2. விலங்குகள் வாழும் உலகம்.
1.உயிரினத்தின்
மிகச் சிறிய செயல்படும் அலகுகள் எவை? செல்கள்
2.குறுஇழைகள்
மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் ஒரு செல் உயிரி ?
பாரமீசியம்
3.மீனின்
சுவாச உறுப்பு எது ? செவுள்கள்
4.மீனின்
உடலை பாதுகாப்பது எது ? செதில்கள்
5.மீன்
திசை திரும்பவும் , உடல் சமநிலை பெறவும் உதவுவது எது ? வால் துடுப்பு
6.இரட்டை
வாழ்க்கை மேற்கொள்ளும் இருவாழ்விகள் எவை ? தவளை
7.கசையிழையின்
மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் ஒரு செல் உயிரி ? யூக்ளினா
8.சுருங்கும்
நுண்குமிழ்கள் மூலம் கழிவு நீக்கம் செய்யும் உயிரி எது ? அமீபா
9.அமீபா
உணவை எதன் மூலம் செரிமானம் செய்கின்றது ? உணவுக் குமிழ்
10.மீனின்
எந்த உடல் அமைப்பு நீரில் எளிதாகவும் , வேகமாகவும் நீந்த உதவுகிறது ? படகு போன்ற
உடல் அமைப்பு
11.வெப்பம்
மாறும் விலங்கு எது ? தவளை
12.தவளை
இளம் உயிரி நிலையில் எதன் மூலம் சுவாசிக்கிறது?
செவுள்கள்
13.செதில்களால்
ஆன தோல் அமைப்பை கொண்ட ஊர்வன வகையைச் சார்ந்த உயிரி எது ? பல்லிகள்
14.வெப்ப
மண்டல பகுதிகளில் வாழும் உயிரி எது ? பல்லி
15.நுரையீரல்
மூலம் சுவாசிக்கும் உயிரினம் எது ? பல்லி
16.பல்லிகளின்
நாக்கில் காணப்படும் இரையை இழுத்துப் பிடிக்க உதவும் பகுதி எது ? நீட்சி
பகுதிகள்
17.பறவைகளுக்கு
வாய்க்கு பதிலாக உள்ள உறுப்பு எது ? அலகு
18.பறவைகளின்
சுவாச உறுப்பு ? நுரையீரல்கள்
19.பறவை
பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுவது எது ? பறவையின் வால்
20.இருவிழி
பார்வை பெற்றுள்ள உயிரினம் ? பறவை
21.பாலைவனக்
கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது ? ஒட்டகம்
22.ஒட்டகம்
திமில் பகுதியில் எதை சேமித்து வைக்கின்றது ?
கொழுப்பு
23.ஒரே
சமயத்தில் இரு கண்கள் மூலம் இரு வெவ்வேறு பொருட்களை எந்த உயிரியால் காண முடியும்? பறவை
24.பல்லிகள்
எதன் மூலம் தலையை முழுமையாக சுழற்றும் தன்மை கொண்டது? பல்லிகள்
தலை இணைப்பு
25.பறவை
எதன் மூலம் காற்றில் பறக்கிறது? படகு போன்ற உடல் அமைப்பு மற்றும் காற்றளைகளுடன்
கூடிய எலும்புகள்
26.முதிர் உயிரி நிலையில் உள்ள தவளை எவ்வாறு சுவாசிக்கிறது
? தோல்
, வாய்க்குழி மற்றும் நுரையீரல்
27.பறவையின்
எவை இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன ? முன்னங்கால்கள் இரண்டும்
28.ஒட்டகத்தின்
கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாப்பது எது ? நீண்ட கண்
இமைகள் மற்றும் ரோமங்கள்
29.எதன்
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை ? ஒட்டகம்
30.பல
நாட்களுக்கு நீர் அருந்தாமல் வாழும் உயிரினம் ?
