6th New Book குப்தர்கள் [84
Questions]
1. அலகாபாத் கல்வெட்டு யாருடைய காலத்தைச்
சேர்ந்தது? சமுத்திரகுப்தர் (2016 Group 4)
2.
குப்தர் காலத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர்
யார்? சுஸ்ருதர்
3.
பிதாரி தூண் கல்வெட்டு எந்த குப்தர் உடையது? ஸ்கந்த
குப்தர்
4.
மதுரா பாறை கல்வெட்டு யாருடைய காலத்தைச் சேர்ந்தது? இரண்டாம் சந்திரகுப்தர்
5.
களிமண் முத்திரைத் பொறிப்பு புத்தர் காலத்தில் எங்கு கிடைத்தது? நாளந்தா பல்கலைக்கழகம்
6.
சாஞ்சி பாறை கல்வெட்டு எந்த குப்த அரசர் காலத்தைச் சேர்ந்தது? இரண்டாம் சந்திரகுப்தர்
7.
விசாகதத்தரின் இரு நூல்கள்? அ)தேவி சந்திரகுப்தம்
ஆ)முத்ரா ராட்சசம்
8.
குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்? ஸ்ரீ
குப்தர்
9.
நாணயங்களில் இடம்பெற்ற முதல் குப்த அரசரின் வடிவம் யாருடையது? ஸ்ரீ குப்தர்
10.
ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அரசர் யார்? கடோத்கஜர்
11.
கல்வெட்டுகளில் மகாராஜா என்று குறிப்பிடப்படும் இரண்டு குப்த அரசர்கள் யார்? ஸ்ரீ குப்தர், கடோத்கஜன்
12.
லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்த குப்த அரசர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
13.
9 வட இந்திய சிற்றரசர்களை வென்ற குப்த அரசர் யார்? முதலாம் சந்திரகுப்தர்
14.
லிச்சாவி கன சங்கம் அமைந்த பகுதி எது? கங்கை
நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி
15.
குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? முதலாம் சமுத்திரகுப்தர்
16. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய காலத்தைச்
சார்ந்தது? சமுத்திரகுப்தர்
17.
பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) கல்வெட்டில் இடம் பெற்றுள்ள வரிகள் யாருடையது? ஹரிசேனர்
18.
பிரசஸ்தி என்பதன் பொருள் என்ன? ஒருவரை பாராட்டி
புகழ்வது
19.
பிரசிஸ்தி என்பது எவ்வகை சொல்? சமஸ்கிருதம்
20.
பல்லவ நாட்டு விஷ்ணுகோபனை தோற்கடித்த குப்த அரசர் யார்? சமுத்திரகுப்தர்
21.
தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களை கப்பம் கட்ட செய்த குப்த அரசர் யார்? சமுத்திரகுப்தர்
22.
குதிரைகளை பலியிடும் வேள்வி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்திய குப்த அரசர்? சமுத்திரகுப்தர்
23.
சமுத்திர குப்தரின் சமகால அரசர் யார்? இலங்கையைச்
சேர்ந்த மேக வர்மன்
24.
விஷ்ணுவை வழிபட்ட குப்த அரசர்? சமுத்திரகுப்தர்
25.
தன்னை விக்ரமாதித்யன் என்று அழைத்துக் கொண்ட குப்த அரசர்? இரண்டாம் சந்திரகுப்தர்
26.
இரண்டாம் சந்திரகுப்தன் யாருடைய மகன்? சமுத்திரகுப்தர்
27.
குதுப்மினாருக்கு அருகே உள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது? விக்ரமாதித்யா (இரண்டாம் சந்திரகுப்தர்)
28.
எந்த குப்த அரசருக்கு கீழ் நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்டஅவை இருந்தன? இரண்டாம் சந்திரகுப்தர்
29. விக்ரமாதித்யனின் அவையை சேர்ந்த இரண்டு
சமஸ்கிருத புலவர்கள்? 1) காளிதாசர் 2)ஹரிசேனர்
30. அகராதியியலின் ஆசிரியர் யார்? அமரசிம்ஹர்
31. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த
மருத்துவர் யார்? தன்வந்திரி (2022 Group 4)
32.
விக்ரமாதித்யனின் அவையிலிருந்த ஜோதிடத்தை சேர்ந்த அறிஞர் யார்? காகபனகர்
33.
விக்ரமாதித்தனின் அவையை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் யார்? சன்கு
34.
இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்? வராகமிகிரர்
35.
இரண்டாம் சந்திரகுப்தரின் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்?
வராச்சி
36.
இரண்டாம் சந்திர குப்தரின் அவையிலிருந்த மாய வித்தைக்காரர்? விட்டல் பட்டர்
37.
இரண்டாம் சந்திரகுப்தர்க்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் யாவை? விக்ரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர்,
நரேந்திர சிம்மர் ,விக்ரம தேவராஜர், தேவ குப்தர்,
தேவர் ஸ்ரீ
38.
இரண்டாம் சந்திரகுப்தரை தொடர்ந்து அரியணையேறிய குப்த அரசர் யார்? முதலாம் குமார குப்தர்
39.
நாலந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய குப்த அரசர்? முதலாம் குமார குப்தர்
40.
