1. மாநில அரசின் தலைவராக ஆளுநர் இருப்பார் என குறிப்பிடுவது - இந்திய அரசியலமைப்பு சட்டம்.
2. ஆளுநரை நியமிப்பவர் – குடியரசுத்தலைவர்.
3. மாநில நிர்வாகத்தின் தலைவர் – ஆளுநர்.
4. ஆளுநரின் பதவிக் காலம் - 5 ஆண்டு.
5. ஆளுநர் நியமனம்:
i . குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார்.
ii. தொடர்புடைய - மாநில அரசை கலந்து ஆலோசிக்கிறார்.
6. ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவதில்லை
7. மாநில ஆளுநராக நியமிக்கபடுவதற்கான தகுதிகள்.
1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
3. பாராளுமன்றம் அ) சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
4. ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் வகித்தல் கூடாது.
8. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி - ஆரளுநர்.
9. முதலமைச்சரையும் அவரது ஆலோசனையின் பேரில் அமைச்சர்களையும் நியமனம் செய்பவர் – ஆளுநர்.
10. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் & உறுப்பினர்களை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
11. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் – ஆளுநர்.
12. ஆளுநர் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்ட பிரிவு 356 ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
13. மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் – ஆளுநர்.
14. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் ,கலைக்கவும் அதிகாரம் பெற்றவர் – ஆளுநர்.
15. பணம் மசோதாவை யாருடைய ஒப்புதலுக்கு பின்னரே சட்டமன்றத்தில் கொண்டு வரமுடியும்- ஆளுநர்.
16. சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றவர் – ஆளுநர்.
17. சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்பவர் –ஆளுநர்.
18. மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம் கலை, சமூக சேவை, கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் 1/6 பங்கு அளவிற்கு உறுப்பினர்களை செய்பவர் - ஆளுநர்.
19. மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை யாருடைய ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது- ஆளுநர்.
20. பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பவர் – ஆளுநர்.
21. மாநில அரசின் எதிர்பாராத செலவின நிதி யாருடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் - ஆளுநர்.
22. மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவர்- ஆளுநர்.
23. மத்திய அரசின் ஒரு முகவராக மாநிலத்தில் செயல்படுபவர் – ஆளுநர்.
24. மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சியின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்.
25. அமைச்சரவையின் தலைவர்- முதலமைச்சர்.
26. முதலமைச்சரின் பதவிக்காலம் - சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.
27. முதலமைச்சர் பதவி விலகல் - ஒட்டுமொத்த அமைச்சரவையின் பதவி விலகலை குறிக்கும்.
28. முதலமைச்சராக பதவி ஏற்கும்போது அவர் உறுப்பினராக இல்லாவிட்டால் எத்தனை மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்-6.
29. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் –முதலமைச்சர்.
30. ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமனம் செய்யும்போது யாருடைய ஆலோசனைப்படியே நியமிக்கிறார்- முதலமைச்சர் , மற்ற அமைச்சர்கள்.
31. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் :
1. ஆந்திர பிரதேசம்
2. தெலுங்கானா
3. கர்நாடகா
4. பீகார்
5. உத்தர பிரதேசம்
6. மகாராஷ்டிரம்
7. ஜம்மு காஷ்மீர்
32. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3 பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
33. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் - 1/3 பங்கு.
34. சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் - 1/3 பங்கு.
35. பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் - 1/12 பங்கு.
36. இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்கள் -1/12 பங்கு.
37. ஆளுநர் மூலம் நியமனம் செய்யப்படும் மேலவை உறுப்பினர்கள் - 1/6 பங்கு.
38. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் - 1/3 பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர் .
39. சட்டமன்ற மேலவை - நிலையான அவை.
40. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்.
41. சட்டமன்ற மேலவையில் தலைமை அலுவலராக இருப்பவர் – அவைத்தலைவர்.
42. அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.
43. தமிழ்நாடு சட்டமன்றம் அமைந்துள்ள இடம் – சென்னை.
44. சட்டமன்ற மேலவை உறுப்பினராக வயது – 30.
45. சட்டமன்ற உறுப்பினராக வயது – 25.
46. ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்பவர் –ஆளுநர்.
47. சட்டமன்றக் கூட்டத்திற்கு தலமை ஏற்பவர் - சபாநாயகர்.
48. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்கின்றனர்.
49. மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் - சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர்.
50. மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பு - உயர்நீதிமன்றம்.
51. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறுபவர்கள்:
1. ஆளுநர்
2. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
3. குடியரசுத் தலைவர்
52. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர் - ஆளுநர்.
53. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது – 62.
54. மாநிலத்தில் பதிவேடுகளின் நீதிமன்றமாக விளங்குவது - உயர்நீதிமன்றம்.
55. பொருத்துக:
1. ஆளுநர் - பெயரளவு தலைவர்
2. முதலமைச்சர் - உண்மையான தலைவர்
3. சட்டமன்றப் பேரவை - கீழவை
4. சட்டமன்ற மேலவை - மேலவை