ஒட்டகம்
31.நுண்ணோக்கியால்
மட்டுமே பார்க்க முடிந்த அளவில் மிகச்சிறிய உயிரி எது? ஒரு செல்
உயிரி
32.எந்த
செல்லில் செல்பிரிவு மூலம் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது? பல செல்
உயிரி
33.ஒரு
செல் உயிரினங்களில் பல்வேறு உடற்செயல்களை செய்வதற்கு சிறப்பு அமைப்பாக பயன்படுவது எது? செல் நுண்ணுறுப்புகள்
34.நீரில்
உள்ள உணவுத்துகள்களை விழுங்கும் உயிரி எது? அமீபா
35.அமீபா
எந்த முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது? எளிய பரவல்
முறை
36.அமீபா
உணவை விழுங்கவும் , இடப்பெயர்ச்சி செய்யவும் உதவுவது எது? போலிக்கால்கள்
37.பல்லிகள்
எத்தனை கால்களால் நடக்கக் கூடியவை? நான்கு
கால்கள்
38.பறத்தலின்
போது ஏற்படும் அழுத்ததினைத் தாங்குவதற்கு பறவை எதைப் பெற்றுள்ளன? வலிமை மிக்க மார்புத் தசை
39.பறவைகளின்
பிணங்கால்களில் உள்ள கூர்நகங்கள் எதற்கு உதவுகிறது? மரங்களின்
கிளைகளை பற்றிக் கொண்டு ஏற
40.கண்களால்
பார்க்க முடிந்த உயிரி எது? பல செல் உயிரி
கட்டத்தில் உள்ள வினாக்கள்
1.ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக
ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்வது என்ன? வலசை போதல்
2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் உள்ள
இடங்கள் எவை? வேடந்தாங்கல் , கோடியக்கரை மற்றும் கூடன் குளம்
3.எந்த நாடுகளிலிருந்து பல பறவைகள் வேடந்தாங்கல்
வருகின்றன? சைபீரியா மற்றும் ரஷ்யா
4.அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து
செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு சில விலங்குகள் உறக்கத்தில் ஈடுபடுவது எதனால் ? குளிர்கால உறக்கம்
5.நீரே அருந்தாத உயிரினம் எது ? கங்காரு
எலி
6.தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது
? நீலகிரி
வரையாடு
7.மலைகளின் மீது உள்ள பாறைகளின் இடுக்குகளில்
மிக எளிதாக நுழைந்து உடல் சமநிலை உடன் ஏறி தாவர வகைகளை உண்ணும் திறன் பெற்ற விலங்கு
எது ? நீலகிரி வரையாடு
8.உணவிலிருந்தே தேவையான நீரை உடலில் உருவாக்கி கொள்ளும் உயிரினம் ? கங்காரு எலி
பயிற்சி வினாக்கள்
1.உயிருள் பொருள்கள் அல்லது உயிரினங்களை
பற்றி படிப்பது எது ? உயிரியல்
2.பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன? நுரையீரல்கள்
3.அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது
எது? காற்று , உணவு மற்றும் நீர்
4.எந்த விலங்கு சுவாசத்திற்கு செவுள்களை
சிறப்பு உறுப்பாக பெற்றுள்ளது? மீன்
5.ஒரு வாழிடத்தின் உயிரிகாரணிகளை மட்டும்
குறிக்கும் தொகுப்பினை தேர்ந்தெடு?
நீர்வாழ்தாவரம்
, மீன் , தவளை , பூச்சிகள்
6.கீழ்கண்டவற்றில் எது வாழிடமாக கூற முடியாதது
? மேயும்
கால்நடைகளுடன் கூடிய பயன்படுத்தப்பட்ட நிலம்
7.பறவைகள் காற்றில் பறக்க உதவி செய்வது
எது ? உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்
8.கங்காரு எலி வசிப்பிடம் எது ? பாலைவன வாழிடம்
9.பாரமீசியம் ஓரிடத்தில் இருந்து வேறொரு
இடம் நகர்வதற்கு பயன்படுவது எது ? குறு இழை
10.புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை எவ்வாறு
அழைக்கிறோம் ? வாழிடம்
11.ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் எவ்வாறு
அழைக்கப்படும் ? ஒரு செல் உயிரினம்
12.மீனின் சுவாச உறுப்பு எது ? செவுள்கள்
13.கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம்
பல்லிகள் எதில் நடக்கிறது ? தரைகளில் நடக்கிறது
14.ஒட்டகங்கள் திமிலில் எதை சேமிக்கின்றன ? கொழுப்பு