1. ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1829.
2. வித்யாசாகரின் அயராத முயற்சியினால் விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1856.
3. பண்டைய இந்தியாவின் நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் – ஹரப்பா.
4. இடைக்கால சமூகத்தில் பெண்கள் நிலை - சதி , குழந்தை திருமணம் , பெண்சிசுக்கொலை , பர்தா முறை , அடிமைத்தனம்.
5. சதியை ஒழிக்க முயன்ற முகலாய மன்னர் – அக்பர்.
6. ஜவ்கார் என்னும் பழக்கம் நடைமுறையில் இருந்தத இடம் – ராஜஸ்தான். ராஜபுத்திரர்கள்.
7. 1819 கிறித்துவ அமைப்புகள் முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை அமைத்த இடம்-கல்கத்தா.
8. 1849 கல்கத்தாவில் பெதுன் பள்ளியை நிறுவியவர் - J.E.D. பெதுன்.
9. 1854 சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
10. சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்த குழு - 1882 ஹண்டர் குழு.
11. பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழையத் தொடங்கிய ஆண்டு – 1880.
12. 1914ஆண்டு செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் பெரும்பங்காற்றியது- மகளிர் மருத்துவ சேவை அமைப்பு .
13. 1890 ஆண்டு பூனா வில் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவியவர் - D.K. கார்வே.
14. D.K. கார்வேவால் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு- 1916.
15. டெல்லி யில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு-1916.
16. பெண்சிசுக்கொலை நடைமுறையில் இருந்த இடம் - ராஜபுதனம் , பஞ்சாப் , வடமேற்கு மாகாணங்கள்.
17. பெண் சிசுக்கொலை நடைமுறையை தடை செய்த சட்டங்கள் :
1. 1795 வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் XXI
2. 1802 ஒழுங்குமுறைச் சட்டம்
3. 1870 பெண் சிசுக்கொலை தடைச் சட்டம்
18. பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 10 என அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1846.
19. உள்நாட்டு திருமணச் சட்டம் மூலம் பெண்களின் திருமண வயது 14 என நிறைவேற்றப்பட்ட ஆண்டு – 1872.
20. திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலை பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டவர் – அக்பர்.
21. அக்பர் நிர்ணயம் செய்த திருமணவயது- பெண் திருமண வயது - 14 ,ஆண் திருமண வயது - 16 .
22. மத்திய சட்டபேரவையில் ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு -1930 . ஆண்கள் திருமண வயது - 18 ,பெண்கள் திருமண வயது – 14.
23. இத்தாலிய பயணி நிக்கோலோ கோண்டி விஜயநகருக்கு வருகைபுரிந்த ஆண்டு - கி.பி. 1420.
24. 1811ம் ஆண்டில் ராஜாராம் மோகன் ராயின் சகோதரர் - ஜெகன்மோகன் ராய் காலமானதால் அவருடன் அவரது மனைவியும் எரிக்கப்பட்டார்.
25. சதி ஒழிப்புக்கு எதிராக தங்களது கருத்துகளை வெளியிட்டவர்- ராதாகந்த் தேப் , பவானி சரன் பானர்ஜி.
26. சதி என்னும் சட்டத்தை வில்லியம் பெண்டிங் நிறைவேற்றிய ஆண்டு- 1829 டிசம்பர் 4 - விதிமுறை XVII .
27. தேவதாசி (அ) தேவர் அடியாள் என்ற வார்த்தையின் பொருள்- கடவுளின் சேவகர்.
28. தேவதாசி - சமஸ்கிருதம் சொல், தேவர் அடியாள் - தமிழ் சொல்.
29. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.
30. தேவதாசி முறையை தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பதற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர்- முத்துலெட்சுமி அம்மையார்.
31. 1929 ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர் - முத்துலெட்சுமி அம்மையார்.
32. தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டவர் –பெரியார் ஈ.வெ.ரா.
