விஜயநகர், பாமினி அரசுகள் (7th சமூக அறிவியல்)

 

7th New Book விஜயநகர், பாமினி அரசுகள் (100 QUESTIONS)

1. பாமினி அரசு பரவி இருந்த பகுதி :

1. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும்.

2. கர்நாடகா மாநிலம் சில பகுதி.

2. 18 முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது - 180

3. பாமினி அரசு வீழ்ச்சியடைந்து எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது : 5 .

1. பீஜப்பூர்

2. அகமதுநகர்

3. கோல்கொண்டா

4.  பீடார்

5.  பீரார்

4. விஜயநகர அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் கோலோச்சியது-200 ஆண்டுகள்.

5.     தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு – 1565.

6.     வெற்றி நகரம் என்று அறியப்படும் விஜயநகரம் எந்த இரு சகோதரர்களால்  நிறுவப்பட்டது - ஹரிஹரர், புக்கர்.

7.     ஹரிஹரர், புக்கர் இருவரும் எந்த அரசிடம் பணிபுரிந்தனர் - துக்ளக் அரசு.

8.     சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர் – வித்யாரண்யர்.

9.     ஹரிஹரர், புக்கர் ஆன்மீக குரு - வித்யாரண்யர்.

10.   வித்தியாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் குறிப்பிட்ட காலம் வரை விஜயநகர் எவ்வாறு அழைக்கப்பட்டது- வித்யாநகர்.

11.   வித்யாநகர் பின்னர் எவ்வாறு  அழைக்கப்பட்டது - விஜயநகர்.

12.   விஜயநகர அரசு எத்தனை அரசுகளால் ஆளப்பட்டது : 4.

1.  சங்கம வம்சம்  - 1336 - 1485

2.  சாளுவ வம்சம் - 1485 - 1505

3. துளுவ வம்சம் - 1505 - 1570

4. ஆரவீடு வம்சம்  - 1570 - 1646

13. விஜய நகர அரசுகள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவை சேர்ந்த அரசுகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி- கிருஷ்ணா-துங்கத்ரா, கிருஷ்ணா-கோதாவரி.

14.   ஹரிஹரர் , புக்கர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்கள்- சங்கம வம்சம்.

15.   விஜயநகர அரசு உருவாகிப் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு நிறுவப்பட்டது – 10 ஆண்டுகள்.

16.   முதலாம் புக்கர் மகன்- குமார கம்பணா.

17.   மதுரை சுல்தானியத்திற்க முற்றுப்புள்ளி வைத்து அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதில் வெற்றி பெற்றவர்- குமார கம்பணா.

18.   குமார கம்பணாவின் மனைவி – கங்காதேவி.

19.   மதுரா விஜயம். எனும் எழுதிய நூல்  - கங்காதேவி.

20.   சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் - இரண்டாம தேவராயர்.

21.   இஸ்லாமிய வீரர்களை படையில் பணியாற்றும் முறையைத் தொடங்கி வைத்தவர் - இரண்டாம் தேவராயர்.

22.   விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதி  - சாளுவ நரசிம்மர்.

23.   சங்கம வம்சத்தின் கடைசி அரசர் - இரண்டாம் விருபாக்சி ராயர்.

24.   இரண்டாம் விருபாக்சி ராயரை கொலை செய்துவிட்டு துளுவ வம்ச ஆட்சியை தொடங்கிய படை தளபதி - நரசநாயக்கர்.

25.   துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் – கிருஷ்ணதேவராயர்.

26.   கிருஷ்ணதேவராயரின் இரண்டு முக்கியமான இலக்கு.

1. துங்கபத்ரா நதி பள்ளத்தாக்கு பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவது.

2. குல்பர்காவை கைப்பற்றுவது.

27.   பாமினி சுல்தான் முகமது ஷா யை சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தவர் – கிருஷ்ணதேவராயர்.

28.   ஓடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்ரனோடு போர் மேற்கொண்டவர் - கிருஷ்ணதேவராயர்.

29.   கிருஷ்ணதேவராயர் கோல்கொண்டா சுல்தானை யாருடைய பீரங்கி படை வீரர்களின் உதவியோடு தோற்கடித்தார் – போர்ச்சுகீசியர்கள்.

30.   மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் உருவாக்கியவர் - கிருஷ்ணதேவராயர்.

31.   கிருஷ்ணதேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் கட்டிய கோவில்கள்:          கிருஷ்ணசாமி கோயில், ஹசாரா ராமசாமி கோயில், விட்டலாசாமி கோயில்

32.   போர்களின் மூலம் தான் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்திய கோயில்களுக்கு வழங்கியவர் - கிருஷ்ணதேவராயர்.

33.   அரேபியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தவர் – கிருஷ்ணதேவராயர்.

