மின்னோட்டவியல் (7th அறிவியல்)

 1. தாமஸ் ஆல்வா எடிசன் எந்த ஆண்டு மின்சாரத்தை கண்டுபிடித்தார்? 1882 ம் ஆண்டு

2. முதன் முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு என்ன? 1899 ம் ஆண்டு

3. இந்தியாவில் முதல் அனல் மின் நிலையத்தை கல்கத்தா மின் விநியோக கழகம் தோற்றுவித்த ஆண்டு என்ன? 1899 ம் ஆண்டு ஏப்ரல் 17

4. சென்னையில் பேசின் பாலத்தில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன? 1900 ம் ஆண்டு

5. அணுவின் மையப்பகுதி எது? உட்கரு

6. உட்கருவானது எதனால் ஆனது? புரோட்டான்கள், நியூட்ரான்கள்

7. புரோட்டான்கள் எந்த மின்சுமை கொண்டது? நேர் மின்சுமை

8. நியூட்ரான்கள் எந்த மின்சுமை கொண்டது? மின்சுமையற்றவை

9. உட்கருவைச் சுற்றி வட்டப் பாதையில் சுற்றி வருவது எது? எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள்

10. மின்சாரம் என்றால் என்ன? அணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரம்

11. மின்னூட்டம் எந்த அலகால் அளக்கப்படுகிறது? கூலூம்

12. ஓரலகு கூலூம் என்பது அளவு என்ன? 6.242×10¹⁸ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்

13. மின்னூட்டம் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது? Q என்ற எழுத்தால்

14. மின்னோட்டம் என்றால் என்ன? மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம்

15. மின்னோட்டம் எவ்வாறு அளக்கப்படுகிறது? ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது

16. மின்னோட்டம் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது? I

17. மின்னோட்டத்தின் அலகு என்ன? S.I. அலகு ஆம்பியர்

18. ஆம்பியர் என்றால் என்ன? கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்

19. மரபு மின்னோட்டம் என்றால் என்ன? நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் (இயக்கம் மரபு மின்னோட்டம்)

20. எலக்ட்ரான்களின் ஓட்டம் என்றால் என்ன? மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது (இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் )

21. மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எந்த திசையில் அமையும்? எதிர் திசை

22. மின்னோட்டம் எந்தக் கருவியால் அளவிடப்படுகிறது? அம்மீட்டர்

23. அம்மீட்டரின் முனைகள் எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்? '+' மற்றும் '–'

24. ஒரு சுற்றில் அம்மீட்டரானது எவ்வாறு இணைக்கப்படவேண்டும்? தொடர் இணைப்பில் மட்டும்

25. மின்னோட்டங்களை அளவிட? மில்லி ஆம்பியர் அல்லது மைக்ரோ ஆம்பியர்

26. மின்னழுத்த வேறுபாடு (V) என்றால் என்ன? மின்னூட்டங்கள் எப்போதும் உயர் மின்அழுத்த புள்ளியில் இருந்து தாழ் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி பாயும் மின்னழுத்த வேறுபாடு (v) இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும்

27. மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்ன? வோல்ட்

28. இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை எந்த கருவி கொண்டு அளக்கலாம்? வோல்ட் மீட்டர்

29. மின்தடை என்றால் என்ன? ஓர் மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்

30. ஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் என்னவாகும்? அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய அதிக மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகிறது

31. ஒரு மின் உறுப்பின் மின்தடை என்றால் என்ன? மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும். மின்உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்

32. மின் தடையின் S.I அலகு என்ன? ஓம்

33. மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு ____ எனில் மின்தடையின் மதிப்பு அதிகம் ஆகும்? அதிகம்

34. மின்கடத்துத்திறன் என்றால் என்ன? கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும். பொதுவாக σ (சிக்மா) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது

35. மின்கடத்துத்திறனின் அலகு என்ன? சீமென்ஸ் / மீட்டர் (s/m) ஆகும்

36. மின்தடைஎண் என்றால் என்ன? பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பே அப்பொருளின் மின்தடை எண் (ρ (ரோ)) எனப்படும்

37. மின்தடை எண்ணை _____ எனவும் குறிப்பிடுவர்? தன் மின் தடை எண்

38. மின்தடை எண்ணின் SI அலகு என்ன? ஓம் - மீட்டர் (Ω.m) ஆகும்

39. மின்னோட்டஙக்ள உருவாக்கும் மூலங்கள்? மின் வேதிக்கலன்கள் அல்லது மின்கலன்கள்

40. மின்கலங்கள் என்றால் என்ன? மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கும் சாதனம்

41. மின்கலன்களின் வகைகள் யாவை? முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள்

42. டார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன்? முதன்மை மின்கலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு

43. துணைமின்கலன்கள் என்றால் என்ன? உருவாகும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகையால் அவைகளை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலும்

44. முதன்மை மின்கலன் யாரால் உருவாக்கப்பட்டது? 1887 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோ

45. முதன்மை மின்கலனில் எதிர்மின் வாயாகச் செயல்படுவது? துத்தநாகம்

46. முதன்மை மின்கலனில் மின்பகுளி எது? அம்மோனியம் குளோரைடு

47. மின்பகுளி என்றால் என்ன? கரைசல்களில் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருள் மின்பகுளிகளாகும்

48. மின்கல அடுக்கு சுற்று என்றால் என்ன? மின்கல அடுக்கு சுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்கவல்ல, வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்காகும்

49. மின்பகு திரவம் என்றால் என்ன? ஆனோடு மற்றும் கேதோடுடன் வேதிவினை புரியும் ஓர் திரவமாகும்

50. கடத்திகள் என்றால் என்ன? குறைவானதுடைய தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.