ஐரோப்பியர்களின் வருகை (8th சமூக அறிவியல்)

 1.    இந்தியாவில் ஆவணக் காப்பகங்கள் ,வரலாற்றுத் தகவல்களின் பெட்டகம் உள்ள இடங்கள் :

          1.    லிஸ்பன்

          2.    கோவா

          3.    பாண்டிச்சேரி

          4.    சென்னை

2.    இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிந்து கொண்டவர்கள்ஐரோப்பியர்கள்.

3.    பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்ஆனந்தரங்கம்.

4.    இந்திய தேசிய ஆவணக்காப்பகம் NAI அமைந்துள்ள இடம் – புதுடெல்லி.

5.    இந்திய அரசின் ஆவணங்களை பாதுகாக்கும் முதன்மை காப்பகம்இந்திய தேசிய ஆவணக்காப்பகம்.

6.    ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதுஇந்திய தேசிய ஆவணக்காப்பகம்.

7.    இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்.

8.    தமிழ்நாடு ஆவணக் காப்பகம் உள்ள இடம் – சென்னை.

9.    1642 ம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ள இடம் - தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில்.

10.   டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்வெளியிடப்பட்ட ஆண்டு – 1917.

11.   தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் – டாட்வெல்.

12.   புனித பிரான்சிஸ் ஆலயம் உள்ள இடம்     – கொச்சி.

13.   புனித லூயிஸ் கோட்டை உள்ள இடம்               – பாண்டிச்சேரி.

14.   புனித டேவிட் கோட்டை உள்ள இடம்                – கடலூர்.

15.   புனித ஜார்ஜ் கோட்டை உள்ள இடம்          – சென்னை.

16.   இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் உள்ள இடம் – டெல்லி.

17.   டெல்லி தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1949.

18.   நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு – 1862.

19.   எந்த மன்னர் தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்ஏழாம் எட்வர்டு.

20.   இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு – 1935.

21.   மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஆண்டு - 1938 ஜனவரி.

22.   கடலூரில் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு1690.

23.   வாஸ்கோடகாமாவின் கடல் வழிப் பயணம்  - லிஸ்பன் முதல் கோழிக்கோடு வரை பயணம் செய்த காலம் - 1497 – 1498.

24.   துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நிலவழி மூடப்பட்ட ஆண்டு – 1453.

25.   போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி  - மாலுமி ஹெண்றி  என அறியப்படுகிறார்.

26.   உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் நாட்டு மக்களை ஊக்குவித்தவர் - மாலுமி ஹென்றி.

27.   போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த ஆண்டு – 1487.

28.   பார்த்தலோமியோ டயஸ் என்ற மாலுமியை ஆதரித்த மன்னர் - இரண்டாம் ஜான்.

29.   வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டையை அடைந்த ஆண்டு – 1498.

30.   1500 ம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் 100 வீரர்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி - பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் .

31.   வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்த - ஆண்டு – 1501.

32.   வாஸ்கோடகாமா வர்த்தக மையத்தை நிறுவிய இடங்கள்:

          1.    கள்ளிக்கோட்டை

          2.    கொச்சின்

          3.    கண்ணனூர்

33.   போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் – கொச்சின்.

34.   வாஸ்கோடகாமா 3 - வது முறையாக இந்தியா வந்து நோய்வாய்ப்பட்டு காலமான ஆண்டு - 1524 டிசம்பர் – கொச்சி.

35.   1505 ல் இந்தியாவிலிருந்த போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் - பிரான்சிஸ்கோ - டி – அல்மெய்டா.

36.   கப்பற்படையை பலப்படுத்த அல்மெய்டா பின்பற்றிய கொள்கை – நீலநீர்க்கொள்கை.

37.   பீஜப்பூர்குஜராத் சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக - எகிப்து ,துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.

38.   இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் - அல்போன்சோ - டி – அல்புகர்க்.

39.   அல்போன்சோ – டி அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றிய ஆண்டு  - 1510 நவம்பர்.

40.   இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்அல்போன்சோ - டி – அல்புகர்க்.

41.   விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டவர்அல்போன்சோ - டி – அல்புகர்க்.

42.   1515 ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர்அல்போன்சோ - டி – அல்புகர்க்.

43.   அல்புகர்க்குவிற்குப் பிறகு ந்த கவர்னர் - நினோ - டி – குன்கா

44.   நினோ - டி குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றிய ஆண்டு -1530.

