1. பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டவர்கள் யாவர்? ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்), உ.வே.சாமிநாத அய்யர்
2. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது? கலிங்கநாட்டு அரசன் காரவேலன்
3. புகளூர் கல்வெட்டு எங்கு காணப்படுகிறது? கரூர்க்கு அருகே
4. பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள் யாருடையது? அசோகர்
5. மதுரைக்கு அருகேயுள்ள கல்வெட்டுகள் யாவை? மாங்குளம், அழகர் மலை, கீழவளவு
6. அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள் யாவை? ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்
7. இலக்கியச் சான்றுகளாக உள்ளவை யாவை? தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவை. சிலப்பதிகாரம், மணிமேகலை
8. அயல்நாட்டவர் குறிப்புகள் யாவை? எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் (The Periplus of Erythrean Sea) பிளினியின் இயற்கை வரலாறு (Natural History), தாலமியின் புவியியல் (Geography), மெகஸ்தனிஸின் இண்டிகா, ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம்
9. சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுவது எது? தொல்காப்பியம்
10. சங்க கால அளவு என்ன? கி.மு. (பொ.ஆ.மு) 3 ஆம் நூற்றாண்டு முதல் – கி.பி. (பொ.ஆ) 3 ஆம் நூற்றாண்டு வரை
11. சங்க காலத் தமிழகத்தின் புவியியல் பரப்பு என்ன? வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை
12. சங்க கால பண்பாடு யாது? பெருங்கற்காலப் பண்பாடு
13. தமிழ் மொழி இலத்தீன் மொழியை விட பழைமையானது என்ற கருத்தைக் கொண்டவர் யார்? கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
14. சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்ற நூல் எது? பதிற்றுப்பத்து
15. கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தவர் யார்? சேர அரசன் செங்குட்டுவன்
16. பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? செங்குட்டுவன்
17. இளங்கோவடிகள் யார்? சேரன் செங்குட்டுவனின் தம்பி
18. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டவர் யார்? சேரல் இரும்பொறை
19. சேர அரசர்களின் சின்னம் எது? வில்லும் அம்பும்
20. எந்தப் பகுதி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது? காவிரி கழிமுகப்பகுதி
21. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்? கரிகால் வளவன் அல்லது கரிகாலன்
22. கரிகாலன் எந்த இடத்தில் சேரர், பாண்டியர் மற்றும் பதினொன்று வேளிர்களின் கூட்டுப்படையைத் தோற்கடித்தார்? தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூர்
23. சோழர்களின் துறைமுகம் எது? புகார்
24. கரிகாலன் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை கூறும் நூல் எது? பட்டினப்பாலை
25. பட்டினப்பாலை எந்த வகை நூல் ஆகும்? பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்
26. பாண்டியர் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்? இன்றைய தென்தமிழகம்
27. நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் எங்கு தோற்கடித்தார்? தலையாலங்கானம் என்னுமிடம்
28. கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர் யார்? நெடுஞ்செழியன்
29. முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்ற நாடு எது? பாண்டிய நாடு
30. பல வேதவேள்விகளை நடத்திய பாண்டிய அரசர் யார்? முதுகுடுமிப் பெருவழுதி
31. முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள் யாவர்? நெடியோன் , நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, நெடுஞ்செழியன்
32. அரசுரிமைச் சின்னங்கள் யாவை? செங்கோல் (Scepter), முரசு (Drum), வெண்கொற்றக்குடை (white umbrella) ஆகியன அரசு அதிகாரத்தின் சின்னங்களாகும
33. ஆய் என்னும் பெயரின் பழந்தமிழ்ச் சொல் எது? ஆயர் (பொருள்ஆநிரை மேய்ப்போர்) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது
34. சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்கள் யார்? அந்திரன், திதியன், நன்னன்
35. வேளிர்கள் என்றால் யார்? வேளாளர்
36. பண்டைய காலத் தமிழகத்தை ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர் யார்? வேளிர்கள்
37. கடையேழு வள்ளல்கள் யாவர்? பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி
38. கிழார் என்பவர் யார்? கிராமத் தலைவர்
39. பட்டம் சூட்டப்படும் விழா என்னெவென்று அழைக்கப்பட்டது? அரசுக்கட்டிலேறுதல் அல்லது முடிசூட்டுவிழா
40. பட்டத்து இளவரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கோமகன்
41. அவருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல்
42. வருவாயின் முக்கிய ஆதாரம் எது? நிலவரி (இறை என அழைக்கப்பட்டது)
43. நிலவரியைத் தவிர அரசு வசூலித்தவை யாவை? சுங்கவரி, கப்பம், தண்டம்
44. அரசர்கள் செய்த ஐந்து விதக் கடமைகள் யாவை? கல்வி கற்பதை ஊக்குவிப்பது, சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களைப் பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது
45. அரசருக்கு நிர்வாகத்தில் உதவிய குழுக்கள் யாவை? ஐம்பெருங்குழு (ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு) எண்பேராயம் (எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு)
46. படைத்தலைவர் என்னவென்று அழைக்கப்பட்டார்? தானைத் தலைவன்
47. தோமாரம் என்பது என்ன? சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையைப் போன்று வீசப்படுவதாகும்
48. ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்னவென்று அழைக்கப்பட்டது? படைக் கொட்டில்
49. எது கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது? போர்முரசு
50. இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் எது? சட்டமும் நீதியும் அரசர் ஆவார்
51. ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
52. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? நாடுகள்
53. கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்? பட்டினம்
54. துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல் எது? புகார்
55. சங்க காலச் சமூகம் நிலம் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது? 5
56. எத்தனை பெண்பாற் புலவர்கள் அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்? 40
57. சங்க காலப் பெண்பாற்புலவர்கள் சிறந்தவர்கள் யாவர்? அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்
58. முதன்மைக் கடவுள் யார்? சேயோன் அல்லது முருகன்
59. வர்ணாசிரம முறை என்றால் என்ன? தொழிலை அடிப்படையாகக் கொண்டது
60. யார் இசையின் ஏழு சுவரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்தவன் யார்? கரிகாலன் (ஏழிசை வல்லான்)
61. இயற்கை வரலாறு என்னும் நூலை இயற்றியவர் யார்? ரோம் நாட்டைச் சேர்ந்த பிளினி
62. பிளினி இந்தியாவின் முதல் பேரங்காடி எதைக் குறிப்பிட்டுள்ளார்? முசிறி
63. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரம் எங்கு உள்ளது? வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது
64. எந்த நூற்றாண்டில் தனது சரிவைச் சந்தித்தது? கி.பி. (பொ.ஆ.) 3 ம் நூற்றாண்டின் இறுதி
65. சங்க காலத்தைத் தொடர்ந்து வந்தவர்கள் யாவர்? களப்பிரர்கள்