முதலாம் குமார குப்தர் யாருடைய மகன்? இரண்டாம்
சந்திரகுப்தர்
41.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் வந்த பௌத்தத் துறவி யார்? சீனப்பயணி
பாஹியான்
42.
கயா பாழடைந்து இருந்தது, கபிலவஸ்து காடாக இருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்
செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று யாருடைய குறிப்பில் இடம் பெற்றுள்ளது?
சீனப்பயணி பாஹியான்
43.
குமார குப்தரையை தொடர்ந்து அரச பதவி ஏற்ற குப்த அரசர் யார்? ஸ்கந்த குப்தர்
44.
ஹுணர்களின் படையெடுப்பை வென்ற குப்த அரசர்? ஸ்கந்த
குப்தர்
45.
மிகச் சிறந்த குப்த பேரரசர்களில் கடைசிப் பேரரசர் யார்? பாலாதித்யர்
46.
முதலாம் நரசிம்ம குப்தர் என்று அழைக்கப்பட்ட குப்த பேரரசர் யார்? பாலாதித்யர்
47.
மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்த குப்த அரசர்? பாலதித்யர்
48.
குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்? விஷ்ணு குப்தர்
49.
குப்த அரசர்கள் எவ்வகை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்? தெய்வீக கோட்பாடு (அரச கடவுளின் பிரதிநிதி)
50.
குப்தர் காலத்தில் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
தண்டநாயகர், மகா தண்டநாயகர்
51.
குப்தப் பேரரசின் பிராந்தியங்கள் (மாநிலங்கள்) எவ்வாறு பிரிக்கப்பட்டன? தேசம் அல்லது முக்தி
52.
பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? உபாரிகா
53.
பிராந்தியங்களுக்கு கீழ் இருந்த பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன? விஷ்யா (மாவட்டங்கள்)
54.
கிராம அளவில் செயல்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிராமிகா, கிராமதியாகஷா
55.
குப்தர் காலத்தில் இருந்த ராணுவ தளபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பாலாதிகிரிதா
(காலாட் படையின் தளபதி ), மகாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி ), தூதகா (ஒற்றர்களை
வேவு பார்க்கும் அமைப்பு)
56.
அரச கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டுள்ள
நீதிசாரம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது? காமந்த
கார்
57.
குப்தர் காலத்தில் எவ்வரி அரசின் முக்கிய வருவாயாக இருந்தது? நிலவரி
58.
குப்தர் காலத்தில்நிலங்கள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன? 5
59. வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன? ஷேத்ரா (2022 Group 4)
60. தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கிலா
61. வனங்கள் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன? அப்ரஹதா
62. குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்? வஸ்தி
63. மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கபதசரகா
64. ஓரிடத்திலிருந்து நிலையாக வணிகம் செய்பவர்கள்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சிரேஸ்தி
65.
பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சார்த்தவாகா
66.
நாளந்தா பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது? ஐந்து மற்றும்
ஆறாம் நூற்றாண்டு
67.
குப்தர்களுக்கு பிறகு கன்னோசியை சேர்ந்த எந்த அரசரின் கீழ் நாளந்தா பல்கலைகழகம் சிறப்புற்றது? ஹர்ஷர்
68.
நாளந்தா பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பௌத்த தத்துவத்தை படித்த சீன அறிஞர்? யுவான்சுவாங்
69.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் மற்றும் மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன?
8,3
70.
நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் அழிக்கப்பட்டது? பக்தியார் கில்ஜி
71.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? சமுத்திரகுப்தர்
72.
குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தினாரா
73.
இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் பெயர்கள்? குபேரநாகா,துருபசுவாமினி
74.
அஸ்வமேதயாகம் (குதிரைகளை பலி கொடுத்து செய்யப்படும் வேள்வி) நடத்திய குப்த அரசர்கள்?
சமுத்திரகுப்தர், முதலாம் குமார குப்தர்
75.
கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் யார்? குப்தர்கள்
76.
நாளந்தா மற்றும் சுல்தான் கஞ்ச்யில் உள்ள புத்தர் சிலையின் உயரங்கள்? 18 அடி, ஏழரை அடி
77.
குப்தர் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி மற்றும் அலுவலக மொழி? பிராகிருதம்
மற்றும் சமஸ்கிருதம்
78.
அஷ்டதியாயிஎன்ற நூலை எழுதியவர் யார்? பாணினி
79.
மகா பாஷ்யம் என்ற நூலை எழுதியவர் யார்? பதஞ்சலி
80.
வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா என்னும் பௌத்த அறிஞர் எழுதிய இலக்கண நூல்? சந்திர வியாகரணம்
81.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள்? சாகுந்தலம்,
மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம்
82.
காளிதாசர் இயற்றிய சிறப்புமிக்க நூல்கள்? மேகதூதம்,
ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம்
83.
சூரிய சந்திர கிரகணங்களுக்கான உண்மை காரணங்களை விளக்கி 'சூரிய சித்தாந்தம்' என்னும்
நூலை எழுதியவர் யார்? ஆரியபட்டர்
84.
குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கிய மருத்துவர் யார்? தன்வந்திரி