History of Tamil Society, related Archaelogical Discoveries Part -2

 51) சங்கம்‌ என்ற சொல்‌ எதைக்‌ குறிக்கிறது?

a) பெரியவர்களின்‌ அவை
b) கலைஞர்களின்‌ அவை
c) தமிழ்க்‌ கவிஞர்களின்‌ அவை
d) தமிழ்‌ அரசர்களின்‌ அவை

52) சரியானவற்றை பொருத்துக :
A) நாழிகை வட்டில்‌ – 1) சிறிய அளவை
B) நாழி – 2) பெரிய அறுங்கோண அளவை
C) அம்பாரம்‌ – 3) குதிரை கிராம்‌ அளவு
D) பதக்கு – 4) நேர அளவு

a) 3, 4, 1, 2
b) 2, 3, 4, 1
c) 4, 1, 2, 3
d) 1, 2, 4, 3

53) சங்க காலத்தில்‌ பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தின்‌ பெயர்‌ யாது?

a) கரோஷ்தி
b) தேவநாகரி
c) தமிழ்ப்‌-பிராமி
d) கிரந்தம்‌

54) மதுரைக்‌ காஞ்சி எந்த நில மக்களின்‌ வாழ்வியலைக்‌ கூறுகிறது?

a) குறிஞ்சி
b) முல்லை
c) மருதம்‌
d) நெய்தல்‌

55) சங்கப்புலவர்கள்‌ தங்கள்‌ கவிதைகளை எங்கே வகைப்படுத்தினர்‌?

a) மதுரை
b) திருச்சி
c) கரூர்‌
d) பூம்புகார்பட்டினம்‌

56) சங்ககால சமுதாயத்தில்‌ கூறப்பட்டுள்ள “திணை” எனும்‌ நிலப்பரப்புப்‌ பிரிவுகளைச்‌ சரியாக இணைப்படுத்துக.
A) குறிஞ்சி – 1) கடலோரப்‌ பகுதி
B) முல்லை – 2) விவசாயப்‌ பகுதி
C) மருதம்‌ – 3) பாலைவனப்‌ பகுதி
D) நெய்தல்‌ – 4) மலைப்பகுதிகள்‌
E) பாலை – 5) காடும்‌ காடு சார்ந்த மேய்சல்‌ பகுதி

a) 1, 2, 3, 4, 5
b) 2, 3, 4, 5, 1
c) 3, 5, 4, 1, 2
d) 4, 5, 2, 1, 3

57) உழவுக்‌ தொழிலுக்கு அடுத்த படியாக பழங்கால தமிழர்கள்‌ ———— தொழிலில்‌ ஈடுபட்டிருந்தனர்‌.

a) நெசவு
b) வாணிபம்‌
c) மீன் பிடித்தல்‌
d) வேட்டையாடுதல்‌

58) முசிறியை “இந்தியாவின்‌ முதல்‌ பேரங்காடி” என்று கூறும்‌ வெளிநாட்டு நூல்‌ ———— ஆகும்‌.

a) இயற்கை வரலாறு
b) புவியியல்‌
c) எரித்திரியன்‌ கடலின்‌ பெரிப்ளஸ்‌
d) புத்த பதிப்புகள்‌ (நாட்குறி புத்தகம்‌)

59) சரியான இணையைத்‌ தேர்வு செய்க :

a) கண்ணாடி மணிகள்‌ – பொருந்தல்‌
b) உடைந்த சங்கு வளையல்‌ – கீழடி
c) உருக்கு உலை – கொடுமணல்‌
d) ஒரே மரத்தாலான படகின்‌ பகுதி – புதுச்சேரியின்‌ ஆரோவில்‌

60) சங்க காலத்தில்‌ தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ———— ஆகும்‌

a) வேலி
b) கழஞ்சு
c) மரக்கால்‌
d) கூப்பீடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.