34.   போர்த்துக்கீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தவர்- கிருஷ்ணதேவராயர்.

35.   கிருஷ்ணதேவராயர் அவையை அலங்கரித்த 8 இலக்கிய மேதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- அஷ்டதிக்கஜங்கள்.

36.   8 - இலக்கிய மேதைகளுள் மகத்தானவர் - அல்லசானி பெத்தண்ணா.

37.   கிருஷ்ணதேவராய தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள்: அச்சுதராயர், முதலாம் வேங்கடர், சதாசிவராவ்.

38.   சதாசிவராவ்-ற்கு பகர ஆளுநராக பொறுப்பேற்றிருந்த தளபதி – ராமராயர்.

39.   சதாசிவராயரை பெயரளவிற்கு அரசராக வைத்துக்கொண்டு உண்மையான அரசராக ஆட்சி புரிந்தவர் – ராமராயர்.

40.   ராக்சச தங்கடி போர் - தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு- 1565.

41.   கிழக்கு கர்நாடகத்தில் துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது- ஹம்பி.

42.   ஹம்பியை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது- யுனெஸ்கோ.

43.   சந்திரகிரியில் ஆர வீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் - திருமலை தேவராயர்.

44.   விஜயநகரப் பேரரசின் நிர்வாக முறை :

1. பேரரசு .

2. மண்டலங்கள் (மாநிலங்கள்) – மண்டலேஸ்வரா.

3.  நாடுகள். (மாவட்டங்கள்).

4. ஸ்தலங்கள். (வட்டங்கள்).

5. கிராமங்கள்.

45.   ஆரவீடு வம்சத்தார் புதிய தலைநகர் – பெனுகொண்டா.

46.   விஜயநகர அரசு வீழ்ச்சியுற்ற ஆண்டு - 1646.

47.   கிராமம் தொடர்பான விடயங்களை நிர்வகித்தவர் – கௌளடா (கிராமத்தலைவர்).

48.   விஜயநகரப் பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் – வராகன்.

49.   போர்த்துகீசிய கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பாரசீக பயணி- அப்துர் ரஸாக்.

50.   கில்டுகள் என்று அழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் - கைவினை குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.

51.   கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் - அப்துர் ரஸாக்.

52.   விஜயநகர வணிகம்:

1.  சீனா  - பட்டு.

2. மலபார் - வாசனைப்பொருட்கள்.

3. பர்மா - விலையயர்ந்த ஆபரண கற்கள்.

53.   அமுக்த மால்யதா எனும் நூலை எழுதியவர்– கிருஷ்ணதேவராயர்-தெலுங்கு.

54.   ஜாம்பவதி கல்யாணம் எனும் நூலை எழுதியவர்-கிருஷ்ணதேவராயர்- சமஸ்கிருதம்.

55.   பாண்டுரங்கமாகத்தியம் நூலை எழுதியவர் - தெனாலி ராமகிருஷ்ணா.

56.   சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்த புலவர்கள்:

1. ஸ்ரீநாதர்

2.  பெத்தண்ணா

3.  ஜக்கம்மா

4.  துக்கண்ணா

57.   தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது- அமுக்த மால்யதா.

58.   பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியை பற்றியது- அமுக்த மால்யதா.

59.   கடவுள் ரங்கநாதனுக்கு அணிவிப்பதற்காக தொடுக்கப்பட்ட மாலைகளை கடவுள் சூடுவதற்கு முன்பாக சூடிக்கொள்பவர்- கோதை தேவி.

60.   அமுக்த மால்யதா என்பதன் பொருள் - தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்.

61.   விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான பாணி - விஜயநகர பாணி.

62.   விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு  - குதிரை.

63.   1347 - பாமினி அரசு யாரால் நிறுவப்பட்டது - அலாவுதீன் ஹசன்,  ஹசன் கங்கு.

64.   தெளலதாபாத் நகரை கைப்பற்றி பாமன் ஷா என்ற பெயரில் சுல்தானாக அறிவித்துக் கொண்டவர்- அலாவுதீன் ஹசன்.

65.    2 ஆண்டுகளில் அலாவுதீன் ஹாசன் பாமன் ஷா தலைநகரை மாற்றிய இடம்- குல்பர்கா. 1429 தலைநகரை மீண்டும் - பீடாருக்கு மாற்றப்பட்டது.

66.   பாமினி வம்சத்தில் இடம்பெற்றுள்ள அரசர்கள் எத்தனை பேர் - 18.

67.   அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் - 11 ஆண்டுகள்.

68.   அலாவுதீன் ஹசன் தமது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை எவ்வாறு அழைக்கப்பட்டன – தராப்.

69.   பாமன் ஷாவை தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் - முதலாம் முகமது ஷா.

