1. ஒரு காட்டின் மைய அச்சு விலங்காக எது உள்ளது? புலி
2. தமிழ்நாட்டில் மயில்கள் சரணாலயம் எங்கு உள்ளது? விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்
3. டால்பின் ஒரு ____ பாலூட்டி? நீர்வாழ்
4. இந்தியாவில் பாயும் நீளமான நதி எது? கங்கை, 2525 கிமீ
5. பிரமபுத்திரா ஆற்றின் நீளம் என்ன? 3848 கிமீ (இந்தியாவில் பாயும் தொலைவு குறைவு)
6. முகலாயர் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழம் எது? இமாம்பசந்த்
7. தேசிய பறவையாக மயில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆண்டு என்ன? 1963
8. தேசிய மரமாக ஆலமரம் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆண்டு என்ன? 1950
9. தமிழக மாநில மரம் எது? பனைமரம்
10. தமிழக மாநில பறவை எது? மரகதப் புறா
11. தமிழக மாநில விலங்கு எது? வரையாடு
12. தேசியக் கொடியை வடிவமைத்தார் யார்? பிங்காலி வெங்கையா
13. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி எங்கு நெய்யப்பட்டது? குடியாத்தம், வேலூர்
14. கொடிகாத்தவர் யார்? திருப்பூர் குமரன்,1932
15. தேசிய இலச்சினை எங்கு பாதுகாக்கப்படுகிறது? சாரநாத் அருங்காட்சியகம்
16. எந்த இந்தியத் தாவரவியல் பூங்காவில் உலக சாதனை படைத்த ஆலமரம் உள்ளது? கொல்கத்தாவின் அவுரா பகுதியில் அமைந்துள்ளது
17. கூடு கட்டி வாழும் பாம்பு எது? ராஜநாகம்
18. தேசியக் கொடியின் நீளம் மற்றும் அகலம் என்ன? 3:2
19. தேசியக் கொடியில் உள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்களைக் கொண்டுள்ளது? 24
20. தேசிய இலச்சினை எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது? ஜனவரி 26, 1950
21. சத்தியமேவ ஜெயதே என்பதன் பொருள் என்ன? வாய்மை வெல்லும்
22. தேசிய கீதம் – ஜன கண மன இயற்றியவர் யார்? இரவீந்த்ரநாத் தாகூர் – வங்காள மொழி
23. தேசிய கீதம் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது? ஜனவரி 24, 1950
24. தேசிய உறுதிமொழியை யார் எழுதினார்? “இந்தியா எனது தாய் நாடு ....”, பிதிமாரி வெங்கட சுப்பாராவ், தெலுங்கில்
25. தேசிய கீதம் எப்பொழுது முதன் முதலாக பாடப்பட்டது? 1911, டிசம்பர் 27, கொல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு
26. தேசிய கீதத்தை எத்தனை நொடிகளில் பாட வேண்டும்? 52 வினாடிகள்
27. தேசியப் பாடல் எது? வந்தே மாதரம்
28. தேசியப் பாடல் யாரால் இயற்றப்பட்டது? பங்கிம் சந்திர சட்டர்ஜி – ஆனந்தமடம் நாவல்
29. தேசிய கீதத்துக்கு இணையாக தேசியப் பாடல் என அறிவித்தவர் யார்? இராஜேந்திர பிரசாத்
30. தேசிய நுண்ணுயிரி எது? லாக்டோபேசில்லஸ், 2௦12
31. ருபியா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் யார்? செர்ஷா சூரி 16 ம் நூற்றாண்டு
32. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வெளியிட்டவர் யார்? 2௦1௦, டி. உதயகுமார், தமிழகம்
33. சக ஆண்டு முறை யார் காலத்தில் தொடங்கியது? கனிஷ்கர் , கிபி 7௮ ம் ஆண்டு
34. யார் தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழு தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது? வான் இயற்பியலாளர் மேக்நாத் சாகா, 1957 மார்ச் 22
35. இந்திய சுதந்திரம் அடைந்த அன்று வானொலியில் பாரதியின் ஆடுவோமோ ...பள்ளு பாடுவோமோ என்ற பாடலை பாடியவர் யார்? டி.கே.பட்டம்மாள்
36. இந்திய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன? ஜனவரி 26, 1950
37. பாசறைக்கு திரும்புதல் எந்த நாளில் நடைபெறுகிறது? ஜனவரி 29
38. காந்தியடிகள் பிறந்த நாளை ஐநா எந்த நாளாக அனுசரித்து வருகிறது? சர்வதேச அகிம்சை நாள்
39. எந்த ஆண்டு முதல் ஐநா சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கிறது? 2௦௦7 முதல்
40. நமது தேசியக்கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் என்ன? கருநீலம்
41. மூவண்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட நாள் என்ன? ஜூலை 22, 1947