33. தேவதாசிகளின் விடுதலைக்காக போராடிய மற்றொரு பெண்மணி - மூவலூர் ராமாமிர்தம்.
34. மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1947 அக்டோபர் 9.
35. இந்திய சமூக சீரதிருத்த இயக்கத்தின் முன்னோடி - ராஜா ராம்மோகன் ராய்.
36. 1856 ஆண்டு இந்து விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பித்தவர் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
37. தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி - கந்துகூரி வீரேசலிங்கம்.
38. கந்துகூரி விரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கை – விவேகவர்தினி.
39. கந்துகூரி விரேசலிங்கம் தனது முதல் பெண்கள் பள்ளியை திறந்த ஆண்டு – 1874.
40. பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தியவர்கள் - எம்.ஜி. ரானடே , பி.எம். மலபாரி.
41. எம்.ஜி. ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்த ஆண்டு -1869.
42. 1887 ஆண்டு இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கிவைத்தவர் - எம்.ஜி. ரானடே..
43. 1884 ஆண்டு குழந்தை திருமனத்தை ஒழிப்பதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கிவைத்தவர் - பி.எம். மலபாரி. (பத்திரிக்கையாளர்)
44. 1905 ஆண்டு இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கிவைத்தவர் - கோபால கிருஷ்ண கோகலே.
45. ஆண் சீர்திருத்தவாதிகள்:
1. பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1828.
2. பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1867.
3. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1875.
46. பெண் சீர்திருத்தவாதிகள் : பண்டித ரமாபாய் , ருக்மாபாய் , தாராபாய் ஷிண்டே.
47. 1889 பம்பாய் யில் இந்து விதவைகளுக்காக சாரதா சதன் (கற்றல் இல்லம்) எனும் அமைப்பினை திறந்து வைத்தவர் - பண்டித ரமாபாய்.
48. பிரம்மஞான சபை (தியோசாபிகல் சங்கம்) நிறுவப்பட்ட இடம் - சென்னை .
49. பெரியாரின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட மற்றொரு சீரதிருத்தவாதி - டாக்டர் S. தர்மாம்பாள்.
50. டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் - மூவலூர் ராமாமிர்தம்.
51. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் நினைவாக தொடங்கிய திட்டம் - திருமண உதவி தொகை.
52. இந்தியாவில் நிறுவப்பட்ட மிகப்பெரிய பெண்கள் அமைப்புகள் :
1. இந்திய பெண்கள் சங்கம்
2. தேசிய பெண்கள் ஆணையம்
3. அனைத்து இந்திய பெண்கள் மாநாடு
53. வேலுநாட்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு மீட்டெடுத்த இடம் – சிவகங்கை.
54. 1857 ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்தி போராடியவர்கள் - பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சி ராணி லட்சுமி பாய்.
55. தேசிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட்ட ஆண்டு – 1986.
56. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் திட்டம் - மஹிளா சமக்யா.
57. பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒதுக்கியது- மஹிளா சமக்யா.
58. பெண்களின் சமூக-அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது- மஹிளா சமக்யா.
59. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்- முத்துலட்சுமி அம்மையார்.
60. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு – 1829.
61. பி. எம். மலபாரி என்பவர் ஒரு- பத்திரிகையாளர்.
62. 1849 ம் ஆண்டு பெதுன் பள்ளி நிறுவியவர் - J.E.D பெதுன்.
63. 1882 ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது – ஹண்டர் குழு.
64. சாரதா குழந்தை திருமணமசோதா சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயித்தது எத்தனை – 14.
65. பொருத்துக:
1. பிரம்ம ஞான சபை - அன்னிபெசன்ட்
2. சாரதா சதன் - பண்டித ரமாபாய்
3. வுட்ஸ் கல்வி அறிக்கை - 1854
4. நிக்கோலோ கோண்டி - இத்தாலி பயணி
5. வரதட்சணை - சமூக தீமை