8th விசையும் அழுத்தமும்
(8th (1) Page No - 18) 63 Questions
1. 1. பொருளின் வடிவத்தை
மாற்றுவது (அ) மாற்ற முயல்வது – விசை.
2. 2. விசையின் வடிவங்கள்:
i.
இழுத்தல்
ii.
தள்ளுதல்
3. 3. ஒரு பேனாவின்
மூடியை திறத்தல், கதவினை திறத்தல், கால்பந்தை உதைத்தல், கேரம் விளையாட்டில் நாணயங்களை
சுண்டுதல் முதலிய அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படுவது – விசை.
4. 4. தள்ளுதல் (அ)
இழுத்தலின் மூலமாக பொருட்களை இயங்க வைத்தல் (அ) இயக்கத்திலிருந்து ஓய்வு நிலைக்கு
கொண்டு வருதல் என்பது - விசை.
5. 5. எண்மதிப்பும் திசையையும் இருப்பதால் விசை என்பது
ஒரு - வெக்டர் அளவு.
6. 6. விசையானது எந்த
அலகால் அளவிடப்படுகிறது - நியூட்டன் N
7. 7. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும், செங்குத்தாக
செயல்படும் விசை - உந்து விசை.
8. 6. விசை ஏற்படுத்தும்
விளைவை அளப்பதற்கு எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது-அழுத்தம்
9. 9. உந்து விசை எந்த
அலகினால் அளவிடப்படுகிறது – நியூட்டன்.
10. 10. ஒரு
பொருளின் புறப்பரப்பின் ஒரு சதுரமீட்டருக்கு செங்குத்தாக செயல்படும் விசை (அ) உந்துவிசை
எவ்வாறு வரையறுக்கப்படுகிறது- அழுத்தம்.
1111. அழுத்தத்தின் அலகு - பாஸ்கல் (Pa) (அ) Nm-2 .
1212. விசையால்
செலுத்தப்படும் அழுத்தமானது எதனைச் சார்ந்தது:
i.
விசையின்
எண் மதிப்பு
ii.
விசையின்
தொடுபரப்பு
1313. ஒரு
சதுர மீட்டர் பரப்பில் யானையின் ஒரு காலால் செலுத்தப்படும் அழுத்தம் - 10000 நியூட்டன்.
1414. புவியைச் சுற்றிலும் காற்று நிரம்பியுள்ள உரைக்கு
பெயர்- வளிமண்டலம்.
1515. விசை (அ) எடை வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும்
கருவி – பாரோமீட்டர்.
1616. பாரோமீட்டரைக் கண்டுபிடித்தவர் – டாரிசெல்லி.
1717. புவிப்பரப்பில்
இருந்து உயரம் அதிகாரிக்கும் போது வளிமண்டல அழுத்தம்- குறையும்.
1818. கடல்நீர்
மட்டத்தில் குழாயில் உள்ள பாதரசத்தின் உயரம்- 76 செ.மீ அல்லது 760 மி.மீ
1919. SI
அலகு முறையில் 1 வளிமண்டல அழுத்தம் (1atm) என்பது தோராயமாக எவ்வளவு இருக்கும்-1,00,000 பாஸ்கல் (Pa).
2220. வளிமண்டல
அழுத்தத்தின் SI அலகு - நியூட்டன் (அ) பாஸ்கல்.
2121. உயரமான
மலைப்பகுதியில் சமையல் செய்வது கடினம் ஏன்- உயரமான
இடங்களில் வளிமண்டல அழுத்தக் குறைவு காரணமாக பொருளின் கொதிநிலை குறைவாக இருக்கும்.
2222. நீரானது 80°cஇல் கொதிக்க ஆரம்ம்பித்துவிடும். இந்த வெப்பநிலையில்
உருவாகும் வெப்ப ஆற்றல் பொருளை சமைப்பதற்கு போதுமானதாக இருக்காது. இதனால் உயரமான இடங்களில்
சமையல் செய்வது கடினமாக இருக்கும்.
2323. திரவங்கள் மற்றும் வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
– பாய்மங்கள்.
2424. ஒரு
பொருள் மிதப்பதையோ (அ) மூழ்குவதையோ தீர்மானிப்பது- மேல்நோக்கு விசை.
2525. திரவம் எதில் வைக்கப்படுகிறதோ அதன் ஓரலகு பரப்பில்
செயல்படுத்தப்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரவத்தின் நிலையழுத்தம்.
2626. திரவ
அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி – மானோமீட்டர்.
2727. திரவத்தின் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தம்
பிற புள்ளிகளுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்ற கருத்தை முதன் முதலாக எடுத்துரைத்தவர்-
பிளெய்ஸ் பாஸ்கல்.
2828. மூடிய
மற்றும் ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளிக்கும் அளிக்கப்படும் அழுத்தமானது
ஆத்திரவத்தின் அனைத்துப் புள்ளிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்பது எந்த தத்துவம்
- பாஸ்கல் தத்துவம்.
2929. வாகனங்களை பழுதுநீக்கும் பணிமனைகளில் வாகனங்கிளை
உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன
- பாஸ்கல் விதி.
3030. வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு எதன் அடிப்படையில்
செயல்படுகிறது- பாஸ்கல் விதி.
3131. பஞ்சு
(அ) ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு
எந்த விதி அடிப்படையாக கொண்டு இயங்கும் நீரியல்
அழுத்தி பயன்படுத்தப்படுகிறது- பாஸ்கல் விதி.
