ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் (8th சமூக அறிவியல்)


1.    பண்டைய காலத்தில் புகழ்பெற்ற நகரங்கள்  - ஹரப்பா , மொகஞ்சதாரோ ,அலகாபாத் , வாரணாசி , மதுரை.

2.    இடைக்காலத்தில் புகழ்பெற்ற கோட்டை மற்றும் துறைமுக நகரங்கள் - டெல்லி , ஹைதராபாத்,ஜெய்ப்பூர் ,லக்னோஆக்ரா,நாக்பூர்.

3.    யாருடைய வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்ததுஐரோப்பியர்கள்.

4.    ஆங்கிலேயரின் நிர்வாக தலைநகராகவும் வணிக மையங்களாகவும் இருந்த நகரங்கள்

மும்பை , சென்னை , கொல்கத்தா.

5.    புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்கள் – டாக்காமூர்ஷிதாபாத் , சூரத் , லக்னோ

6.    இந்தியாவில் இரும்பு பாதைகளை அறிமுகப்படுத்திய ஆண்டு – 1853.

7.    மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு  1639.

8.    பம்பாய் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு    - 1661.

9.    கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1690.

10.   பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு           - 1757

11.   நிர்வாக நோக்கத்திற்காக காலனித்துவ இந்தியா எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டன – 3.

12.   புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம் - சென்னை .

13.   புனித வில்லியம் கோட்டை உள்ள இடம் - கல்கத்தா.

14.   முகலாய பொழுதுபோக்கு மையமாக இருந்த நகரம் - ஸ்ரீநகர்.

15.   இந்து சமய மையங்களாக இருந்த நகரம் - கேதர்நாத் , பத்ரிநாத்.

16.   கூர்க்கர்களுடன் நடைபெற்ற போரின் போது  நிறுவப்பட்டது - சிம்லா .1814 – 1816

17.   சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதி – டார்ஜிலிங்.

18.   படையினர் ஓய்வெடுப்பதற்கும்நோய்களிலிருந்து மீள்வதற்கான இடமாக இருந்ததுடார்ஜிலிங்.

19.   மதராஸ் மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1688.

20.   மதராஸ் மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்தவர் - சர் ஜோசியா சைல்டு.

21.   எந்த ஆண்டின் பட்டயச் சட்டம் மூன்று மாகாண நகரங்களில் நகராட்சி நிர்வாகத்தை நிறுவியது – 1793.

22.   அயோத்தி மற்றும் பம்பாயில் நகராட்சிகள் சட்டப்படி அமைக்கப்பட்ட ஆண்டு -1850.

23.   யாருடைய தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது - ரிப்பன் பிரபு.

24.   'உள்ளாட்சி அமைப்பின் தந்தைஎன்று அழைக்கப்படுபவர் - ரிப்பன் பிரபு.

25.   உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம் என்று கருதப்படுகிறது யாருடைய தீர்மானம் - ரிப்பன் பிரபு.

26.   மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய ஆண்டு – 1919.

27.   மாகாண சுயாட்சியை இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்திய ஆண்டு – 1935.

28.   இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சி நிலைகள் :

          1.    முதல் கட்டம்                 - 1688 - 1882

          2.    இரண்டாம் கட்டம்   - 1882 - 1920

          3.    மூன்றாம் கட்டம்    - 1920 - 1950

29.   ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு - 1600.

30.   1612 ல் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலையை அமைத்த இடம்  - சூரத்.

31.   தொழிற்சாலை அமைப்பிற்கு ஏற்ற இடம் மதராசப்பட்டினம் என குறிப்பிட்டவர் - பிரான்சிஸ் டே.

32.   கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறுபகுதி நிலத்தை பிரிட்டிஷாருக்கு வழங்கியவர் தமர்லா வெங்கடபதி - சந்திரகிரி அரசரின் பிரதிநிதி.

33.   பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிகதளத்துடன் தொழிற்சாலைக்கும் மதராசபட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்ட ஆண்டு – 1639.

34.   வெள்ளை நகரம் என அழைக்கப்படுவது - புனித ஜார்ஜ் குடியிருப்பு.

35.   வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் என சேர்த்து அழைக்கப்பட்டது – மதராஸ்.

36.   ஆங்கிலேயருக்கு மதராசபட்டனத்தை மானியமாக வழங்கியவர் - தமர்லா வெங்கடபதி.

37.   ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பியவர் - வெங்கடபதி .

38.   ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் மதராசப் பட்டினம் என அழைக்கவேண்டும் என விரும்பியவர் –ஆங்கிலேயர்கள்.

39.   1956 ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட மாநிலங்கள் - ஆந்திரா , கேரளா , மைசூர்.

40.   மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு – 1969.

41.   மதராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1996 ஜூலை 17

42.   பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது – 7.

43.   எந்த ஆண்டிலிருந்து பம்பாய் போர்த்துகீசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது - 1534.

44.   1661 ஆண்டு  இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு சீதனமாகப் பெற்ற பகுதி – பம்பாய்.

45.   ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றிய ஆண்டு – 1687.

46.   ஆங்கில வணிகர்கள் சுதநூதியில் ஒரு குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு – 1690.

47.   1698 ஆங்கில வணிகர்கள் ஜமீன்தாரி உரிமைகளைப் பெற்ற இடங்கள் - சுதநூதி , கல்கத்தா , கோவிந்தபூர்.

48.   பொருத்துக:

          1.    பம்பாய் - ஏழு தீவு

          2.    இராணுவ குடியிருப்புகள்  - கான்பூர்

          3.    கேதர்நாத் - சமய மையம்

          4.    டார்ஜிலிங் மலை வாழிடங்கள்

          5.    மதுரை - பண்டைய நகரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.