வெப்பம் மற்றும் வெப்பநிலை (7th அறிவியல்)

 1. வெப்பநிலையினை பொருத்து மாறுபடுவதற்கு சில உதாரணங்கள் யாவை? நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை,உணவு சமைத்தல்

2. வெப்ப நிலை என்றால் என்ன? ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது

3. எவற்றின் மதிப்பு வெப்பநிலை ஆகும்? ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பே வெப்பநிலை ஆகும்

4. வெப்பநிலை எதனோடு தொடர்புடையது? ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன

5. வெப்பநிலையின் அலகுகள் யாவை? செல்சியஸ், பாரன்ஹீட், கெல்வின்

6. செல்சியஸ் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது? °C

7. செல்சியஸ் அலகானது ____ என்றும் அழைக்கப்படுகிறது? சென்டிகிரேட்

8. பாரன்ஹீட் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது? °F

9. கெல்வின் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது?  K

10. வெப்பநிலையின் SI அலகு என்ன? கெல்வின் (K)

11. ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் ___ ஆகும்? வெப்பநிலை

12. வெப்பநிலையினை அளக்க பயன்படுவது எது? வெப்பநிலைமானி

13. வெப்பநிலைமானிகளில் பயன்படுவது என்ன?  பாதரசம் அல்லது ஆல்கஹால்

14. வெப்பநிலைமானிகளில் பாதரசம் அல்லது ஆல்கஹால் பயன்படக் காரணம் என்ன? வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுவதால்

15. பாதரசத்தின் அதிக கொதிநிலை, குறைந்த உறைநிலை? 357°C , குறைந்த உறைநிலை −39°C

16. அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க எது பயன்படுகிறது? பாதரசம்

17. வெப்பநிலைமானி எதையெல்லாம் அளக்க பயன்படுகிறது? காற்று, உடல் வெப்பநிலை, உணவு, பல பொருள்களின் வெப்பநிலை

18. பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலைமானிகள் யாவை? மருத்துவ வெப்பநிலைமானி, ஆய்வக வெப்பநிலைமானி

19. மருத்துவ வெப்பநிலைமானியின் பயன் என்ன? மனித உடலின் வெப்பநிலையை அளக்க

20. மருத்துவ வெப்பநிலைமானிகளில் எத்தனை அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன? செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவு

21. பாரன்ஹீட் அளவீடானது ____ அளவீட்டினை விட நுட்பமானது? செல்சியஸ்

22. மருத்துவ வெப்பநிலைமானியின் குறைந்தபட்ச வெப்பநிலை ___? 35°C அல்லது 94°F

23. மருத்துவ வெப்பநிலைமானியின் அதிகபட்ச வெப்பநிலை ___? 42°C அல்லது 108°F

24. வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை? பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும், பாதரச மட்டத்தினை கீழே வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்

25. வெப்பநிலைமானியின் எந்தப் பகுதியில் பிடிக்கக் கூடாது? குமிழ் பகுதியில் வெப்பநிலைமானியை பிடிக்கக் கூடாது

26. வெப்பநிலைமானியினை எங்கு வைக்கக் கூடாது? எரியக்கூடிய பொருள்களுக்கு அருகில் மற்றும் நேரடியாக சூரிய ஒளியின் கீழ்

27. மருத்துவ வெப்பநிலைமானியைக் காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட எது? ஆய்வக வெப்பநிலைமானி

28. எந்த வெப்பநிலைமானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை? ஆய்வக வெப்பநிலைமானி

29. ஆய்வக வெப்பநிலைமானியின் அளவுகள் யாவை? −10°C முதல் 110°C

30. ஆய்வக வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை? வெப்பநிலையினை அளவிடும்போது வெப்பநிலைமானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்

31. மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை என்ன? 37°C (98.6°F)

32. செல்சியஸ் என்ற அலகினை கண்டறிந்தவர் யார்? சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ், 1742 (முன்னால் சென்டிகிரேடு என)

33. நீரின் உறைநிலை (0°C) வெப்பநிலையினை ___மதிப்பு? ஆரம்ப

34. நீரின் கொதிநிலை (100°C) வெப்பநிலையினை ___ மதிப்பு? இறுதி

35. சென்டிகிரேடு ___ மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பு? கிரேக்க

36. மனித உடலின் வெப்ப நிலையினை அளக்க? பாரன்ஹீட் அளவீட்டு

37. ____என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது? ஜெர்மன் மருத்துவர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்

38. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை? 32°F

39. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் கொதிநிலை? 212°F

40. பாரன்ஹீட் வெப்பநிலைமானியின் அளவுகோலானது ___ லிருந்து 212°F வரை அளவிடப்பட்டுள்ளது?  32°F

41. கெல்வின் அளவீட்டு முறை ____ என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை? வில்லியம் லார்டு கெல்வின்

42. ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானி? பெரும சிறும வெப்பநிலைமானி

43. வெப்பநிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறை? கெல்வின் (அலகு K என்ற எழுத்து)

44. வெப்பம் மற்றும் வெப்பநிலையில் முக்கிய பங்களிப்பாளர்கள்? லார்டு கெல்வின், ஆண்ட்ரஸ் செல்சியஸ், கேப்ரியல் பாரன்ஹீட், ரான்கீன்

45. பெருவெடிப்பு நிகழ்ந்த சில கணங்களில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை? 1032 கெல்வின்

46. நீரின் கொதிநிலை? 1௦௦°c, 212°F (373.15 கெல்வின்)

47. மனித உடலின் சராசரி வெப்பநிலை? 37°C, 98.6°F (310.15 கெல்வின்)

48. நீரின் உறைநிலை? 0°C, 32°F

49. 0 கெல்வின்?  தனிச்சுழி வெப்ப நிலை

50. பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ____என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்துகின்றனர்?  R = F + 459.67

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.