பலபடி வேதியியல் (7th அறிவியல்)

 1.பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாலிமர் என்று

2. பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகபிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் என்ன? பலபடி

3. பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்? பலபடியாக்கல்

4. நீர்க் குழாய்களாகப் பயன்படுத்தப்பவது? பாலிவினைல்குளோரைடு

5. பலபடிகளின் பிரிவு என்ன? இயற்கை பலபடி, செயற்கை பலபடி

6. இயற்கை பலபடிகளுக்கு உதாரணம் யாவை? புரதம், கார்போஹைட்ரேட், செல்லுலோஸ்

7. செல்லுலோஸ் எதில் காணப்படுகிறது? மரம் மற்றும் காகிதம்

8. அமினோ அமிலங்கள் எதனால் ஆனவை? இருபது வகையான ஒற்றைப் படிகளால் ஆன புரதங்கள் என்ற பலபடி

9. அமினோ அமில ஒற்றைப் பலபடிகள் சேர்க்கை அடைந்து என்ன உருவாகிறது? புரதபலபடி

10. புரத பலபடிக்கு எடுத்துக்கட்டுகள் யாவை? DNA, நொதிகள், பட்டு, தோல், முடி, விரல் நகங்கள், இறகுகள், விலங்கு உரோமங்கள்

11. கார்போஹைட்ரேட் பலபடிகளுக்கு எடுத்துக்கட்டுகள் யாவை?செல்லுலோஸ், கைட்டின், லிக்னின்

12. கைட்டின் எதில் காணப்படுகிறது? நண்டு, சிலந்தி போன்ற புற எலும்புக்கூடுகளிலும், காளானில் செல்சுவரிலும்

13. தாவரங்களுக்கு கட்டமைப்பு வழங்குவதில் முக்கிய பங்கு ஆற்றுவது? கைட்டின்

14. செயற்கை பலபடிகள் எதில் இருந்து தயாரிக்கப்படுகின்றன? பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயு

15. பலவகை நெகிழிகளை உருவாக்க கட்டமைப்பு பொருளாக பயன்படுவது எது? எத்திலீன், புரோபைலீன்

16. முற்காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய இழைகள் யாவை? பருத்தி, கம்பளி

17. இயற்கை பட்டு எத்தனை வகைகளில் கிடைக்கிறது? மல்பெரி பட்டு, டஸ்ஸர் பட்டு, முகா பட்டு, எரி பட்டு

18. மல்பெரி பட்டின் பயன் யாவை? உடைகளாகவும், தரைவிரிப்புகளாகவும், பாராசூட்டுகளாகவும்

19. ரேயான் என்பது? ஒரு செயற்கை இழை

20. ரேயான் என்ற பெயரில் முதல் செயற்கை பட்டினை உருவாக்குவதில் வெற்றி கண்ட நூற்றாண்டு? 19 ம் நூற்றாண்டு

21. இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் ரேயான் தொழிற்சாலை எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946

22. மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் தயாரிக்கப்படுவது? ரேயான்

23. சுகாதாரப் பொருள்களான பயபர்களாகவும், காயங்களுக்கு மருந்திடும் வலைத்துணிகளாகவும் பேண்டேஜ் துணிகளாகவும் பயன்படுவது எது? ரேயான்

24. முதன்முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை எது? நைலான்

25. நைலான் என்ற பலபடி இழையானது எந்த வேதிப் பொருளால் ஆனது? பாலிஅமைடுகள்

26. ஹெக்ஸாமெத்திலீன்–டை – அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் எது? பாலி அமைடுகள்

27. திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது கிடைப்பது என்ன? நைலான்

28. பாலிகாட், பாலிவுல், டெரிகாட் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது? பாலியெஸ்டர்

29. பாலிவுல் என்பது? பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை

30. மிகப் பிரபலமான பாலியெஸ்டர் வகை எது? PET (பாலி எத்திலின் டெரிப்தாலேட்)

31. நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துணைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள்? அக்ரிலிக் ஆடைகள்

32. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி வடிக்கும்பொழுது கிடைக்கும் துணை விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்கள் யாது? செயற்கை இழை

33. உலோகம் மற்றும் மரம் போன்ற மூலப்பொருள்களைத் தற்பொழுது எது பதிலீடு செய்துவிட்டது? நெகிழி

34. பாலிபுரோபைலீன் என்ற நெகிழினால் செய்யப்பட்டது? உறிஞ்சுக்குழாய்

35. தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழி பொருள்கள் என்ற தலைப்பில் அமுலுக்கு வந்த நாள்? 1 ஜனவரி 2019 முதல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அரசாணை T.N.G.O.NO:84, தேதி 25/06/2018

36. முதல் நெகிழியினை உருவாக்கியவர் யார்? பார்க்கிசீன் என்ற முதல் நெகிழியை உருவாக்கியவர் எட்மண்ட் அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ்

37. நெகிழியின் வகைகள் யாவை? இளகும் நெகிழி, இறுகும் நெகிழி

38. இளகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டு எது? பாலிஎத்திலீன்

39. இறுகும் நெகிழிகள் என்றால் என்ன? வெப்பப்படுத்தினால் மென்மை ஆவதில்லை, வளைவதில்லை, மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி

40. இறுகும் நெகிழிகளுக்கு எடுத்துக்காட்டு? பேக்லைட், மெலமைன்

41. பேக்லைட்டின் பயன் என்ன? மின்சாரத்தை கடத்தாப் பொருளாக

42. மெலமைன் பயன் என்ன? தரை ஓடுகள், தீயணைக்கும் துணிகள்

43. பலவகையான நெகிழிகளை வகைப்படுத்த உலகளாவிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளின் பெயர் என்ன? ரெசின் குறியீடு

44. ரெசின் குறியீடு எண் #3 எதைக் குறிக்கும்? பாலிவினைல் குளோரைடு

45. ரெசின் குறியீடு எண் #6 எதைக் குறிக்கும்? பாலிஸ்டைரீன் என்ற பிளாஸ்டிக்

46. வீட்டு உபயோகப் பொருள் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக் யாவை? பற்பசை, முகம்கழுவும் கரைசல், உடலைத் தூய்மைபடுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் காணப்படும் மைக்ரோ (நுண்ணிய) மணிகள்

47. செயற்கை நெகிழிகளுக்கு மாற்றாக அறிவியலாளர்கள் கண்டறிந்தது என்ன? PLA – (Poly Lactic Acid) எனப்படும் பாலிலாக்டிக் அமிலம்

48. நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று என்ன? 5R கொள்கை Refuse(தவிர்), Reduce (குறை), Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்) மற்றும் Recover (மீட்டெடு)

49. மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள் அல்லது உயிரி நெகிழிகள் என்ற கருத்து எந்த ஆண்டு தோன்றியது? 1980

50. நெகிழி உண்ணும் பாக்டீரியா எது? 2016, ஜப்பான் அறிவியலாளர்கள் - பாலி எத்திலீன் டெரிப்தாலேட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் - ஐடெனல்லா சகீயன்சிஸ் 201 – F6

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.