வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை (8th சமூக அறிவியல்)

 1.    வாஸ்கோடாகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்த ஆண்டு – 1498.

2.    பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு1757 ஜூன் 23  - சிராஜ் - உத் - தெளலாபிரெஞ்சு கூட்டணி – ஆங்கிலேயர்கள்.

3.    இருட்டறை துயர சம்பவம் நடைபெற்ற ஆண்டு – 1756.

4.    இருட்டறை துயரச் சம்பவம் சிராஜ் - உத் - தெளலாவின் படைவீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தனர் அவர்களுள் 123 பேர் மூச்சுத்திணறி இறந்திருந்தனர்.

5.    பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு - 1764 அக்டோபர் 22.

6.    பிளாசிப் போருக்குப்பின் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்ற பகுதிகள் - வங்காளம் பீகார் , ஒரிசா.

7.    பிளாசிப் போருக்குப்பின் வங்களத்தின் அரியணை ஏறியவர் – மீர்ஜாபர்.

8.    தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்க வரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டவர் – மீர்காசிம்.

9.    சுஜா - உத் - தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியவர் – மீர்காசிம்.

10.   பீகார் பகுதியில் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீதொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்க பட்டஒரு சிறிய நகரம் – பக்சார்.

11.   அலகாபாத் உடன்படிக்கையின்படி பக்சார் போர் முடிவுக்கு வந்த ஆண்டு -1765 பிப்ரவரி 20 .

12.   வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்இராபர்ட் கிளைவ்.

13.   கர்நாடக போர்கள் நடைபெற்ற காலகட்டம் - 1746 – 1763.

14.   முதல் கர்நாடகப் போர்            - 1746 – 1748. அய் - லா - சப்பேல் (1748)

15.   இரண்டாம் கர்நாடகப் போர்     - 1749 – 1754. பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)

16.   மூன்றாம் கர்நாடகப் போர்       - 1756 – 1763. பாரிசு உடன்படிக்கை (1763)

17.   முதல் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமை போர்.

18.   இரண்டாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - கர்நாடகம் , ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை.

19.   மூன்றாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் - ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டு போர்.

20.   கர்நாடக நவாப் அன்வருதீனுக்கும் - பிரஞ்சு படைக்கும் இடையே நடைபெற்ற போர் - அடையாறு போர்  -1746.

21.   ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு -  1749 ஆகஸ்ட் 3 .

22.   ஆற்காட்டு போர்     நடைபெற்ற ஆண்டு – 1751.

23.   வந்தவாசி போர்     நடைபெற்ற ஆண்டு    - 1760 ஜனவரி 22 .

24.   இரண்டாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படையை வழி நடத்தியவர்டியூப்ளே.

25.   மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படையை வழி நடத்தியவர் – கவுண்டிலாலி.

26.   ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரான ஆண்டு – 1761.

27.   முதல் ஆங்கிலேய மைசூர் போர் -1767 – 1769. மதராஸ் உடன்படிக்கை 1769.

28.   இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் -1780-1784 மங்களூர் உடன்படிக்கை 1784 மார்ச் 7.

29.   மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் -1790 -1792ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை 1792.

30.   ஹைதர் அலி இறந்த ஆண்டு -1782.

31.   ஹைதர் அலி மகன் - திப்பு சுல்தான்.

32.   ஆங்கிலேயருக்கும் திப்பு சுல்தான் க்கும் இடையே கையெழுத்தானதுமங்களூர் உடன்படிக்கை.

33.   பிரஞ்ச் அலுவலர்கள் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கு வருகை புரிந்து - ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.

34.   நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் மைசூரில் அரியணை ஏறியவர்மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார்.

35.   நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் திப்புவின் குடும்பத்தினர் அனுப்பப்பட்ட இடம் – வேலூர்.

36.   முதல் ஆங்கிலேய மராத்திய போர் - 1775 – 1782 . சால்பை ஒப்பந்தம் (1782 மே 17)

37.   இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் - 1803 – 1805 . பஸ்ஸீன் உடன்படிக்கை 1802.

38.   மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வழங்கப்பட்ட வருடாந்திர ஓய்வூதியம்  - லட்சம் ரூபாய்.

39.   வெல்லெஸ்லி பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற ஆண்டு – 1800.

40.   வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவிய ஆண்டு – 1800.

41.   போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஆண்டு பட்டய சட்டம் – 1833.

42.   குடிமைப் பணித் தேர்வு எழுத வயது :

          1.    1858 ல் - 23 வயது

          2.    1860 ல் - 22 வயது

          3.    1866 ல் - 21 வயது

          4.    1876 ல் - 19 வயது


43.   பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய ஆட்சி பணி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1861.

44.   இல் .சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று இந்தியர்கள் :

          1.    சுரேந்திரநாத் பானர்ஜி

          2.    ரமேஷ் சந்திர தத்

          3.    பிகாரி லால் குப்தா

45.   1863 ல் .சி.எஸ்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் - சத்தியேந்திரநாத் தாகூர் - இரபிந்திநாத் தாகூரின் மூத்த சகோதரர்.

