எனும் வேர்ச்சொல்லின் வினைமுற்று சொல்லைக் கண்டறிக.
(A) எழுதுக (C) எழுதினாள்
(B) எழுதுதல் (D) எழுதிய
(C) எழுதினாள்
38. "உனக்கு பாடத் தெரியுமா?" என்ற வினாவிற்கு 'ஆடத்தெரியும்' என பதில் கூறுவது,
எவ்வகை விடை?
(A) வினா எதிர் வினாதல் விடை (C) உறுவது கூறல் விடை
(B) உற்றது உரைத்தல் விடை (D) இனமொழி விடை
(D) இனமொழி விடை
39. விடை வகையை கண்டறிக.
'நீ விளையாட வில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று கூறுவது
(A) சுட்டு விடை (C) உறுவது கூறல் விடை
(B) உற்றது உரைத்தல் விடை (D) ஏவல் விடை
(C) உறுவது கூறல் விடை
40. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
Degree
(A) பட்டயம் (C) செப்பேடு
(B) சட்ட ஆணை (D) பட்டம்
(D) பட்டம்
41. அலுவல் சார்ந்த கலைச்சொல்
Volunteer - என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) சமூகப் பணியாளர் (C) தன்னார்வலர்
(B) அறக்கட்டளை (D) நுகர்வோர்
(C) தன்னார்வலர்
42. அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக.
பைல் (file)
(A) மை பொதி (C) இழுவை முத்திரை
(B) மடிப்புத் தாள் (D) கோப்பு
(D) கோப்பு
43. கலைச்சொல்லிற்கானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது.
'Infrared Rays'
(A) விண்வெளிக் கதிர்கள் (C) புற ஊதாக் கதிர்கள்
(B) புறசிவப்புக் கதிர்கள் (D) அகச்சிவப்புக் கதிர்கள்
(D) அகச்சிவப்புக் கதிர்கள்
44. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல" - உவமை கூறும் பொருள் தெளிக.
(A) தெளிவு (C) ஐயம்
(B) கடினம் (D) கவனம்
(A) தெளிவு
45. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
உடலும் உயிரும் போல
(A) வேற்றுமை (C) நம்பிக்கை
(B) ஒற்றுமை (D) உண்மை
(B) ஒற்றுமை
46. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
'தாமரை இலை நீர் போல'
(A) தாமரை இலை மேல் நீர் ஒட்டாது
(B) பாதுகாப்பின்றி அலைதல்
(C) செல்வத்துடன் வாழ்தல்
(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்
(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்
47. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
"தன் வினைத் தொடரைக் கண்டறிக."
(A) அவனைத் திருந்தச் செய்தான்
(B) அவன் திருந்தினான்
(C) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்
(D) அப்பா சொன்னார்
(B) அவன் திருந்தினான்
48. தன்வினைத் தொடரைக் கண்டறிக.
(A) பந்து உருட்டியது
(B) பந்து உருண்டது
(C) பந்து உருட்ட வைத்தான்
(D) உருட்டிய பந்து
(B) பந்து உருண்டது
49. ஓவியம் குமரனால் வரையப்பட்டது.
- இது எவ்வகை வாக்கியம்.
(A) செயப்பாட்டு வினை (C) தன்வினை
(B) செய்வினை (D) பிற வினை
(A) செயப்பாட்டு வினை
50. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை
(A) துவ்வாமை என்னும் சொல் குறித்து எழுதுக
(B) துவ்வாமை என்பதன் பொருள் சேராமை என்பது சரியா?
(C) துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?
(D) துவ்வாமை எதனால் வரும்?
(C) துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?
51. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
(A) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
(D) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(D) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
52. வினைகளின் பொருளை கண்டறி.
பணித்து, பணிந்து
(A) பணிந்து நடந்தால் உயர்வு வரும்
(B) ஒற்றுமையே உயர்வு
(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்
(D) பணிதலும், பணித்தலும் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்
(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்
53. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
அழித்து - அழிந்து
(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்
(B) மரங்கள் அழித்ததால் மனிதன் அழிந்தான்
(C) மரங்கள் அழியாததால் மனிதன் அழிந்தான்
(D) மரங்கள் அழிந்ததால் மனிதன் அழித்தான்
(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்
54. சரியான தொடரைத் தேர்ந்தெடு
பணிந்து - பணித்து
(A) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்
(B) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(C) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்
(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
55. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்
(B) மீனை சாண்டியாகோ பிடித்தார் மிகப்பெரிய
(C) சாண்டியாகோ பிடித்தார் மீனை மிகப்பெரிய
(D) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனை
(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்
56. இருவினைகளின் பொருள் வேறுபாடறிக.