3232. மழைத்துளிகள்
இயற்க்கையாகவே கோள வடிவத்தை பெற்றிருப்பதற்கு காரணம்- பரப்பு இழுவிசை.
3333. மிகச்சிறு
துளை வழியாக வெளியேறும் நீர் தொடர்ச்சியாக இல்லாமல் நீர்த்திவளைகளாக வெளியேறுவதற்கு
காரணம்- பரப்பு இழுவிசை.
3434. பரப்பு
இழுவிசை என்பது - திரவத்தின் ஒரு பண்பு .
3535. திரவத்தின்
புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு கூட்டாக செயல்படும் விசை - பரப்பு இழுவிசை
3636. பரப்பு
இழுவிசையின் அலகு- Nm-1.
3737. தாவரங்களில்
நீர் மேலேறுவதற்குக் காரணம் - பரப்பு இழுவிசை.
3838. தாவரங்களில்
நீரை கடத்த உதவுவது - சைலம் திசுக்கள்.
3939. சைலம்
என்ற மெல்லிய குழாயில் எந்த செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது- நுண்புழை ஏற்றம்.
4040. நீர்ச்
சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்க உதவுவது - நீரின் பரப்பு இழுவிசை
4141. கடல் கொந்தளிப்பின் போது மாலுமிகள் கப்பலை சுற்றிலும்
சோப்புத் துகள்கள் (அ) எண்ணெய்க் கொட்டுவார்கள் காரணம் - கடல்நீர்
பரப்பு இழுவிசை குறைந்து கப்பலின் மீதான தாக்கமும், நீரினால் ஏற்படும் பாதிப்புகளும்
குறைகின்றன.
4242. ஒரு
திரவம் பாயும் பொழுது திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையே உண்டாகும் விசை
– உராய்வுவிசை
4343. சார்பியக்கத்தை
எதிர்க்கும் உராய்வுவிசை. - பாகியல் விசை.
4444. பாகியல் விசை CGS அலகு முறையில் பாய்ல் என்ற அலகாலும்,
SI அலகுமுறையில் - Kg (அ) N s
4545. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றையொன்று தொடும்
பொருட்கள் ஒன்றைச் சார்ந்து மற்றான்று இயங்கும் போது அவற்றிற்கு இடையே செயல்படுவது
எந்த விசை- உராய்வு விசை.
4646. உராய்வு
விசையானது பொருளின் இயக்கத்திற்கு - எதிர்திசையில்
செயல்படும்.
4747. உராய்வு விசையினால் உருவாக்கப்படுவது- வெப்பம்.
4848. உராய்வானது
அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது: 2.
i.
நிலை
உராய்வு
ii.
இயக்க
உராய்வு
4949. நிலை
உராய்வுக்கு எ.கா :
i.
புவியில்
ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு.
ii.
கயிற்றில்
உள்ள முடிச்சு.
5050. பொருளின்
இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் உராய்வு- இயக்க உராய்வு.
5151. இயக்க
உராய்வின் வகைகள் : 2.
i.
நழுவு
உராய்வு
ii.
உருளும் உராய்வு
5252. பரப்பின்
சொர சொரப்புத் தன்மை அதிகரித்தால் – உராய்வு
அதிகரிக்கும்.
5353. பேனாவைக்
கொண்டு காகிதத்தில் எழுதுவதன் காரணம் – உராய்வு.
5454. உராய்வைக்
குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் – உயவுப்பொருள்.
5555. உயர்வுபொருளுக்கு எ.கா :
i.
கிரிஸ்
ii.
தேங்காய்
எண்ணெய்
iii.
கிராஃபைட்
iv.
விளக்கெண்ணை.
5656. ஒரு
பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது-
நின்று விடும்.
5757. திரவத்தினால்
பெறப்படும் அழுத்தம் - திரவத்தம்ப உயரம் அதிகரிக்கிறது
5858. அழுத்தின் அலகு – பாஸ்கல், NM-2.
5959. கடல்
நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு - 76 செ.மீ பாதரசத் தம்பம்.
6060. பாஸ்கல்
விதி எதில் பயன்படுகிறது:
i.
நீரியல்
உயர்த்தி
ii.
தடை
செலுத்தி (Break)
iii.
அழுத்தப்பட்ட
பொதி
6161. திரவங்களில்
எது அதிக பாகுநிலை உடையது - நீர்.
6262. பொருத்துக:
i.
நிலை உராய்வு - ஒய்வுநிலையில் உள்ள பொருள்கள்.
ii.
இயக்க உராய்வு - இயக்கத்தில் உள்ள பொருள்கள்.
iii.
உருளும் உராய்வு - குறைந்த உராய்வு.
iv.
திரவ அடுக்குகளுக்கு
இடையேயான உராய்வு – பாகுநிலை.
v.
நழுவு உராய்வு - நழுவும் பொருள்கள்.
6363. பொருத்துக:
i.
பாரோ மீட்டர் - வளிமண்டல அழுத்தம்.
ii.
உராய்வை அதிகரித்தல் - தொடு
பரப்பு அதிகரித்தல்.
iii.
உராய்வைக் குறைத்தல் - தொடு பரப்பு குறைதல்.
iv.
உயவுப் பொருள்கள் - உராய்வைக்
குறைக்கும்.
v.
ஒழுங்கற்ற பரப்பு - உராய்விற்கான
காரணம்.