குடிமக்களும் குடியுரிமையும் (8th சமூக அறிவியல்)

 1.    குடிமகன் (Citizen) என்ற சொல் சிவிஸ் என்னும் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது – இலத்தீன்.

2.    இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு1955.

3.    இந்தியா மக்களுக்கு வழங்குகிற குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை.

4.    குடியுரிமையின் வகைகள் : வகை.

          1.    இயற்கை குடியுரிமை : பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை.

          2.    இயல்புக் குடியுரிமை : இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை.

5.    இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை பெறலாம் : 5.

          1.    பிறப்பால் குடியுரிமை .

          2.    வம்சாவழியாக குடியுரிமை பெறுதல்.

          3.    பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்.

          4.    இயல்பு குடியுரிமை.

          5.    பிரதேசங்கள் இணைத்ததன் மூலம் பெரும் குடியுரிமை.

6.    இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை இழத்தல் : 3.

          1.    தானாக முன்வந்து குடியுரிமையை துறத்தல்குடியுரிமையை துறத்தல்

          2.    குடியுரிமையை முடிவுக்கு வருதல்சட்டப்படி நடைபெறுதல்

          3.    குடியுரிமை மறுத்தல்கட்டாயமாக முடிவுக்கு வருதல்

7.    இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் -ஆண்டுகள்.

8.    இயல்பு குடியுரிமை :

          1.    விண்ணப்பிப்பது மூலம் குடியுரிமை பெறலாம்.

          2.    வெளிநாட்டு குடியுரிமையை துறக்கும் பட்சத்தில் பெறலாம்.

9.    1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவரின் தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் பெறும் குடியுரிமை - வம்சாவழி குடியுரிமை.

10.   பிறப்பால் பெரும் குடியுரிமை :

          1.    1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த பெற்றோரின் மகன் .

          2.    1987ஜூலை 1 மற்றும் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

          3.    2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள்.

11.   சிவிஸ் என்பதன் பொருள்குடியிருப்பாளர்.

12.   1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் பெரும் குடியுரிமை - வம்சாவளிக் குடியுரிமை.

13.   2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.

14.   பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்தியா குடியுரிமையை வழங்கியஆண்டு-1962.

15.   அரசியலமைப்புச் சட்டத்தின் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடப்படும் பகுதி , பிரிவுகள் –

பகுதி II ,  பிரிவு 5 -11.

16.   பூர்வீகம்பிறப்பு , இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலைகுடியுரிமை.

17.   இரட்டைக் குடியுரிமை உள்ள நாடுகள்அமெரிக்கா & சுவிட்சர்லாந்து.

18.   ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவனுக்கு வழங்கப்படுவதுகுடியுரிமை.

19.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் - பிரவாசி பாரதிய தினம் ஜனவரி 9.

20.   காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த தினம் ஜனவரி 9.

21.   PIO முறை 0CI - ல் இணைக்கப்பட்ட ஆண்டு - 2015 ஜனவரி 9

22.   இந்திய கடவுச்சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் – NRI - NON RESIDENT INDIAN.

23.   இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் இந்திய பூர்வீக குடிகள் ஆவார் – PIO - PERSON ON INDIAN ORIGIN.

24.   வெளிநாட்டு குடிமக்கள் காலவரையின்றி இந்தியாவில் வசித்தல் மூலம் பெரும் குடியுரிமை – OCI- OVERSEAS CITIZEN OF INDIAN CARD.

25.   ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களின் வகைகள் என்ன - அந்நியர் , குடியேறியவர்.

26.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது - ஆண்டுகள்.

27.   இந்தியாவின் முதல் குடிமகன் - குடியரசுத் தலைவர்.

28.   அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இரட்டை குடியுரிமை வழங்குகிறது.

29.   இந்தியா - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.

30.   குடியுரிமையை உரிமையை - மாற்ற முடியும்நாட்டு உரிமையை - மாற்ற இயலாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.