சேர்த்து - சேர்ந்து
(A) சேர்ந்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(C) சேர்ந்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(D) சேர்த்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
57. ஏறுகோள் பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?
(A) சிலப்பதிகாரம் (C) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை (D) வளையாபதி
(A) சிலப்பதிகாரம்
58. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்படும் சங்க இலக்கிய நூல்?
(A) குறுந்தொகை (B) கலித்தொகை
(C) அகநானூறு (D) நற்றிணை
(B) கலித்தொகை
59. புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகை நூல்?
(A) இலக்கியம் (C) இலக்கணம்
(B) காப்பியம் (D) சிற்றிலக்கியம்
(C) இலக்கணம்
60. எருதுகட்டி என்பது ……….. நிகழ்வு
(A) ஏறுகட்டு (C) கோள் ஏறு
(B) எருதுகட்டு (D) மாடுதழுவுதல்
(D) மாடுதழுவுதல்
61. கண்ணுடையம்மன் பள்ளு நூல் எவ்வகையைச் சார்ந்தது?
(A) சிற்றிலக்கியம் (C) காப்பியம்
(B) பேரிலக்கியம் (D) பக்தி இலக்கியம்
(A) சிற்றிலக்கியம்
62. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஊண் - ஊன்
(A) மாமிசம் சாப்பிடு (C) உணவு-புலால்
(B) உணவு ஊட்டச்சத்து (D) புரதம் – உண்டி
(C) உணவு-புலால்
63. ஒரு-ஓர்-பயன்பாடு சரியாக அமைந்த தொடரைத் தேர்க
(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(B) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
64. பிழை திருத்துதல் (ஒரு, ஓர்)
சரியானத் தொடரைத் தேர்க.
(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(C) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(D) ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
65. சொல்லுக்குரிய பொருளைத் தேர்வு செய்.
(a) நேமி 1. தூவி
(b) சுவல் 2. மலை
(c) கோடு 3. தோள்
(d) தூஉய் 4. வலம்புரிச் சங்கு
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 1 3 4
(D) 1 4 2 3
(A) 4 3 2 1
66. பொருத்துக.
சொல் பொருள்
(a) தெளிவு 1. அகற்றுவதற்கு
(b) ஓர்தல் 2. நற்காட்சி
(c) பிணி 3. நல்லறிவு
(d) பேர்தற்கு 4. துன்பம்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 3 2 1
(C) 1 3 4 2
(D) 3 2 4 1
(A) 2 3 4 1
67. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
(a) ஆ 1. மலர்
(b) பா 2. வான்
(c) வீ 3. பசு
(d) மீ 4. பாடல்
(a) (b) (c)
(A) 4 3 2 1
(B) 1 4 3 2
(C) 3 4 1 2
(D) 2 3 4 1
(C) 3 4 1 2
68. சொல் - பொருள் பொருத்துக.
(a) செப்பல் ஓசை 1. வஞ்சிப்பா
(b) அகவல் ஓசை 2. கலிப்பா
(c) துள்ளல் ஓசை 3. வெண்பா
(d) தூங்கல் ஓசை 4. ஆசிரியப்பா
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 3 2 1 4
(D) 1 3 2 4
(A) 3 4 2 1
69. ஒருமை பன்மை - பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
(A) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளன
(B) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளது
(C) உலகில் பல வகையான செல்வங்கள் உள்ளன
(D) உலகில் பல வகை செல்வங்கள் உள்ளது
(C) உலகில் பல வகையான செல்வங்கள் உள்ளன
70. ஒருமை - பன்மை பிழையற்றத் தொடர் எது?
(A) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினார்
(B) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றியது
(C) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினான்
(D) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றின
(A) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினார்
71. சரியான தொடரைத் தேர்ந்தெடு
எவ்வளவு பெரிய வினாத்தாள்
(A) உணர்ச்சித் தொடர் (C) செய்தித் தொடர்
(B) வினாத் தொடர் (D) பெயர்ப் பயனிலைத் தொடர்
(A) உணர்ச்சித் தொடர்
72. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
பூக்களைப் பறிக்காதீர் - இது எவ்வகைத் தொடர்?
