அண்டம் மற்றும் விண்வெளி (7th அறிவியல்)

1.புவிமையக் கோட்பாடு யாரால் முன்மொழியப்பட்டது? கிரீஸ் நாட்டில் தத்துவஞானியான பிளாட்டோ மற்றும் அவரது சீடர் அரிஸ்டாட்டில் ஆகியோரால் (கி.மு 6 ம் நூற்றாண்டில்)

2. கிரேக்க ரோமானிய கணிதவியலாளர் யார்? தாலமி

3. ஆர்யபட்டரின் நூல் என்ன? ஆர்யபட்டீயம்

4. கிப்பஸ் என்றால் என்ன? சந்திரன் அரை வட்டத்திற்குமேல் ஒளிரும் கட்டங்களைக் குறிக்கிறது

5. பண்டைக் காலங்களில் வானியலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் யாவை? புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி

6. நீள்வட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி விண்பொருள்களின் இயக்கத்தினை விளக்கியவர் யார்? தாலமி

7. நீள்வட்ட மாதிரிகளைப் மேம்படுத்தியவர்கள் யாவர்? டைக்கோ ப்ராஹே மற்றும் நீலகண்ட சோமயாஜி

8. தொலைநோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? ஹான்ஸ் லிப்பர்ஷே

9. முதன்முறையாக வானத்தை ஆய்வு செய்வதற்கு தொலைநோக்கியை பயன்படுத்தியவர் யார்? கலிலியோ

10. பால்வளித்திரள் என்பது, வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பளபளப்பான பிரகாசமான கூட்டம் என்பதை நிரூபித்தவர் யார்? கலிலியோ

11. வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனையும் சனி கிரகத்தினைச் சுற்றி வளையம் இருப்பதனையும் கண்டறிந்தவர் யார்? கலிலியோ

12. சூரிய மையக்கொள்கையை கண்டவர் யார்? நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்

13. சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ எதைக் கூறினார்? வெள்ளிக் கோளை உற்று நோக்கிக் கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார்

14. சூரியன் என்பது என்ன? பல கிரகங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாகும்

15. விண்மீன் திரள் என்றால் என்ன? கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது

16. விண்மீன் திரளின் பெயர் _______ஆகும் பால்வளித் திரள்

17. பெரு வெடிப்பு என்றால் என்ன? ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு

18.பிரபஞ்சம் உருவான கட்டத்தில் என்ன வாயுக்களின் கூட்டமாக இருந்தது? ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால்

19. பிரபஞ்சத்தின் எத்தனை ஆண்டுகளில் நடந்தது எதையும் நாம் பார்க்க முடியாது? முதல் 300,000 ஆண்டுகளில்

20. எந்த தொலைநோக்கி ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்து வருகின்றன? ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி

21. வானியல் அலகு என்றால் என்ன? பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம். இது ‘வா.ஆ ’ என்னும் அலகால் குறிக்கப்படுகிறது

22. ஒரு வானியல் ஆண்டு என்பது எவ்வளவு? 1 வா.ஆ = 1.496 x 10⁸ கிமீ

23. ஒளி ஆண்டு என்றால் என்ன? ஒளியானது ஒரு வருடத்தில் கடந்த தூரம். இது ‘ஒ.ஆ’ எனக் குறிப்பிடப்படுகிறது

24. ஒரு ஒளி ஆண்டு என்பது எவ்வளவு? 1 ஒ.ஆ = 9.4607 x 10¹² கிமீ

25. விண்ணியல் ஆரம் என்றால் என்ன? ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு. இது ‘pc’ எனக் குறிக்கப்படுகிறது

26. விண்மீன் திரள்கள் என்றால் என்ன? ஈர்ப்பு விசையால் சேர்க்கப்பட்ட விண்மீன்கள் அல்லது விண்மீன் குழுக்கள் மற்றும் விண்வெளிப் பொருள்களின் ஒரு பெரிய தொகுப்பே விண்மீன் திரள்

27. விண்மீன் திரள்களின் வகைகள் யாவை? சுழல்திரள், நீள்வட்டம், தட்டைச் சுழல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் போன்ற பல்வேறு வகையான விண்மீன் திரள்கள்

28. சுருள் விண்மீன் திரள்கள் என்றால் என்ன? நட்சத்திரங்கள், வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தட்டையான, சுழலும் வட்டு ஆகும்

29. சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளித்திரளானது எந்த வகையைச் சார்ந்தது? கோடிட்ட சுருள் விண்மீன்திரள்

30. பால்வளித்திரளின் விட்டம் எவ்வளவு? 1,00,000 ஒளி ஆண்டுகள்

31. நமது பால்வளித்திரளுக்கு அருகில் இருக்கும் விண்மீன் திரளின் பெயர் என்ன? ஆண்ட்ரோமெடா

32. ஆண்ட்ரோமெடா புராணங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஆகாஷ கங்கா

33. கலிலியோ கலிலி எந்த ஆண்டு ஒளிபட்டயைக் கண்டார்? 1610

34. யாருடைய ஆய்வுகள் பால்வளித் திரள் என்பது பல்வேறு பல விண்மீன் திரள்களில் ஒன்றாகும் என்பதைச் சுட்டிக்காட்டின? எட்வின் ஹபுல்

35. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது? சூரியன் (அடுத்த நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி)

36. துணைக் கோள்கள்களின் வகைகள் யாவை? இயற்கை மற்றும் செயற்கைக் கோள்கள்

37. சூரியக் குடும்பத்தில் எந்த கோள்களுக்கு நிலவு இல்லை? புதன் மற்றும் வெள்ளி

38. 60 க்கு மேற்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ள கோள்கள் யாவை? வியாழன் மற்றும் சனி

39. உலகின் முதல் செயற்கைக்கோள் எது? ரஷ்யாவின் ஸ்புட்னிக் -1

40. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது? ஆர்யபட்டா

41. SLV-3 என்னும் ஏவுகணை வாகனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1980

42. இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV 3 மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் எது? ரோஹிணி

43. சந்த்ரயான் -1 இஸ்ரோ எந்த ஆண்டு செலுத்தியது? 2008, அக்டோபர் 22

44. மங்கள்யான் செலுத்தப்பட்ட ஆண்டு என்ன? 2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகம் (2014, செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுப்பாதையில் நுழைந்து)

45. செவ்வாயின் சுற்றுப்பாதையைத் தொடும் இந்தியா உலகின் எத்தனையாவது நாடு? நான்காவது

46. இஸ்ரோ 20 துணைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்த ஆண்டு என்ன? 2016 ஜூன் 18

47. இஸ்ரோ ஒரே ஏவுகணையில் (PSLV-C37) 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்த ஆண்டு என்ன? 2017 பிப்ரவரி 15

48. இஸ்ரோ சந்த்ரயான் -2 என்னும் துணைக் கோளை ஏவிய ஆண்டு என்ன? 2019, ஜூலை 22

49. சுப்ரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு என்ன? 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏ ஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து

50. 1989 வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு யார் பெயர் சூட்டப்பட்டது? கலீலியோ கலிலி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.