பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கை (8th சமூக அறிவியல்)

 1.    இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி - குடியரசுத் தலைவர்.

2.    இந்தியாவில் பாதுகாப்பு படைகளின் பிரிவுகள் :

          1.    இந்திய ஆயுதப் படைகள்

          2.    துணை இராணுவப் படைகள்

          3.    மத்திய ஆயுதக் காவல் படைகள்

3.    இந்திய ஆயுதப் படைகளை உள்ளடக்கியது :

          1.    இராணுவப் படை

          2.    கடற்படை

          3.    விமானப் படை

          4.    கடலோரக் காவல்படை

4.    இந்திய ஆயுதப்படைகள் எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  -பாதுகாப்பு அமைச்சகம்.

5.    இந்திய துணை இராணுவப் படைகள் - அசாம் ரைபில்ஸ்  , சிறப்பு எல்லைப்புறப்படை.

6.    மத்திய ஆயுதக் காவல் படைகள் : BSF, CRPF , ITBP, CISF , SSB.

7.    மத்திய ஆயுதக் காவல் படைகள் - மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்.

8.    தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு இராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுறின்ற படைப்பிரிவு  - CAPF.

9.    இந்திய ஆயுதப் படைகளை கெளரவிப்பதற்காக இந்திய அரசால் கட்டப்பட்டுள்ளது - தேசியப் போர் நினைவுச் சின்னம்.

10.   புது டெல்லியில் உள்ள இந்தியகேட் அருகில்  40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது- தேசியப் போர் நினைவுச் சின்னம்.

11.   இந்திய இராணுவப் படை ஜெனரல் என்றழைக்கப்படும் 4  நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.

12.   ரெஜிமென்ட் என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்ட இராணுவம் - இந்திய இராணுவம்.

13.   இந்திய இராணுவம் செயல்பாட்டு ரீதியாகவும் புவியியல் அடிப்படையிலும் எத்தனை படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது-7.

14.   இந்திய கடற்படை  - அட்மிரல் என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.

15.   இந்திய கடற்படை எத்தனை கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது – 3.

16.   இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவி - பீல்டு மார்ஷல்.

17.   இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் - சாம் மானக் ஷா.

18.   இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி - அர்ஜுன் சிங்.

19.   மெட்ராஸ் ரெஜிமென்ட் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1758.

20.   இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்று - மெட்ராஸ் ரெஜிமென்ட்.

21.   ரெஜிமென்ட்தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் எனுமிடத்தில் உள்ளது.

22.   இராணுவ அதிகாரி களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது-1962 ம் ஆண்டு நடந்த சீன - இந்திய போர்.

23.   இந்திய இராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க பயற்சிப் பள்ளிகள் நிறுவப்பட்டன இடம் – பூனா , சென்னை.

24.   அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியானது அதிகாரிகள் பயிற்சி அகாடமி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது -1998 ஜனவரி 1.

25.   ஏர் சீப் மார்ஷல் என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறதுஇந்திய விமானப்படை.

26.   இந்திய விமானப்படை எத்தனை படைப்பிரிவுகளைக் கொண்டது7.

27.   இந்திய கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு – 1978.

28.   சோழ மன்னர் முதலாம் இராஜேந்திரன் தென் கிழக்கு ஆசியாவின் கடல் சார் பகுதியான ஸ்ரீ விஜயம் மீது  கடற்படையெடுப்பை தொடங்கிய ஆண்டு - கி.பி 1025. கேதா என்றழைக்கப்படும் கடாரம் பகுதியை வென்றார்.

29.   இந்திய துணை இராணுவப் படைகள் - அசாம் ரைபில்ஸ்  , சிறப்பு எல்லைப்புறப்படை.

30.   அஸ்ஸாம் ரைபிள்ஸ்  AR இராணுவப்படை பிரிட்டிஷாரால்  உருவாக்கப்பட்ட ஆண்டு – 1835.

31.   அஸ்ஸாம் ரைபிள்ஸ் - கச்சார் லெவி என அழைக்கப்படும் குடிப்படை .

32.   அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப்பிரிவின் பிரிவுகள் எத்தனை -46.

33.   அஸ்ஸாம் ரைபில்ஸ் - உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

34.   சிறப்பு எல்லைப்படை உருவாக்கப்பட்ட ஆண்டு  - 1962.

35.   மத்திய ஆயுதக் காவல் படைகள்:

          1.    மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)

          2.    இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் (ITBP)

          3.    எல்லை பாதுகாப்புப் படை (BSF)

          4.    மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF)

          5.    சிறப்பு சேவை பணியகம் (SSB)

36.   தேசிய மாணவர் படை (National Cadet Corps - NCC) என்பது எந்த படைகளை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும் - இராணுவப்படை , கடற்படை , விமானப்படை.