46.   ஐசிஎஸ் தேர்வு எழுதுவதற்கான வயது 21 -  23 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு-1892 .

47.   அரசு பள்ளியை பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் ஒரு ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு-1912. 1917 -தனது பரிந்துரையை வெளியிட்டது.

48.   1918 இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் படிப்படியாக அதிகரிக்கவும் பரிந்துரைத்தவர்கள்-மாண்டேகு மற்றும் செம்ஸ்போர்டு.

49.   இந்திய அரசு சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் மாகாணங்களில் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்த ஆண்டு – 1935.

50.   1856 ம் ஆண்டு மூன்று இந்திய படை வீரர்கள் மாத சம்பளம் மொத்தம் ரூபாய் -300.

51.   1857 ல் இந்திய ராணுவத்தில்3,11,400 வீரர்களில் -265900 வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர்.

52.   நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்களாக இருந்தவர்கள் – கொத்வால்.

53.   இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் -காரன்வாலிஸ் பிரபு.

54.   1791 ல் முறையான காவல்துறையை உருவாக்கியவர் – காரன்வாலிஸ் பிரபு.

55.   தரோகா என்பவரைத் தலைவராகக் கொண்ட சரகங்கள் (தானாக்கள் என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தியவர் - காரன்வாலிஸ் பிரபு.

56.   கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் – சௌளகிதார்கள்.

57.   இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரி வசூல் செய்வதையும் நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்ட ஆண்டு -1772.

58.   சிவில் நீதிமன்றம் என்று அழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும்  குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பௌளஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு -1772.

59.   1773 ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி ஒரு உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் – கல்கத்தா.

60.   மதராஸ் உச்ச நீதி மன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1801.

61.   பம்பாய் உச்ச நீதி மன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1823.

62.   ஜூரி நீதி அதிகார முறையை வங்காளத்தில் கொண்டுவந்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு.

63.   1861 ஆண்டு இந்திய உயர் நீதிமன்ற சட்டத்தின்படி கல்கத்தாபம்பாய்மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதி மன்றங்களுக்கு பதிலாக 3 உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

64.   வங்காளத்தின்வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி - சர் எலிஜா இம்பே.

65.   மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதி - சர் திருவாரூர் முத்துசாமி.

66.   1798 துணைப்படை திட்டத்தை கொண்டு வந்தவர் - வெல்லெஸ்லி பிரபு.

67.   இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு  என்பதை " இந்தியாவின் ஆங்கிலேய பேரரசுஎன்று மாற்றியவர் - வெல்லெஸ்லி பிரபு.

68.   துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு – ஹைதராபாத்.


69.   துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட ஆண்டு:

          1.    ஹைதராபாத் - 1798

          2.    தஞ்சாவூர்  - 1799

          3.    அயோத்தி - 1801

          4.    பேஷ்வா - 1802

          5.    போன்ஸ்லே - 1803

          6.    குவாலியர் – 1804

          7.    இந்தூர் - 1817

          8.    ஜெய்பூர்உதய்பூர் மற்றும் ஜேதபூர்- 1818

70.   1848 வாரிசு இழப்பு கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெசி பிரபு.

71.   வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம்  டல்ஹெளசி பிரபு இணைத்துக் கொண்ட பகுதிகள்:

          1.    சதாரா - 1848

          2.    ஜெய்த்பூர்சல்பல்பூர் - 1849

          3.    பகத் - 1850

          4.    உதய்பூர்-  1852

          5.    ஜான்சி - 1853

          6.    நாக்பூர் - 1854

72.   இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக செயல்பட்டவர் - டல்ஹெசி பிரபு.

73.   1757 ம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்சிராஜ் - உத்தெளலா.

74.   பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு1757.

75.   பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - அலகாபாத் உடன்படிக்கை.

76.   பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி  முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுஇரண்டாம்  கர்நாடகப் போர்.

77.   ஹைதர் அலி மைகசூர் அரியணை ஏறிய ஆண்டு – 1761.

78.   மங்களூர் உடன்படிக்கை கையெழுத்துஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்.

79.   மூன்றாம் ஆங்கிலேய - மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் -காரன் வாலிஸ்.

80.   ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் - இரண்டாம் பாஜிராவ்.

81.   மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா - இரண்டாம் பாஜிராவ்.

82.   அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு ஆண்டு -  1757 பிப்ரவரி 9.

83.   சிராஜ் உத் தெளலாவின் தலைமைப் படைத்தளபதி -  மீர் ஜாபர்.

84.   இரண்டாம் கர்நாடகப் போர்க்கான முக்கிய காரணம் கர்நாடகம் (ஹைதராபாத் வாரிசுரிமை போர்.

85.   பொருத்துக:

          1.    அய் - லா - சப்பேல் உடன்படிக்கை - முதல் கர்நாடகப் போர்.

          2.    சால்பை உடன்படிக்கை - முதல் மராத்திய போர்.

          3.    பாரிசு உடன்படிக்கை - மூன்றாம் கர்நாடகப் போர்.

          4.    ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை - மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்.

          5.    மெட்ராஸ் உடன்படிக்கை - முதல் ஆங்கிலேய மைசூர் போர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.