45.   இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள்-போர்ச்சுக்கீசியர்கள்.

46.   போர்ச்சுக்கீசியர்கள் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1556.

47.   ஐரோப்பிய எழுத்தாளர் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள்  என்ற நூலை அச்சிட்டு வெளியிட்ட ஆண்டு -1563.

48.   நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு – 1602.

49.   டச்சுக்காரர்கள் இந்தியாவில் வர்த்தக மையத்தை நிறுவிய இடம் – மசூலிப்பட்டினம்.

50.   ஆரம்பத்தில் டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்த நகரம் – பழவேற்காடு.

51.   டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்கள் இருந்த இடங்கள் :

          1.    பழவேற்காடு

          2.    சூரத்

          3.    சின்சுரா 

          4.    காசிம்பஜார்

          5.    பாட்னா

          6.    நாகப்பட்டினம்

          7.    பாலசோர்

          8.    கொச்சின்

52.   டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் 10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்ற ஆண்டு – 1623.

53.   ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பெடரா போர் நடைபெற்ற ஆண்டு-1759.

54.   பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டிய ஆண்டு-1613.

55.   இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய அனுமதி பெறப்பட்ட ஆண்டு  - 1600 டிசம்பர் 31.

56.   ஜஹாங்கிர அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டு – 1608.

57.   கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் போர்ச்சுக்கீசியரை வென்ற ஆண்டு – 1614.

58.   ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டு – 1615.

59.   ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில்  நிறுவிய ஆண்டு-1611.

60.   பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சொன்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்ற ஆண்டு – 1639.

61.   போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டவர்- இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ்.

62.   திருமண சீராக பம்பாய் தீவை பெற்றவர்- இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ்.

63.   ஜாப் சார்னாக் சுதாநுதி என்ற இடத்தில் வர்த்தகமையம்  நிறுவப்பட்ட ஆண்டு1690.

64.   1696 ல் சுதாநுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டு 1700 வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது.

65.   பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு – 1756.

66.   பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு – 1764.

67.   இந்தியா அங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆண்டு – 1858.

68.   டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கிய ஆண்டு – 1616 மார்ச் 17.

69.   டேனியர்கள் குடியேற்றங்களை நிறுவிய இடங்கள் - 1620 - தரங்கம்பாடி (தமிழ்நாடு), 1676 – செராம்பூர் (வங்காளம்).

70.   டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்த நகரம் – செராம்பூர்.

71.   தரங்கம்பாடியை டேனியர்கள் எவ்வாறு அழைத்தனர்டான்ஸ்பெர்க்.

72.   தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவியவர்சீகன்பால்கு.

73.   பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1664.

74.   மன்னர் 14 ம் லூயியின் அமைச்சர் கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்.

75.   வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு – பிரான்சு.

76.   இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் – கரோன்.

77.   மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவிய ஆண்டு-1669.

78.   பிஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ் மார்ட்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு – 1673.

79.   இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாக மாறிய இடம்  - பாண்டிச்சேரி.

80.   பாண்டிச்சேரியில் உள்ள செயின்ட் லூயிஸ் கோட்டையை கட்டியவர்பிரான்காய்ஸ் மாட்டின்.

81.   பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே நியமனம் செய்யப்பட்ட ஆண்டு – 1742.

82.   சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் -  1731 ஜோதன்பர்க்.

83.   எந்த கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு ஊக்குவிப்பாக இருந்தது - டச்சு கிழக்கிந்திய கம்பெனி , ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி

84.   இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் - அல்போன்சோ - டி – அல்புகர்க்.

85.   ஜரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டு பிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு  - போர்ச்சுகல்

86.   1453 ம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது – துருக்கி.

87.   சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர் – இங்கிலாந்து.

88.   இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை.

89.   இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர் – பிரெஞ்சுக்காரர்கள்.

90.   தரங்கம்பாடி யாருடைய வர்த்தக மையமாக இருந்ததுடேனியர்கள்.

91.   இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்த முகலாயப் பேரரசர் – ஜஹாங்கீர்.

92.   பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது - கால்பர்ட்.

93.   பொருத்துக : கம்பெனிகள் நிறுவப்பட்ட ஆண்டு.

          1.    டச்சுக்காரர்கள் - 1602

          2.    ஆங்கிலேயர்கள் 1600

          3.    டேனியர்கள்  - 1616

          4.    பிரெஞ்சுக்காரர்கள் - 1664

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.