70.   1368 வாரங்கல் அரசோடு போராட்டத்தின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீல வண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாகப் பெற்றவர்- முதலாம் முகமது ஷா.

71.   பாரசீக அரசர்களின் அணிகலன்களில் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய பச்சை கலந்த நீல வண்ண கல்லாலான அரியணையும் ஒன்றாகுமெனப் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளவர் – பிர்தெளசி.

72.   ஷா நாமா எனும் நூலை எழுதியவர் - பிர்தெளசி.

73.   ஹைதராபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் உள்ளது- கோல்கொண்டா கோட்டை.

74.   ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெற்றது-கோல்கொண்டா கோட்டை.

75.   கோல்கொண்டா கோட்டையின் உயரமான இடம் - பால ஹிசார்.

76.   பாமினி அரசிற்கு வலுவான ஒர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் - முதலாம் முகமது ஷா.

77.   குல்பர்காவில் முதலாம் முகமது ஷா இரண்டு மகசூதிகளை கட்டினார். அதில் 1367 கட்டிமுடிக்கப்பட்ட முதல் மசூதி – மகாமசூதி. 216 அடி x16 அடி

78.   முகமது ஷா மகன்- முஜாகித்.

79.   முகமது ஷாவைத் தொடர்ந்து பதவியேற்றவர் - முஜாகித்.

80.   தாவூத் என்பவரின் சகோதரனின் மகன் என்ன பெயரில் அரியணை ஏற்றப்பட்டார் - இரண்டாம் முகமது.

81.   யாருடைய அரசில் அமைதி நிலவியது - இரண்டாம் முகமது.

82.   தமது அரசவையை பண்பாட்டு, கல்வி மையமாக மாற்றுவதில் தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிட்டவர் - இரண்டாம் முகமது.

83.   முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார் - மூன்றாம் முகமது.

84.   இஸ்லாமிய கோட்பாடுகளிலும், பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும் புலமை பெற்றவராய் இருந்தவர்- முகமது கவான் பிறப்பால் பாரசீகர்.

85.   ராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாக சீர்திருத்தங்களும் பெயர் பெற்றவர்- முகமது கவான்.

86.    பாரசீக வேதியல் வல்லுநர்களை அழைத்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தவர் - முகமது கவான்.

87.   பெல்காம் நடைபெற்ற விஜய நகருக்கு எதிரான போரில் வெடிமருந்தை பயன்படுத்தியவர்- முகமது கவான்.

88.   முகமது கவானத்துக்கு மரண தண்டனை வழங்கிய சுல்தான் - மூன்றாம் முகமது.

89.   மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடி சூடிய சுல்தான்- முகமது (அ) சிகாபுதீன் முகமுது.

90.   பாமினி அரசில் உள்ள 8 அமைச்சர்கள் :

1. வக்கீல் - உஸ்-சல் தானா (அ) அரசின் பிரதம (அ)  முதலமைச்சர் - அரசருக்கு அடுத்த நிலையில் துணை அதிகாரியாக செயல்படுவர்.

2. பேஷ்வா - நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.

3.  வஸிரி- குல் - ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.

4.  அமிர் - இ- ஜூம்லா – நிதியமைச்சர்.

5. நஷீர் - உதவி நிதி அமைச்சர்.

6. வஷிர் - இ - அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர்.

7. கொத்தவால் - காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்.

8. சதார் - இ - ஜகான் -  தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.

91.   பாமினி சுல்தான்கள் கட்டிட கலை காணப்படும் இடம்- குல்பர்கா.

92.    அலாவுதீன் ஹசன் ஷா யாருடைய முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார் –ஜாபர்கான்.

93.   கல்வி கற்பதை ஆதரித்த சுல்தான் - முதலாம் முகமது.

94.   பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதரஸாவை (கல்வி நிலையம்) அமைத்தவர்- முகமது கவான். 3000 - கையெழுத்துப் பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது.

95.   மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் - குமார கம்பணா.

96.   பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர் - சுல்தான் பெரோஸ்.

97.   ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்- பெனு கொண்டா.

98.   ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் – பிரதாபருத்ரன்.

99.   விஜய நகர நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை கவனித்தவர்- கெளடா.

100.  பொருத்துக:

1.  விஜய நகரம் - வெற்றியின் நகரம்.

2. பிரதாப ருத்ரா - ஒடிசாவின் ஆட்சியாளர்.

3. கிருஷ்ண தேவராயர் - அஷ்டதிக்கஜம்.

4. அப்துர் ரசாக் - பாரசீக சிற்பக் கலைஞர்.

5.  தெனாலி ராமகிருஷ்ணா- பாண்டுரங்கமகாமத்தியம்.

6. மதுரா விஜயம் - கங்காதேவி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.