1. வகைப்பாட்டியல் என்றால் என்ன? உயிரினங்களை அவற்றின் பொதுப்பண்புகளின் அடிப்படையில் தொகுத்தல் உயிரியல் வகைப்பாட்டியல் எனப்படும்
2. வகைப்பாட்டியலின் பயன் என்ன? அறிவியல் அறிஞர்கள் முறையாக, எளிதான வகையில் உயிரினங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது
3. வகைப்படுத்தல் எந்த முறையில் செய்யப்படுகிறது? கண்டுபிடித்தல், பிரித்தல், தொகுத்தல்
4. வகைப்படுத்துதல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து ____ஆகும்? குழுக்களாகப் பிரித்தல்
5. வகைப்படுத்தும் பொழுது அவற்றின் _____ அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கின்றோம்? பண்புகளின்
6. அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப் பிரித்தவர் யார்? அரிஸ்டாட்டில்
7. அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு பிரித்தார்? இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள்
8. பிரிவுகளின் படிநிலை என்றால் என்ன? வகைப்பாட்டியல் பிரிவுகளை மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினை இறங்குவரிசையில் அமைக்கும் முறை
9. பிரிவுகளின் படிநிலை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? லின்னேயஸ் (லின்னேயஸ் படிநிலை)
10. வகைப்பாட்டியலின் 7 முக்கியப் படி நிலைகள் யாவை? உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம்
11. வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது? சிற்றினம்
12. ஒரு செல் உயிரி எவ்வாறு இடப்பெயர்ச்சி செய்கின்றன? போலிக் கால்கள், கசையிழை, குறு இழை
13. தொகுதி ஒரு செல்உயிரிகள் அல்லது புரோட்டோ சோவா எ.கா? அமீபா, யூக்ளினா, பாரமீசியம்
14. தொகுதி துளையுடலிகள் அல்லது பொரிபெரா -எ.கா? லியூகோசெலினியா, ஸ்பான்ஜில்லா, சைகான்
15. தொகுதி குழியுடலிகள் அல்லது சீலென்டிரேட்டா -எ.கா? ஹைட்ரா கடல் சாமந்தி ஜெல்லி மீன்கள், பவளங்கள்
16. உடற்குழி அற்றவை எவ்வாறு வாழ்கின்றன? ஒட்டுண்ணிகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களில் உடலின் உட்பகுதியில்
17. தொகுதி தட்டை புழுக்கள் அல்லது பிளாட்டிஹெல்மின்தஸ் -எ.கா? பிளானேரியா, கல்லீரல் புழு இரத்தப் புழு, நாடாப் புழு
18. பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்குகளில் நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் எது? உடற்கண்டங்கள் அற்றவை
19. தொகுதி உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடா - எ.கா? அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ்
20. மூவடுக்கு உயிரிகள் உடல் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன? கண்டங்களாகப்
21. தொகுதி வளைத்தசைப் புழுக்கள் அல்லது அனலிடா - எ.கா? மண்புழு, நீரிஸ், அட்டை
22. உடல் கண்டங்களை உடைய உடற்பரப்பு எதனால் ஆனது? தடித்த கைட்டின் ஆன புறச்சட்டகத்தாள்
23. தொகுதி கணுக்காலிகள் அல்லது ஆர்த்ரோபோடா - எ.கா? நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி
24. மென்மையான கண்டங்களற்ற உடல் அமைப்பு எவற்றால் ஆனது? தசையிலான தலைப்பகுதி, பாதப்பகுதி மற்றும் உள்ளுறுப்பு தொகுப்பு, மான்டில், கால்சியத்தினால் ஆன ஒடு காணப்படுகிறது
25. தொகுதி மெல்லுடலிகள் அல்லது மொலஸ்கா - எ.கா? கணவாய் மீன்கள், நத்தை ஆக்டோபஸ்
26. கடலில் மட்டுமே வாழ்பவை உடற்சுவர் எதனால் ஆனது? முட்களை கொண்டுள்ளது
27. தொகுதி முட்தோலிகள் அல்லது எக்கைனோடெர்மேட்டா -எ.கா? நட்சத்திர மீன், கடல் சாமந்தி, நொறுங்குறு நட்சத்திரமீன், கடல் வெள்ளரி மற்றும் கடல் அல்லி
28. மீன்கள் ____ இரத்தப்பிராணி? குளிர்
29. வகுப்பு மீன்கள் அல்லது பிஸ்ஸஸ் -எ.கா? சுறா, கட்லா, முல்லட், திலேப்பியா
30. நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை ____ இனப்பெருக்கம் மேற்கொள்பவை? பால் வழி
31. வகுப்பு இருவாழ்விகள் அல்லது ஆம்பீபியா -எ.கா? தவளை தேரை, சாலமாண்டர், சிசிலியன்
32. குளிர் இரத்தப் பிராணிகள் ____ மூலம் சுவாசிப்பவை? நுரையீரல்
33. வகுப்பு ஊர்வன அல்லது ரெப்டைல்ஸ் -எ.கா? தோட்டத்துப் பல்லி வீட்டுப் பல்லி, கடல் ஆமை, நில ஆமை, பாம்புகள், முதலை
34. வகுப்பு பறவைகள் அல்லது ஏவ்ஸ் -எ.கா? கரையோரப் பறவை இந்தியப் பனங்காடை கொண்டை லாத்தி, கிளி, சிட்டுக் குருவி, கோழி, நெருப்புக் கோழி, கிவி
35. வகுப்பு பாலூட்டிகள் அல்லது மாமெலியா -எ.கா? வாத்து அலகு பிளாட்டிபஸ், கங்காரு, பூனை, புலி, வரிக்குதிரை, மனிதன்
36. தாவரங்களின் வகைப்பாடுகள் யாவை? தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள்
37. பூவாத் தாவரங்கள் ______உருவாக்குவதில்லை? விதைகள்
38. பூக்கும் தாவரங்கள் ______ உருவாக்குகின்றன? விதைகளை
39. பூவாத் தாவரங்கள் அவற்றின் உடல் அமைப்பினைப் பொருத்து எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? ஆல்காக்கள், மாஸ்கள், பெரணிகள்
40. பூக்கும் தாவரங்கள் அவை உண்டாக்கும் கனியுறுப்பைப் பொருத்து எவ்வாறு வகைபடுத்தப்பட்டுள்ளன? ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
41. ஆல்காக்கள் என்பது என்ன? தாவரம்
42. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைகள் யாவை? ஒரு வித்திலைத் தாவரங்கள், இரு வித்திலைத் தாவரங்கள் (வித்திலைகளின் எண்ணிக்கையைப் பொருத்து)
43. ஒரு வித்திலைத் தாவரங்கள் - எ.கா? நெல்
44. இரு வித்திலைத் தாவரங்கள் - எ.கா? புளி
45. ஐந்து உலக வகைப்பாட்டு முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? R.H விட்டேக்கர் 1969
46. ஐந்து உலக வகைப்பாட்டு முறை எதன் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன? செல்
47. விலங்கு வகை புரோட்டிஸடு்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? புரோட்டாசோவான்கள்
48. இருசொற் பெயரிடுதல் முறையைக் கூறியவர் யார்? காஸ்பார்டு பாஹின், 1623
49. இரு சொல் பெயரிடும் முறையை செயல்படுத்தியவர் யார்? 1753, கரோலஸ் லின்னேயஸ்
50. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? கரோலஸ் லின்னேயஸ்