1. ஒளி என்பது என்பது என்ன? நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் காண உதவும் ஆற்றலின் ஒரு வகை
2. தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது எது? சூரிய ஒளி
3. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு எது தேவையானது? சூரிய ஒளி
4. ஒளி மூலங்கள் என்றால் என்ன? ஒளியை உமிழும் பொருள்கள், ஒளி மூலங்கள் எனப்படும்
5. ஒளியின் மூலங்கள் எத்தனை வகைப்படும்? இயற்கை ஒளிமூலம், செயற்கை ஒளிமூலம்
6. இயற்கை ஒளிமூலம் என்றால் என்ன? இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருட்கள் (சூரியன் ஒரு முதன்மையான இயற்கை ஒளிமூலம்)
7. உயிரி ஒளிர்தல் என்றால் என்ன? சில உயிரினங்களும் ஒளியை உமிழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இப்பண்பு உயிரி ஒளிர்தல் எனப்படுகிறது
8. உயிரி ஒளிர்தல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை? மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், சில ஆழ்கடல் தாவரங்கள், சில நுண்ணுயிர்கள்
9. செயற்கை ஒளிமூலம் என்றால் என்ன? ஒளியைச் செயற்கையாக உமிழும் பொருள்கள்
10. செயற்கை ஒளிமூலத்திற்கு உதாரணம் தருக? எரியும் மெழுகுவத்தி, சுடர் எரி விளக்கு, நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு
11. செயற்கையாக ஒளியை உமிழும் ஒளி மூலங்களை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்? இரண்டு விதம். 1. வெப்ப ஒளி மூலங்கள், 2. வாயுவிறக்க ஒளி மூலங்கள்
12. வெப்ப ஒளி மூலங்கள் என்றால் என்ன? சில பொருள்களை, அதிக வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது, அவை ஒளியை உமிழத் தொடங்குகின்றன (எரியும் மெழுகுவத்தி, வெண்சுடர் எரி விளக்கு)
13. வாயுவிறக்க ஒளி மூலங்கள் என்றால் என்ன? மின்சாரத்தைக் குறைந்த அழுத்தம் கொண்ட சில வாயுக்களின் வழியே செலுத்தும்போது, அவ்வாயுக்களின் வழியே மின்னிறக்கம் ஏற்பட்டு ஒளியை உருவாக்குகிறது (நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு)
14. குழல் விளக்கில் உட்பகுதியில் பூசப்படுவது என்ன? பாஸ்பரஸ்
15. ஒளியின் நேர்கோட்டுப் பண்பைக் கண்டவர் யார்? அல் -ஹசன் -ஹயத்தம்
16. ஒளியின் நேர்கோட்டுப்பண்பினை அறிந்து கொள்ளக்கூடிய கருவி எது? ஊசித்துளை காமிரா
17. தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையாதகாலத்தில் சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது எது? ஊசித்துளை காமிரா (சோலாகிராபி)
18. எதிரொளிப்புக் கதிர் என்றால் என்ன? எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக்கதிர் எனப்படும்
19. படுபுள்ளி என்றால் என்ன? எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில் படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி படுபுள்ளி எனப்படும்
20. ஒளி எதிரொளிப்பு விதிகள் யாவை? படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம் i = r படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக்கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்
21. எதிரொளிப்பின் வகைகள் யாவை? ஒழுங்கான எதிரொளிப்பு – வழவழப்பான பரப்பு, ஒழுங்கற்ற எதிரொளிப்பு – சொரசொரப்பான பரப்பு
22. ஒளியானது வெற்றிடத்தில் நொடிக்கு எத்தனை கிமீ தொலைவு செல்லும்? 3 லட்சம் கிமீ
23. ஒளி என்பது பல ______ தொகுப்பு ஆகும்? ஒளிக்கதிர்களின்
24. சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு இருக்கும்? ஒன்றுக்கொன்று இணையாக
25. வாகனங்களின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளிக்கதிரின் பண்பு என்ன? இணைகதிர்கள்
26. எரியும் மெழுகுவத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு இருக்கும்? எல்லாத் திசைகளிலும் செல்லும் விரிகதிர்கள்
27. ஃபிளாஷ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் யாவை? விரிகதிர்கள்
28. உட்புகுதிறனைப் பொருத்தப் பொருள்களை எவ்வாறு பிரிக்கலாம்? ஒளி ஊடுருவும் பொருள்கள், பகுதி ஊடுருவும் பொருள்கள், ஒளி ஊடுருவாப் பொருள்கள்
29. ஒளி ஊடுருவும் பொருள்கள்? கண் கண்ணாடிகள், தூய கண்ணாடிக் குவளை, தூய நீர், பேருந்தின் முகப்புக் கண்ணாடி
30. ஒளி ஊடுருவாப் பொருள்கள்? கட்டடச் சுவர், கெட்டி அட்டை, கல்
31. நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எந்த திசையில் அமையும்? எதிர்த்திசையில்
32. நிழலின் பகுதிகள் யாவை? கரு நிழல், புற நிழல்
33. சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எதனால் ஏற்படுகிறது? ஒளியின் நேர்கோட்டுப் பண்பின் காரணமாக
34. சந்திரகிரகணத்தின் போது புவியின் நிழல் எதன் மீது விழுகிறது? சந்திரன் மீது
35. சமதள ஆடி என்றால் என்ன? எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு
36. ஒளி இழை என்பது எந்த தத்துவத்தின் படி செயல்படுகிறது? முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்
37. திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மெய் பிம்பம்
38. திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாய பிம்பம்
39. எந்த நிறம் மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது? சிவப்பு நிறம்
40. கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் எவ்வளவு? 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர்
41. 1 நேனோ மீட்டர் எத்தனை மீட்டர்? 10 power -9 மீட்டர்
42. கண்ணுறு ஒளியின் பட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது? VIBGYOR
43. எந்த நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது? ஊதா நிறம்
44. நியூட்டன் வட்டு என்றால் என்ன? நியூட்டன், பல வண்ணங்களைக் கலப்பதன் மூலம் வெள்ளை நிறத்தை உருவாக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கினார் (நியூட்டன் வட்டு)
45. வெண்மை நிறம் எத்தனை வண்ணங்களை கொண்டது? 7 வண்ணங்களை (VIBGYOR) கொண்டது
46. நிறங்களின் தொகுப்பு என்றால் என்ன? நிறங்களின் தொகுப்பு என்பது, இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது
47. முதன்மை நிறங்கள் யாவை? சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள்
48. ஒளி என்பது ஒரு வகை __________? ஆற்றல்
49. ____________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்? முப்பெட்டகம்
50. சொரசொரப்பான பரப்பின் மேல் ____________ எதிரொளிப்பு நடைபெறுகிறது? ஒழுங்கற்ற