1. பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்றுகாலத்திற்கு முன்பேசெழித்தோங்கி இருந்தது என்று குறிப்பட்டவர் - எட்வர்ட்பெயின்ஸ்.
2. பிரெஞ்சு நாட்டுபயணி டவேர்னியர் இந்தியாவில் கண்டுவியப்படைந்த பொருட்கள்- மயிலாசனம்,பட்டு, தங்கத்தில்ஆனதரைவிரிப்புகள் .
3. மணி தயாரிக்கப்படும் உலோகமான வெண்கலத்துக்கு பெயர்பெற்றது - செளராஷ்டிரா.
4. தகரதொழிற்சாலைக்கு புகழ்பெற்றது – வங்காளம்.
5. மஸ்ஸின் ஆடைகளுக்கு புகழ்பெற்றது – டாக்கா.
6. கி.மு. 2000 ம் ஆண்டுகள் பழமையான எகிப்தியகல்லறையில் உள்ள மம்மிகள் மிகச்சிறந்ததரம் வாய்ந்த இந்தியமஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7. 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய மஸ்லின் துணியை - ஒருதீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
8. இந்திய தொழிலகங்களின் வீழ்ச்சிக்காண காரணங்கள்:
1. ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
2. உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்
3. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
4. ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை
5. தொழில்மயமழிதல்
9. இந்தியாவின் பழமையான தொழில் -நெசவு.
10. பிரிட்டனில் உற்பத்தியான பொருட்களின் சந்தையாக மாறியநாடு -இந்தியா.
11. செல்வச் சுரண்டல் கோட்பாடு என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தாதாபாய்நௌளரோஜி.
12. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்தியமக்களின் வறுமைக்குகாரணம் என்பதை முதலில் ஏற்றுக்கொண்டவர் - தாதாபாய்நௌளரோஜி.
13. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு – 1839.
14. பம்பாயில் பருத்திநூற்பு ஆலை நிறுவப்பட்ட ஆண்டு – 1854.
15. கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்யா என்ற இடத்தில் ஹுக்ளி பள்ளத்தாக்கில் சணல் தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு – 1855.
16. முதல் காகிதஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் துவங்கப்பட்ட ஆண்டு – 1870.
17. கான்பூரில் முக்கியத்துவம் பெற்ற தொழிற்சாலைகள் – கம்பளி ,தோல்.
18. குல்டி என்ற இடத்தில் முதன் முறையாகநவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட ஆண்டு - 1874.
19. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை யாரை சேரும் - ஜாம்ஷெட்ஜிடாடா.
20. ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு, எஃகு நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1907.
21. 1861 ம் ஆண்டு 2,573 கிலோமீட்டர் ஆக இருந்த ரயில்வேயின் நீளம் 1914 ம் ஆண்டு எத்தனை கிலோமீட்டர்களாக அதிகரித்தது - 55,773.
22. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு மானதூரத்தை எத்தனை கிலோமீட்டர் தூரமாக குறைத்தது – 4987.
23. சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36 லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன.
24. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு – 1985.
25. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு எத்தனை உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது – 9000.
26. தொழில்துறைகொள்கை தீர்மானம் இயற்றப்பட்டஆண்டு – 1948.
27. 1956 ம் ஆண்டு தொழிற்துறைகொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது-3.
28. தொழிற்துறைவளர்ச்சியில் உற்பத்திவளர்ச்சிவிகிதம் துரிதமானவளர்ச்சியைக் கண்ட காலகட்டம் -1950 – 1965.
29. தொழிற்துறைவளர்ச்சியில் பின்னடைவுகாலமாக கருதப்படும்காலம் - 1965 – 1980.
30. தொழில்துறையின் மீட்புகாலமாகக் கருதப்படும் காலகட்டம் - 1980 – 1991.
31. உலகின் மிகப்பெரிய போக்குவரத்துகளுள் ஒன்று-இந்தியாவின் சாலைப் போக்குவரத்து.
32. பொருளாதாரவளர்ச்சியின்ஒருமுக்கியஅங்கம் – தொழில்மயமாக்கல்.
33. இந்தியாமின்சார உற்பத்தியில் ஆசியநாடுகளில் எத்தனையாவது நாடாக உருவாகியுள்ளது - 3.
34. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத்திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது - வலுவானதொழிற்துறைதளத்தைஉருவாக்குதல்
35. பொருத்துக:
1. டவேர்னியர் - பிரெஞ்சுபயணி
2. டாக்கா - மஸ்லின்துணி
3. தாதாபாய்நௌரோஜி - செல்வச் சுரண்டல்கோட்பாடு
4. பாலிகன்ஜ் - காகிதஆலை
5. ஸ்மித் - கைவிளைஞர்