(A) வினாத் தொடர் (C) கட்டளைத் தொடர்
(B) உணர்ச்சித் தொடர் (D) செய்தித் தொடர்
(C) கட்டளைத் தொடர்
73. கூட்டப் பெயரைக் குறிப்பிடு.
புல்
(A) கட்டு (C) குவியல்
(B) தோகை (D) கூட்டம்
(A) கட்டு
74. கூட்டப் பெயரைத் தெரிவு செய்க.
மாடு
(A) மாடுகள் (C) மாட்டு மந்தை.
(B) மாட்டுப் பட்டி (D) மாட்டுக் கொட்டகை
(C) மாட்டு மந்தை
75. சொற்களின் கூட்டப் பெயர்கள்
தென்னை என்பதன் கூட்டுப் பெயர் என்ன?
(A) தென்னந்தோட்டம் (C) தென்னங்காடு
(B) தென்னந்தோப்பு (D) தென்னஞ்சோலை
(B) தென்னந்தோப்பு
76. 'ஞாயிறு' என்னும் சொல் குறிக்காத பொருள்
(A) பகலவன் (C) சந்திரன்
(B) சூரியன் (D) கதிரவன்
(C) சந்திரன்
77. பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்.
சிங்கத்தின் இளமைப் பெயர் ………..
(A) பறழ் (C) குட்டி
(C) குருளை (D) கன்று
(C) குருளை
78. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
காலை ஒளியினில் மலரிதழ் …………………..
சோலைப் பூவினில் வண்டினம் ………………
(A) அவிழும் – கவிழும் (C) செல்லும் - செல்லாது
(B) தங்கும் – தங்காது (D) கூவும் - கத்தும்
(A) அவிழும் – கவிழும்
79. சரியான கலைச்சொல் தேர்க:
Metaphor
(A) உவமை அணி (C) சிலேடை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி (D) உருவக அணி
(D) உருவக அணி
80. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கல்வி வளர்ச்சி நாள்)
(A) காமராசர் வளர்ந்த நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.
(B) காமராசர் பிறந்த நாள் ……………. ஆகக் கொண்டாடப்படுகிறது.
(C) காமராசர் ஆட்சி நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.
(D) காமராசர் மறைந்த நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.
(B) காமராசர் பிறந்த நாள் ……………. ஆகக் கொண்டாடப்படுகிறது.
81. சரியான இணைப்புச் சொல் தேர்க:
காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில். மக்கள் அவரை அன்போடு
'காயிதே மில்லத்' என்று அழைத்தனர்.
(A) ஏனெனில் (C) இல்லையென்றால்
(B) ஆனால் (D) மேலும்
(B) ஆனால்
82. சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது
காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
(A) ஆகையால் (C) எனவே
(B) அது போல (D) ஏனெனில்
(A) ஆகையால்
83. சரியான இணைப்புச் சொல் தருக.
தீபஒளித் திருநாளில் பட்டாசு அதிகம் வெடித்தனர் ……………… காற்று மாசு அடைந்தது.
(A) அதனால் (C) இல்லையென்றால்
(B) மேலும் (D) ஏனெனில்
(A) அதனால்
84. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்.
…………………. துன்பப்பட நேரிடும்.
(A) எனவே (C) இல்லையென்றால்
(B) ஆகையால் (D) மேலும்
(C) இல்லையென்றால்
85. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
திருக்குறளை இயற்றியவர்
(A) எத்தனை (C) யார்
(B) எது (D) எப்போது
(C) யார்
86. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
"தமிழழகனாரின் இயற்பெயர்
(A) எப்படி (C) எவ்வாறு
(B) என்ன (D) எங்கு
(B) என்ன
87. காலமறிந்து பொருத்துக.
(a) நான் 1. முன்னேறினான்
(b) பொன்னன் 2. கேட்பாள்
(c) அவள் 3. வருகிறார்
(d) அவர் 4. சென்றேன்
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 3 1 2 4
(C) 4 1 2 3
(D) 2 4 1 3
(C) 4 1 2 3
88. தவறான வினாவைத் தேர்ந்தெடு.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றார்.
