இந்திய அரசமைப்புச் சட்டம் (6th சமூக அறிவியல்)

 1. நமது அரசமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 26, 1950

2. முழு சுயராஜ்ய முழக்கம் எந்த மாநாட்டில் வலுப்பெற்றது? 1929 லாகூர் காங்கிரஸ் மாநாடு

3. முழு சுதந்திர நாள் எப்பொழுது கொண்டாடப்பட்டது? ஜனவரி 26, 1930

4. ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை விதிகள், கொள்கைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுப்பது எது? அரசமைப்புச் சட்டம்

5. நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டம் எது? இந்திய அரசியலமைப்புச் சட்டம்

6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற எத்தனை உறுப்பினர்கள் (கட்சி மற்றும் பகுதிகள்) இருந்தனர்? 389 பேர்

7. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? 1946

8. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்? இராஜேந்திர பிரசாத்

9. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்? 15 பேர்

10. அரசமைப்பு வரைவுக் குழுவில் எத்தனை பேர் இருந்தனர்? எட்டு பேர்

11. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்? அம்பேத்கர்

12. அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூட்டம் எந்த நாள் நடைபெற்றது? டிசம்பர் 9, 1946

13. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை யார்? அண்ணல் அம்பேத்கர்

14. எத்தனை நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது? 60 நாடுகள்

15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதி படுத்தும் முன் எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன? 2000 திருத்தங்கள்

16. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க ஆன நாட்கள் எத்தனை? 2 ஆண்டுகள், 11 மாதம், 17 நாட்கள்

17. எந்த நாள் அரசமைப்புச் சட்டம் தயாரானது? நவம்பர் 26, 1949

18. அரசமைப்பு தினம்? நவம்பர் 26, 1949

19. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் போது ஆலோசகராக இருந்தவர் யார்? பி.என்.ராவ்

20. இந்திய அரசியல் சட்டம் இயற்ற எவ்வளவு ரூபாய் செலவானது? 64 லட்சம்

21. முகப்புரை என்றால் என்ன? அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை

22. வழிகாட்டு நெறிமுறை என்றால் என்ன? அரசு சட்டமியற்றும் போதும், ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்கள்

23. அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை? 6

24. இந்திய அரசு எதன் வழியே ஆளப்படுகிறது? நாடாளுமன்றம்

25. அரசமைப்புச் சட்டம் இயற்றும் போது இருந்த சட்ட வல்லுனர்கள் யாவர்? அம்பேத்கர், கோபாலசாமி, முன்ஷி, சையத் முகம்மது சதுல்லா, மிட்டர், மாதவராவ், டிடிகே, கேதான்

26. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளர் யார்? அம்பேத்கர்

27. நமது அரசியலமைப்புச் சட்டம் உருவான போது இருந்த பகுதிகள், உறுப்புகள், அட்டவணைகள் எத்தனை? 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்

28. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பகுதிகள், உறுப்புகள், அட்டவணைகள் எத்தனை? 448 உறுப்புகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள்

29. 1௦1 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன? 16.௦9.2௦16

30. இந்திய அரசியல் அமைப்பின் உண்மைப் பிரதிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது? நாடளுமன்ற நூலகம், ஹீலியம் வாயு உள்ள பேழையில் (ஹிந்தி, ஆங்கிலம்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.