37.   மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்பு பிரிவு - விரைவு அதிரடிப் படை.Rapid Action Force – RAF.

38.   மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அமைக்கப்பட்ட ஆண்டு - 1969 மார்ச் 10.

39.   இந்தியா - நேபாளம்  , இந்தியா - பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் எல்லை ஆயுதப் படைகள் - சிறப்பு சேவை பணியகம் , சாஷாஸ்திர சீமா பால்.

40.   ஊர்க்காவல் படை ஒரு - தன்னார்வ காவல் படை .

41.    ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடைய வயது - 18 முதல் 50 வயது  , பதிவிக்காலம் - 3 முதல் 5 ஆண்டுகள்.

42.   அமைதிக்கான ஐந்து கொள்கைகளை பஞ்சசீலம் அறிவித்தவர்  - ஜவஹர்லால் நேரு.

43.   பஞ்சசீலத்தின் கொள்கை:

          1.    ஒவ்வொரு நாட்டின் எல்லையையும்இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.

          2.    பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.

          3.    பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலைியடாதிருத்தல்.

          4.    பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.

          5.    அமைதியாக இணைந்திருத்தல்.

44.   அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் - வி.கேகிருஷ்ணமேனன்.

45.   அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்நாடுகள்:

          1.    ஜவஹர்லால் நேரு - இந்தியா

          2.    டிட்டோ                         -  யுகோஸ்லாவியா

          3.    நாசர்                     -  எகிப்து

          4.    சுகர்னோ                       - இந்தோனேசியா

          5.    குவாமே நிக்ரூமா   - கானா

46.   ஆப்பிரிக்க இனவெறிக்கு எதிரான ஓர் உறுதியான போராளி - நெல்சன் மண்டேலா.

47.   தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்த ஆண்டு- 1900.

48.   இந்தியா எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் :

          1.    வடமேற்கில்          - பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான்

          2.    வடக்கில்               - சீனா , நேபாளம் , பூடான்

          3.    கிழக்கில்               - வங்காளதேசம்

          4.    தூர கிழக்கில்         - மியான்மர்

          5.    தென்கிழக்கில்        - இலங்கை

          6.    தென்மேற்கில்        - மாலத்தீவு.

49.   சார்க் அமைப்பின்  உறுப்பு நாடுகள் :  8.

          1.    இந்தியா

          2.    வங்காளதேசம்

          3.    பாகிஸ்தான்

          4.    நேபாளம்

          5.    பூடான்

          6.    இலங்கை

          7.    மாலத்தீவு

          8.    ஆப்கானிஸ்தான்

50.   வங்காளதேசம்சீனாஇந்தியாமியான்மர் பொருளாதார போக்குவரத்து ,எரிசக்தி , தொலை தொடர்பு ஆகியவற்றில் எல்லை கடந்து ஒரு செழிப்பான பொருளாதார மண்டலத்தை உருவாக்க உதவுகிற கூட்டமைப்பு - பி.சி..எம் (BCIM).

51.   பிம்ஸ்டெக் BIMSTEC உறுப்பு நாடுகள் : 7.

          1.    வங்காளதேசம்

          2.    இந்தியா

          3.    மியான்மர்

          4.    இலங்கை

          5.    தாய்லாந்து

          6.    பூடான்

          7.    நேபாளம்

52.   பிபிஎன் . BBIN பயணிகள்சரக்கு மற்றும் எரிசக்தி மேம்பாடு ஆகியவைகளின் பரிமாற்றத்திற்கான கூட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் - வங்காளதேசம் , பூடான் , இந்தியா , நேபாளம்.

53.   பொருத்துக:

          1.    நெல்சன் மண்டேலா  - இனவெறிக் கொள்கை

          2.    தேசிய போர் நினைவுச் சின்னம் - புதுடெல்லி

          3.    மானக் ஷா - பில்டு மார்ஷல்

          4.    சார்க்   – உறுப்பு நாடுகள்

          5.    பி.சி..எம்  - எரிசக்தி மேம்பாடு

54.   பொருத்துக:

          1.    இராணுவ தினம் - ஜனவரி 15

          2.    கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 1

          3.    மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தினம்மார்ச் 10

          4.    விரைவு அதிரடிப் படை தினம் - அக்டோபர் 7

          5.    விமானப்படை தினம்அக்டோபர் 8

          6.    கடற்படை தினம்  - டிசம்பர் 4

          7.    ஆயுதப்படைகள் கொடி தினம் - டிசம்பர் 7

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.