நுழையும்முன்
"கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு" என்பர். உலக அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது.பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதற்குத் துணைபுரிவன நூலகங்களே ஆகும். நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது. அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
தெரிந்து தெளிவோம்
ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
தெரிந்து தெளிவோம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
தரைத்தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
இரண்டாம் தளம் - தமிழ்நூல்கள்
மூன்றாம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
நான்காம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
ஐந்தாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
ஆறாம் தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
ஏழாம் தளம் - வரலாறு,சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகன் நூலகம்
எட்டாம் தளம் - கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
தெரிந்து தெளிவோம்
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்
அறிஞர் அண்ணா, ஜவஹர்வால் நேரு அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
தெரிந்து தெளிவோம்.
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
One Liner
1.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது? சென்னை (தமிழ்நாடு)
2. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது? அண்ணா நூற்றாண்டு நூலகம்
3.
அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளை கொண்டுள்ளது? 8
4.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எவ்வளவு? எட்டு ஏக்கர்
5.
நூலக விதிகளை உருவாக்கியவர் யார்? இரா. அரங்கநாதன்
6.
இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என அழைக்கப்படுபவர் யார்?
இரா. அரங்கநாதன்
7.
பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான தொட்டுத் பார்த்துப் படிப்பதற்கான நூல்கள் எது?
பிரெய்லி நூல்கள்
8.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான பிரிவு தொட்டுப்
பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எந்த தளத்தில் உள்ளது? தரைத்
தளம்
9.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எந்த தளத்தில் அமைந்துள்ளது? முதல்
தளம்
10.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல் தளத்தில் எத்தனை பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச்
சேகரித்து வைக்கப்பட்டுள்ளது? 20000 மேற்பட்டவை
11.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது? 50000
12.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது?
ஏழாவது தளம்
13.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்:
தரைத்தளம்
- சொந்தநூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
முதல்
தளம்- குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
இரண்டாம்
தளம் - தமிழ் நூல்கள்
மூன்றாம்
தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
நான்காம்
தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
ஐந்தாம்
தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
ஆறாம்
தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
ஏழாம்
தளம் - வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
எட்டாம்
தளம் - கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
14.
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலரை கூறுக? அறிஞர் அண்ணா, ஜவஹர்லார்லால்
நேரு அண்ணல் அம்பேத்கர், காராரல் மார்க்ஸ்
15.
சிறந்த நூலகர்களுக்கு எந்த விருது வழங்ககப்படுகிறது? டாக்டர் ச. இரா. அரங்கநாதன்