(A) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
(B) பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்கு சென்றாள்?
(C) பூங்கொடி பள்ளிக்கு ஏன் சென்றாள்?
(D) திங்கள் கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றது யார்?
(C) பூங்கொடி பள்ளிக்கு ஏன் சென்றாள்?
89. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
பின்வரும் சொற்களில் 'புல்' என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லைத் தரும் சொல்லைக் கண்டறிக.
(A) வெளி (C) கால்
(B) கண் (D) காள்
(A) வெளி
90. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. இப்ப ஒசரமா வளந்துட்டான்.
(A) இப்போது ஒசரமா வளர்ந்துட்டான்
(B) இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான்
(C) இப்பொழுது ஒசரமா வளர்ந்திட்டான்
(D) இப்போது உயரமா வளந்துட்டான்
(B) இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான்
91. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று. வீரப்பன் ஒரு கடுதாசி குடுத்தான்.
(A) வீரப்பன் ஒரு கஷாயம் குடித்தான்
(B) வீரப்பன் ஒரு கடிதம் குடுத்தான்
(C) வீரப்பன் ஒரு கடுதாசி கொடுத்தான்
(D) வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்
(D) வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்
92. மாலை-என்பதன் இருபொருள் தருக.
(A) ரோஜாப்பூ, மல்லிகை
(B) பூமாலை, அந்திப்பொழுது
(C) மலையோரம், மாலை
(D) காலை, மாலை
(B) பூமாலை, அந்திப்பொழுது
93. இரு பொருள் தருக.
சரியான இருபொருள் இணையைத் தேர்ந்தெடு - "ஓவியம்"
(A) காகிதம், வண்ணம்
(B) படம், தாள்
(C) அழகு, புலவர்
(D) சித்திரம், படம்
(D) சித்திரம், படம்
94. குறில் நெடில் அடிப்படையில் தவறான இணையைக் கண்டறிக.
வீடு - விடு
பெறு - பேறு
கோள் - கேள்
மின் - மீன்
(A) விடு – வீடு (C) கோள் - கேள்
(B) பெறு – பேறு (D) மின் – மீன்
(C) கோள் - கேள்
95. குறில் நெடில் வேறுபாடு உணர்த்தும் பொருந்திய இணையைத் தேர்க.
பரி - பாரி
(A) வள்ளல் - குதிரை
(B) குதிரை - வள்ளல்களில் ஒருவர்
(C) யானை - வள்ளல்களில் ஒருவர்
(D) பொன் - மழை
(B) குதிரை - வள்ளல்களில் ஒருவர்
96. குறில் நெடில் வேறுபாடு உணர்ந்து பொருள் பொருந்திய தொடரைத் தேர்க.
மடு - மாடு
(A) மது - விலங்கு
(B) மக்கள் - விலங்கு
(C) நீர்நிலை - செல்வம்
(D) விலங்கு - செல்வம்
(C) நீர்நிலை - செல்வம்
97.கூற்று: நாகை மாவட்டம் செம்பியம் கண்டியூரில் மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
காரணம் 1 : கலையழகு மிகுந்த உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மட்பாண்டக் கலை.
காரணம் 2 : தமிழருக்கும், மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள்.
(A) கூற்றும் காரணம் 1 சரி 2 தவறு
(B) கூற்றும், காரணம் 1, 2ம் சரி
(C) கூற்று தவறு காரணம் 1, 2 சரி
(D) கூற்று சரி காரணம் 1 தவறு 2 சரி
(B) கூற்றும், காரணம் 1, 2ம் சரி
98. கலைச் சொல் அறிதல்.
Media
(A) ஊடகம் (C) மொழியியல்
(B) ஒலியியல் (D) இதழியல்
(A) ஊடகம்
99. கலைச்சொல் தருக.
Patriotism
(A) நாட்டுப்பற்று (C) இலக்கியம்
(B) கலைக்கூடம் (D) மெய்யுணர்வு
(A) நாட்டுப்பற்று
100. CONICAL STONE என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் யாது?
(A) கருங்கல் (C) வட்டக்கல்
(B) செங்கல் (D) குமிழிக்கல்
(D) குமிழிக்கல்